Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் தலைவிரித்தாடும் வன்முறைக்கலாசாரம்

Featured Replies

குடாநாட்டில் தலைவிரித்தாடும் வன்முறைக்கலாசாரம்

 
 
குடாநாட்டில்  தலைவிரித்தாடும் வன்முறைக்கலாசாரம்
 

யாழ்.குடா­நாட்­டில் முன்­னெப்போ­தும் இல்­லாத அள­வுக்கு அண்­மைக்­கா­ல­மாக குற்­றச் செ­யல்கள் வகை தொகை­யின்றி அதி­க­ரித்த வண்­ண­முள்­ளன.

தமக்­குக் கிட்­டும் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் அச்சு ஊட­கங்­க­ளும் சரி, இலத்­தி­ர­னி­யல் ஊட­கங்­க­ளும் சரி இத்­த­கைய குற்­றச்­செ­யல்­கள் குறித்த தக­வல்­களை பொது­மக்­க­ளுக்கு அறி­யத்­தந்­தா­லும், குறித்த ஊட­கங்­ளுக்கு எட்­டாத் தக­வல்­க­ளா­க­வும் சிற்­சில குற்­றச்­செ­யல்­கள் யாழ்.குடா­நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இடம் பெறவே செய்­கின்­றன.

போர் இடம்­பெற்ற கால­கட்­டத்­தில் கூட, பாது­காப்­புப் படை­யி­ன­ரது கெடு­பிடி நட­வ­டிக்­கை­க­ளால் அச்­சம், பதற்­றம் மிகுந்த சூழ­லில் குடா­நாட்டு மக்­கள் தமது அன்­றாட வாழ்க்­கையை முன்­ன­கர்த்திச் சென்­றி­ருக்­கி­றார்­க­ளே­யொ­ழிய, இன்­றைய நாள்­க­ளைப் போன்று இரவு வேளை­க­ளில் எந்­த­நே­ரம் திருட்டுக் குழு வீட்­டுக் கத­வைத் தட்­டுமோ என்று குடும்­பத்து வளர்ந்த உறுப்­பி­னர்­கள் அஞ்­சும் நிலை ஏற்­பட்­ட­தில்லை.

அதே­ச­ம­யம் அண்­மைக்­கா­ல­மாக குடா­நாட்­டின் பல பகு­தி­க­ளில் இடம்­பெ­றும் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் குறித்­துச் சிந்­தித்­துப் பார்க்­கும்­போது, ஏதோ­வொரு கண்­ணுக்­குப் புலப்­ப­டாத, திட்­ட­மிட்டு இவ்­வா­றான வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைத் தூண்­டி­வி­டும் ஒரு சக்தி குடா­நாட்டில் செயற் படு­வ­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

அன்­றைய நாளின் தமது குடும்­பத்­துப் பொரு­ளா­தா­ரத் தேவை­களை ஈடு­செய்­யும் பொருட்டு பற்­பல விதங்­க­ளி­லான சிர­மங்­க­ளை­யும் பொருட்­ப­டுத்­தாது பகல் பொழுது முழு­வ­தும் பாடு­பட்­டு­ழைக்க வேண்­டிய சூழல் இன்று நில­வு­கி­றது.

குடும்­பத்து ஆண்­கள் மட்­டு­மென்­றல்­லாது, இன்­றைய நாளில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான பெண்­க­ளும் கூட தாம் தொழில் செய்­யும் இடங்­க­ளி­லி­ருந்து மாலை வேளை­க­ளில் தத்­தம் வீடு­க­ளுக்­குத் திரும்பி தமது பிள்­ளை­கள், பெற்­றோர், உடன் பிறந்­தோர் போன்ற குடும்­பத்து ஏனைய உற­வி­னர்­க­ளு­டன் சுக துக்­கங்­க­ளைப் பகிர்ந்து, இரவு உணவை ஒன்­றா­கக் கூடி உண்டு களைப்­புத் தீர ஆழ்ந்த உறங்க முடி­கின்­றதா? மடி­யில் கனம் இருந்­தால்­தானே வழி­யில் பயம்? என்ற கேள்­வி­யு­டன் எங்­கள் வீட்­டில் நுழைந்து எதைத்­தான் திரு­டப் போகி­றார்­கள்? என்ற மனப்­பாங்­கில் திரு­டர் பயம் எது­வு­மின்றி தத்­தம் இர­வு­பொ­ழு­தைக் கழிக்­கும் குடும்­பங்­கள் பல யாழ்.குடா­நாட்­டில் இல்­லா­ம­லில்லை.

சேமிப்­புப் ப­ழக்­கம் தமி­ழர் 
வாழ்­வு­டன் ஒட்­டிக் கொண்ட ஒன்று

தத்­த­மது பொரு­ளா­தா­ரச் சிர­மங்­களை ஈடு­செய்­து­கொள்ள இய­லாத நிலை­யில், உழைப்­புக்கு மிஞ்­சிய தேவை­கள் கொண்ட குடும்­பத்­த­வர்­கள் பலர் எம் மத்­தி­யில் வாழ்ந்து வரு­வது உண்­மையே.

ஆனால் அண்­மைய நாள்­க­ளில் வெளி­வ­ரும் பத்­தி­ரி­கைச் செய்­தி­க­ளின்­படி, அத்­த­கைய தரப்­பி­னர்­கள்கூட, அங்­கிங்­கெ­னா­த­படி எங்­கும் நிறைந் துள்ள சக்தி எனக் கொள்­ளத்­தக்க வழிப்­பறிக் கோஷ்­டி­க­ளி­டம் வகை­யாக மாட்­டிக் கொண்டு காதில் கழுத்­தில் மின்­னும் ஒன்­றி­ரண்டு தங்க நகை­க­ளைக்கூடப் பறி­கொ­டுக்க நேர்ந்து விடு­கின்­றதே?

என்­ன­தான் பொரு­ளா­தா­ரச் சுமை­யு­டன் வாழ்ந்­தா­லும் எம்­ம­வர்­க­ளில் பெண்­கள் பெரும்­பா­லும் கழுத்­தில் ஒரு தங்­கச் சங்­கி­லி­யா­வது அணி­யாது வெளி­யில் செல்­வ­தில்­லையே? வாயைக் கட்டி வயிற்­றைக்­கட்­டித் தமது மனைவி மற்­றும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு கழுத்­தில் அணிய ஏதா­வ­தொரு பெறு­ம­தி­யில் குறைந்­த­
தா­யி­னும், தங்க நகை­யொன்­றை­யா­வது அணிய வைக்க எமது குடும்­பத் தலை­வர்­க­ளில் பெரும் பா­லோர் பின்­னிற்­ப­தில்­லையே?

அது­வு­மன்றி அரச மற்­றும் தனி­யார் துறை­க­ளில் தொழில் செய்­யும் இளம்­பெண்­கள் தத்­த­மது மாதாந்­தச் சம்­ப­ளத்­தி­ல் இ­ருந்து சிறு­கச் சிறு­கச் சேமித்து தமக்­கான அத்­தி­யா­வ­சிய தங்க நகை­களை வாங்கி அணிந்து மகிழ்­கி­றார்­களே!

இத்­த­னை­யை­யும் ஒரு சில கொள்­ளிக் கண்­கள் நோட்­ட­மிட்டு, தரு­ணம் பார்த்து எங்கோ ஆகா­யத்­தில் உய­ரப் பறந்­தா­லும் கீழே நிலத்­தில் தாய்க்­கோ­ழி­யு­டன் இரை­தே­டும் கோழிக்­குஞ்­சு­க­ளைத் தனது பார்­வை­யால் நோட்­ட­மிட்டு, தக்க தரு­ணம் பார்த்­துக் கீழி­றங்கி வந்து பக்­கெ­னத் தூக்­கிச் சென்­று­வி­டும் பருந்து போன்று, நாளும் பொழு­தும் பாதை­யில் தனித்­துப் பய­ணிக்­கும் பெண்­க­ளின் கழுத்­தில் மின்­னும் நகை­க­ளைக் குறி­வைத்து அங்­கு­மிங்­கும் இரண்டு மூன்று தட­வை­கள் தம­து­மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வட்­ட­மிட்டு சங்­கி­லியை இறாஞ்­சிச் செல்­லும் ‘ஹீரோக்­கள்’ எம் மத்­தி­யில் இன்று அதி­க­ரித்­து­விட்­ட­னரே?

அரங்­கே­றும் சின்­னத்­திரை
அடா­வ­டித்­த­னங்­கள்

பகல் பொழு­தின் சிர­மங்­கள் காரணமான உடற் சோர்வினின்றும் விடு­பட ஆழ்ந்த உறக்­கத்­தில் இருக்­கும் குடும்­பத்­த­வர்­களை கையில் வாள்­கள், பொல்­லு­க­ளு­டன் வரும் ‘ஹீரோக்­கள்’ கத­வைத் தட்டி எழுப்­பு­கி­றார்­கள்.

இப்­போ­தெல்­லாம் எம்­ம­வர்­க­ளில் பலர் திரு­டர்­கள் குறித்த எச்­ச­ரிக்கை உணர்­வில், வீட்­டுக்­க­த­வு­கள், அத்­த­னைக்­கும் திறப்­புக­ளு­டன் கூடிய விலை­யு­யர்ந்த பூட்­டுக்­கள் போட்டு, போதா­தென்று ஒவ்­வொரு கத­வு­க­ளின் உட்­பு­ற­மும் திறாங்­கு­கள் பொருத்தி ‘பார்க்­கட்டை’ போட்டு பாது­காப்பு ஏற்­பா­டு­கள் கன­கச்­சி­த­மா­கத்­தான் செய்து கொள்­கி­றார்­கள்.

ஹீரோக்­க­ளது அட்­ட­கா­சத்­துக்கு அஞ்சி வீட்­டார் கூக்­கு­ர­லிட்டு அண்டை அய­லா­ரின் உத­வி­கோ­ரிச் சத்­த­மிட்­டா­லும், ஒரு சில துணிச்­சல்­கா­ரர், மனச்­சாட்­சி­யுள்ள அண்டை அய­லார்­தான் அச்­ச­மின்றி தத்­தம் வீடு­களை விட்டு வெளி­யில் வந்து ஹீரோக்­கள் கோஷ்­டி­களை பின்­வாங்­கித் தலை­ம­றை­வாகி ஓடித் தப்ப வழி செய்­கின்­ற­னர்.

ஏனைய பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­க­ளில், அச்­சத்­தின் கார­ண­மாக, வாள்­வெட்டு, கொட்­டன் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக நேரி­டுமோ என்ற அச்­சம் கார­ண­மாக அண்டை அய­ல­வர்­கள் உத­விக்­குச் செல்­லத் தயங்­கு­வ­துண்டு, அல்­லது தாம­திப்­ப­துண்டு.
அத்­த­கைய நிலை­யில் ‘ஹீரோக்­க­ளால்’ வாசல் கதவு உடைத்­துத் திறக்­கப்­ப­டும்.

உத­வி­கள் கிட்­டாத நிலை­யில் அச்­சத்­தில் உறைந்­து­போ­கும் குடும்­பத்­த­வர்­களை மிரட்­டியோ, மிரட்­டல்­க­ளுக்கு மசி­யாத குடும்­பத்­த­ வர்­க­ளைத் தாக்­கியோ, அந்­தக் குடும்­பத்­த­வர்­கள் வச­மி­ருக்­கும் தங்க நகை­கள், பணம் என்­ப­வற்­றை­யெல்­லாம் வாரிச் சுருட்டி எடுத்­துக் கொண்டு ‘நம்ம ஹீரோக்­கள்’ ‘எஸ்­கேப்’ ஆகி­வி­டு­கி­றார்­கள்.

பிற­கென்ன? சினி­மாக்­காட்­சியோ, சின்­னத்­தி­ரைக் காட்­சியோ காட்சி மாறு­வ­து­போன்று பொலி­ஸில் முறைப்­பாடு, பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்கு வந்து துரு­வித்­து­ருவி ஆராய்வு, நகை­கள், பணத்­தைப் பறி­கொ­டுத்­தோ­ரி­டம் சலிப்பு ஏற்­ப­டும் அள­வுக்கு விசா­ரணை, வாக்­கு­மூ­லப் பதிவு என்­ப­வற்­றோடு தொட­ரும் காட்­சி­கள், சந்­தே­கத்­தின் பேரில் சிலர் கைது, பொலி­ஸார் திருட்­டுக் கோஷ்­டி­யி­னரை நெருங்­கி­விட்­ட­னர்.

ஓரிரு தினங்­க­ளில் திருட்­டுக் கோஷ்­டி­யி­னர் கைதா­வர் என்ற பர­ப­ரப்­பு­டன் தொடர்ந்து, மேலும் சில நாள்­க­ளில் பர­ப­ரப்­புத் தானா­கவே அடங்­கி­வி­டும்.

தமது வியா­பார நிலை­யத்­தில் மாலை­வே­ளை­யில் கடைக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளது தேவை­களை நிறை­வேற்­றிக் கொடுப்­ப­தில் கண்­ணும் கருத்­து­மாக இருக்­கி­றார் வியா­பார நிலைய உரி­மை­யா­ளர். கடை­யில் வேலை செய்­யும் உத­வி­யா­ளர்­க­ளும் தம்­பாட்­டுக்­குச் சுறு­சு­றுப்­பாக இயங்­கிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

இருந்­தாற்­போ­லி­ருந்து திடு­திப்­பென மூன்று, நான்கு மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வந்­தி­றங்கி கடைக்­குள் புகும் இளை­ஞர் கோஷ்­டி­யொன்று, கடை­யி­லுள்ள சாமான்­கள் அனைத்­தை­யும் உடைத்­தெ­றிந்து கடை உரி­மை­யா­ள­ரை­யும் அவ­ருக்கு உதவ வரும் ஊழி­யர்­க­ளை­யும் தத்­த­மது கைக­ளி­லுள்ள வாள்­க­ளால் வெட்­டி­யும், பொல்­லு­க­ளால் தாக்­கி­யும் படு­கா­யப்­ப­டுத்­தி­விட்டு கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் அங்­கி­ருந்து தப்­பிச் சென்று விடு­கின்­ற­னர்.

இத்­த­னைக்­கும் இத்தகைய தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டோர் தம்மை அடை­யா­ளம் தெரி­யாத அள­வுக்கு முகங் களைக் கறுப்­புத் துணி­க­ளால் மறைத்­துக் கொண்­டி­ருந்­த­தாக சம்­ப­வங்களை நேரில் பார்த்­தோர் தெரி­வித்துள்ளனர். சரி, பொ­லி­ஸார் வரு­கி­றார்­கள்; வழ­மை­போன்று விசா­ர­ணை­கள்; சாட்சி யப் பதி­வு­கள், பத்­தி­ரி­கை­கள் சம்­ப­வத்தை விவ­ரித்து செய்­தி­கள் பிர­சு­ரிக்­கின்­றன.

ஓரிரு நாள்­கள் அந்­தச் சம்­ப­வம் பத்­தி­ரி­கைள் மத்­தி­யி­லும், பொது­மக்­கள் மத்­தி­யி­லும் பேசு­பொ­ரு­ளா­கி­றது. பொலி­ஸார் தரப்பை பத்­தி­ரி­கை­கள் கிண்­டிக் கிளறி விசா­ரித்­தா­லும், சம்­ப­வம் குறித்­துப் பொலி­ஸார் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர் என்ற வழமையான பதி­லோடு விட­யம் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
தாக்­கு­த­லுக்கு உள்­ளான கடை உரி­மை­யா­ள­ரும் ஊழி­யர்­க­ளும் வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெற்­றுத் திரும்­பிய சில நாள்­க­ளில் வழ­மை­போன்று அந்த வியா­பார நிலை­யம் இயங்க ஆரம்­பிக்கின்றது.

முன்­பகை கார­ண­மாக எவ­ரா­வது தூண்­டி­விட்டு இத்­த­கைய வன்­மு­றைக் கும்­ப­ல் களைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தலை மேற்­கொள்­வித்­தார்­களா? என்று தெரிந்­து­கொள்ள பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னர்­க­ளது வாயைக் கிண்டி ஏதா­வது தெரிந்­து­கொள்ள முடி­கி­றதா என்று முயன்று பார்த்­தால், எவ­ரா­லுமே அந்­தச் சம்­ப­வத்­துக்­கான அடி­மு­டி­யைத் தெரிந்­து­கொள்­ளக் கூடிய அள­வுக்­குப் பதி­ல­ளிக்க முடி­ய­ வில்லை.

இந்த நிலை­யில் குறித்த சம்­ப­வம் குறித்து மேல­திக தேடு­தலை விடுத்து விட­யத்துக்கு முற்­றுப்­புள்­ளி­யிட்டு முடித்­துக் கொள்­வ­தைத் தவிர வழி­யே­து­மில்லை.

முன்­னைய பயங்­கர யுகத்தை 
நினை­வூட்­டும் படு­கொ­லைச் 
சம்­ப­வங்­கள்

இதே­போன்று குடாநாட்­டில் அண்­மைக் காலத்­தில் இடம்­பெற்ற படுகொ­லைச் சம்­ப­வங்­கள் சில­வற்­றில் பாது­காப்­புத் தரப்­பி­னர்­கள் சம்­பந்­தப் பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கம் நிலவி வந்­தது. அதனை உறு­திப்­ப­டுத்­தும் வித­மாக சில நாள்­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்ற படு­கொ­லைச் சம்­ப­வ­மொன்று தொடர்­பாக பாது­காப்­புத் தரப்­பைச் சேர்ந்த இரண்டு அதி­கா­ரி­கள் சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த நிலை­யில் யாழ் குடா­நாடு இத்­த­கைய சீர்­கேட்­டுக்கு உட்­பட நேர்ந்­த­மைக்­கான கார­ணம் தொடர்­பில் நோக்­கு­த­லும் பய­னு­டைத்து.

குடா­நாட்டு இளை­ஞர்­கள் மத்­தி­யில் வேலை வாய்ப்­பின்மை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் அவர்­கள் மன விரக்­திக்கு உட்­பட்­டுள்­ள­னர். இதன் கார­ண­மா­கவே எமது இளை­ஞர்­கள் இத்­த­கைய போக்­கில் நடந்­து­கொள்­கின்­ற­னர் என்று நான் கரு­து­கி­றேன் என்று ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­யர் ஒரு­வர் கருத்­துத் தெரி­வித்­தார்.

இன்­றைய இயந்­தி­ர­மய வாழ்க்­கைச் சூழ­லில் இயங்க நேர்ந்­த­தன் கார­ண­மா­க, பெற்­றோர்­கள் பல­ரும் தமது பிள்­ளை­க­ளது நடத்­தைக் கோலங்­க­ளைக் கண்­கா­ணிக்க வேண்­டிய வேளை­ க­ளில் வேண்­டிய அறி­வு­ரை­க­ளைக்­கூறி சரி­யான பாதை­யில் வழி­ந­டத்­து­வ­தில் இய­லாத் தன்­மைக்கு உட்­பட்­ட­தன் கார­ண­மா­கவே எமது இளைய சமு­தா­யத்­தி­னர் இவ்­வி­தம் தவ­றான பாதை­யில் பய­ணிக்­கக் கற்­றுக்­கொண்­டுள்­ள­னர் என்று ஆவே­சத்­து­டன் கருத்து வெளி­யிட்­டார் சமூ­கத்­தொண்­டில் ஆர்­வம் காட்­டிச் செயற்­ப­டும் பிரமுகரொருவர்.

எமது ஈழத்­த­மி­ழி­னம் தனக்­கென வகுத்து, பல்­லாண்­டு­கள் கால­மாக பேணிக் காத்து கடைக்­கொண்­டு­வந்த தனித்­து­வ­மான பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளை­யும், பழக்க வழக்­கங்­க­ளை­யும் இந்த அள­வுக்­குப் பிறழ்­வு­பட வைத்­தவை தமிழ் நாட்­டுச் சினி­மாத் து­றை­யும் சின்­னத்­திரை நிகழ்ச்­சி­க­ ளுமே என்று கடும் தொனி­யில் குற்­றம்­சாட்­டி­னார் சம­ய­வா­தி­யொ­ரு­வர். போதா­த­தற்கு இலத்­தி­ர­னி­யல் ஊட­கங்­க­ளை­யும் அவர் விட்­டு­வைக்­க­ வில்லை.

குற்­றச்­சாட்­டைக் கேட்­ட­தும் என்­னு­டன் கூடவே வந்­தி­ருந்த, பல்­க­லைக் கழ­கத்­தில் கல்­வி­கற்­கும் இளை­ஞ­ரொ­ரு­வர் ‘‘ஐயா! உல­கமே இன்று கடும் வேகத்­தில் மாற்­றம் கண்டு வரு­கி­றது. ஊரோடு ஒத்­து­ஓடு என்­பது எம்­ம­வர்­கள் சொல்­லிச்­சென்ற முது­மொழி. இந்த நிலை­யில் இன்­றைய தொழில்­நுட்ப யுகத்­தில் நாமும் உலக ஓட்­டத்­துக்கு ஏற்ப மாறித்­தானே ஆக­வேண்­டும்’’ என வாதிட்­டார்.

பல்­கலை மாண­வ­னின் வாதத்தை கணக்­கில் எடுக்­காத அந்தச் சம­ய­வாதி, ‘‘எதை­யா­வது செய்­யுங்­கள், எப்­ப­டி­யா­வது மாறிக்­கொள்­ளுங்­கள். ஆனால், பொறு­மை­யை­யும், அமை­தி­யை­யும், நிம்­ம­தி­ யான வாழ்க்­கை­யை­யும் விரும்­பும் எம்மவர்கள் மீது சமூ­க­வி­ரோத வன்­மு­றைக் கலா­சா­ரத்­தைத் திணிக்க முய­லா­தீர்­கள்’’ என வேண்­டிக்­கொண்­டார்.

தொலைந்­து­போன நிம்­ம­தி­நிலை

ஒரு­பெண் அச்­சம் எது­வு­மின்றி தனி­யாக இர­வில் பய­ணிக்­கத்­தக்க சூழ்­நிலை நில­வி­னா­லேயே இந்­திய நாடு சுதந்­தி­ரம் பெற்­று­விட்­ட­தா­கக் கொள்ள முடி­யும் என இந்­தி­யத் தலை­வ­ரொ­ரு­வர் தெரி­வித்­த­தாக சின்ன வய­தில் நூலொன்­றில் வாசித்த ஞாப­க­முண்டு. ஆனால், அத்­த­கை­ய­தொரு நிலை யாழ் குடா­நாட்­டில் ஒரு கால­கட்­டத்­தில் நில­வி­யதை எவ­ரா­லும் மறுத்­து­ரைக்க இய­லாது. எமது ஈழத்­த­மி­ழர் வர­லாற்­றில் இறுக்­க­மாக இடம்­பி­டித்­துள்ள பதி­வு­கள் அவை.

காலச்­சு­ழற்­சி­யில் அயல்­நாடு, மேற்­கு­லக நாடு­க­ளின் சூழ்ச்­சி­யா­லும் சிங்­கள ஏகா­தி­பத்­திய ஆட்­சி­யா­ளர்­க­ளின் நய­வஞ்­ச­கத்­தி­னா­லும் அத்­த­கைய அமை­திச்­சூ­ழல் அழிக்­கப்­பட்டு, தமிழ் மக்­க­ளுக்­கான நீதி நியா­யம் மறுக்­கப்­பட்டு, ,உரி­மை­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டும் அர­சி­யல் சூழ­லொன்று இன்று தலை­தூக்­கி­யுள்­ளது.

இந்த நிலை­யில் எம்­ம­வர்­க­ளது அமை­தி­யான, சாத்­வீ­க­மான போக்­கைத் திட்­ட­மிட்டு மாற்­றி­ய­மைத்து, எமது இனத்­தின் இளம் சமூ­தா­யத்­தி­னரை வன்­மு­றைக் கலா­சாரத்­துள் மூழ்­க­டிப்­ப­தன்­மூ­லம் இனத்­தின் இருப்­பை­யும், அமைதி நிலை­யை­யும் இல்­லா­தொ­ழித்­திட கண்­ணுக்­குப் புலப்­ப­டாத சக்­தி­யொன்று திட்­ட­மிட்­டுச் செயற்­பட்டு வரு­கின்­றதா என்று எம்­ம­வர்­கள் பல­ரின் மத்­தி­யில் சந்­தே­கம் கருக்­கொண்­டுள்­ளது.

இத்­த­கைய சந்­தே­கம், அண்­மைய நாள்­க­ளில் இடம்­பெ­றும் மேற்­கு­றித்த வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளின் மூலம் மேலும் அதி­க­ரித்­துச் செல்­கி­றது.

நாட்­டின் நீதித்­துறை இது விட­யத்­தில் கவ­னம் செலுத்தி தமி­ழி­னத்­த­வர்­கள் தமது நாளாந்த வாழ்க்­கையை பதற்­ற­மின்றி, அச்­ச­மின்றி அமை­தி­யான வழி­யில் முன்­னெ­டுத்­துச் செல்ல உத­விட வேண்­டும். இத்­த­கைய வன்­மு­றைக் கலா­சா­ரம் தலை­வி­ரித்­தாடி, ஏற்­க­னவே நொந்­து­போ­யுள்ள எம்­ம­வர்­களை மேலும் வதைக்­கா­மல் தடுக்க வேண்­டும்.

அடா­வ­டித்தனங்­க­ளில் ஈடு­ப­டு­வோரை தய­வு­தாட்­ச­ணி­யம் இன்றி தண்­டித்­துக் கட்­டுப்­ப­டுத்­து­தல் இன்­றைய காலத்­தின் கட்­டா­ய­மாக ஆகி­யுள்­ளது. இதுவே எம்­ம­வர்­க­ளின் இன்­றைய எதிர்­பார்ப்­பு­மா­கும்.

http://newuthayan.com/story/45251.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.