Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசமைப்பு நிறைவேறாமல் தடுத்து நிறுத்துவதே எமது பொது இலக்கு மகிந்த தரப்பின் முக்கிய புள்ளி பசில் ராஜபக்ச தெரிவித்தார்

Featured Replies

புதிய அரசமைப்பு நிறைவேறாமல் தடுத்து நிறுத்துவதே எமது பொது இலக்கு

மகிந்த தரப்பின் முக்கிய புள்ளி பசில் ராஜபக்ச தெரிவித்தார்

 
புதிய அரசமைப்பு நிறைவேறாமல் தடுத்து நிறுத்துவதே  எமது பொது இலக்கு
 

 

மகிந்த அலை­யின் மூலம் உரு­வான சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணி­ யின் திரைக்­குப் பின்­னால் இருந்து செயற்­ப­டும், மகிந்த தலை­மை­யி­லான முன்னாள் அர­சில் அமைச்­ச­ரொ­ரு­வ­ரா­கச் செயற்­பட்ட மகிந்த ராஜ­பக்­ச­வின் இளைய சகோ­த­ர­ரான பசில் ராஜ­பக்­ச­வு­ட­னான நேர்­கா­ண­லில், தங்­க­ளது எதிர்­கால அர­சி­யல் செயற்­பாடு கள் தொடர்­பாக பசில் ராஜபக்சவால் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட கருத்­துக்­கள் கீழே தொகுத்துத் தரப்­ப­டு­கின்­றன.

 

கேள்வி: எதிர்­வ­ரும் ஜன­வரி மாதத்­தில் நடத்­தப்­ப­டு­மெ­னக் கூறப்­ப­டும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லுக்கு உங்­களை நீங்­கள் தயார்ப்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளீர்­களா?

பதில்: நடத்­தப்­ப­டு­மெ­னக் கூறப்­ப­டும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் உரிய வேளை­யில் நடத்­தப்­பட்­டால் அதனை எதிர்­கொள்ள நாம் தயா­ரா­கவே உள்­ளோம்.

கேள்வி: அதா­வது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இரண்­டா­கப் பிள­வு­ப­டும் என்­பது உறு­தி­யா­கி­றது. அப்­ப­டித்­தானே?

பதில்: சுதந்­தி­ரக் கட்­சியை இரண்­டா­கப் பிள­வு­ப­டுத்­து­ வதோ, அல்­லது அத­னைப் பாது­காத்­துக் கொள்­வதோ நிச்­ச­ய­மாக கட்­சி­யின் தலை ­வர் உட்­பட்ட ஏனைய தலை­வர்­க­ளது பொறுப் பா­கும்.
எமது சிறி­லங்கா பொது­ஜ­ன­முன்­னணி நிச்­ச­ய­மாக இந்­தத் தேர்­த­லில் போட்­டி­யி­டும். நாம் வாக்­கு­களை பிரிப்­ப­தற்காக என் றில்லாமல் வெற்­றி­யீட்­டும் நோக்­கி­லேயே போட்­டி­யி­ட­வுள்­ளோம்.

கேள்வி: அத்­த­கைய அணு­கு­மு­றை­யூ­டா­கத் தேர்­த­லில் வெற்­றி­யீட்ட முடி­யு­மென நம்­பு­கி­றீர்­களா?

பதில்: ஆம்; நாம் நினைத்­த­தை­விட வர­வர எமது நம்­பிக்கை வலுப்­பெ­று­கி­றது. இந்­தத் தேர்­தல் அர­சுக்­கெ­தி­ரான சகல குற்­றச்­சாட் டுக்­க­ளுக்­கும் நாட்டு மக்­கள் பதி­ல­ளிக்­கக் கிட்­டி­யுள்ள ஒரு வாய்ப்­பா­கும். விசே­ட­மாக, அர­ச­மைப்பு, வாழ்க்­சைச் செலவு உயர்வு, நாட்­டின் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­ கள் முடங்கியிருத்தல், அரச நிர்­வா­கம் பின்­ன­டைவு கண்­டுள்­ளமை, ஊழல் மோச­டி­கள் மற்­றும் ஜன­நா­யக உரி­மை­யான தேர்­தல் கள் பிற்­போ­டப் பட்டுள்­ளமை போன்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்குப் பதி­ல­ளிக்க நாட்டு மக்­கள் சந்­தர்ப்­ப­மொன்­றுக்­கா­கக் காத்­தி­ருக்­கின்­ற­னர். இது உண்­மை­யில் அதற்­கான பொருத்­த­மான வாய்ப்பு என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

 

அர­சுக்­கும் மகிந்த தரப்­புக்­கும் 
இடை­யில் மத்­தி­யஸ்­த­ரா­கச் 
செயற்­பட்­ட­தா­கக் குற்­றச்­சாட்டு

கேள்வி : கூட்டு எதி­ரணி ‘மகிந்­த­வு­டன் எழு­வோம்’ வேலைத் திட்­டத்­தி­னூ­டாக அர­சுக்கு எதி­ராக செயற்­பட்ட வேளை, நாட்­டி­லி­ருந்து வெளி­யேறி அமெ­ரிக்கா சென்ற நீங்­கள் நாடு திரும்பி அந்த எதிர்ப்­புத் திட்­டத்­துக்கு மத்­தி­யஸ்­தம் வகித்­தீர்­கள். நீங்­கள் அர­சு­டன் தொடர்பு பேணு­வ­தாக அந்­தச் சம­யத்­தில் உங்­கள் மீது குற்­றச்­சாட்­டப் பட்­டது. அந்­தக் குற்­றச்­சாட்டு தவ­றென உங்­க­ளால் நிரூ­பிக்க முடிந்­ததா?

பதில்: அந்­தக் குற்­றச்­சாட்­டில் ஒப்­புக் கொள்ள எது­வு­மில்லை. ஏனெ­னில் நான் அவ்­வித நோக் கில் செயற்­பட்­ட­தில்லை. சுதந்­தி­ரக் கட்­சி­யின் இன்­றைய பொதுச் செய­லா­ளர், கடந்த அரச தலை­வர் தேர்­த­லின்­போது ஐ.தே.கட்சி சார்­பில் செயற்­பட்ட ஒரு­வரே. எனவே கட்­சி­யைப் பிள­வு­ப­டுத்­தி­ய­ தற்­கான பொறுப்பை தற்­போ­துள்ள கட்­சித் தலை­வர்­க­ளே­ஏற்­றாக வேண்­டும்.

கேள்வி: மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட தரப்­பி­னர்­கள் மகிந்­த­வுக்கு எதி­ராக அணி­தி­ரண்­ட­தற்­குக் கார­ணம் நீங்­கள் தானே?

பதில்: இல்லை; என்­னு­டன் எந்த விதப் பிரச்­சினை எழ­ எந்­த­வொரு கார­ண­மும் இருக்­க­வில்லை. நான் ஒரு­போ­தும் அரச தலை­வர் பத­ விக்கு போட்டி போடச் சிந்­தித்­த­ தில்லை. எனக்கு எமது குடும்­பத்­தில் எவ­ரி­ட­மும் எவர் மீதும் கோபமோ, வைராக் கியமோ இருந்­த­தில்லை.

இலங்கை இரா­ணு­வத்தினர் போர்க்­குற்­றம் புரிந்­த­னர் என்று தெரிவித்ததாகக் குற்­றச்­சாட்டு

கேள்வி: நீங்­கள் யாழ்ப்பாணத்­துக்­குச் சென்ற சந்­தர்ப்­பத்­தில் அங்கு வைத்து ‘இலங்கை இரா­ணு­வத்­தி­னர் போர்க்­குற்­றத்­தில் ஈடு­பட்­டனர் எனத் தெரி­வித்­துள்­ளீர்­கள்.

பதில்: நான் அவ்­வி­தம் ஒரு­போ­தும் தெரி­வித்­த­தில்லை. இலங்கை இரா­ணு­வத்­தி­னர், போர் தீவி­ர­மாக இடம்­பெற்ற வேளை­யில் போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­தான குற்­றச்­சாட்­டுத் தொடர்­பாக இரா­ணு­வத்­தி­ன­ருக்­குச் சார்­பாக அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த உட்­பட்ட இலங்கை அரச தரப்பினர் முற்று முழு­தாக அதற்கு மறுப்­புத் தெரி­வித்­த­னர்.

அது­மட்­டு­மன்றி இரா­ ணு­வத்­தி­னரது பாது­காப்பு மற்­றும் தேவை­களை நாம் நிறை­வேற்றி வைத்­தோம். இன்று எனக்கு எதி­ராக புனை­க­தை­களை முன் வைப்­போர், ஜெனீவா சென்று இரா­ணு­வத்­தி­ன­ரை­யும் நாட்­டை­யும் காட்­டிக்­கொ­டுத்­தார்­கள். எனது கருத்­துக்­க­ளுக்­குத் தவ­றான அர்த்­தங்­க­ளைக் கற்­பித்­துள்­ளார்­கள்.

கேள்வி : அவ்­வா­றா­னால் நீங்­கள் போர்க்­குற்­றங்­கள் குறித்­துக் கூறிய கருத்­துக்­கள் தானென்ன?

பதில்: குற்­றங்­கள் முன்­னர் இடம்­பெற்­றி­ருந்­தி­ருக்­க­லாம். தற்­போ­தும் இடம்­பெ­றக்­கூ­டும். எதிர்­கா­லத்­தி­லும் இடம்­பெ­ற­லாம். குற்­றங்­கள் என்­பதும் போர்க் குற்­றங்­கள் என்­ப­தும் வெவ்­வே­றா­னவை. குறித்த சில நபர்­கள் சிற்­சில குற்­றங்­களை மேற்­கொண்­டி­ருக்­க­லாம் என்றே நான் தெரி­வித்­தி­ருந்­தேன். நான் அத்­த­கை­யோர் இரா­ணு­வத்­தி­னரே என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­தி­ய­தில்லை.

கேள்வி: தென்­ப­குதி சிங்­கள மக்­க­ளுக்கு ஒரு கருத்­தும் வட­ப­கு­தித் தமிழ் மக்­க­ளுக்கு வேறொரு கருத்­தும் வௌியி­டு­வது அர­சி­யல் வாதி­க­ளது வழக்­க­மாகி விட்­ட­தல் வவா?
பதில்: இல்லை. நான் தென் பகு­தி­யி­லும் வட பகு­தி­யி­லும் ஒரே கருத்­தையே தெரி­வித்து வந்­துள்­ளேன்.

இரா­ணுவ முகாம்­களை 
அகற்ற வேண்­டு­மென 
யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து தெரி­வித்ததா­கக் குற்­றச்­சாட்டு

கேள்வி: இரா­ணுவ முகாம்­களை நீக்கி அந்த இடங்­க­ளைத் தமிழ் மக்­க­ளி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டு­மென நீங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் வைத்துக் கூறி­யுள்­ளீர்­கள்.

பதில்: உண்­மை­தான். பொது மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை எந்த விதத்­தி­லும் கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருக்க எந்­த­வித உரி­மை­யும் கிடை­யாது. மகிந்­த­வின் ஆட்­சி­யில் மனி­தா­பி­மான செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எந்­த­வொரு நிலத்­தை­யும் நாம் கைய­கப்­ப­டுத்­த­வில்லை.
அதி பாது­காப்பு வல­யத்­துள் இருந்த இடங்­கள், எமக்கு முன்­னர் ஆட்­சி­யில் இருந்த அர­சு­கள் கைய­கப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலங்­களே. அவ்­வி­தம் அர­சின் வச­மி­ருந்த பொது மக்­க­ளது நிலங்­க­ளில் 80 வீத­மா­ன­வற்றை நாம் மக்­க­ளி­டம் மீண்­டும் மீள­ளித்­துள்­ளோம். மீத­மாக இருந்த 20 வீத காணி­க­ளில் மிதி­வெ­டி­கள் அகற்­றப்­ப­ட­வேண்­டி­யி­ருந்­தன.

இன்­றைய அரசு அந்த நிலங்­களை விடு­விப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்கி ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்றி விட்டு, அந்த நிலங்­க­ளைப் பொது மக்­க­ளி­டம் கைய­ளிக்­கா­மல் இருப்­ப­து­தான் தவறு. அவை உட­ன­டி­யா­க­பொது மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட வேண்­டும்.

கேள்வி: ஆனால் அத்­த­கைய நிலங்­களை மீள­ளிப்­பது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் எனக் கூறு­வ­தும் கூட்டு எதி­ர­ணித் தரப்­புத் தானே?

பதில்: தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் அல்­லா­த­கா­ணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும். வட­ப­கு­தி­யில் அபி­வி­ருத்­திப் பணி­க­ளைப் பொறுப்­பேற்று மேற்­கொண்ட நபர் என்ற விதத்­தில் எனது தௌிவான கருத்து, வட­ப­குதி மக்­க­ளது காணி­களை வலோற்­கா­ர­மாக அரசு வைத்­தி­ருக்­கக் கூடாது.
அவை விடு­விக்­கப்­பட வேண்­டும் என்­ப­து­தான். வெவ்­வேறு மதத்­த­வர்­க­ளது வழி­பாட்­டுத் தலங்­கள் பல தற்­போ­தும் விடு­விக்­கப்­ப­டா­துள்­ளன.
அப்­பா­விப் பொது மக்­க­ளது வாழ்­வி­டங்­கள் அவற்­றுள் அடங்­கி­யுள்­ளன. அவை விடு­விக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தற்கு எந்­த­வொரு கார­ணத்­தை­யும் முன்­வைக்க இய­லாது.

கேள்வி: ஆனால் வட­ப­கு­தி­யின் பாது­காப்பு தற்­போ­தும் சிக்­க­லா­ன­தா­கத் தானே­யுள்­ளது?

பதில்: ஆம் ஆனால் பொது மக்­க­ளது நிலங்­கள் விடு­விக்­கப்­ப­டா­து இருப்­ப­தற்கு அது­வல்ல கார­ணம். அவ்­வாறு நிலங்­களை விடு­விக்கா திருப்­ப­தன் மூலம், நிலம் தொடர்­பான பிரச்­சி­னை­யில் நிலத்­துக்­குக் கான அதி­கா­ரம் எமக்கு அவ­சி­யம் என பொது மக்­க­ளுக்­குக் காட்ட அவர்­கள் விரும்­பு­கி­றார்­கள் என நான் கரு­து­கி­றேன்.
அவற்றை விடு­வித்து விட்­டால் அந்த நிலைப்­பாட்டை உறுதி செய்­து­கொள்ள இய­லாது போய்­வி­டும்.

கேள்வி:நீங்­கள் ‘அவர்­கள்’ என்று யாரைக் குறிப்­பி­டு­கி­றீர்­கள்?

பதில்:வட­ப­ப­கு­தி­யில் உள்ள தமிழ் அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­கள், அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் சில நாடு­கள் கொழும்பு அர­சு­தான் அவ்­வி­தம் நிலங்­களை விடு­விக்­கா­துள்­ளது. காணி­க­ளுக்­கான அதி­கா­ரம் எமக்­குத் தேவை. அத்­த­கைய அதி­
கா­ரம் இருந்­தால்­தான் காணி தொடர்­பான பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண இய­லு­மென்ற கருத்­துத்­தான் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

 

கேள்வி: முன்­னைய அர­சின் காலத் தில் தற்­போ­தைய உங்­க­ளது கருத்து நிலை­ப்பாட்­டுக்கு எதி­ராக இருந்­தோர் யார்?

பதில்: எவ­ரும் எதிர்ப்­புத் தெரி­விக்­க­வில்லை. ஆனால் நடை­மு­றைச் சிக்­கல்­கள் பல இருந்­தன. 80 வீத­மான நிலங்­கள் குறு­கிய காலத்­துள் விடு­விக்­கப்­பட்ட போதி­லும், மீத­முள்ள 20வீத நிலங்­க­ளில் மிதி­வெ­டி­கள் அகற்­றப்­ப­ட­வேண்­டி­ருந்­தன.
பாது­காப்பு வல­யத்­தைப் பின்­ந­கர்த்த வேண்­டி­யி­ருந்­தது.
அதற்­கான கட்­டு­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்­டி­இருந்­தது. அத­னா­லேயே மீத­
மி­ருந்த நில­வி­டு­விப்பு மேற்­கொள்­ளப்பட­வில்லை.

தென் பகு­தி­யில் தான் அரச நிலங்­கள் வெறு­மை­யாக இல்லை.ஆனால் வட­ப­கு­தி­யில் அர­சுக்­குத் தேவை­யான அளவு அரசு நிலங்­கள் உள்­ளன.
ஏன் அந்த இடங்­க­ளில் படை­மு­காம்­களை நிறுவ இய­லாது?சீனா­வுக்கு 15ஆயி­ரம் ஏக்­கா் நிலத்தை வழங்­க­மு­டி­யு­மா­னால், இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு நிலங்­களை வழங்க இய­லு­மா­னால் ஏன் இந்த நாட்டு மக்­க­ளுக்கு வழங்க இய­லா­துள்­ளது?

பொருத்­த­மா­ன­தொரு 
அரசை உரு­வாக்­கு­வதே எதிர்காலத் திட்­ட­மெ­னத் தெரி­விப்பு

கேள்வி :மேற்கொண்டு அரசியலில் என்ன செய்வதற்கு எதிர்பார்க்கிறீர்கள்?

பதில். எமக்­கென ஒரு வேலைத்­திட்­டத்தை வகுத்­துள்­ளோம்.எமது முன்­னைய ஆட்­சி­யில் தவ­று­கள் இருந்­தி­ருக்­கு­மா­னால், அவற்றை நோ்சீா் செய்து இன்­றைய புதிய சமூ­கத்­துக்கு,இளை­யோா் பரம் ப­ரைக்குப் பொருத்­த­மா­ன­தொரு அரசை உரு­வாக்க வேண்­டி­யுள்­ளது. அதற்­காக அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­ப­ட­வுள்­ளோம்.

 

கேள்வி.விமல் வீர­வன்ச உட்­பட்ட தரப்­பி­னா் அரச தலை­வா் மைத்­திரிபால­வைச் சந்­தித்­துள்­ள­னரே?

பதில்அ:ண்­மை­யில் பல கட்­சி­களை ஒன்­றி­ணைத்­துத்­தான் நாம் செயற்­ப­டு­கின்­றோம்.
நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பி­னரொரு­வா் கூட்டு எதி­ரணி சார்பில் செயற்­ப­டு­கி­றாா்.நாடா­ளு­மன்­றத்­தில் அங்­கத்­து­வம் பெற்­றி­ராத கட்­சி­கள் மகிந்­த­வின் தலை மை­யில் ஒன்­றி­ணைந்­துள்­ளன.அந்­தந்­தக் கட்­சி­கள் வெவ்­வேறு
கொள்கை நிலைப்­பா­டு­களைக் கொண்­டுள்­ளன.ஆனால் எல்­லோ­ருக்­கும் முக்­கிய இலக்கு ஒன்­றுண்டு.நாட்­டுக்குத் தீங்கு விளை­விக்கவல்ல புதிய அர­ச­மைப்பு நிறை­வேறாமல் தடுத்து நிறுத்துவதே எமது பொது இலக்­கா­கும்.அது தொடா்­பாக முன்­னெ­டுத்த ஒரு நட­வ­டிக்­கை­தான் விமல் வீர­வன்ச உட்­பட கட்­சி­யின் தலை­வா்­கள் அரச தலை­வ­ரைந் சந்­தித்­த­மை­யா­கும்.

http://newuthayan.com/story/38036.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.