Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றப்புலனாய்வு திணைக்களம் சிவாஜிக்கு அழைப்பு

Featured Replies

குற்றப்புலனாய்வு திணைக்களம் சிவாஜிக்கு அழைப்பு

sivaji-lingam.jpg
 

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைக்கு அளித்துள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

 
கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் அழிவுகளை தடுக்கும் பிரிவை சேர்ந்தவர்கள் என தொலைபேசி ஊடாக தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் , பௌத்த மதகுரு ஒருவர் எனக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதால் என்னை கொழும்பில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர்.
 
அதற்கு நான் எனது உடல் நிலை மோசமாக உள்ளமையினாலும் , கொழும்பு வருவதற்கான வசதிகள் இல்லாமல் இருப்பதாலும் கொழும்புக்கு விசாரணைக்கு வர முடியாது. நீங்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலையோ , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலையோ அல்லது யாழ்ப்பணத்தில் வேறு எங்காவது விசாரணைக்கு அழைத்தால் வர முடியும் என கூறினேன்.
 
அது தொடர்பில் தாம் பின்னர் கூறுவதாக கூறி அழைப்பை துண்டித்துக்கொண்டார்கள் என தெரிவித்தார்.
 
 
அரசியல் கைதிகளின் உறவினர்கள் – ஜனாதிபதி சந்திப்புக்கு ஏற்பாடு. 
 
அதேவேளை  அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்திக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஏற்பாடு செய்து தருவதாக வடமாகாண ஆளுனர் உறுதி அளித்துள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
வடமாகாண ஆளுனரை சந்தித்து , ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கோரி இருந்தோம். அவர் அதற்கு தான் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருந்தார்.
 
அவ்வாறு ஏற்பாடு செய்து தரப்படின் அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் கொழும்பு சென்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுப்போம். என தெரிவித்தார்.
 
சுபீட்சமான எதிர்காலத்திற்கு பிரார்த்தியுங்கள். 
 
தமிழ் மக்களுக்கு சபீட்சமான எதிர்காலம் அமைய வேண்டும் என இந்த தீபாவளி தினத்தில் இறைவனை வேண்டுமாறு வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
இந்து மக்களினால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அந்நாளில் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட வேண்டும் , மீள்குடியேற்றம் பூரணப்படுத்த வேண்டும், காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாக வேண்டும் , தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்து , அவர்கள் சுபீட்சமான வாழ்வை வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுகொண்டார்.

http://globaltamilnews.net/archives/45736

  • தொடங்கியவர்

ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலை தெரிந்தவர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்களை சந்திக்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை – சிவாஜி கேள்வி.

sivaji-lingam.jpg
ஜனாதிபதி வருவார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை சந்திப்பார் என்பது தமக்கு முதலே தெரியும் என தற்போது கூறுபவர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பு உள்ளார்.
 
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தின் பின்னர் 18 அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடாத்தி  வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகவும்,  போராட்டம் நடத்தினோம். ஆளுநருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன
 
ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை பெற்று தர கோரினோம். நாம் ஆளூநரை சந்தித்ததை பலர் விமர்சித்தார்கள் . ஊடகங்கள் பின் கதவால் சென்றனர் என விமர்சித்தார்கள்.மறுநாள் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானித்த போது , நீதிமன்ற தடை என செய்தி வெளியானது. ஆனாலும் நாம் தடையை மீறி போராட்டம் நடத்த தீர்மானித்து போராட்டம் நடத்தினோம்.
 
இப்போது ஜனாதிபதியை சந்தித்தது , முன்னேற்பாடு என விமர்சிகின்றனர். ஜனாதிபதியை முதலில் சந்தித்து ,கதைத்தது சுரேஸ்பிரேமசந்திரன் தான் அதன் பின்னர் ஒரு சில நிமிடத்தின் பின்னரே நான் சந்தித்து கதைத்தேன்.தற்போது   ஜனாதிபதி வந்து அந்த இடத்தில் இறங்குவார் என முன்னரே தெரியும் என கஜேந்திரகுமார் சொல்லுறார். ஆனால் எனக்கு எதுவும் தெரியாது.
 
இப்போது சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கதைப்பதை விட்டு ஜனாதிபதி தொடர்பில் கதைக்கலாமே .. என்னை அரசாங்கத்திற்கு துணை போகிறவர் என விமர்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை போல ஜெனிவா செல்லும் போது ,விமானத்தில் சிறப்பு வகுப்புக்களில் பயணிக்க வில்லை . சாதாரண வகுப்புக்களில் தான் பயணிக்கின்றோம்.
 
மே 18 ஆம் திகதி போர் முடிவடைந்த பின்னர் மே 22ஆம் திகதி இந்தியா சென்றது எதற்காக ? போர் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கவா ? அல்லது இந்தியாவுக்கு துணை போகவா கஜேந்திரகுமார் சென்றார் என்பதற்கு பதில் அளிப்பாரா ?அரசியல் கைதிகளின் போராட்டத்தை வைத்து அரசியல் இலாபம் தேடாதீர்கள். அதனை தாண்டி பொது விவாதத்திற்கு வாருங்கள். உங்களுக்கு சம்பந்தன் , சுமந்திரனை விடுத்து அரசியல் செய்ய முடியாதோ எனக்கு தெரியாது.
 
 ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் முதலில் களத்தில் நின்றவர்கள் நாங்கள். தொடை நடுங்கி விட்டு நாம் களத்தில் நிற்பதனை அறிந்து பின்னர் போராட்டத்திற்கு வந்த கஜேந்திரகுமார் குழுவினர் அவர்கள் இன்று எம்மை விமர்சிக்கின்றனர்.
 
சுமந்திரனை இன்றைக்கு விமர்சிக்கின்றனர் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டு கஜேந்திரகுமார் வெளியேறியதால் தான் சுதந்திரன் அரசியல் அரங்கினுள் வந்தார். என்பது உண்மை.என்னை பொறுத்த வரை போராட்டமும் பேச்சுவார்த்தையில் சமாந்தரமாக செல்லட்டும். யார் குத்தினாலும் அரசியானல் சரி.
 
ஜனாதிபதி வந்து நிற்பார் என தெரிந்து கொண்டவர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாமே ஏன் அவ்வாறு செய்ய வில்லை ? என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/45794

  • தொடங்கியவர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின், கடந்த கால, நிகழ்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக நேருக்கு நேர் விவாதிப்பதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.