Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி-கமலை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசி காலமானார்

Featured Replies

ரஜினி-கமலை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசி காலமானார்

 

 
ரஜினி-கமலை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசி காலமானார்
Pic Courtesy : Twitter

 

தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

 

 

இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’  என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

 

இவர் நடிகை சீமாவை திருமணம் செய்து கொண்டார். அனு, அனி என்ற இரு மகள்கள் உள்ளனர். 

இவர் பல விருதுகளை பெற்று உள்ளார். குறிப்பாக இவருக்கு 1982-ம் ஆண்டு தேசிய விருதும், 2013-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றார். மேலும் மாநில விருதும்,  ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

இயக்குநர் ஐ.வி. சசி மறைவு: நடிகர் கமல் இரங்கல்!!

 

 
இயக்குநர் ஐ.வி. சசி மறைவு: நடிகர் கமல் இரங்கல்!!

 

தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

 

 

இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’  என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

 

இவர் நடிகை சீமாவை திருமணம் செய்து கொண்டார். அனு, அனி என்ற இரு மகள்கள் உள்ளனர். 

இவர் பல விருதுகளை பெற்று உள்ளார். குறிப்பாக இவருக்கு 1982-ம் ஆண்டு தேசிய விருதும், 2013-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றார். மேலும் மாநில விருதும்,  ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இவரது மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

Kamal HaasanVerifizierter Account @ikamalhaasan

 
 
 
 

நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்

http://zeenews.india.com/tamil/movies

  • தொடங்கியவர்

ஐ.வி.சசி ஒரு கலைக் கருவூலம்: வைரமுத்து புகழஞ்சலி

 

 
sasi%20vairamuthujpg

ஐ.வி.சசி, வைரமுத்து | கோப்புப் படம்.

திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசியின் மறைவுக்கு கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வைரமுத்து வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி மறைவுச் செய்தி என்னை அதிர வைத்தது.புகழ்மிக்க ஒரு தென்னிந்திய இயக்குநரை இந்திய சினிமா இழந்துவிட்டது.

அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். பாராதிராஜாவின் நிழல்கள் நான் பாட்டெழுதிய முதல் படம் என்றாலும், திரையில் முதன்முதலில் வெளிவந்தது ரஜினி நடித்து ஐ.வி.சசி இயக்கிய காளி என்ற படமாகும். அந்த வகையில் அவர்மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு.

கலையே வாழ்வு; வாழ்வே கலை என்று வாழ்ந்தவர் மறைந்துவிட்டார். மலையாள மண் இந்திய சினிமாவுக்குத் தந்த கலைக் கருவூலத்தைக் காலம் திருடிவிட்டது. அவர் புகழ் இந்திய சினிமாவில் என்றென்றும் வாழும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலை உலகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19913151.ece

ஆழ்ந்த அனுதாபங்கள்!!

இவர்  இயக்கிய    பகலில் ஒரு இரவு  படம் நல்ல பாட்டுகளுடன் கூடிய நல்ல படம்.

சீமாவும் இந்த படத்தில் நடித்து இருந்தார்.

இவரது தமிழ் படமான 'பகலில் ஓர் இரவு' இரண்டு முறை பார்த்து உள்ளேன். இப் படத்தில் தான் 'இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு" பாடலும் 'பொன்னாரம் பூவாரம்" பாடலும் உள்ளது. திருமணத்துக்கு முன் கர்ப்பமாகி அதை கலைக்க முற்பட்டு அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் உடலுறவு கொள்ளும் பொது மனம் பேதலிக்கும் ஒரு பெண்ணின் கதையை முக்கிய கருவாகி எடுத்த படம். ஸ்ரீதேவி கதாநாயகி ஆக நடித்து இருப்பார்

இவரது 'அவளோட ராவுகள்' படம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய படம். மலையாள சினிமாவில் மாற்று சினிமா அலையை உருவாக்கியவர். 'அவளோட ராவுகள்' படத்தில் மேலாடை இல்லாமல் நடித்த சீமாவை தான் பின்னர் திருமணம் முடித்து இருந்தார்.

  • தொடங்கியவர்

சசியேட்டனிடம் ’சார் எவிடைக்கா’ என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்..! #RIPIVSasi

ஜெய பாரதியின்  ஆடைகளற்ற விஸ்தாரமான முதுகை ஒரு விதமான மூச்சுப் பிடிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றேன். அது ஒரு போஸ்டர். இருந்த பூனை மயிர் மீசையில் தீக்குச்சி கரியைப் பூசிக்கொண்டு வாயில் தம்மையும் வைத்துக்கொண்டு கவுண்டரில் டிக்கெட் வாங்கினேன். படம் ஓடி முதல் ரீலில் நான் வந்த காரியத்தை மறந்தாயிற்று. அந்தக் கதை இழுத்துக்கொண்டு சென்றது. அநேகமாய் படத்தின் தரம் எனக்குப் புதுமையாய் பட்டிருக்க வேண்டும். எதிர்பார்த்துப் போன காட்சிகள் இல்லாமலில்லை. ஆனால், அவை கடந்து போயிற்று. எனக்கு சோமனும் மதுவும் சாரதாவும் ஜெயபாரதியும் பிரமாண்டமாய் தெரிந்தது போக, அப்பா அம்மாவைக் கொன்ற ஆளை பழி தீர்க்கும் கதை இவ்வளவு நன்றாய் இருக்குமா என்று நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்ப படம் பார்த்தேன். கவனித்துக் கொண்டேன். படம் இதா இவிடே வர. இயக்குநர் ஐ வி சசி. எழுதியவர் பத்மராஜன். சொல்லப் போனால் மலையாளப் படங்களுக்குக் காத்திருந்து பார்க்கத் தொடங்கியது அப்போதுதான்.

IV-SASI-1_17086.jpg

 

அதற்கு அப்புறம் வந்து, சென்னையில் புழுதி பறக்க ஓடிய அவளுடே ராவுகளுக்கு நான் பதட்டப்படவில்லை. ஒரு நல்ல படம் பார்க்கப் போகிறோம் என்பது தெரியும். நான் என்னளவில் சசியை அறிந்த கதையைச் சொல்லுவதற்கு ஒரு காரணமே உண்டு. அவரைப் பலரும் இப்படியெல்லாம் அறிந்தே தங்களுள் அவரை மதித்தார்கள். அப்புறம் அவர் பல தலைமுறைகளைத் தனது படங்கள் மூலம் மக்களை நேரிட்டார்.   

முக்கியமாய் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் அவரால் குரு செய்ய முடியும். காளி செய்ய முடியும். அலட்டிக் கொள்ளாமல் பகலில் ஓர் இரவு செய்ய முடியும். மெட்ராசிலே மோன் என்று ஒரு படம். அந்தச் சத்தத்துக்கு நான் இப்போது கூட காது பொத்திக்கொள்வேன். அவர் தான் எம் டி யின் அட்சரங்கள் பண்ணினாரா, அபயம் தேடி பண்ணினாரா என்பது வியப்பு. ஆள் கூட்டத்தில் தனியே வேறு என்றால் உயரங்களில் மற்றொரு ரகம். இருந்தார் போல இருந்து திடீர் என்று அலாவுதீனும் அற்புத விளக்கும், இன்னும் எதிர்பாராமல் ஒரே வானம், ஒரே பூமி. எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் இவருக்கு இந்தக் கதை, உப கதை, திரைக்கதை, கூடுதல் திரைக்கதை, வசனம், இணை வசனம், அப்புறம் மொத்த டைரக்‌ஷன் பிசினஸ் எல்லாம் வராதா? இயக்கம் சசி என்று சிம்பிளாய் போட்டுக்கொண்டு மிக நேர்மையாய் எழுத்தாளர்களுடன் பணிபுரிந்தார். அவரது வெற்றி அது. பத்மராஜன் கதை ஒரு வடிவம், எம் டி வேறு, டி தாமோதரன் வேறு, ரஞ்சித் வேறு என்பதால் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கோணம் கிட்டியது.  

mohanlal-iv-sasi-22-1466617018_17402.jpg

அவர் பாக்கெட்டுக்குள் கை விட்டுக்கொண்டு மோவாயை சொறிந்து பாவனைகள் காட்டுகிற ஜோக்குக்கு நேரம் கொடாமல் ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொண்டே இருந்தார் என்று நம்ப விரும்புகிறேன். மிருகயாவாக இருக்கட்டும், அல்லது இணா என்கிற ஜிலுப்பான்ஸ் படத்தில் கூட தனது முத்திரைகளைக் கைவிடவில்லை. ஜானி நேரத்தில் பாடல்கள் எடுப்பது பற்றின பேச்சில் மகேந்திரன் சசியை மிகவும் குறிப்பிட்டு சொல்லியிருந்தார். பாலு மகேந்திராவின் பாராட்டு பற்றி சுகா பதிவு போட்டிருந்தது முக்கியம். கமலின் பாராட்டு பற்றி கூட. அவை அவரது தொழிலின் நேர்த்திக்குச் சான்று. ஓர் ஆள் இடைவிடாமல் நூறு படங்களை எல்லாம் தாண்டி க்வாலிட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது விளையாட்டுக் காரியமில்லை என்பதை எந்த சினிமா கொம்பனும் ஏற்றுக்கொள்வான் என்பதில் அவநம்பிக்கை வேண்டாம்.

ஒரு நேரத்தில் அவர் நெற்றியடி அடித்த அரசியல் படங்கள் கேரள அரசுக்குத் தலைவலியாய் இருந்தன. ஈநாடு சாராய சாவுகளைக் குறித்தது. அப்காரியும் அந்த தினுசுதான். இனியெங்கிலும் படமெல்லாம் புரட்சி பேசின என்று நினைவு. கமல், லால், மம்முட்டி என்றில்லை. சகல நடிகர் நடிகையரும் அவர் படத்தில் நடிக்க விரும்பியிருப்பார்கள். காரணம் அவரது நெறியாளுகையில் எந்தப் பாத்திரமும் ஒளி கொண்டு விடும் என்கிற நம்பிக்கை.  

iv-sasi-bccl_17001.jpg

தேவாசுரம் படத்தை யாரும் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அதில் லாலும், ரேவதியும், வேணுவும், ஒடுவில்லும் ஒருவரை தாண்டி ஒருவர் நடித்துக் கொண்டு முந்தியது தெரியும். நெப்போலியன் செய்த அந்த சேகரன் கதாபாத்திரத்தை மறக்க முடியுமா? விழுந்து விட்ட லாலின் மார்பில் மிதித்துக்கொண்டு விஷம் தோய்ந்த வார்தைகளால் வைக்கப்படுகிற சவால் படத்தின் இறுதி நிமிடம் வரை நீடிக்கும். கேரளாவே அவரைப் பிரமிப்பாய் பார்த்தது என்று சொல்ல வேண்டும். 

இப்படி எத்தனையோ மாயங்களை நிகழ்த்தினவர் அவர். இதென்ன ரொம்ப ஓவராக இருக்கிறதே, பாராட்டு மழை மட்டும் தானா என்றால், இல்லை. அவரும் பல டுபாக்கூர் படங்களைச் செய்திருப்பார். யாரும் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். அதை சசியின் படம் என்பதையே கவனிக்க விரும்பாமல் அடுத்த படத்தை நம்பியிருப்பார்கள். மனிதனிடம் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஓர் இறப்பு நடந்த நேரத்தில் நல்லது பற்றி மட்டுமே பேசுவது மாதிரி வைத்துக்கொள்ளலாம். அப்புறம் யாரைப் பற்றியாயினும் கறாரான விமர்சனம்தான் வைக்கணும் என்கிற டிரென்டின் மீது எனக்கு ரொம்ப வெறுப்பு.

சாதனை செய்கிறவரை மனமார புகழ்ந்து நமக்குள் எடுத்துக்கொள்ளுவது மிக முக்கியம். சினிமா கற்கிறவர்களுக்கு அவர் தனது அற்புத படைப்புகளைக் குவித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பதை அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன்.

 

மறுபடியும் ஜெயபாரதி முதுகு காட்டின படத்துக்கு வருகிறேன். அந்தப் படத்தில் சார் எவிடைக்கா என்பார்கள். எங்கே போகிறீர்கள் என்று அர்த்தம். இதா இவிடே வரே என்பார் ஹீரோ. இதோ இது வரையில் என்று பொருள். நாம் எங்கே போகிறோம் என்பது பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லை என்பது நமது தனிமையைக் குறிக்கிறது. மரணத்தைக் காட்டிலும் தனிமையுண்டா?  சசியேட்டனிடம் சார் எவிடைக்கா என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். இதா இவிடே வரே என்று அவராலும் சொல்லியிருக்க முடியாது.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/106025-memories-of-iv-sasi.html

  • தொடங்கியவர்

இயக்குநர் ஐ.வி.சசி அஞ்சலி: நட்சத்திரங்களின் தொழிற்சாலை

27chrcjSasi

69 வயதில் ஐ.வி.சசி

27chrcjIV%20SASI%20SHOOTTING%20SPOT

படப்பிடிப்பு ஒன்றில் இயக்குநர் மகேந்திரன், கமல், ஐ.வி.சசி, ரஜினி, சீமா

27chrcjKaali

‘காளி’படத்தில் சீமா, ரஜினி

27chrcjSasi

69 வயதில் ஐ.வி.சசி

27chrcjIV%20SASI%20SHOOTTING%20SPOT

படப்பிடிப்பு ஒன்றில் இயக்குநர் மகேந்திரன், கமல், ஐ.வி.சசி, ரஜினி, சீமா

ந்தப் படத்தை பார்த்திருக்காத தமிழர்கள் கூட அதன் பெயரை அறிந்திருப்பார்கள். முந்தைய தலைமுறை தமிழ் சினிமாப் பார்வையாளர்களின் இளமையைச் சோதித்த அந்தப் பெயர் ‘அவளோட ராவுகள்’. ஒரு இளம்பெண் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களாகவே மலையாளத்தில் அந்தப் படம் பார்க்கப்பட்டது. தமிழகத்தில் அத்திரைப்படம் கிளப்பிய அலை வேறு வகையானது. அதை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசியின் மறைவு மீண்டும் ‘அவளோட ராவுகள்’ தலைப்பை ஞாபகப்படுத்துகிறது.

 

கலை இயக்குநராக...

மலையாளத் திரையுலகில் வணிக சினிமாவுக்கும் கலை சினிமாவுக்கும் உள்ள இடைவெளியைத் தகர்த்தெறிந்து 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிக் குவித்த சாதனை இயக்குநர் ஐ.வி.சசி. அடிப்படையில் ஓவியப் பயிற்சி பெற்றவர் சசி. அதை ஆதாரமாகக் கொண்டு கலை இயக்குநராகச் சினிமாவில் நுழைந்தவர். அவரிடமிருந்த ஓவியப் பின்னணி, அவர் இயக்கிய முழுமையான வர்த்தகப் படங்களின் காட்சி உருவாக்கத்தில் அழகியலுடன் வெளிப்பட்டிருக்கிறது. சசியின் ‘பிரேம்கள்’ மலையாளத் திரைமொழியில் நவீனக் காட்சிமொழியாக ரசிக்கவும் விமர்சிக்கவும்பட்டன. இதனால் மலையாளத்தைக் கடந்து நின்ற கலைஞராக அவர் மாறினார். தமிழ், இந்தியிலும் பல வெற்றிகளைச் சுவைத்தார். தமிழில் பாரதிராஜா எடுத்த ‘டிக் டிக் டிக்’ படத்தின் கதையை அடிப்படையாக வைத்து கமல் ஹாசன் நடிக்க, இந்தியில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘கரிஷ்மா’ படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் தலைப்புக்கு ஏற்ப வசூல் சாதனை நிகழ்த்தியது அந்தப் படம்.

 

தமிழில் பதித்த தடம்

கமல் ஹாசன், சக நடிகரான சத்யராஜை வைத்துத் தயாரித்த முதல் படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. மம்மூட்டி நடிக்க, ஐ.வி.சசி மலையாளத்தில் இயக்கி வெற்றிபெற்ற ‘ஆவனழி’ படத்தின் கதையைத் தழுவியதுதான் இந்தப் படம். வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜை கதாநாயகனாக நிலைநிறுத்திய படம். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதைப்போல சசி இயக்கிய நட்சத்திரங்கள் மேலும் ஜொலிக்கத் தொடங்கியதை அவரது படைப்புத் திறமையைத் தாண்டிய திரையுலக அதிர்ஷ்டம் எனலாம். அப்படிப்பட்டவர் ரஜினியை கதாநாயகனாக வைத்து ‘காளி’, ‘எல்லாம் உன் கைராசி’ என இரண்டு படங்களை இயக்கியவர்.

 

சூப்பர் ஸ்டார்களின் இயக்குநர்

மலையாளத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாக்களை இயக்கினாலும் கடைசிவரை சென்னைவாசியாகவே இருந்தவர் ஐ வி சசி. 80கள் காலகட்டத்தில் மலையாளப் படங்களின் பெரும்பாலான படப்பிடிப்புகளும் மற்ற பணிகளும் சென்னையையே மையமாகக் கொண்டு இயங்கியதும் சசி சென்னையிலேயே தங்கிவிட ஒரு காரணம்.

பெரிய நட்சத்திரங்களை உருவாக்குபவர், பெரிய நட்சத்திரங்களைச் சுற்றிக் கதைகளை வலுவாகச் சொல்லத் தெரிந்தவராக ஐ வி சசி இருந்தார். மம்மூட்டி, மோகன்லாலுடன் தனித் தனியாக 30 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். மம்மூட்டியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குப் பின்னணியாக இருந்த இயக்குநர் இவர்தான். புது யுகக் கேரளத்துக்குத் தேவைப்படும் அறம் வழுவாத ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பதை மம்மூட்டிக்காக உருவாக்கிய முன்மாதிரிக் கதாபாத்திரங்கள் வழியாக எடுத்துக்காட்டினார். நல்ல பண்பு, பாந்தமான நாயகத்தன்மை, அமைதியான தோற்றம், பண்பாடான நடத்தை என இதுவே ஆண் மையத்தின் ஆளுமை என அந்தக் கதாபாத்திரங்கள் காட்டின. எதிர்மறைக் கதாபாத்திரங்களில் அதுவரை நடித்துக் கொண்டிருந்த மோகன்லாலை உச்ச நட்சத்திரமாக உயர்த்திய ‘தேவாசுரம்’ படத்தை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ஒட்டுமொத்தமாக சசி சூப்பர் ஸ்டார்களின் இயக்குநராக விளங்கிய காலம் அது.

 

இலக்கியத்தையும் இணைத்தார்

மலையாளத்தின் சிறந்த திரைக்கதையாளர்கள், எழுத்தாளர்களான பத்மராஜன், ரஞ்சித், எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரின் கதைகள், திரைக்கதைகளை அருமையான சினிமாக்களாக மாற்றிக் காட்டினார். பாலசந்தருக்கும் பாரதிராஜாவுக்கும் பிறகு ரஜினி- கமலை இணைத்துப் படமெடுக்கும் சூழல் இங்கே அமையவில்லை. ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே இறக்கி வலுவாகக் கதைகளையும் சொல்லத் தெரிந்த சசி, மலையாளத்தில் மோகன்லால்-மம்மூட்டி ஆகிய இருவரையும் இணைத்தே ஒரு டஜன் படங்களை இயக்கியிருக்கிறார். நட்சத்திரங்களை ஒரே கதைக்குள் இணைப்பதில் சசிக்கு இணை அவர்தான். கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஜெமினி கணேசன், அசோகன், ஜெயபாரதி, சீமா, ஸ்ரீப்ரியா போன்ற பல நட்சத்திரங்களை இணைத்து ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தை அவர் தந்ததை இப்போது நினைவுகூரலாம்.

 

நட்சத்திரத் தம்பதி

ஐ வி சசி இயக்கிய நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்து அவரையே திருமணமும் செய்துகொண்டவர் சீமா. இவர்கள் ‘மேட் பார் ஈச் அதர்’ என்பதற்கு உதாரணமாக விளங்கிய தம்பதி. அதுவும் ஐ வி சசியின் சிறந்த அடையாளங்களில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் இணைந்துகொண்டுவிட்டது. காட்சிப்படுத்தலிலும், தொழில்நுட்பத்திலும் மலையாள சினிமாவை இன்னொரு உயரத்துக்கு இட்டுச்சென்ற ஐ.வி.சசி ஓய்வறியாக் கலைஞனாக வலம்வந்தவர். பல நட்சத்திரங்களை உருவாக் கிய ஒரு செல்லூல்லாய்ட் தொழிற்சாலையாக அவரது சிறந்த படங்கள் பல தலைமுறைகளுக்கு அவரை நினைவூட்டிக்கொண்டிருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19923848.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுமை நிறைந்த கலைஞன்.....ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.