Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல­வீ­னப்­ப­டுத்­தும் போராட்ட உத்­தி­கள் வேண்­டாமே!

Featured Replies

பல­வீ­னப்­ப­டுத்­தும் போராட்ட உத்­தி­கள் வேண்­டாமே!

 

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் வகுப்­புப் புறக்­க­ணிப்­புப் போராட்­டத்­தில் குதித்­துள்­ள­னர்.

உணர்­வு­பூர்­வ­மான இந்த விட­யத்­தைச் சரி­வ­ரக் கையாள அர­சி­யல்­வா­தி­கள் தவ­றி­விட்­டார்­கள் என்று குற்­றஞ்­சாட்­டும் பல்­கலை மாண­வர்­கள் இந்த விட­யத்­தைத் தமது கைக­ளில் எடுத்­துக்­கொண்­டுள்­ள­னர்.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் அர­சி­யல் விழிப்­பு­ணர்­வோடு இருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. பாராட்­டப்­ப­ட­வேண்­டி­யது.

அண்­மைக் கால­மா­கவே இந்­தப் பிரச்­சினை பூதா­கா­ர­மா­கத் தமி­ழர் பகு­தி­க­ளைத் தாக்கி வரு­கின்­றது.

அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தைத் தொடர்ந்து இந்த விட­யம் மீண்­டும் சூடான பேசு­பொ­ருள் ஆகி­யி­ருக்கின்­றது .

வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் தமக்கு எதி­ராக நடந்து வந்த வழக்கை அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றி­யதை எதிர்த்தே அவர்­கள் இந்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தமது வழக்­கு­கள் மீண்­டும் வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­ப­ட­வேண்­டும் என்­பதே அவர்­க­ளின் கோரிக்கை.

அவர்­க­ளது போராட்­டம் கிட்­டத்­தட்ட 25 நாள்­களை எட்­டி­ய­போ­தி­லும் கைதி­க­ளின் கோரிக்­கைக்­குச் சாத­க­மான பதில் எது­வுமே தரப்­ப­ட­வில்லை.

நாட்­டின் அரச தலை­வர் முதல் அனைத்­துத் தரப்­பி­ன­ரு­டன் பேசி­யும் எது­வும் சரி­வ­ர­வில்லை. இதை­ய­டுத்தே யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் வகுப்­புக்­க­ளைப் புறக்­க­ணிப்­பது என்று தீர்­மா­னித்துள்ள­னர்.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் அர­சி­யல் விழிப்­பு­ணர்­வோடு இருப்­ப­தும் ஒடுக்­கப்­ப­டும் மக்­க­ளுக்­கா­கக் குரல் கொடுப்­ப­தும் மிகச் சிறப்­பா­னது.

அதே­நே­ரத்­தில் அதற்­கா­கத் தமது கல்­வி­யைப் பாழ்­ப­டுத்­து­வது ஏற்­பு­டை­ய­தல்ல. எடுத்­த­தற்­கெல்­லாம் முழு அடைப்­பும் வகுப்­புப் புறக்­க­ணிப்­பும் நடத்­திக்­கொண்­டி­ருந்தால் அத­னால் பாதிக்­கப்­ப­டப்­போ­வ­தும் நாமே­தான்.

கடை­ய­டைப்­புக்­க­ளால் எமது பொரு­ளா­தா­ர­மும் வகுப்­புப் புறக்­க­ணிப்­புக் க­ளால் கல்­வி­யும் பாதிக்­கப்­ப­டு­வது நாம் எமது இரு கண்­க­ளை­யும் நாமே குத்­திக்­கொள்­வ­தற்கு ஒப்­பா­னது.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் அர­சி­யல் ஈடு­பாட்­டைக் காட்­டு­வ­தும் அர­சி­யல் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வ­தும் தேவை­யா­ன­து­தான் என்­றா­லும் அத­னைக் கார­ண­மாக வைத்து அவர்­கள் தமது கல்­வி­யைப் பாழ்­ப­டுத்­திக்­கொள்­ளக்­கூ­டாது.

தொடர்ச்­சி­யான வகுப்­புப் புறக்­க­ணிப்­புப் போன்ற போராட்­டங்­க­ளால் பாதிக்­கப்­ப­டப்­போவது தமிழ் மாண­வர்­க­ளின் கல்­வி­யே­ தான்.

ஏற்­க­னவே மருத்­து­வ­பீட மாண­வர்­க­ளின் கல்வி நட­வ­டிக்­கை­கள் சைட்­டம் போராட்­டம் கார­ண­மாக மாதக் கணக்­கா­கத் தடைப்­பட்­டுள்­ளன.

அண்­மை­யில் அவர்­க­ளின் பெற்­றோர்­கள் கூடிப்­பேசி மாண­வர்­கள் தமது கல்­வி­யைத் தொடர்ந்­த­ப­டியே போராட்­டத்­தை­யும் தொட­ர­வேண்­டும் என்று கேட்­டி­ருந்­தார்­கள்.

முடி­வே­யின்றி மாதக் கணக்­கா­கத் தொட­ரும் போராட்­டங்­க­ளால் மாண­வர்­க­ளும் அவர் தமது பெற்­றோ­ரும் எவ்­வ­ளவு துன்­பங்­க­ளைச் சந்­திக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் அவர்­கள் ஓர் அறிக்கை மூலம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­தார்­கள்.

சரி­யா­ன­தும் உண்­மை­யா­ன­து­மான கருத்­துக்­கள் அவை. பெற்­றோர் சொல்­வ­தைப் போன்றே தமது கல்­வி­யைப் பாழ­டிக்­கா­மல் போராட்­டங்­களை நடத்தி அர­சுக்கு அழுத்­தம் கொடுப்­ப­தற்­கான உத்தி என்ன என்­ப­தையே மாண­வர்­க­ளும் அர­சி­யல் கட்­சி­க­ளும் சிந்­திக்­க­வேண்­டும்.

ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கோ கவ­ன­வீர்ப்பு நிகழ்­வு­க­ளுக்கோ மக்­கள் திர­ள­மாட்­டார்­கள் என்­ப­தால், அலு­வ­லங்­க­ளுக்­கும், பாட­சா­லை­க­ளுக்­கும், கல்­லூ­ரி­க­ளுக்­கும் செல்­லா­மல் விடு­வது இலகு என்ற அடிப்­ப­டை­யில் அடைப்பு, புறக்­க­ணிப்­புப் போராட்­டங்­க­ளைத் தெரிந்­தெ­டுப்­ப­தை­விட இன்­னும் கன­தி­யான, காத்­தி­ர­மான போராட்­டங்­கள் குறித்­துச் சிந்­திக்க வேண்­டிய இடத்­தில் தமிழ்ச் சமூ­கம் நிற்­கின்­றது.

மீண்­டும் மீண்­டும் இது­போன்ற போராட்­டங்­களை நடத்தி, போரால் ஏற்­க­னவே பாதிக்­கப்­பட்­டுள்ள தமி­ழர்­க­ளின் கல்­வி­யை­யும் பொரு­ளா­தா­ரத்­தை­யும் மேலும் மேலும் பல­வீ­னப்­ப­டுத்­தக்­கூ­டாது.

தற்­போ­தைக்கு எதிர்­வ­ரும் புதன் கிழமை வரை மட்­டுமே யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் போராட்­டம் நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அன்­றைய தினம் அரச தலை­வ­ரி­டம் இருந்து அர­சி­யல் கைதி­கள் தொடர்­பில் சாத­க­மான பதில் கிடைக்­க­வில்லை என்­றால் போராட்ட வடி­வத்தை மாற்­று­வது குறித்து சிந்­திக்­கப்­போ­கிறோம் என்று மாண­வர்­கள் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள்.

இதுவும் சிறப்­பா­னது. அதே­நே­ரத்­தில் அந்­தப் போராட்ட வடி­வங்­கள் கல்­வி­யைப் பாதிக்­கா­த­வை­யாக இருப்­பதை அவர்­கள் உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும்.

http://newuthayan.com/story/39357.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.