Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9 போராளிகள்- 4 தேசிய துணைப்படை வீரர்களின் வீரச்சாவு அறிவித்தல்கள்

Featured Replies

9 போராளிகள்- 4 தேசிய துணைப்படை வீரர்களின் வீரச்சாவு அறிவித்தல்கள்

தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 9 போராளிகளினதும் 4 தேசிய துணைப்படை வீரர்களினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

விபரம் வருமாறு:

09.03.2007 இல் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது தேசிய துணைப்படை வீரர்கள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர்.

தேசிய துணைப்படை வீரர் 2 ஆம் லெப். ஜேசுதாஸ் என்று அழைக்கப்படும் ப.சி.ஐயாத்துரைகமம் 160 ஆம் கட்டை பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்த முனியாண்டி ஜேசுதாஸ்,

தேசிய துணைப் படை வீரர் வீரவேங்கை ரவிக்குமார் என்று அழைக்கப்படும் இலக்கம் 92 ரயர் கடையடிச் சந்தி விநாயகபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ரவிக்குமார் ஆகிய தேசிய துணைப்படை வீரர்களே வீரச்சாவடைந்தவர்கள் ஆவர்.

09.03.07 இல் வெடிவைத்த கல்லுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின் போது தேசிய துணைப்படை வீரர்கள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர்.

தேசிய துணைப்படை வீரர் 2 ஆம் லெப். யோகநாதன் என்று அழைக்கப்படும் மாறாயிலுப்பை நெடுங்கேணி வவுனியாவைச் சேர்ந்த பரமு யோகநாதன்,

தேசிய துணைப்படை வீரர் லெப். யோகேஸ்வரன் என அழைக்கப்படும் பனங்காமம் நட்டாங்கண்டல் மல்லாவி முல்லைத்தீவை சொந்த முகவரியாகவும் ஒலுமடு நெடுங்கேணியை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஏகாம்பரம் யோகேஸ்வரன் ஆகிய தேசிய துணைப்படை வீரர்களே வீரச்சாவடைந்தவர்கள் ஆவர்.

18.08.06 இல் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலின் போது இடம்பெற்ற எதிர்த்தாக்குதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

வீரவேங்கை சுடர்நிலா என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோனி சியானி என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

27.01.07 இல் சிறிலங்கா கடற்பரப்பில் பல கடற்கலங்களை தாக்கியளித்த போது கடற்கரும்புலி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கடற்கரும்புலி கப்டன் முறையமுதன் என்று அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் றமேஸ் மூன்றாம்பிட்டி மன்னாரை வேறு முகவரியாகவும் கொண்ட அந்தோனி இராயப்பு மரியனேசன் என்ற கடற்கரும்புலியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

09.03.07 இல் திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர்.

லெப். கேணல் சதன் அல்லது இளமாறன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் உலகளந்த பிள்ளையார் கோவில் பின்வீதி முதலாம் வட்டாரம் புதுக்குடியிருப்பை தற்காலிக முகவரியாகவும் கொண்ட கமலநாதன் சிவநாதன்,

மேஜர் செல்வக்கதிர் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் இடதுகரை முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானை தற்காலிக முகவரியாகவும் கொண்ட பாலன் பிரபாகரன் ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்கள் ஆவர்.

08.03.07 இல் திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

மேஜர் தணிகைவேல் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை சொந்த முகவரியாக கொண்ட வடிவேல் தமிழ்ச்செல்வன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

04.08.06 இல் யாழ். தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

மேஜர் வாணிதரன் என்று அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் உதயராஜ் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவர்.

19.08.06 இல் யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் புரட்சிக்குன்றன் என்று அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் பகீரதன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

13.10.06 இல் மன்னார் முருங்கன் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

மேஜர் குணபால் என்று அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பர்ணாந்து வின்சன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

23.04.06 இல் திருகோணமலை கந்தளாய் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

2 ஆம் லெப். கண்ணன் என்று அழைக்கப்படும் முத்துராஜா பேரின்பராஜா என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

இம்மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றனர்.

  • தொடங்கியவர்

மண்ணிற்காக தம்முயிர் நீர்த்த வீர வீரங்கனைகளுக்கு களம் சர்பாக வீர வணக்கங்கள்

தற்போது புலிகளினால் தமது உறுப்பினர்கள் வீரமரணம் எய்தும்

செய்தி பல காலம் கழித்தே கூறப்படுகிறது...ஏன்...??

ஆனால் எமது ஒறவினர் ஒருவரும் கரவெட்டி பகுதியல் வீரமரணம் எய்தியிருந்தார்..ஆனால்

அவ் குடும்பத்தாருக்கு உடன் அறிவிக்கப்பட்டது..ஆனால் ஊடகங்களில் பல மாதங்கள் கழித்தே வெளியடப்பட்டது..

ஏன் இவ்வாறு நடத்தாப் பாடுகின்றன...???

இழப்புக்கள் போரில் வருவது இயல்பே அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே.எனது நண்பர் ஒருவரின் அண்ணா பரந்தன் முறியடிப்பு சமரில் வீர மரணம் எய்தி இருந்தார் அவரின் குடும்பத்துக்கு அவர் சாவடைந்த அடுத்த நாள் கொழும்பில் நேரடியாக தகவல் சொல்லப்பட்டட்து புலிகள் மரனச்செய்தியை ஒரு நாளும் மறைக்கவில்லை அதனை அவர்களின் உறவினர்களுக்கும் மறைக்க முயலவில்லை .சில வேளைகளில் அவர்களின் பெயர் பட்டியல் ஊடகங்களில் வெளியிடுவது பிந்துகின்றது எதேனும் காரணம் இருக்கும்.போராடாமல் களத்தில் நிற்காமல் ஒழிந்து வாழும் எம்மை போன்றவர்கள் வீர மரணச்செய்தி கேட்டவுடன் உடனடியாக விமானத்தை பிடித்து களப்பலியான அவ்மாவீரனின் இழப்பை எம்மை கொண்டு நிவர்தி செய்யபோகிறோமா.முடியாது தானே ஆகவே எமக்கு அதனை பற்றி கதைக்க எந்தவித உரிமையும் தகுதியும் இல்லை அவர்கள் ஒவ்வொரு மாவீரனுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுப்பார்கள் நாங்கள் சற்று அமைதியாக இருப்போமே

அதெல்லாம் போரியல் தந்திரம்

Edited by வானவில்

சில காலங்களில் அவர்கள் வீரச்சாவு அறிவித்தல் பிற்போடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது, இது ஒரு சம்பவம் இராணுவம் வலிகாமம் பகுதியை கைப்பற்ரிய பின் அவர்கள் அங்கு சுற்றிவளைப்பு செய்தபோது அங்கு ஒர் இடத்தில் சுமார் 160 போராளிகளை இழந்த சம்பவம் சில காலங்களுக்கு பின் அறிவிக்கப்பட்டது இராணுவம் தென்மராச்சி வடமராச்சி கைப்பற்ரிய பின் வன்னிக்கு சென்று சிறிது காலங்களுக்கு பின் தான் அறிவிக்கப்பட்டது. இது உண்மை சம்பவம்

தாய் மண்ணுக்காக தம் உயிரை ஈந்த வீரர்களுக்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 12-03-2007 01:24 மணி தமிழீழம் [தாயகன்]

தேசிய துணைப்படை வீரர்களின் வித்துடல்கள் விதைப்பு

சிறீலங்காப் படையினருடன் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதல்களில் தேசிய துணைப் படை வீரர்கள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர்.

வட போர் அரங்கு நாகர்கோவில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் தமிழீழ தேசிய துணைப் படை வீரர் 2ஆம் லெஃப்ரினன் ஜேசுதாஸ் என்றழைக்கப்படும் ஐயாத்துரைகமம், பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்த முனியாண்டி ஜேசுதாஸ் வீரச்சாவடைந்துள்ளார்.

இதேநாள் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரவேங்கை ரவிக்குமார் என்றழைக்கப்படும் இலக்கம் 93 விநாயகபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழீழ தேசிய துணைப் படை வீரர் வீரவேங்கை சுப்பரமணியம் ரவிக்குமார் வீரச்சாவடைந்துள்ளார்.

இந்த மாவீரர்களின் வித்துடல்கள் நேற்று மக்கள் வணக்கத்திற்காக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் புனித விதை குழிகளில் விதைக்கப்பட்டன

பதிவு.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.