Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்துக்கு பகிரங்க கடிதம். புதிய தலைமைக்கான வழி ஏது?

Featured Replies

கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்துக்கு பகிரங்க கடிதம். புதிய தலைமைக்கான வழி ஏது?

 

கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களே-

வணக்கம்.

நீங்கள் தமிழர் அரசியல் நிலை பற்றி, உள்ளூரிலும் சர்வதேச ம்டத்திலும் பேசிவரும் ஒருவர். ஆனால் 2010ஆம் ஆண்டில் இருந்து நீங்கள் தமிழரசுக் கட்சியை குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை விர்சிப்பதிலேதான் உங்கள் கவனம் திரும்பியிருக்கின்றது. 

தற்போது சிவாஜிலிங்கத்துடனும் மோதுகின்றீர்கள். முன்னர் சுரேஸ் பிரேமச்சந்திரனை விமர்ச்சித்தீர்கள். தமிழர் அரசியலில் நீங்கள் திடீரென குதித்தவர் அல்ல. உங்களுக்கென்று ஒரு அரசியல் பாரம்பரியம் உண்டு. ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளிலும் மக்கள் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கின்றனர்.

மக்களுடைய நம்பிக்கையீனங்களுக்கு மத்தியிலும் புதிய அரசியல் அணி என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால்  இதுவரை எதுவும் நடக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் தமிழரசுக் கடசியைக்கூட அல்லது அந்தக் கட்சியில் அங்கம் வகிக்கும் மனச்சாட்சியுள்ள உறுப்பினர்களையும் வேறு கட்சிகளையும் ஒன்று திரட்டி இளைஞர்களையும் உள்ளடக்கிய புதிய தலைமைத்துவம் ஒன்றுக்கான, வழிகாட்டலைக் கூட செய்ய முடியாத அவல நிலை ஒன்று தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்றதல்லவா? 

தமிழருக்கான நேர்மையான தலைமைத்துவத்தில் வெற்றிடம் ஒன்று இருப்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் தந்தையார் குமார் பொன்னம்பலம், 1990களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்த ஒரு பெரும் புள்ளி. புலிகளின் போராட்டத்தை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்தி உரக்கப் பேசிய ஒருவர்.
கொழும்பில் இருந்து கொண்டு புலிகளை நியாயப்படுத்திய அரசியல் மிகவும் துணிச்சலானது.

அதுமாத்திரமல்ல அன்று புலிகளுடன் முரண்பட்டு வெளியேறிய புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய இயங்கங்களை ஒன்று சேர்த்து, மனோ கணேசன் உள்ளிட்ட மலையகக் கட்சிகளினுடைய ஒத்துழைப்பையும் பெற்று 2000ஆம் ஆண்டு பதிணொரு அரசியல் கட்சியாக கொழும்பில் இயக்கிய சிறந்த வழிகாட்டி, உங்கள் தந்தை.

புலிகளுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை அந்த பதிணொரு கட்சிகளும் முன்னெடுப்பதற்கு ஏற்ற அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுமிருந்தார். அவ்வாறு இயக்கப்பட்ட பதிணொரு அரசியல் கட்சிகளின் ஒற்றுமையான செயற்பாடுதான், 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாகவும் வழி காட்டியாக அமைந்தது.

ஆகவே இவ்வாறான அரசியல் பண்பை அறிமுகப்படுத்திய உங்களின் தந்தை வழியில் நீங்கள் செல்ல வேண்டிய காலகட்டமிது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடு என்ற அரசியலை தமிழரசுக் கட்சியுடன் செய்ய முடியாத சூழல்நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளை குறிப்பாக முன்னாள் இயக்கங்களுடன் முரண்பாட்டில் ஒர் உடன்பாடு என்ற அரசியலை நீங்கள் நிச்சயமாக செய்தே ஆகவேண்டும்.

அதுவும் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையின் பின்னர் அந்த அரசியல் அணுகுமுறை அவசியமானதொன்றாக அவதானிக்கப்படுகின்றது. சிலவேளை அந்த இயக்கங்களும் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டால், உங்களை பயன்படுத்தி நாடாளுமன்றக் கதிரையைக் கைப்பற்றியதும் பின்னர் தமிழரசுக் கட்சியின் அரசியல் பாணியை பின்பற்றுவார்கள் என்றும் நீங்கள் சந்தேகிக்கலாம். அவ்வாறான சந்தேகத்தில் நியாயம் உண்டு.

ஆனால் நாடாளுமன்றக் கதிரையை விட வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவையை, முன்நிறுத்தும் அரசியலை செய்வது யார்? நீங்கள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை கூட தூர நோக்குடன் சிந்திப்பதாகத் தெரியவில்லையே? மாகாண சபை இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. ஆனால் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் உங்கள் கட்சியுடன், தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளை ஒன்றினைத்து பொதுச் சின்னம் ஒன்றில் நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். (தயவு செய்து உங்கள் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி வையுங்கள்)

ஏனெனில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கும் பழக்கத்தில் இருந்து வேறு சினத்திற்கு வாக்களிக்கக்கூடிய அரசியல் பயிற்சி ஒன்றை மக்களுக்கு வழங்க முடியும். அத்துடன் ஜனநாயக ரீதியாக வாக்குகளின் மூலம் மக்களை ஒன்று திரட்டி தென்பகுதிக்கும் சர்வதேசத்திற்கும் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை வலியுறுத்தலாம்.

ஆகவே சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாக மாகாண சபை, மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை மாற்றக்கூடிய ஏற்பாடுகளை செய்யுங்கள். அவ்வாறு செயற்பட்டால் அரசாங்கத்துக்கு முன்டுகொடுக்கின்ற அரசியல் ஒதுங்கிவிடும். 

எனவே பேச்சை விட செயற்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். அரசியல் கைதிகள் விவகாரம், காணிப் பறிப்பு, சிங்கள குடியேற்றம், தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலை வைத்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அரசாங்கம், தமிழர்களின் கவனத்தை வேறு திசைக்கு கொண்டு செல்கின்றது.

அதாவது சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் என்ற பிரதான அரசியல் கோரிக்கையில் இருந்து திட்டமிட்டு அரசாங்கம் திசை திருப்பிக் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் ஏனையவர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்தால் அரசாங்கத்திற்கு அது இன்னும் வசதியாக அமைந்து விடும்.

ஆகவே வாய்ப்பேச்சையும் உள்ளக மோதலையும் கைவிடுங்கள், அத்துடன், மயிலே மயிலே இறகு போடு என்றால் மறியல் இறகைத் தராது. ஒரு கோட்டைக் கீறிவைத்துக் கொண்டு, அந்தக் கோட்டில்தான் நான் நிற்பேன், விரும்பினால் நீங்கள் அந்தக் கோட்டுக்கு வாருங்கள் என்று கேட்கும் அரசியல் சாத்தியமானதுமல்ல.

உங்கள் தந்தையார் 2000ஆம் ஆண்டு செயற்படுத்திய அரசியலை 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் தீவிரப்படுத்த வேண்டும். அதுதான் உங்கள் பொறுப்பும் கடமையும். யார் தலைமை என்பதல்ல பிரச்சினை. அதற்கான வழிகாட்டலை செயற்படுத்த வேண்டும். கிராமத்தில் இருந்து தலைமைக்கான வழிகாட்டலை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அப்படியானதொரு அரசியலை அறிமுகப்படுத்தினால் சமூகப் பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைவர்கள் மறைந்துவிடுவார். இல்லையேல் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சிதான் தமிழர்களுக்கான மாற்று அரசியல் சக்தி என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் நிலை ஏற்படலாம்.

நன்றி
ஐ.பி.சி.தமிழ்

https://news.ibctamil.com/ta/politics/It-is-necessary-that-politics-be-more-active-than-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.