Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிக்க கட்சிகள் இணக்கம்

Featured Replies

கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிக்க கட்சிகள் இணக்கம்

 

தமிழ் மக்களுக்கென ஒரு சபை; தமிழ்,முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்தில் முடிவு

(நமது நிருபர்)

கல்­முனை மாந­கர சபை­யினை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரித்து அதில் ஒன்­றினை தமிழ் மக்­க­ளுக்­கான அல காக உரு­வாக்க தமிழ் மற்றும் முஸ்லிம் தலை­வர்­க­ளி­  டையே இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்­சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தலை­மையில் நேற்று இடம்­பெற்ற விசேட சந்­திப்­பி­­லேயே இவ்வாறு தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளது பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான  பேச்­சு­வார்த்தை நேற்று வெள்ளிக்­கி­ழமை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சில் இடம் பெற்­றது. அமைச்சர் பைஸர் முஸ்­தபா தலை­மையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தனுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், கோடீஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர் முஸ்லிம் கட்சிகளின் சார்பில் முஸ்லிம்காங்கிரஸின் உபதலைவரும் பிரதி அமைச்சருமான ஏ.எச்.எம்.ஹரீஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, அசாத்சாலி ஆகியோரும் பங்கேற்றனர். 

சந்திப்பையடுத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாத வகையில் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அனைத்து மக்­களும் ஒன்­றி­னைந்து சமத்­து­வ­மாக வாழ வேண்டும். இதற்­க­மைய கல்­முனை மாந­கர சபை நான்­காக பிரிக்­கப்­படும் .  

அவ்­வாறு பிரிக்­கப்­படும் பிர­தேச சபைகளில் ஒரு சபை தனி தமிழ் மக்­களின் கலாச்­சா­ரங்­களைப் பின்­பற்றும் வகையில் செயற்­படும். இதற்கு முஸ்லிம் தரப்­பி­ட­மி­ருந்து ஏக­ம­ன­தாக இணக்­கப்­பாடு கிடைக்­க­ப­பெற்­றது. இந்­நி­லையில் கல­முனை விவ­காரம் தீர்­வினை எட்­டி­யுள்­ளது என்று கூறினார்.

இந்த தீர்­மா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் முக­மாக எதிர்­வரும் 22 ஆம் திகதி அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் தலை­வர்கள் மீண்டும் சந்­தித்து கலந்­து­ரை­யாட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சந்­திப்பு எதிர் கட்சி தலை­வரின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இவ்­வி­டயம் தொடர்­பாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளுா­ராட்­சி­மன்ற அமைச்சர் பைசர் முஸ்­தபா குறிப்­பி­டு­கையில் , இழுத்­த­டிக்­கப்­பட்ட இரு சமூகம் சார்ந்த பிரச்­சி­னைக்கு தற்­போது தீர்வு காண முடிந்­துள்­ளது . தமிழ் மற்றும் முஸ்லிம் தலை­வர்கள் கலந்­து­ரை­யாடி இணக்­கப்­பா­டு­க­ளுக்கு வந்­துள்­ளனர். எனவே தான் பிரச்­சி­னைக்கு சுமு­க­மான தீர்­வினை பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. தமிழ் மக்­க­ளுக்கு தனி­யான பிர­தேச சபை வேண்டும் என்ற எதிர்­கட்சி தலை­வரின் கோரிக்­கைக்கு முஸ்லிம் பிர­தி­நி­திகள் ஏக மன­தாக இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டது. 

இன்று கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்­களில் மாற்றங்கள் ஏற்படுமாயின் கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிப்பதற்கு அனுமதி வழங்கமாட்டேன் . உள்ளுாராட்சி சபை தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் இம்முடிற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார் .  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-18#page-1

  • தொடங்கியவர்

கல்முனையை நான்காக பிரிக்க கொள்கையளவில் இணக்கம்

DSC_0093_17112017_KAA_CMY.jpg

* அடுத்த சுற்று பேச்சு 22 ஆம் திகதி
* தமிழ், முஸ்லிம் தலைமைகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சு

கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. சாய்ந்தமருது, கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கிடையில் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று (17) மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவ்வுடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்கப்படுமானால் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட நகர சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கிழக்கின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களைச் சேர்ந்த சகல மக்களதும் அபிலாஷைகள் உள்வாங்கப்பட்டு எந்தவொரு மக்களுக்கும் பாதிப்பு ஏற்டாத வகையில் இவ்விடயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதாக இருந்தால் அதற்கான எல்லைப் பிரதேசங்கள் எவ்வகையில் அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் தலைமையில் ஒரு குழுவும் இங்கு நியமிக்கப்பட்டது.

இவ்விடயம் குறித்து சகல கட்சிகளினதும் உடன்பாடுகள் பெறப்பட்டு இதற்கு ஒரு சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இம்மாதம் 22 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இப் பேச்சுவார்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பிரதேச சபைக்கான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடன்பட்டார்கள். பின்னர் நான் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரான போது சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். அப்போது கல்முனை மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். சாய்ந்தமருதுக்கான தனியானதொரு பிரதேச சபையைக் கோருகிறார்கள் என்று நான் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அறிவித்தேன். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதன் பின்னர் கல்முனை மக்கள் இங்கு வந்து கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார்கள். இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைப் பிரகாரம், தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குமிடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்குவதற்கு இங்கு உடன்பாடு எட்டப்பட்டது. அதற்கான எல்லைப்பிரதேசம் எவ்வகையில் அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

சகல கட்சிகளினதும் உடன்பாட்டை பெற்று இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இம்மாதம் 22ஆம் திகதி இதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு தீர்மானித்தள்ளோம். கிழக்கில் தமிழ் கட்சிகளினதும் ஏனைய கட்சிகளினதும் உடன்பாடு கிடைக்காவிட்டால் கல்முனை மாநகர சபையை பிரிப்பதற்கு உடன்பட மாட்டேன். கல்முனையை நான்காக பிரிப்பதாக இருந்தால் அங்கு தேசிய ஐக்கியம் நிலைநிறுத்தப்பட வேண்டும். அங்கு மக்கள் மத்தியில் தேசிய ஒற்றுமை சிதைவதாக இருந்தால் அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்பபோவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், தெரிவித்ததாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதிகளுக்கமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்ந்து நடைபெறும். இந்தப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்ப்பது அவசியம். மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். அந்த நோக்கத்துடன் இரண்டு பகுதிகளுக்கும் ஏற்புடையதொரு தீர்ப்பு ஏற்படுத்துவதற்காக நாங்கள் தொடர்ந்து விரைவில் கூடுவோம்.

விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எம்.எச் ஹரீஸ் தெரிவித்ததாவது,

தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் பிரதிநிதிகளும் கல்முனையை நான்காக பிரிப்பதென்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்தை இடம்பெறும் என முடிவெடுக்கப்பட்டது. தமிழ் பிரதிநிதிகள் ஐந்து பேரும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஐந்து பேரும் எதிர்வரும் வாரங்களில் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சி செய்கின்றோம். சகல தரப்பினர்களினதும் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்டு ஒரு இணக்கமான தொரு கொள்கை ரீதியான தீர்வாக 4 உள்ளூராட்சி சபைகளையும் கல்முனையில் உருவாக்குவதென்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறை சாத்தியமாக்குவதற்குரிய பேச்சுவார்தையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அசாத் சாலி தெரிவித்ததாவது,

இது சாய்ந்தமருது மக்களுக்கு நடந்த அநியாயம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விவகாரத்தை அரசியல்மயப்படுத்தியது. பிரதமரை அங்கு அழைத்துச்சென்று சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபையை தருவதாக நம்பிக்கையளித்தார்கள். என்னுடைய இயக்கமே இதனை வழங்கும் என பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கூறினார். கல்முனையை நான்காக பிரிப்பதாக இருந்தால் தமிழ் மக்களுக்கும் ஒரு சபையை தாருங்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

அதில் நாம் உடன்பட்டோம். இதற்கு கால அவகாசம் போடக்கூடாதென பிரதியமைச்சர் ஹரீஸ் கூறினார். கால அவகாசம் வழங்க வேண்டும் என நாம் கூறினோம். இங்கு யாருக்கும் பாதகமில்லாமல் சுமுகமான முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே அனைவரும் உள்ளார்கள். இதனை அரசியல்மயப்படுத்தாமல் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் இப்பிரச்சினை சென்றிருக்காது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்பகுதி மக்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி வைத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்ததாவது,

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கத்திற்கு எந்தவகையிலும் தமிழர்கள் எதிர்ப்பில்லை. அதேநேரம் ஏனைய பிரதேச சபைகள் அல்லாத நகர சபைகள் உருவாக்க வேண்டும் என்றால் தமிழர்களின் பிரதேசங்களை உள்ளடக்கியதான ஒரு நகர சபையை உருவாக்க வேண்டும். அதில் தமிழ் பிரதேசங்களையும் தமிழ் இடங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச சபையை உருவாக்கவே நாம் முன்மொழிந்துள்ளோம். இதை தவிர ஒரு சபை அல்ல. எத்தனை சபை உருவாக்கினாலும் எமக்கு பிரச்சினையல்ல.

நாம் ஒரு சபையையே வேண்டுகின்றோம். ஒரு நகர சபை. தமிழ் பிரதேசங்களை உள்ளிடக்கியதான ஒரு நகர சபை உருவாக்கப்பபடும் போதே தமிழர்களின் கலையும் கலாசாரமும் அதில் பாதுகாக்கப்படும். எமது உரிமைகளையும் அபிவிருத்தியையும் அதில் செய்ய முடியும். நாங்கள் எங்களுக்கொரு சபையை கேட்கவில்லை. ஆனால் நான்கு சபையாக முன்வைக்கப்படும்போதே நாம் எங்களுக்கொரு சபையை வேண்டுகின்றோம். எமது முன்மொழிவை ஏற்றுக்கொண்டார்கள். சாய்ந்தமருதை கொடுப்பதில் எமக்கு நூறு வீத உடன்பாடு உள்ளது. சாய்ந்தமருதில் 70 வீதம் முஸ்லிம், 30 வீதம் தமிழர்கள் உள்ளார்கள். சாய்ந்தமருது பிரதேச சபை வழங்குவதால் 60 வீதம் முஸ்லிம் 40 வீதம் தமிழர்களாக மாறிவிடுவார்கள் என்கின்ற காரணத்திற்கமையவே இதனை ஒரு அரசியல் நோக்கத்திற்கு பிரிக்கக் கூடாதென சொல்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா

கல்முனையை நான்கு பிரிவுகளாக பிரிப்பதற்கு நாம் உடன்பட்டோம். இப்பொழுது மிக குறுகிய காலத்திற்குள் நான்கை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை ஆராய்வார்கள். நான் அமைச்சராக இருந்த போது நான் பிரித்த அந்தக் குறிப்புக்களை பரிசீலிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. நான் இருந்த பொது அதனை வழங்குவதற்கான வர்த்தமானியை அனுப்பியிருந்த விடயத்தை இன்று அமைச்சரிடம் தெளிவாக பகிரங்கமாக கூறியுள்ளேன் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், கோடீஸ்வரன் உட்பட ஹென்ரி மகேந்திரன் ஆகியோர் தமிழ்த் தரப்பில் கலந்துகொண்டனர். பிரதியமைச்சர் ஹரீஸ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா எம்.பி, அஸாத் சாலி உட்பட முக்கியஸ்தர் பலர் முஸ்லிம் தரப்பில் கலந்துகொண்டனர்.

ஹெட்டி ரம்ஸி

http://www.thinakaran.lk/2017/11/18/உள்நாடு/21287/கல்முனையை-நான்காக-பிரிக்க-கொள்கையளவில்-இணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.