Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவை அரசு கணக்­கில் எடுக்­கி­றதா?

Featured Replies

ஐ.நாவை அரசு கணக்­கில் எடுக்­கி­றதா?

 

இலங்­கைக்கு வருகை தந்த ஐக்­கிய நாடு­கள் சபை­யின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ டிகி­ரிப் தனது பய­ணத்­தின் முடி­வில் கொழும்பு அ ரசுக்கு ஓர் எச்­ச­ரிக்­கையை விடுத்­துச் சென்­றி­ருக்­கி­றார்.

இறு­திப் போரில் இடம்­பெற்­ற­போர்க் குற்­றங்­கள், மனித உரிமை மீறல்­கள், மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­கள், பன்­னாட்­டுப் போர்ச் சட்ட மீறல்­கள் தொடர்­பில் பொறுப்­புக்­கூ­று­வ­தற்­குக் கொழும்பு தவ­று­மாக இருந்­தால், அத்­த­கைய பொறுப்­புக்­கூ­றல் செயற்­பா­டு­கள் இலங்­கைக்கு வெளியே உள்ள நாடு ஒன்­றில் முன்­னெ­டுக்கப்­ப­டு­ வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் உள்­ளன.

எனவே, அத்­த­கைய ஒரு நிலை தோன்­று­வ­தற்கு முன்­னர் முறை­யான நீதிப் பொறி­முறை ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது கொழும்­பின் பொறுப்பு என்று அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

பப்லோ மட்­டு­மல்ல, இதற்கு முன்­னர் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரும் இதே­போன்­ற­தொரு எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்­தார். போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளைக் கொழும்பு நடத்­தத் தவ­றி­னால், வேறு வழி­க­ளில் அந்த விசா­ர­ணையை நடத்த வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டும் என்று அவர் எச்­ச­ரித்­தி­ருந்­தார்.

ஆனால், கொழும்பு இந்த எச்­ச­ரிக்­கை­கள் தொடர்­பில் அலட்­டிக் கொண்­ட­தாக இல்லை.

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் – அல் ஹுசை னின் எச்­ச­ரிக்கை கடந்த மாதம் வெளி­யா­ன­தன் பின்­னர்­கூட, அரசு பொறுப்­புக் கூறல் தொடர்­பில் எது­வும் அலட்­டிக்­கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

அந்த விட­யத்­தில் காரி­யங்­கள் இம்­மி­ய­ள­வும் நக­ர­வில்லை. போர்க் குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ரிப்­ப­தற்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் மற்­றும் விசா­ர­ணை­யா­ளர்­களை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்­றம் ஒன்று அமைக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­ட­போ­தும் அது தொடர்­பில் எந்த நகர்­வும் இடம்­பெ­ற­வில்லை.

அதற்­கும் மேலாக அத்­த­கைய கலப்பு நீதி­மன்­றம் ஒன்று அமைக்­கப்­ப­ட­மாட்­டாது, படை­யி­னர் நீதி­மன்­றத்­தின் முன்­னால் நிறுத்­தப்­ப­ட­மாட்­டார் கள் என்று அரச தலை­வர்­கள் பகி­ரங்­க­மா­கக் கருத்­துத் தெரி­வித்து வரு­கி­றார்­கள்.

இந்த விட­யத்­தை­யும் பப்லோ தனது பய­ணத்­தின் இறு­தி­யில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

“படை­யி­னரை நீதி­மன்­றத்­தில் நிறுத்­த­ மாட்­டோம் என்று எவரும் கூற­மு­டி­யாது. நீதி­மன்­றமே அத­னைத் தீர்­மா­னிக்­க­வேண்­டும். படை­யி­ன­ரைப் பாது­காப்­ப­தா­கக் கூறு­வது சுயா­தீன நீதித்­து­றையின் பண்­பு­களை மீறு­வ­தைப் போன்­ற­தா­கும். பொறுப்­புக்­கூ­றல் பொறி­மு­றை­யைத் தொடர்ந்தும் தாம­திக்­க­வேண்­டாம். இல்­லா­வி­டின் பொறுப்­புக்­கூ­றும் கடப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்“ என்­றார் பப்லோ.

பப்லோ சொல்­வ­தைப் போன்று படை­யி­னரை நீதி­மன்­றத்­தில் நிறுத்த மாட்­டோம் என்­ப­தைத்­தான் திரும்­பத் திரும்ப அரச தலை­ வர்­கள் கூறி­வ­ரு­கின்­றார்­கள்.

அதே­நே­ரத்­தில் தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கை அனு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றத்­தில் இருந்து வவு­னி­யா­வுக்கு மீண்­டும் மாற்­றும்­படி கேட்­டால், நீதித்­துறை விவ­கா­ரத்­தில் தலை­யி­ட­மாட்­டோம் என்­றும் அதே தலை­வர்­கள் கூறு­வார்­கள். இது­தான் இலங்­கை­யின் நிலமை.

பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் தமி­ழர்­க­ளா­யின் நீதித்­து­றை ­யில் இந்­தத் தலை­வர்­கள் தலை­யி­ட­மாட்­டார்­கள். அதுவே பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் சிங்­க­ள­வர்­க­ளாக இருந்­தால், எந்­தத் தலை­யீட்­டைச் செய்­ய­வும் அவர்­கள் தயங்­க­மாட்­டார்­கள்.

ஆண்­டாண்டு கால­மா­கத் தொட­ரும் இந்த நிலையை எதிர்த்­துத்­தான் தமி­ழர்­கள் போரா­டி­னார்­கள், போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

இது­போன்ற நிலை­க­ளில் பன்­னாட்­டுச் சமூ­கம் தலை­யிட்டு நீதியை, நியா­யத்தை ஏற்­ப­டுத்த முயன்­றால், அந்­தச் சக்­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அதைச் செய்­கி­றோம் இதைச் செய்­கி­றோம் என்று வாக்­கு­று­தி­களை வழங்­கி­விட்டு, பின்­னர் அவற்றை நிறை­வேற்­றா­மல் விட்டு காலத்­தைக் கடத்தித் தப்­பிக்­கொள்­வ­து­தான் கொழும்­பின் இரா­ஜ­தந்­தி­ர­மாக எப்­போ­தும் இருந்து வரு­கி­றது.

இப்­போ­து­கூட, பப்­லோ­வின் பரிந்­து­ரை­களைச் செயற்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று அவ­ரது வரு­கைக்கு முன்­ன­தா­கவே அர­சின் அமைச்­சர்­கள் கருத்­துத் தெரி­வித்­து­விட்­டார்­கள்.

எனவே பப்­லோ­வின் எச்­ச­ரிக்கை மற்­றும் கருத்­துக்­க­ளைச் செவி­ம­டுத்து கொழும்பு அரசு நல்­ல­வி­த­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் என்று சொல்­ல­மு­டி­யாது.

ஏனெ­னில் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் கூட்­டத்­தொ­ட­ ரில் இலங்கை விவ­கா­ரம் பேசு பொருள் ஆகும்­போது தவிர, மற்­றைய நேரங்­க­ளில் ஐ.நாவை அரசு கணக்­கில் எடுக்­கி­றதா என்­கிற கேள்வி இருக்­கி­றது. அது எந்த அர­சாக இருந்­தா­லும் என்ன, நிலமை ஒன்­றே­தான்.

http://newuthayan.com/story/40212.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.