Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதில் ஏறுமா ? ஐ. நா நிபுணரின் புத்திமதி

Featured Replies

காதில் ஏறுமா ? ஐ. நா நிபுணரின் புத்திமதி

Sp26-8c25a4b671a6d1b23f51cf07e091115bfb99cacf.jpg

 

உண்மை, நீதி, இழப்­பீடு, மீள­நி­க­ழா­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரெய்ப், இலங்­கையில் இரண்டு வார­கால உண்மை கண்­ட­றியும் பய­ணத்தை முடித்துக் கொண்டு திரும்­பி­யி­ருக்­கிறார்.

அவர் கொழும்பில் இருந்து புறப்­ப­டு­வ­தற்கு சில மணி­நேரம் முன்­ன­தாக,- கடந்த 23ஆம் திகதி- ஐ.நாவின் இலங்­கைக்­கான பணி­ய­கத்தில் ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார்.

அந்தச் சந்­திப்பில் அவர் வெளி­யிட்ட கருத்­துக்கள், நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்­துக்கு உவப்­பான ஒன்­றாக இருக்­காது.

ஆனாலும் ஐ.நா. நிபு­ணரின் கருத்து வெளி­யாகி பல நாட்­க­ளாகி விட்ட பின்­னரும், அர­சாங்கத் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும்- இந்தப் பத்தி எழு­தப்­படும் வரை வெளி­யா­க­வில்லை.

ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள், நிபு­ணர்­களின் இது­போன்ற கருத்­துக்கள் வெளி­யா­னதும், சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­களும் வழக்­கம்­போல இம்­முறை எகிறிக் குதிக்­க­வில்லை.

அவர்­களின் கவனம் எல்லாம் இப்­போது, புதிய அர­சி­ய­ல­மைப்பை தோற்­க­டிப்­ப­தற்­காக மகா­சங்­கத்தின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தி­லேயே குறி­யாக இருக்­கி­றது.

ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் வெளி­யிட்ட பல கருத்­துக்கள், மற்றும் பரிந்­து­ரைகள் நியா­ய­மா­ன­வை­யாக இருந்­தாலும், அர­சாங்­கத்­தினால் அவ்­வ­ளவு இல­கு­வாக ஏற்றுக் கொள்­ளப்­படும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக நிரா­க­ரித்து வந்த பல விட­யங்­களை, ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரெய்பும், பரிந்­து­ரைத்­தி­ருக்­கிறார்.

அர­சாங்­கத்­துக்குக் கூட, ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் வரப் போகிறார் என்­றதும், தமக்குச் சாத­க­மற்ற பல விட­யங்­களை அவர் வலி­யு­றுத்­துவார், பரிந்­து­ரைப்பார் என்­பது நன்­றா­கவே தெரிந்­தி­ருந்­தது.

அதனால் தான், பப்லோ டி கிரெய்ப் கொழும்பு வந்து சேர்ந்­ததும், வெளி­வி­வ­கார அமைச்சு ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது. ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளரின் பரிந்­து­ரை­களை ஏற்க வேண்­டிய கட்­டாயம் ஒன்றும் அர­சாங்­கத்­துக்குக் கிடை­யாது என்று அதில் தெளி­வாகக் கூறப்­பட்­டி­ருந்­தது.

ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளரின் பரிந்­து­ரை­களை ஏற்க வேண்­டிய கடப்­பாடு அர­சாங்­கத்­துக்கு இல்லை என்று முன்­கூட்­டியே தெரி­வித்து விட்­டதால், சில­வே­ளை­களில் பப்லோ டி கிரெய்ப் தனது பய­ணத்தின் முடிவில் வெளி­யிட்ட அறிக்­கையைப் பற்றி அர­சாங்கம் வாய் திறக்­காமல் இருக்கக் கூடும்.

ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள் ஒவ்­வொரு முறை இலங்கை வரும் போதும், இங்­குள்ள மனித உரி­மைகள் சூழல், பொறுப்­புக்­கூறல் குறை­பா­டுகள், அர­சாங்­கத்தின் பொறுப்­பின்மை தொடர்­பான விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றனர். அத்­த­கைய விமர்­ச­னங்­களை அர­சாங்கம் ஒரு­போதும், சாத­க­மான விமர்­ச­ன­மாக பார்ப்­ப­தில்லை.

ஐ.நா. அறிக்­கை­யா­ளர்­களும், நிபு­ணர்­களும் வீண் குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்­து­கின்­றனர் என்றே அமைச்­சர்­களும், அதி­கா­ரி­களும் கூறித் தப்பிக் கொள்ள முனை­வது வழக்கம். நீதித்­துறை சுதந்­திரம் தொடர்­பான ஐ.நா. அறிக்­கை­யா­ள­ராக பணி­யாற்­றிய மோனிகா பின்­டோவின் அறிக்கை வெளி­யி­டப்­பட்ட போதும், கடந்த ஜூலை மாதம், இலங்­கைக்கு 5 நாட்கள் பயணம் மேற்­கொண்­டி­ருந்த, சித்­தி­ர­வ­தைகள் மற்றும் தீவி­ர­வாத எதிர்ப்பு தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் பென் எமர்சன் தனது பய­ணத்தின் முடிவில் கருத்­துக்­களை வெளி­யிட்ட போதும் அர­சாங்கம் கடு­மை­யான கோபத்தை வெளிப்­ப­டுத்­தி­யது.

ஐ.நா. நிபு­ணர்கள் இரா­ஜ­தந்­திர தகை­மை­யற்­ற­வர்கள், அடிப்­படை நாக­ரிகம் தெரி­யா­த­வர்கள் என்­றெல்லாம் கூட, ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் காலத்­துக்கு ஈடாக தற்­போ­தைய அமைச்­சர்­களும் விமர்­சித்­தி­ருக்­கி­றார்கள்.

நான்கு, ஐந்து நாட்கள் இலங்­கையில் பய­ணத்தை மேற்­கொள்ளும் ஐ.நா. நிபு­ணர்­களால், எப்­படி இங்­குள்ள நிலை­மை­களை முழு­மை­யாக மதிப்­பீடு செய்ய முடியும் என்றும், அமைச்­சர்கள் பலரும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

குறிப்­பிட்ட சில நாட்கள் தங்­கி­யி­ருக்கும் ஐ.நா. நிபு­ணர்­களால் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­ளவு ஆய்­வையே மேற்­கொள்ள முடியும் என்­பது உண்மை.

ஐ.நா. அறிக்­கை­யா­ளர்­களும் நிபு­ணர்­களும், மாதக்­க­ணக்கில் தங்­கி­யி­ருந்து ஆய்வை மேற்­கொள்ள முடி­யாது. அவர்கள் உலகம் முழு­வ­தற்கும் பய­ணிக்க வேண்­டி­ய­வர்கள். அதை­விட, அவ்­வாறு நீண்­ட­காலம் செல­விட்டு அறிக்கை அளிப்­ப­தற்­கான நிதி வளம் உள்­ளிட்ட வச­தி­களும் தேவைப்­படும். 

இதனால் குறிப்­பிட்ட சில நாட்கள் தங்­கி­யி­ருந்து சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர், சிவில் சமூகம் மற்றும் பல­ரு­டனும் கலந்­து­ரை­யாடி சில­வற்றை நேரில் பார்­வை­யிட்டும் அறிக்­கை­யி­டு­கி­றார்கள். இது தான் உலகம் முழு­வதும் கடைப்­பி­டிக்­கப்­படும் அணு­கு­முறை.

ஆனால் அர­சாங்கம் இலங்­கையில் மாத்­திரம் இந்த நடை­முறைப் பிரத்­தி­யே­க­மாக கையா­ளப்­ப­டு­வது போல முன்னர் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது.

இலங்­கைக்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் அளிக்கும் தீர்­மானம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் முன்­வைக்­கப்­பட்ட போது, பேரவைத் தீர்­மா­னங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதைக் கண்­கா­ணிக்க இலங்­கையில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் ஒரு பணி­ய­கத்தை அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பரிந்­து­ரைத்­தி­ருந்தார்.

ஆனால், அதற்கு இலங்கை அர­சாங்கம் இணங்­க­வில்லை. இலங்­கையில் ஒரு நிரந்­தர கண்­கா­ணிப்புப் பணி­ய­கத்தை அமைக்க அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்தால், நிலை­யாக இருந்து கண்­கா­ணிக்கும் வாய்ப்பு ஐ.நா. நிபு­ணர்­க­ளுக்குக் கிடைத்­தி­ருக்கும்.

அதற்குத் தயா­ராக இல்­லாத அர­சாங்கம் தான், சிறப்பு நிபு­ணர்­களை சிலநாள் விருந்­தினர் என்றும், இங்­கிதம் தெரி­யாத இரா­ஜ­தந்­தி­ரிகள் என்றும் விச­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யது.

கடந்த 23ஆம் திக­தி­யுடன் இரண்டு வாரப் பய­ணத்தை முடித்துக் கொண்டு திரும்­பிய ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரெய்பைப் பொறுத்­த­வ­ரையில், சில நாட்கள் தங்கி , இங்­குள்ள நிலை­மை­களை அரை­கு­றை­யாக புரிந்து கொண்­டவர் என்று கூற முடி­யாது.

அவர் ஐந்து தட­வைகள் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்டு பொறுப்­புக்­கூறல் சார்ந்த விவ­கா­ரங்கள் தொடர்­பான ஆய்­வு­களை நடத்­தி­யி­ருக்­கிறார். ஒவ்­வொரு பய­ணத்தின் போதும், இங்கு ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களை அவர் கணிப்­பிட்­டி­ருக்­கிறார்.

கடை­சி­யாக கடந்த 10ஆம் திகதி இங்கு வந்­தி­ருந்த போது கூட அவர், இரண்டு வாரங்கள் தங்­கி­யி­ருந்து விட்டே திரும்­பி­யி­ருக்­கிறார்.

எனவே, ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரெய்பின், அறிக்­கையை அர­சாங்­கத்­தினால் அவ்­வ­ளவு இல­கு­வாக தட்டிக் கழிக்­கவோ, அதனை அரை­குறைப் பார்வை என்று ஒதுக்கித் தள்­ளவோ முடி­யாது.

இதனால் கூட, அவ­ரது பரிந்­து­ரைகள் தொடர்­பாக அர­சாங்கம் அவ­ச­ரப்­பட்டு கருத்­துக்­களை வெளி­யி­டாமல் இருக்­கலாம்.

எது எவ்­வா­றா­யினும், ஐ.நா. நிபுணர் பப்லோ டி கிரெய்பின் பரிந்­து­ரைகள் அல்­லது கருத்­துக்கள் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­களை கால­தா­ம­த­மின்றி உரு­வாக்கி, பொறுப்­புக்­கூறல் நட­வ­டிக்­கை­களை விரை­வாக முன்­னெ­டுக்க வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

பொறுப்­புக்­கூறல் செயல்­மு­றை­களை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் போனால், வெளி­நாட்டில் இருந்து அது முன்­னெ­டுக்­கப்­படக் கூடிய சூழல் உரு­வாகும் என்றும் அவர் எச்­ச­ரித்­தி­ருக்­கிறார்.

அதற்கு, பிரே­சிலில், முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளையும் அவர் உதா­ர­ண­மாக காட்­டி­யி­ருப்­ப­துடன், இது­போன்ற மேலும் பல நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் வாய்ப்­புகள் இருப்­ப­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.

ஐ.நா. நிபுணர் பப்லோ டி கிரெய்ப், விச­னத்­துடன் குறிப்­பிட்­டுள்ள முக்­கி­ய­மா­ன­தொரு விடயம், நிலை­மா­று­கால நீதிச் செயற்­பா­டுகள் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகும்.

பப்லோ டி கிரெய்ப், கொழும்பில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த போதும் அதற்கு முன்னர் லக்ஸ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் நிகழ்த்­திய உரை­யிலும், இந்த விட­யத்­துக்கு கூடுதல் முக்­கி­யத்­துவம் அளித்­தி­ருந்தார்.

நிலை­மா­று­கால நீதிச் செயற்­பா­டுகள், யாரையும் வேட்­டை­யா­டு­வ­தற்­கா­னது அல்ல. களை­யெ­டுப்­ப­தற்­கா­னதும் அல்ல. இது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­னதோ தனியே தமிழ் மக்­க­ளுக்­கா­னதோ அல்ல. இந்தப் பொறி­முறை அனைத்து மக்­க­ளுக்­கு­மா­னது என்று அவர் விப­ரித்­தி­ருக்­கிறார்.

போரில் வெற்­றியைப் பெற்­றுத்­தந்த வீரர்­களைப் பாது­காப்போம் என்று அர­சாங்கம் கூறி­வரும் கருத்­தையும் அவர் ஆழ­மாக விமர்­சித்­தி­ருக்­கிறார்.

இவ்­வாறு உறுதி அளிப்­பது, நீதித்­துறை சுதந்­தி­ரத்தை மீறு­கின்ற செயல் என்றும், மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­வர்கள் போர் வீரர்­க­ளாக இருக்க முடி­யாது என்றும் பப்லோ டி கிரெய்ப் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தி­ருந்தார்.

குற்­ற­மி­ழைத்த படை­யி­னரை நீதியின் முன் நிறுத்­தாத எந்­த­வொரு பொறுப்­புக்­கூ­ற­லாக இருந்­தாலும், அதனை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யி­ருக்கும். படை­யி­னரைப் பொறுப்­புக்­கூற வைப்­பது தான் அர­சாங்­கத்­துக்குப் பிரச்­சி­னை­யாக இருக்கிறது.

அதனால் தான் இந்தளவுக்கு தாமதமும் இழுத்தடிப்பும் காணப்படுகிறது. இதனை ஐ.நாவும், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்களும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அரசாங்கம் அரசியல் மயப்படுத்தி, வாக்குறுதிகளைக் கொடுக்க முனைந்திருப்பது, ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரை சினத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறையை அரசியல் மயப்படுத்தினால், அதன் நோக்கமே பாழாகி விடும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். ஆனால் அரசாங்கம் இதனை எந்தளவுக்கு காதில் போட்டுக் கொள்ளும் என்று தெரியவில்லை.

ஏனென்றால், பொறுப்புக்கூறலை அரசியல் நலன்களுக்கூடாகவே அரசாங்கம் பார்க்க முனைவதால், இதுபோன்ற புத்திமதிகள் அரசின் காதுகளில் ஏறப் போவதில்லை.

இந்தநிலை நீடித்தால், ஐ.நா. நிபுணர் எச்சரித்தது போல, பொறுப்புக்கூறல் முயற்சிகள் வெளிநாடுகளில் மையம் கொள்ளும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடக் கூடும்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.