Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது எதிரணியின் சிறப்புரிமை பிரச்சினையால் சபையில் சர்ச்சை

Featured Replies

பொது எதிரணியின் சிறப்புரிமை பிரச்சினையால் சபையில் சர்ச்சை

karu1-d0515bcca201685ce38a1ef3ef17e1200f19f884.jpg

 

கவலை தெரிவித்த சபாநாயகர்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் துவிச்­சக்­கர வண்­டியில் நேற்று பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்த போது பொலிஸார் தடு த்து நிறுத்­தி­யுள்­ளனர். இந்த செயற்­பாட்­டினால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிறப்­பு­ரிமை மீறப்­பட்­டுள்­ளது.

 இது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று தினேஷ் குண­வர்­தன எம்.பி சபா­நா­ய­கரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­ததை அடுத்து நேற்று சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது. இதன்­போது ஆளும் எதிர்க்­கட்­சி­யினர் ஆர­வா­ர­மிட்டு குழப்பம் விளை­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நேர்ந்த நிலைமை குறித்து கவலை அடை­வ­தா­கவும் இந்த விடயம் தொடர்பில் உரிய விசா­ரணை செய்­வ­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்டம் முன்­வைப்­ப­தற்­காக சபை நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­னதை அடுத்து பட்ஜட் சமர்ப்­பிக்க முன்னர் தினேஷ் குண­வர்­தன எம்.பி சிறப்­பு­ரிமை பிரச்­சினை எழுப்­பி­ய­தனை அடுத்தே சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டது.

இதன்­போது கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு தலைவர் தினேஷ் குண­வர்­தன எம்.பி குறிப்­பி­டு­கையில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும் போதும் செல்லும் போதும் எந்­த­வொரு தொந்­த­ரவும் இருக்க கூடாது. எம்.பிக்கள் சுதந்­தி­ர­மாக வந்­து­செல்­வது எமது சிறப்­பு­ரி­மையில் குறிப்­பி­டப்­பட்ட விட­ய­மாகும்.  

எனினும் மஹிந்த ராஜ­பக்ஷ உட்­பட எமது கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன்­றைய தினம் (நேற்று) துவிச்­சக்­கர வண்­டி­லேயே பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்­தனர் என்று தினேஷ் குண­வர்­தன எம்.பி. தெரி­வித்­ததை அடுத்து, ஆளும் தரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஹூ கோஷ­மிட்டு ஆர­வா­ர­மிட்­டனர். தினேஷ் குண­வர்­தன எம்.பிக்கு பேசு­வ­தற்கு இட­ம­ளிக்க விடாமல் ஆளும் கட்­சி­யினர் எழும்பி கோஷ­மிட்­டனர்.

இத­னை­ய­டுத்து தனது உரையை தொடர்ந்த தினேஷ் குண­வர்­தன எம்.பி, தயவு செய்து கத்­தா­தீர்கள், கோஷ­மி­டா­தீர்கள். தற்­போது முழு நாட்டு மக்­க­ளுக்கும் வாக­னங்­க­ளுக்கு பெற்றோல் இல்­லாமல் அவ­திப்­ப­டு­கின்­றனர். முழு நாடும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளது.  

இந்­நி­லையில் நாம் துவிச்­சக்­கர வண்­டியில் வந்த போது பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தரும் இரண்­டா­வது வாயிலில் வைத்து பொலிஸார் எம்மை தடுத்து நிறுத்­தினர். உள்ளே போக­வி­டாமல் தடுத்­தனர். இதனால் எமக்கு அநீதி நடந்­துள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிறப்­பு­ரிமை கேள்வி குறி­யா­கி­யுள்­ளது. ஆகவே இந்த விடயம் தொடர்பில் உரிய அவ­தானம் செலுத்தி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதன்­போது பதி­ல­ளித்து உரை­யாற்­றிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வருகை தர முடி­யா­மை­யிட்டு நான் வருந்­து­கின்றோம். எனவே இந்த விடயம் தொடர்பில் விசா­ரணை செய்­யுங்கள். என்­றாலும் இவர்கள் அதி சொகுசு வரி விதித்­த­மை­யி­னா­லேயே இவர்கள் துவிச்­சக்­கர வண்­டியில் வந்­தனர் என்றார். 

இந்த சந்­தர்ப்­பத்தில் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோஷ­மிட்டு குழப்பம் விளை­வித்­தனர். இத­னை­ய­டுத்து சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பதி­ல­ளிக்­கையில், தினேஷ் குண­வர்­தன எம்.பி சபையில் கூறிய விட­யங்கள் பாரா­ளு­மன்றம் கூடு­வ­தற்கு முன்னர் கூட்டு எதிர்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்­னிடம் வந்து முறை­யிட்­டனர். எனினும் கூட்டு எதிர்­கட்­சி­யி­னரின் செயற்­பா­டுகள் முன்­கூட்டி அறி­விக்­கப்­ப­ட­வில்லை. என்­றாலும் கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நேர்ந்த நிலை­மைக்கு நான் வருத்தம் தெரி­விக்­கின்றேன். அத்­துடன் இது தொடர்பில் விசா­ரணை செய்­கின்றேன் என்றார். 

இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய நளின் பண்டார எம்.பி, கூட்டு எதிர்க்கட்சியினர் சபைக்கு வந்த துவிச்சக்கர வண்டிக்கு பின்னால் ஜீப் வண்டிகள் பின்தொடர்ந்து வந்தது. செல்லும் போது அதில் தான் செல்வர் என்ற போது எதிர்க்கட்சியினர் கோஷமிட்டு ஆரவாரமிட்டனர். எனினும் சபாநாயகர் தலையிட்டு சர்ச்சைக்கு முடிவு கட்டினார்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.