Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதி செய்திருந்தால் தண்டனை நிச்சயம் : திட்டவட்டமாக அறிவித்தது அரசாங்கம்

Featured Replies

சதி செய்திருந்தால் தண்டனை நிச்சயம் : திட்டவட்டமாக அறிவித்தது அரசாங்கம்

2-9d8ee70b605d392cd6728503e527730b141d30ac.jpg

 

(ரொபட் அன்டனி)

நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் நெருக்கடி தொடர் பில் எங்களுக்கும் பாரிய சந்தேகம் இருக்கிறது. இந்த விட யத்தில் அதிகாரிகள் வேண்டு மென்றே அசமந்தப் போக் கில் செயற்பட்டனரா? என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம். எனவே இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி சதிகாரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சவைப் பேச்சாளர்களான ராஜித சேனாரட்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தெரிவித்தனர்.  

 அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இருவரும் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன முதலில் குறிப்பிடுகையில்:

கேள்வி: அரசாங்கத்தின் தவறு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டனர், மக்கள் செய்த தவறு என்ன?

பதில்: 2011 ஆம் ஆண்டு தரமற்ற பெற்றோலைக் கொண்டுவந்ததால் இலங்கையில் 2000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்தன. இதனால் 22 மில்லியன் நிதியை நட்டஈடாக வழங்கவேண்டியிருந்தது. அதேபோன்று ரயில் எஞ்சின்கள் , அம்புலன்ஸ்வண்டிகள், மற்றும் பஸ்வண்டிகள் என பல்வேறு வாகனங்களும் இந்த தரமற்ற பெற்றோல் காரணமாக பழுதடைந்தன. இங்கு என்ன நடந்தது என்பதை நாம் ஆராயவேண்டும்.

 அதாவது இலங்கைக்கு வந்த எண்ணெய்க்கப்பலை பரிசோதனை செய்தபோது அதிலிருந்த எண்ணெய் தரமற்றதாக காட்ட்டப்பட்டது. இரண்டாவது முறை பரிசோதனையின்போது அதே முடிவே பெறப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது பரிசோதனை செய்வதற்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தயாராக இல்லை. காரணம் மூன்றாவது பரிசோனையின் போது ஏதாவது ஊழல்கள் நடைபெற்று நல்ல முடிவு கிடைத்துவிடுமோ என்று அமைச்சர் அஞ்சியிருக்கிறார். அதனால் மூன்றாவது பரிசோதனை செய்யப்படாமல் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில் வழமையாக எமது நாட்டில் 2500 தொன் பெற்றோல் ஒருநாளைக்கு விநியோகம் செய்யப்படும். இந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிவந்த செய்தியை அடுத்து மக்கள் அதிகளவில் பெற்றோல் கொள்வனவு செய்ய ஆரம்பித்தனர். தினமொன்றுக்கு 4000 தொன் வகையிலான பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் நெருக்கடி ஏற்பட்டது.

கேள்வி: இதற்கு யார் பொறுப்பு?

பதில்: பெற்றோலிய வள அமைச்சும், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும்தான் பொறுப்புக்கூறவேண்டும்.

கேள்வி: அப்படியாயின் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா?

பதில்: தற்போது விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: இந்த விசாரணை அறிக்கைகள் வெளிவரும் என்று கருதுகின்றீர்களா?

பதில்: விசாரணை அறிக்கை வரும்.

கேள்வி: மக்கள் கடும் எதிர்ப்புக்களை வெளியிடுகின்றனரே?

பதில்: முன்னைய ஆட்சியாளர்களே இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். அதாவது இந்தப் பிரச்சினையை பயன்படுத்தியாவது தமக்கெதிரான வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கத்தை கவிழ்க்கலாமா என்று எண்ணுகின்றனர்.

கேள்வி: அமைச்சரவையில் என்ன நடந்தது?

பதில்: அமைச்சரவையில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதன்போது இணை அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகையில்:

இங்கு அதிகாரிகள் தொடர்பான ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது 2011 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தரமற்ற பெற்றோல் காரணமாக 8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது. மேலும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது எம்மிடமே கையிருப்பு இல்லாமல் போனது. அங்குதான் நெருக்கடியும் பிரச்சினையும் ஏற்படுகின்றது. எனவே இதுதொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்த இடம் குறித்து ஆராய்ந்து தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

கேள்வி: திருகோணமலையிலுள்ள எண்ணெய்த்தாங்கிகளை எண்ணெய்க் கையிறுப்புக்காக ஏன் பயன்படுத்துவதில்லை?

பதில்: (ராஜித) அவ்வாறு செய்ய முற்படும்போது அதற்குள் தேசப்பற்றைக் கொண்டுவந்து நிறைக்கின்றனர்.

பதில்: (தயாசிறி) அத்துடன் இங்கு பெற்றோல் நெருக்கடி ஏற்பட்டவுடன் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையமும் இயங்கவில்லை. இங்கு ஏதோ நடந்திருப்பதாகவே தெரிகிறது. அதனால் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை 1200 தொன் பெற்றோலை விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டது. ஆனால் 800 தொன் பெற்றோலே விநியோகம் செய்யப்பட்டது. ஏன் இவ்வாறு நடந்தது? இங்குதான் பிரச்சினை உள்ளது. எனவே நிச்சயமாக இதுதொடர்பில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி ஆகவேண்டும்.

கேள்வி: இந்திய எண்ணெய் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்படுகிறதே?

பதில்: (ராஜித) இந்திய எண்ணெய் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்ட முடியாது. அவர்களிடம் 16 வீதமான பங்களிப்பே உள்ளது. எனவே அவர்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி: இந்த நெருக்கடிமூலம் அரசு ஸ்தம்பிதமடைந்திருப்பது வெளிப்படுகின்றதே?

பதில்: (ராஜித) அதை விட தரமற்ற பெற்றோல் வந்திருந்தால் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்குமே.

கேள்வி: அர்ஜுன ரணதுங்க துறைமுக அமைச்சிலிருந்து பெற்றோலியத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது இங்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அப்படியாயின் அவர் வேலை செய்வதில்லையா? தற்போது நீங்கள் குழுவை நியமித்துவிட்டால் எல்லாம் சரியா?

பதில்: இதற்குப் பின்னர் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கே குழு நியமிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்கத்தில் நீங்கள் இவ்வாறு கடுமையாக கேள்வி எழுப்பவில்லையே?

கேள்வி: கடந்த அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டு நீங்களும் அதே தவறை செய்யலாமா?

பதில்: (தயாசிறி) கடந்த அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருப்பது எமது நோக்கமல்ல. எரிபொருள் என்பது அத்தியாவசியப் பொருளாகும். இதன்போது இங்கு கையிருப்பு இல்லாமல்போனமையே பாரிய பிரச்சினையாக உள்ளது.

கேள்வி: நெருக்கடி ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் அர்ஜுன ஏன் மௌனமாக இருந்தார்?

பதில்: அதனை அவரிடமே கேட்கவேண்டும்.

கேள்வி: அப்படியாயின் மக்களின் அசௌகரியத்திற்கு யார் பதிலளிப்பது?

பதில்: (தயாசிறி) அரசாங்கம் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இங்கு பிரச்சினை ஒன்று உள்ளது. அதாவது அதிகாரிகள் என்ன செய்தனர் என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.

கேள்வி: அர்ஜுன தனக்கு யாரே அழுத்தம் கொடுத்ததாக கூறியுள்ளார்? யார் அழுத்தம் கொடுத்தது?

பதில்: அதை அவர் அமைச்சரவையில் கூறவில்லை. எதிர்காலத்தில் கூறுவார் என எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: அப்படியாயின் அர்ஜுன குற்றவாளியை பாதுகாக்கிறாரா?

பதில்: அதை அவரிடம்தான் கேட்கவேண்டும்.

கேள்வி: அர்ஜுனவை பதவிலியிருந்து அகற்ற சதி இடம்பெறுவதாக விமல் வீரவனச கூறியுள்ளாரே?

பதில்: அவருக்கு எல்லாமே சதிதானே? அவர் முன்வைத்த கூற்றினால் ஒருகாலத்தில் பான் கீ மூன் பயப்பட்டார். தற்போது ட்ரம்ப்பே பயந்துவிட்டார்.

கேள்வி: அமைச்சரவையில் அர்ஜுன மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டதா?

பதில்: இல்லை, ஆனால் நீங்கள் கேட்பதைவிட காரசாரமான கேள்விகள் அமைச்சர்களினால் கேட்கப்பட்டன.

கேள்வி: அமைச்சர் தயாசிறி ஜயசேகர அர்ஜுன ரணதுங்கவை கடுமையாக விமர்சித்தாரா?

பதில்: (தயாசிறி) அவ்வாறு ஒன்றுமில்லை. அடுத்த கப்பலை ஏன் உடனடியாக வரவழைக்கவில்லை என்பதே எனது கேள்வியாக இருந்தது. அதனால்தான் நாங்கள் கேள்விகளை எழுப்பினோம். உண்மையில் இந்த நிலைமை குறித்து கவலை அடைகின்றோம். இனி இவ்வாறு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடனடி தீர்வு தொடர்பில் ஆராய ஏற்கனவே குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாரும் தவறு செய்துள்ளார்களா என்பதை ஆராய மற்றுமொரு குழு நியமிக்கப்படும்.

கேள்வி: 10 இலட்சம் ஆட்டோ சாரதிகள் கடந்த ஒருவாரமாக வருமானமின்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கப்படுமா?

பதில்: அவ்வாறு நிவாரணம் வழங்க முடியாது. அப்படி செய்தால் பல சிக்கல்கள் ஏற்படும். ஆனால் இனி அப்படி ஒன்று வராமல் பார்த்துக்கொள்வோம். "

கேள்வி: அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கிரிக்கெட் துறையின் குறைகளை சுட்டிக்காட்டுகின்றாரே தவிர தனது வேலைகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதா?

பதில்: (ராஜித) அதற்கான பதிலை தயாசிறி கூறுவார்.

பதில்: (தயாசிறி) கருத்துக்கூற விரும்பவில்லை.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.