Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து அர­சாங்கம் விலகமுடியாது : ஐ.நா.நிபுணரின் பரிந்துரைகளை வரவேற்கின்றது கூட்டமைப்பு

Featured Replies

பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து அர­சாங்கம் விலகமுடியாது : ஐ.நா.நிபுணரின் பரிந்துரைகளை வரவேற்கின்றது கூட்டமைப்பு

sumanthiran-2-4b84ab8b7437ae04933279888933b732189a3e5b.jpg

 

(ஆர்.ராம்)

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள்­ நி­க­ ழா­மைக்­கான உத்­த­ர­வா­தங்கள் பற்­றிய ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரீப்பின் கருத்­துக்­களை முழு  மை­யாக வர­வேற்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. 

அர­சாங்கம் ஐ.நா.வுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் அளித்த வாக்­கு­று­தியை

 நிறை­வேற்­று­வ­தற்கு பின்­ன­டிப்புச் செய்­யக்­கூ­டா­தென மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்ள கூட்­ட­மைப்பு பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து அர­சாங்கம் வில­கு­மாயின் விளை­வுகள் பார­தூ­ர­மா­க­வி­ருக்கும் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள்­நி­க­ழா­மைக்­கான உத்­த­ர­வா­தங்கள் பற்­றிய ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டீ கிரீப் தனது பய­ணத்தின் இறு­தியில் கொழும்பில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது பல்­வேறு பரிந்­து­ரை­களை செய்­தி­ருந்தார்.

இலங்­கைக்குள் நீதியை வழங்­கா­விடின் சர்­வ­தேசம் அதனை பெற முயற்­சிக்கும், யுத்த வெற்­றி­வீ­ரர்­களை நீதி­மன்­றத்தின் முன் கொண்­டு­வர முடி­யா­தென கூறு­வது சுயா­தீன நீதித்­து­றையை மீறு­வ­தாகும் இலங்­கைக்குள் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட்­டா­விடின் சர்­வ­தேச மட்­டத்தில் நீதியை தேடு­வ­தற்­கான முயற்­சிகள் மிகவும் வலு­வான முறையில் இடம்­பெறும் என்­பதை அனை­வரும் மனதில் கொள்­ள­வேண்டும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை தொடர்ந்தும் தாம­த­மாக்­க­வேண்டாம். தொடர்ந்தும் தாம­த­மாக்­கு­வது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது என்­ப­துள்­ளிட்ட பல விட­யங்­களை ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நிதி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 இந்­நி­லையில் ஐ.நா.விசேட அறிக்­கை­யா­ளரின் கருத்­துக்கள் மற்றும் அவ­தா­னிப்­புக்கள் குறித்து பாதிக்­கப்­பட்ட தரப்பின் பிர­தி­நி­தித்­து­வத்­தினைக் கொண்­டி­ருக்கும் அர­சியல் தரப்­பான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்­டினை கேட்­ட­போதே ஊட­கப்­பேச்­சா­ள­ரும யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்,

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கைக்கு விஜ­யம செய்து தனது அவ­தா­னிப்­புக்கள் உட்­பட மிகவும் முக்­கி­ய­மா­னதும் பெறு­ம­தி­வாய்ந்த கருத்­துக்­களை ஐக்­கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள்­நி­க­ழாமை உத்­த­ர­வா­தங்கள் பற்­றிய ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் வெளி­யிட்­டுள்ளார். அவற்றை நாம் முழு­மை­யாக வர­வேற்­கின்றோம்.

அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் தமது பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­பத்தில் பல்­வேறு தாம­தங்கள் நில­வு­வதை நாமும் பல தட­வைகள் சுட்­டிக்­காட்­டி­வந்­தி­ருக்­கின்றோம்.

தற்­போது ஐ.நா.பிர­தி­நி­தியும் அதனை தெளி­வாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத­ன­டிப்­ப­டையில் அர­சாங்கம் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களில் இருந்து பின்­னிற்க முடி­யாது. துற்­போது வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­கா­சத்­தினுள் வாக்­கு­றுதி வழங்­கிய விட­யங்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். அர­சாங்கம் தொடர்ந்தும் இழுத்­த­டிப்­புக்­களைச் செய்து தாம­த­போக்­கினை கடைப்­பி­டிக்­கு­மா­க­வி­ருந்தால் எதிர்­கா­லத்தில் பர­தூ­ர­மான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதனை ஐ.நா விசேட அறிக்கையாளரும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகாது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். மேலும் சர்வதேசமும், ஐ.நாவும் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்தும் இதே கரிசனையைக் கொண்டிருக்கு வேண்டும் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் என்றார் 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.