Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்­கு­ரிய பணி­க­ளி­லி­ருந்து விலகி முரண்­பா­டா­கவே செயற்­ப­டு­கி­றோம் இந்­தியா சென்­று­ தி­ரும்­பிய உறுப்­பி­னர் கூறு­கிறார்

Featured Replies

எமக்­கு­ரிய பணி­க­ளி­லி­ருந்து விலகி முரண்­பா­டா­கவே செயற்­ப­டு­கி­றோம்

இந்­தியா சென்­று­ தி­ரும்­பிய உறுப்­பி­னர் கூறு­கிறார்

 

வடக்கு மாகாண சபைக்­கான பணி­யி­லி­ருந்து நாம் விலகி முரண்­பா­டான செயற்­ப­பா­டு­க­ளி­லேயே நாம் ஈடு­பட்டு வரு­கின்­றோம் என்­பதை உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒருவர் தெரி­வித்தார்.

கருத்­த­மர்வு ஒன்­றுக்­காக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் 18 பேர் அண்­மை­யில் இந்­தி­யா­வுக்­குச் சென்று திரும்­பி­னர். அங்கு இடம்­பெற்ற பயிற்­சிப்­பட்­டறை தொடர்­பில் கருத்­துக் கேட்­ட­போது இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்­தார்.

அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண சபை­யின் ஊடாக நாம் செய்ய வேண்­டிய பணி­க­ளில் இருந்து விலகி பல முர­ணான செயற்­பா­டு­க­ளையே செய்து வரு­கின்­றோம் என்­பதை பயிற்­சி­யில் கலந்து கொண்ட பின்­னர் உணர முடிந்­தது.

அதி­லும் நாம் நிர்­வாக ரீதி­யி­லும் அர­சி­யல் ரீதி­யி­லும் பல முர­ணான செயற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கின்­றோம். வெளிப்­ப­டை­யாகக் கூறவேண்­டு ­மா­னால் நாம் நேர்­மா­றாக பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம். மாகாண சபையை விமர்­சிப்­ப­தற்­கான பணி­க­ளையே செய்து வந்­துள்­ளோம்.

எமக்­கான பயிற்­சிப்­பட்­ட­றை­யில் உள்­ளு­ராட்சி சார்ந்த விட­யம், உல­க­ளா­வி­ய­ரீ­தி­யான எமது அர­சி­யல் பய­ணம், வரவு செல­வுத் திட்­டம் தொடர்­பான விளக்­கங்­கள், கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற்­றன. இதில் உள்­ளு­ராட்சி விட­யத்­தில் இந்­தி­யா­வை­விட நாம் ஓர­ளவு முன்­னேற்­றத்­தைக் கண்­டுள்­ளோம் என்­பதை நாங்­கள் உணர்ந்து கொண்­டோம்.

இதனை அங்கு விளக்­க­ம­ளித்த பேரா­சி­ரி­யர்­க­ளும் ஏற்­றுக்­கொண்­ட­னர்.
உல­க­ளா­விய ரீதி­யில் எமது அர­சி­யல் பய­ணம் மற்­றும் எமது போராட்­டங்­கள் தொடர்­பில் பன்­னாட்டு அனு­ப­வங்­களை மைய­மாக வைத்து எமக்கு விளக்­கங்­கள் வழங்­கப்­பட்­டன.

அதில் எமது போராட்­ட­மும் அங்­கோலா நாட்­டின் போராட்­ட­மும் ஒரே மாதி­ரி­யா­னவை என்­பதை எடுத்­துக் கூறி­னார்­கள்.

இந்த இரண்டு நாட்­டின் போராட்­டங்­க­ளும் தோற்­ற­மைக்­கான கார­ணங்­கள் நாம் இனி எவ்­வா­றான அர­சி­யல் பய­ணத்தை மேற்­கொள்ளவேண்­டும் என்ற கருத்­துக்­க­ளை­யும் அவர்­கள் வழங்­கி­னார்­கள்.

எமக்­கான இந்தப் பயிற்­சிப்­பட்­ட­றை­யில் இருந்து எமது மாகா­ணத்­தின் உள்­ளு­ராட்­சி­யின் செயற்­பாடு ஓர­ளவு திருப்­தி­யாக இருந்­தா­லும் நாம் எமக்­கான செயற்­பா­டு­க­ளில் இருந்து வழி­மாறி முர­ணான பாதை­யி­லேயே பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம் என்­பதை உண­ர­மு­டி­கி­றது -– என்­ற­ார்.

http://newuthayan.com/story/37882.html

  • தொடங்கியவர்

இனப்பிரச்சினையில் வடமாகாணசபை ஆற்றவேண்டிய முக்கிய பணிகளும்

 

இனப்பிரச்சினையில் வடமாகாணசபை ஆற்றவேண்டிய முக்கிய பணிகளும்

 

வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வு கடந்த வாரம் இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது.

ஓபி ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை ஆரம்பமானது முதல் தற்போது வரை இலங்கை அரசியலில் அவதானிப்புக்களை செய்துவரும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மிகவும் பிரபல்யம் வாய்ந்த விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் கடந்த ஒருவாரமாக இந்த அறிவூட்டும் வேலைத்திட்டத்தில் தமது கணிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

இனசமத்துவம், அதிகாரங்களை பகிரிந்து கொள்ளுதல், சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளுதல், தேசிய பாதுகாப்பு. விசேடமாக இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடுகள் தறபோதைய பிரச்சினையினை தீர்ப்பதற்கு வடமாகாணசபை ஆற்றவேண்டிய முக்கிய பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து எதிர்கட்சி தலைவர் தவராசா மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலர் இளங்கோவன் உட்பட மேலும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மூர்த்த பத்திரிக்கையாளர் எம்.கே.நாராயணசாமி, இலங்கைக்கான முன்னாள் தூதுவர் நிருபமாராவ், கலாநிதி சி.ராஜ்குமார், கலாநிதி ஆர்.சுதர்சன், கலாநிதி எம்.சுதர்சனா நாச்சியப்பன், கலாநிதி மோகன்குமார், மேலும் பல விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=96535

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.