Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உடன் சிறைச்­சா­லைக்கு மாற்­றவும்

Featured Replies

டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உடன் சிறைச்­சா­லைக்கு மாற்­றவும்

 

 

தெஹி­வளை பகு­தியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்­படையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உட­ன­டி­யாக சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறு நீதி­மன்றம் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­தது. 

Local_News.jpg

கோட்டை பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த உத்­த­ரவை நேற்று பிறப்­பித்தார். சிறைச்­சா­லைகள் ஆணை­யா­ள­ருக்கு பிறப்­பித்த குறித்த உத்­த­ரவில், டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உட­ன­டி­யாக சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறும் அங்கு அவ­ருக்கு சிகிச்சை தேவைப்­படின் சிறைச்­ச­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் பிர­காரம் சிறைச்சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கலாம் எனவும்  சுட்­டிக்­காட்­டிய நீதிவான், அதற்கு அப்பால் சிகிச்சை தேவைப்­படின் அரச வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­ய­ளிக்க முடியும்  என்றும் குறிப்­பிட்டார். 

ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத் தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது கடந்த இரு வழக்கு விசா­ரணைத் தினங்­களில் மன்றில் முன்­வைக்­கப்­பட்ட வாதங்­களின் அடிப்­ப­டையில் விசேட உத்­த­ர­வொன்­றினை நீதிவான் லங்கா ஜய­ரத்ன அறி­வித்தார்.

' இந்த வழக்கின் 7 ஆவது சந்­தேக நப­ரான கொமாண்டர் டீ.கே.பி. தஸ­நா­யக்க கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெறு­வது தொடர்பில் முறைப்­பாட்­டாளர் தரப்­பிலும் பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்­பிலும் மன்றில் ஆட்­சே­பம் முன்­வைக்­கப்­பட்­டது. இது தொடர்பில் நான் விட­யங்­களை ஆராய்ந்து அவ­தானம்  செலுத்­தினேன்.  சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையின் பிர­தான வைத்­திய அதி­கா­ரியின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே தஸ­நா­யக்க தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் அங்­கி­ருந்து விசேட வைத்­திய சிகிச்­சை­க­ளுக்­காக கடற்­படை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் சிறைச்­சாலை தரப்பில் கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

தஸ­நா­யக்­கவின் உண்­மை­யான நோய் நிலைமை தொடர்பில் நான் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கையைக் கோரினேன். சட்ட வைத்­திய அதி­காரி, மேலும் விசேட வைத்­திய நிபு­ணர்கள் சிலரின் அறிக்­கை­களைப் பெற்று இறுதி அறிக்­கையை எனக்கு சமர்ப்­பித்தார். அதில் தஸ­நா­யக்­க­வுக்கு எந்த நோய் நிலை­மை­களும் இல்லை எனவும் அவர் விசா­ர­ணை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கலாம் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்டம் என்ன கூறு­கி­றது என்­பது தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. சிறைச்­சா­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் 69 (1) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக  கைதி ஒருவர் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற முடியும். மாற்­ற­மாக அங்கு உரிய சிகிச்­சைகள் இல்­லா­த­வி­டத்து அரச வைத்­தி­ய­சாலை ஒன்­றி­லேயே சிகிச்சைப் பெற­வேண்டும்.

கடற்­படை வைத்­தி­ய­சாலை அர­சாங்­கத்தின் கீழ் இருந்­தாலும், அது பொது மக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் இட­மல்ல.  அது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே அரச வைத்­தி­ய­சாலை என கூறும் போது அங்கு பொது மக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­படல் வேண்டும்.

சந்­தேக நபர் கடற்­படை வீரர் என்ற ரீதியில் கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற உரிமை உள்ள போதும், நீதி­மன்­றைப் பொறுத்­த­வரை அவர் சந்­தேக நப­ரே­யாவார். எனவே ஒரு சந்­தேக நபர் தொடர்பில் முன்­னெ­டுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கை­க­ளையே நீதி­மன்றம் முன்­னெ­டுக்கும் என்றார்.

http://www.virakesari.lk/article/27103

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.