Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனவரி 27 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்

Featured Replies

ஜனவரி 27 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்

0-92de4999d42faf93d6ff4dfc2f6997ccac351ea2.jpg

 

கட்­சித்­த­லை­வர்களின் கலந்­து­ரை­யா­டலில் இணக்கம்; வர்த்­த­மானி அறி­வித்தல் அடுத்த வாரம்
(ஆர்.ராம்)

இரண்டு வரு­டங்­க­ளுக் கும் அதி­க­மாக தாம­தப்­பட்டு வந்த உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 27ஆம் திகதி நடத்­து­வ­தற்கு அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் மாகாண சபை

கள் மற்றும் உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்சர் பைஸர் முஸ்­தபாவினால் அடுத்­த­வாரம் வெளியி­டப்­ப­ட­வுள்­ளது.

அதற்கு அடுத்­த­ப­டி­யாக தேர்­தல்கள் ஆணைக்­குழு­

வா­னது வேட்­பு­மனு கோரல் மற்றும் தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான திக­தியை அறி­விக்­க­வுள்­ளது. கட்­சித்­த­லை­வர்கள் கலந்­து­ரை­யா­டலில் தேர்­தலை நடத்­து

­வ­தற்கு இணக்கம் காணப்பட்ட திக­தி­யையே தேர்­தல்கள் ஆணைக்­குழு பெரும்­பாலும்

 இறுதி செய்­ய­வுள்­ள­தாக உயர்­மட்ட வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறிய முடி­கின்­றது.

கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழு தலைவர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற அமர்வு நடை­பெற்­ற­போது, உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்ந்தும் கால­தா­ம­தப்­ப­டு­வது குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இதன்­போது நிறை­வேற்­றப்­பட்ட உள்­ளு­ராட்சி தேர்தல் சட்­டங்­களில் சிங்­கள, ஆங்­கில மொழி­களில் காணப்­படும் சில வேறு­பா­டு­களின் கார­ண­மாக வர்த்­த­மானி அறி­வித்தல் காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தா­கவும் அவற்றில் சில திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­தோடு அதற்­காக சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை பெற­வேண்­டி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நுவரெலியா, அம்­ப­க­முவ பிர­தேச சபை­களை பிரிப்­பது போன்ற சில விடங்கள் நிறை­வேற்­ற­வேண்­டி­யுள்­ள­தா­கவும் எவ்­வா­றா­யினும் இவ்­வி­டயம் குறித்து கட்­சித்­த­லை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அறி­வித்­தி­ருந்தார்.

அதற்­க­மை­வாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அல­ரி­மா­ளி­கையில் கட்­சித்­த­லை­வர்கள் பங்­கேற்ற விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று நடை­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளு்­கான அமைச்சர் பைஸர் முஸ்­தபா, ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் அக்­கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் கசீம், அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்பில் அமைச்சர் நிமல் சிறி­பல டி சில்வா, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர,தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்பில் அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ­க­ணேசன், அமைச்சர் ப.திகாம்­பரம், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் அநு­ர­கு­மார திஸ­நா­யக்க எம்.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதி­யூர்தீன், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சி­யின செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் தமிழ்த் தேசியக் கூட்­டமைப்பு பங்­கேற்­றி­ருக்­க­வில்லை என்­ப­தோடு கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பிக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என அவ­ரது தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

தேர்­த­லுக்­கான வலி­யு­றுத்து

இவ்­வா­றான நிலையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலின் போது உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை ஜன­வ­ரிக்கு பின்­னரும் காலம்­தாழ்த்­தக்­கூ­டாது என அனைத்து தரப்­பி­னர்­க­ளாலும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. குறிப்­பாக இரண்டு ஆண்­டு­க­ளுக்கு அதி­க­மாக தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. தற்­போது அனைத்து தரப்­பி­னர்­களும் தேர்­தலை நடத்­த­வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றனர். ஆகவே அதில் காணப்­படும் தாம­தங்­களை உட­ன­டி­யாக நீக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும் எனக் குறிப்­பிட்­டனர்.

சட்­டமா அதிபர் மீது சாடல்

இதன்­போது உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் திருத்தச் சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள போதும் சிங்­கள, ஆங்­கில மொழி­களில் சில வேறு­பா­டுகள் காணப்­ப­டு­வதால் அவற்றில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ள­தாக அமைச்சர் பைஸர் முஸ்­தபா குறிப்­பிட்­டுள்­ள­தோடு சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை பெற­வேண்­டி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து கட்­சிப்­பி­ர­தி­நி­திகள், சட்ட மா அதிபர் தரப்பில் பலத்த தாம­தங்கள் நில­வு­கின்­றன. குறிப்­பாக அத்­தி­ணைக்­க­ளத்தின் செயற்­பா­டுகள் நத்தை வேகத்­தி­லேயே செல்­கின்­றன என்ற தொனிப்­ப­ட­லான கருத்­துக்­களை பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்­ளனர்.

துரி­த­மாக மேற்­கொள்ள வேண்டும்

இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, உள்­ளு­ராட்சி தேர்தல் திருத்­தச்­சட்­டங்­களில் காணப்­படும் சிறு திருத்­தங்­களை துரி­த­மாக மேற்­கொள்­வ­தற்­கு­ரிய அறி­வுத்­தல்­களை வழங்­க­வுள்­ள­தா­கவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழ­வா­னது தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய முதற்­கட்ட தயார்ப்­ப­டுத்­தல்­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­துள்­ள­மையையும் குறிப்­பிட்டார்.

கூட்­ட­மைப்­புக்கு தொலை­பேசி அழைப்பு

இத­னை­ய­டுத்து நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­களில் தேர்­தலை ஜன­வரி மாதம் எத்­த­கைய காலப்­ப­கு­தியில் வைப்­பது என்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டது. முதலில் ஜன­வரி மாதம் 20ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வத்­து­தெ­னவும் அதற்கு முன்­ன­தாக சட்­ட­ரீ­தி­யான மற்றும் ஏனைய விட­யங்­களை முன்­னெ­டுத்து விரைந்து வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளியி­டு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ள­ரான எம்.ஏ.சுமந்­திரன் எம்.பியை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு 20ஆம் திகதி உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வதில் தங்­க­ளுக்கு ஏதா­வது பிரச்­சி­னைகள் இருக்­கின்­றதா? என வின­வி­யுள்ளார்.

தொலை­பேசி உரை­யா­டலின் பின்னர் கட்சி தலை­வர்­க­ளி­டத்தில் பிர­தமர் கூறு­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அத்­தி­க­தியில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு எவ்­வி­த­மான எதிர்ப்­புக்­க­ளையும் தெரிவிக்கவில்லை. அவர்­களும் விரைந்து தேர்­தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றனர் என்றார்.

ஈற்றில் இறு­தி­யான ஜன­வரி 27

இவ்­வா­றான நிலையில் தொடர்ச்­சி­யான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. இத­ன­டிப்­ப­டையில் ஜன­வரி மாதம் 20ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வ­த­னையும் பார்க்க ஜன­வரி மாதத்தின் கடைசி வாரத்தில் அதா­வது 27ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வதே சிறந்­த­தாக அமையும் என்ற யோசனை கூட்­டத்தில் இருந்­த­வர்­களால் முன்­மொ­ழி­யப்­ப­டவும் விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் பைஸர், பிர­தமர் ரணில் உட்­பட அனைத்து தரப்­பி­னரும் அத்­தி­க­தியில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு இணக்கம் வெ ளியிட்­டனர்.

இது குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்சர் பைசர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய இணக்­க­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன. இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் அடுத்த வாரம் வெளியி­டப்­படும். அதற்கு முன்­ன­தாக திருத்­தச்­சட்­டத்தில் காணப்­படும் குறை­பா­டு­களை நீக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதே­வேளை நுவரேலியா, அம்­ப­க­முவ தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்­கான இணக்­கப்­பாடும் எட்டப்பட்டுள்ளது. அது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்றார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­விக்­கையில்,

ஜன­வரி இறுதி வாரத்தில் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்கு இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­க­னவே இந்த நிலைப்­பாட்­டி­லேயே இருந்­தது. ஆகவே ஐக்­கிய தேசியக் கட்சி மீது வீணாக குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­னார்கள். ஐ.தே.க என்­றுமே தேர்­த­லுக்கு அஞ்­ச­வில்லை. எந்­நே­ரத்­திலும் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு தயா­ரா­கவே உள்ளது என்றார்.

இதே­வேளை ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்­சியின் சார்பில் கலந்து கொண்ட அக்­கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி,

வட­மா­கா­ணத்தில் மரு­தங்­கேணி, கண்­டா­வளை, ஒட்­டி­சுட்டான், மடு இந்த நான்கு பிர­தே­சங்­களும் மிகப் பெரி­யவை மற்றும் மிகவும் பின்­தங்­கி­ய­வை­யாகும். இங்கு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக உள்­ளுா­ராட்சி சபைகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மானிப்பாய், சுன்னாகம். சங்­கானை, நெல்­லி­யடி ஆகி­ய­வற்­றுக்­கான நகர சபைகள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். கிளி­நொச்சி ஒரு மிகவம் பெரிய நக­ரமாகும். இது சுமார் 4 கிமீ தூரம் பரந்தன் முதல் முறி­கண்­டி­வரை பரந்து உள்­ளது. இது கரைச்சி பிர­தேச சபையால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. இந்த சபையால் கிளி­நொச்சி நக­ரத்தின் தேவை­களை புர்த்­தி­செய்ய முடி­யாமல் உள்­ளது.

கரைச்சி பிர­தேச சபை கண்­டா­வளை பிர­தேச செய­ல­கத்­தையும் நிர்­வ­கிக்­க­வேண்டி உள்­ளது. 1991ஆம் ஆண்­டுக்கு முன்னர் கிளி­நொச்சி நகர சபை­யா­கவே இயங்கி வந்­தது. மேலும் கிளி­நொச்சி நகர்தான் கிளி­நொச்சி மாவட்­டத்தின் நிர்­வாக நகர். இது விவ­சாய, வர்த்­தக, நிதி மற்றும் கல்வி துறை­க­ளுக்கு வட­மா­கா­ணத்தில் உள்ள ஒரு மைய­மாகும்.

முல்­லைத்­தீவு நகரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் நிர்­வாக நக­ராகும். இதுவும் 1991ஆம் ஆண்­டிற்கு முன்னர் நக­ர­சபை அந்­தஸ்தை அனு­ப­வித்­தது. இதே போல் மானிப்பாய், சுன்ன­ாகம், சங்­கானை, நெல்­லி­யடி நகர்­களும் 1991ஆம் ஆண்­டிற்கு முன்னர் நக­ர­சபை அந்­தஸ்தைக் கொண்­டி­ருந்­தன.

இவை­யாவும் இன்று நன்கு வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளன. இங்­கெல்லாம் நகர சபை நிர்­வாகம் அமை­யா­ததால் நக­ரங்­களின் தேவை­களும் சேவை­களும் மிகவும் பின்­தங்கிக் காணப்­ப­டு­கின்­றது. எனவே இங்கு மேலே கூறப்­பட்ட பிர­தேச சபை­களை வர­வுள்ள தேர்­த­லுக்கு முன் தரம் உயர்த்தி நகர சபை­க­ளாக மேம்­ப­டுத்த வேண்டும்.

யாழ். நக­ரமே வட­மா­கா­ணத்­தி­லுள்ள ஒரே­யொரு மாந­கர சபை­யாகும். ஆதலால் இத்­த­ரு­ணத்தில் மிகவும் வேக­மாக வளர்ந்து வரும் மற்றும் சகல துறை­க­ளிலும் அபி­வி­ருத்தி கண்­டு­வரும் வவு­னியா நகரை மாந­கர சபை­யாக தரம் உயர்த்த வேண்­டு­கின்றேன். இத் தர­மு­யர்த்தல் இந் நகரை மேலும் வளர்ச்­சி­ய­டையச் செய்யும். அங்­குள்ள மக்­களும் மிக உயர்ந்த சேவை­களைப் பெற­மு­டியும்.

கிழக்கு மாகா­ணத்தில் மாகாணத் தலை­ந­க­ரான திரு­கோ­ண­ம­லையை மாந­கர சபை­யாகத் தரம் உயர்த்­து­வ­தோடு செங்­கல்­லடி, கள­வாஞ்­சிக்­குடி, மூதூர், கிண்­ணியா போன்ற பிர­தேச சபை­களும் நகர சபை­க­ளாக தரம் உயர்த்­தப்­பட வேண்டும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கோர­ளைப்­பற்­று-­மத்தி, கோர­ளைப்­பற்று (வாழைச் சேனை), ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு பிர­தேச சபைகள் இன்னும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. இங்கே பிர­தேச சபைகள் இன்­மையால் உள்­ளுா­ராட்சி சேவைகள் மிகவும் முடங்கிக் காணப்­ப­டு­கின்­றது.

கல்­முனை நகரில் சாய்ந்த மருது பிர­தேச மக்­களின் பிரச்­ச­னை­க­ளுக்குத் தீர்வு காணும் வேளையில் அங்­குள்ள தமிழ்ப் பிர­தேச மக்­களின் பிரச்­ச­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­பட வேண்டும். இந்தத் தமிழ் மக்­களின் பிரச்­ச­னை­களும் துன்­பங்­களும் நீண்ட காலமாகவே தீர்க்கப்படாமல் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.