Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வதை எதிர்த்­துள்ளார் : மஹிந்த சம­ர­சிங்க

Featured Replies

வடக்கு கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வதை எதிர்த்­துள்ளார் : மஹிந்த சம­ர­சிங்க

 

வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார். இது ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் அம்­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் சி.விக்­கி­னேஸ்­வரன் தொடர்ந்து மக்­களை கொதிப்­ப­டையச் செய்யும் வகையில் கருத்­து­களை தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்றார். இந்­ நி­லையில் எப்­படி நாம் ஜனா­தி­ப­தி­யி­னதும் ஆளு­நரின் அதி­கா­ரத்தை குறைப்­பது என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க சபையில் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற  2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் ­திட்­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

வர­லாற்றில் முதற் ­த­ட­வை­யாக ஜனா­தி­பதி ஒருவர் தன்­னிடம் உள்ள அதி­யுச்ச அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கி­யமை இதுவே முதற்தடவையாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவே அவ்வாறு செய்துள்ளார். 

எனவே இது பாராட்­டத் ­தக்க விட­ய­மாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்து இனத்­த­வர்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்ட தலை­வ­ராவார். எனினும் அவர் தொடர்ந்து முப்­ப­டை­யிரை பாது­காப்­ப­தாக கூறி வரு­கின்றார்.  முப்­ப­டை­யினர் விட­யத்தில் அவ­ரது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்ளார். 

இதன்­படி  இலங்­கைக்கு சார்­பாக கருத்து தெரி­வித்த  பிரிட்­டனின் லோட் நெஸ்­பிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாராட்டி கடிதம் அனுப்­பி­யுள்ளார். இறுதி யுத்தத்தின் போது 40 ஆயிரம் பேர் கொல்­லப்­ப­ட­வில்லை. ஐந்­தா­யிரம் பேர­ள­வி­லேயே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­யுள்ளார். இதன்­படி அதற்கு ஜனா­தி­பதி கடிதம் மூலம் நன்றி தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு கடிதம் அனுப்­பு­மாறு யாரும் அவ­ருக்கு ஆலோ­சனை விடுக்­க­வில்லை. இந்த கடிதம் ஏற்­க­னவே அனுப்­பி­வைக்­கப்­பட்­டாலும் இன்று (நேற்று) பத்­தி­ரி­கையில் வெளி­யா­னது. 

எனினும் ஜனா­தி­பதி ஏனைய இனத்­த­வர்­களின் குறை­பா­டு­களை மறந்து செயற்­ப­ட­வில்லை. அனைத்து இனத்­த­வர்­க­ளுடன் சம­மாக செயற்­பட்டு வரு­கின்றார். அவர் இன­வாதி அல்ல. 

அத்­துடன் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக ஆணைக்­குழு அமைக்­கப்­பட்ட போது இது மோச­டியை மூடி­ம­றைக்கும் செயற்­பாடு என கூறினர். ஆனால் தற்­போது பல்­வேறு விட­யங்கள் ஒவ்­வொரு நாளும் வெளி­வந்­த­முள்­ளன. எனவே ஜனா­தி­ப­தியின்  செயற்­பா­டுகள் நீதி­யா­னதும் நேர்­மை­யா­ன­து­மாகும். அவர் நோபல் பரி­சுக்கும் பரிந்­து­ரைக்­கப்­பட்டார். இதற்­காக நாம் பெரு­மைப்­பட வேண்டும். 

இந்­நி­லையில் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார். இந்த விடயம் ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. அத்துடன் அம்மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மக்களை கொதிப்படைய செய்யும் வகையில் கருத்துகள் தெரிவிக்கும் நிலையில் எப்படி நாம் ஜனாதிபதியினதும் ஆளுனரதும் அதிகாரத்தை குறைப்பது? எனவே ஜனாதிபதி முறைமை தொடர்ந்து இருக்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்லது என்றார் .

http://www.virakesari.lk/article/27183

  • தொடங்கியவர்
 
இலங்­கைக் கொடியை ஏற்ற மறுத்ததால்அமைச்­ச­ராகப் பதவி வகிப்­ப­தற்குசர்­வேஸ்­வ­ரன் பொருத்­த­மற்­ற­வர்
 
 

இலங்­கைக் கொடியை ஏற்ற மறுத்ததால்அமைச்­ச­ராகப் பதவி வகிப்­ப­தற்குசர்­வேஸ்­வ­ரன் பொருத்­த­மற்­ற­வர்

இரா­தா­கி­ருஸ்­ணன் கூறு­கின்­றார்

வட மாகா­ணக் கல்­வி­ய­மைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் இலங்­கைத் தேசி­யக் கொடியை ஏற்ற மறுத்­த­தால் அவர் அமைச்­ச­ரா­கப் பதவி வகிப்­ப­தற்­குப் பொருத்­த­மற்­ற­வர்.இவ்­வாறு கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வீ.இரா­தா­கி­ருஸ்­ணன் தெரி­வித்­தார்.இது தொடர்­பாக நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது-:

நேற்­று­முன்­தி­னம் வவு­னி­யா­வில் இடம்­பெற்ற பாட­சாலை நிகழ்­வொன்­றில் கலந்து கொண்ட வட மாகா­ணக் கல்­வி­ய­மைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் இலங்­கைத் தேசி­யக் கொடியை ஏற்ற மறுத்­துள்­ளார்.

அவர் இலங்­கைத் தேசி­யக் கொடியை  அவ­ம­தித்­துள்­ளார்.
நாம் நாட்­டின் ஒரே மக்­கள் என்ற ரீதி­யில் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டு தேசி­யக் கொடிக்­கான மதிப்பை அனை­வ­ரும் வழங்க வேண்­டும்.தேசி­யக் கொடியை  ஏற்ற மறுத்து அதனை அவ­ம­தித்த அமைச்­சர் தொடர்ந்­தும் அந்­தப் பத­வி­யில் இருப்­ப­தற்குத் தகு­தி­யற்­ற­வர்”-­என்­றார்.

http://newuthayan.com/story/47980.html

  • தொடங்கியவர்

சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்தமைக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்புக்கூற வேண்டும்:-

sarveshwaran.jpg

வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்தமைக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

மாகாண அமைச்சர்கள் அரசியல் அமைப்பை ஏற்பதாக சத்தியபிரமாணம் செய்துள்ள நிலையில், வடமாகாண கல்வி அமைச்சரின் இந்த செயல் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

வடக்கு முதல்வர் தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு தொடர்பில் ஜெனிவா உள்ளிட்ட நாடுகளில் பேசினாலும் அவரின் கீழ் உள்ள அமைச்சர் ஒருவர் அந்த கொள்கைகளுக்கு எதிராக நடந்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தேசியக் கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தது.

http://globaltamilnews.net/archives/50370

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.