Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பகுதியை நோக்கி மட்டக்களப்பில் பாரிய படை நகர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பகுதியை நோக்கி மட்டக்களப்பில் பாரிய படை நகர்வு

[10 - March - 2007]

* உக்கிரமான தாக்குதலால் ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்வு

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை பாரிய படை நகர்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேநேரம், இடம்பெற்ற உக்கிரமான தாக்குதலில் பொதுமகனொருவர் கொல்லப்பட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர்.

இத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்துள்ளனர்.

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கடும் ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை காலை புலிகளின் பகுதிகளை நோக்கி இரு முனைகளூடாக பாரிய படைநகர்வுகள் ஆரம்பமாகின.

செங்கலடியிலிருந்து விசேட அதிரடிப் படையினர் மட்டக்களப்பு- பதுளை வீதியூடாக புலிகளின் பகுதிக்குள் முன்னேற முயன்ற அதேநேரம்,

புளுக்குனாவ மற்றும் சியம்பலாண்டுவ பகுதியிலிருந்தும் புலிகளின் பகுதிகளை நோக்கி படைநகர்வு ஆரம்பிக்கப்பட்டது.

இவ்விரு முனைகளிலும் முன்னேற முயலும் படையினருடன் விடுதலைப் புலிகள் கடும் எதிர்ச்சமரில் ஈடுபட்டு வரும் அதேநேரம், புலிகளின் பகுதிகளை நோக்கி மிகக் கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகின்றன.

வவுணதீவு, செங்கலடி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளை நோக்கியும் செங்கலடி- பதுளை வீதியை அண்டிய பகுதிகளை நோக்கியுமே இந்த ஷெல் தாக்குதல்களும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் சிறிதுநேர இடைவெளிவிடாது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு நகரிலும் செங்கலடிப் பகுதியிலுமென கல்லடித்தெரு முகாம், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள 23-3 ஆவது படையணித் தலைமையகம், வவுணதீவு முகாம், மஞ்சந்தொடுவாய் முகாம், கல்லடி முகாம், கறுத்தபால முகாம், கொம்மாந்துறை முகாம், மயிலம்பாவெளி முகாம், கல்லடி விமான நிலையம் மற்றும் சத்துருக்கொண்டான் முகாம்களிலிருந்தே வியாழக்கிழமை காலை முதல் கடந்த 48 மணிநேரமாக மிகக் கடும் ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஷெல்கள் மக்கள் குடியிருப்புகள் மீது வீழ்ந்து வெடிப்பதனால் இதுவரை ஒருவர் கொல்லப்பட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துமுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தேசமடைந்துள்ளன. இதனையடுத்து, மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

வவுணதீவுப் பிரதேசத்திலிருந்து சுமார் ஆறாயிரம் குடும்பங்களும் செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து ஆயிரம் குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று, களுவாஞ்சிக்குடி, செங்கலடி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதுடன் தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

சுட்டெரிக்கும் வெயிலில் வெட்ட வெளிகளில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் இருக்க முடியாத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உறவினர்கள் வீடுகளுக்குச் சென்ற மக்கள் மர நிழல்களில் சமைத்துச் சாப்பிடுவதுடன் மர நிழல்களிலும் வீதியோரங்களிலும் தங்கியிருக்கின்றனர்.

இம்மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் எந்தவித நிதி உதவிகளையும் வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இம்மக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் இந்த மக்களுக்கு உதவ முன்வர வேண்டுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இடம்பெயர்ந்த மக்கள் கால்நடைகளை அநாதரவாக விட்டு வந்துள்ளனர். ஷெல் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன.

ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலயம், கொடுவாமுனை மாரியம்மன் ஆலயம், மகிழவெட்டுவான் மாரியம்மன் ஆலயம் என்பன சேதமடைந்துள்ளன.

இதேவேளை, குறிஞ்சாமுனை அ.த.க. பாடசாலையில் இரண்டு கட்டடங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன.

புலிகள் கடும் தாக்குதல்

இதேவேளை, செங்கலடி கறுத்தப்பாலமூடாக புலிகளின் பகுதிக்குள் முன்னேற முற்பட்ட படையினர் மீது கடும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துமுள்ளதாக புலிகள் கூறியுள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரில் சிலரது சடலங்கள் கரடியனாற்றிலும் சிலரது சடலங்கள் இலுப்பையடிச்சேனைப் பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

தினக்குரல்

Thakkam website address please

Thakkam website address please

இதையா கேட்டீர்கள்:

http://www.thinakural.com/

மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினரின் நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிப்பு.

மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் 36 ஆம் கொலனியிலிருந்து தாண்டியடி நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நகர்வு ஒன்றை இன்று சனிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர்.

இதன்போது நல்லதண்ணியோடை, அடைச்சகல், வாதக்கல்மடு ஆகிய பகுதிகளிற்கு நகர்ந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலினால் இந்த இடங்களில் இருந்து படையினர் விரட்டப்பட்டனர். படையினரை 36 ஆம் கொலனி பழைய நிலைகளுக்கு பின்தள்ளும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் உன்னிச்சைப்பகுதியில் படையினர் மேற்கொண்ட நகர்வு ஒன்றும் விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டு படையினர் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயினும் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

புளுக்குனாவை, மகா ஓயாச்சந்தி, வாழைச்சேனை கடதாசி ஆலை, தம்பிட்டி, வெபர் மைதானம் ஆகியவற்றில் இருந்து படையினர் ஆட்டிலெறித்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதனை விட சத்துருக்கொண்டான், கல்லடி, ஆரைப்பற்று, விமான நிலையம் ஆகியவற்றில் இருந்து படையினர் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

படுவான்கரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் புதிய, புதிய முனைகளை திறந்து முன்னகர்வு முயற்சிகளை சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2 நாட்களில் செங்கலடி கறுத்தப்பாலம் மற்றும் புல்லுமலைப்பகுதி ஆகியவற்றின் ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Puthinam-

முறியடிப்பு தாக்குதல்கள் இனி வரும் காலங்களில் எங்கிருந்து எதிரி வெளிக்கிட்டானோ

அதுவரைக்கும் அழிக்கப்படவேண்டும். நதி மூலம் அழிக்கப்பட்டால் தான் அடுத்த ஆக்கிரமிப்பு முறியடிப்புக்கு பின் மீண்டும் தொடராது.

Thakkam website address please

Thaakam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.