Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சி தனித்துவத்தினை இழக்குமானால்
அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயங்கமாட்டேன்-ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர்
பி.பிரசாந்தன்


Featured Replies

கட்சி தனித்துவத்தினை இழக்குமானால்
அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயங்கமாட்டேன்-ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர்
பி.பிரசாந்தன்


 

 

கட்சி தனித்துவத்தினை இழக்குமானால்
அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயங்கமாட்டேன்-ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர்
பி.பிரசாந்தன்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண மக்களின் நில,நிதி, நிருவாக நடவடிக்கையில் அக்கறை காட்டாது தனது தனித்துவத்தினை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுமானால் மக்கள் நலன் சார்ந்த பதவிகளை துறந்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி மக்களுடன் சேவகனாக வாழ்வோம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச உள்@ராட்சிசபை வேட்பாளர் தெரிவிற்கான ஆலோசனை கூட்டத்தின்போது, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பி.பிரசாந்தன் குறிப்பிட்டார்;.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனியொருவருக்காக அல்லது தனியொரு குழுவினைத் திருப்திப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியல்ல.

உண்மை உணர்வோடு கிழக்கு மண்ணை நேசித்த, மண்ணுக்காக போராடிய இளைஞர்களின் தியாகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. ஜனநாயகமே கிழக்கு மக்களின் இருப்பை உறுதிப்படுத்தும். யுத்தத்தினால் ஏற்படும் அப்பாவி மக்களின் பிணக்குவியல்களையும், மனிதஎச்சங்களையும், கணவனை இழந்து, குடும்ப உறவுகளை இழந்து, அநாதரவாக்கப்பட்டவர்களையும் மிச்சமாக வைத்துக்கொண்டு எதனையும் சாதிக்க முடியாது.அரசியல் அதிகாரத்தின்; மூலம் கருத்தை கருத்தால் வெல்லக்கூடிய பலம் கிழக்கு மாகாண மக்களிடம் இருக்க வேண்டும் என்ற புனித சிந்தனையில் உருவாக்கப்பட்ட கட்சி.

அன்று அமரர் நந்தகோபன் தலைவராக இருந்தார். இன்று கிழக்கு மாகாணத்தின் இணக்க ஆட்சிக்கு உதாரணமாக விளங்கிய முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைவராக இருக்கின்றார். நாளை இந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த நீங்களோ அல்லது உங்களது பிள்ளைகளோ தான் தலைவராக இருக்கப்போகின்றார்கள்.

அமைச்சு பதவிகளுக்கும் அடைய முடியாத இலக்குகளுக்காகவும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் போலிக் கோசங்களை கூறி, மக்களை ஏமாற்றி தமிழருக்கென எஞ்சியிருக்கின்ற நில நிருவாக எல்லைகளையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான எங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற வார்த்தை ஜாலம் பேசி மக்களை மீண்டும் மீண்டும் புதைகுழியில் தள்ளுகின்ற போலி அரசியலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு போதும் மேற்கொள்ளப் போவதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண இணக்க ஆட்சியும் மத்திய அரசில் எதிர்க் கட்சி ஆட்சியும் வடக்கு கிழக்கு தமிழருக்கு எதனை சாதித்து கொடுத்துள்ளது? தேர்தல் கால வாக்குறுதியை தானும் நிறைவேற்றியுள்ளதா? என்பதற்கு வாக்களித்த மக்களே விடைதேட வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது தனித்துவ பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தேர்தல் கால அரசியலுக்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கியோ, நிதிகளை கொடுத்தோ ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை. அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமாக இருந்தால், அரசியலையும் ஏனைய பதவிகளையும் தூக்கியெறிந்துவிட்டு மக்களுடன் களத்தில் நிற்க ஒரு போதும் தயங்க மாட்டேன்.

நாட்டில் ஜனநாயகம் நிலைத்தோங்க வேண்டும் என்பதற்காக பாடுபட்ட கிழக்கின் தலைவர் சி.சந்திரகாந்தன் இரண்டு வருடங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சட்டம் உன்னதமாக செயற்படும் என்ற நம்பிக்கையில் மிக நிதானமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

எமது கட்சி தொண்டர்களோ அரசியலை உழைப்புக்காக தேர்ந்தெடுத்தவர்களல்ல. இன்றும் நான் மோட்டார் சைக்கிளிலே பயணிக்கின்றேன். எந்த வங்கியிலும் சொத்து குவித்து வைக்கவில்லை. எப்படி அரசியல் பாதைக்குள் பயணிக்க தொடங்கினோமோ அப்படியே இன்றும் மக்களுடன் மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வாழ்ந்து கொண்டே இருப்போம் எனவும் குறிப்பிட்டார்.

http://www.samakalam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.