Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை வழங்காவிடின் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை

Featured Replies

அரசியல் தீர்வை வழங்காவிடின் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை

 

சரத் கோங்­கா­கே  கேசரிக்கு நாளிதழுக்கு விசேட  செவ்வி 

நேர்­காணல்: ரொபட் அன்­டனி

இவ்­வார எமது நேர்­காணல் பகு­தியில் நடிகர் விஜ­ய­கு­மா­ர­துங்­க­வுடன் இணைந்து இலங்கை மக்கள் கட்­சியை ஆரம்­பித்த மூத்த அர­சி­யல்­வா­தியும் பின்னர் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு விவகா­ரத்­தினால் அர­சியல் பாதை திசை­தி­ருப்­பப்­பட்டு தற்­போது ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர் மட்­டத்­தி­லி­ருக்­கின்­ற­வ­ரு­மான சரத் கோங்­கா­கேவை சந்­தித்தோம். இடை­ந­டுவில் சில காலம் சிரேஷ்ட இரா­ஜ­தந்­தி­ரி­யா­கவும் செயற்­பட்­டுள்ள சரத் கோங்­காகே தனது அர­சி­யலின் ஆரம்ப மட்­டத்­தி­லி­ருந்தே தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு மற்றும் அவர்­க­ளுக்­கான அர­சியல் அதி­கார உரி­மைகள் தொடர்பில் மிகவும் உறு­தி­யாக செயற்­பட்டு வந்­தி­ருக்­கிறார். எனவே தற்­போ­தைய புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் மற்றும் அர­சியல் தீர்வு நிலைமை என்­பன தொடர்பில் உரை­யா­டு­வ­தற்கு பொருத்­த­மா­னவர் என்ற அடிப்­ப­டையில் இவ்­வாரம் அவ­ருடன் நேர்­கா­ண­லுக்­காக அமர்ந்தேன்.  

கேள்வி: என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றீர்கள்?

பதில்:நான் ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­க­ராக செயற்­ப­டு­கிறேன். அத்­துடன் இலங்கை மன்றக் கல்­லூ­ரியின் தலை­வ­ரா­கவும் செயற்­ப­டு­கிறேன். இறு­தி­யாக நான் தென்­னா­பி­ரிக்­காவின் இலங்கை தூது­வ­ராக பணி­யாற்­றினேன். அதற்கு முன்னர் ஜேர்மன் மற்றும் சுவிட்­சர்­லாந்து நாட்டின் தூது­வ­ரா­கவும் பணி­யாற்­றி­யி­ருக்­கின்றேன். மங்­கள சம­ர­வீர வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக வந்­ததும் தூது­வர்­களை மீள் அழைத்தார். அப்­போது நான் தென்­னா­பி­ரிக்­காவில் மூன்று மாதங்­க­ளாக பணி­யாற்­றிய நிலையில் நாடு திரும்­பினேன். அவ்­வாறு தூது­வர்கள் மீள் அழைக்­கப்­பட்­டமை ஒரு சிறந்த முடி­வல்ல. 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் நான் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு உதவி செய்­ய­வில்லை. ஆனால் நான் தேர்­தலில் மஹிந்­த­வுக்­காக பணி­யாற்­றி­ய­தாக கருதி என்­னையும் மீள் அழைத்து விட்­டனர். எனினும் என்னைப் பற்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிற­சே­ன­வுக்கு தெரியும். எனது அர­சியல் பண்­புகள் குறித்து அவ­ருக்கு தெரியும். அத­ன­டிப்­ப­டையில் அவர் தந்த பணியை தற்­போது செய்து கொண்­டி­ருக்­கின்றேன்.

கேள்வி:நீங்கள் மிகப் பெரிய அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்த ஒருவர். மித­வாத தலைவர் என்று பேசப்­பட்­டவர். அவ்­வாறு அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்த உங்­க­ளுக்கு இன்­றி­ருக்­கின்ற இந்த இடம் சரி­யா­னதா?

பதில்:எனது அர­சியல் எம்.பி. பத­வி­யுடன் முடிந்து விட்­டது. அதன் பின்னர் வேறு மட்­டங்­களில் பல அர்ப்­ப­ணிப்­புக்­களை செய்­துள்ளேன். அர­சியல் அர்ப்­ப­ணிப்­புக்­க­ளையும் செய்­தி­ருக்­கின்றேன். ஆனால் சந்­தர்ப்­ப­வாத அர­சியல் எதுவும் செய்­ய­வில்லை. சந்­தர்ப்­ப­வாத அர­சியல் செய்­தி­ருந்தால் அமைச்­ச­ர­வைக்கு போயி­ருக்­கலாம். எனினும் எனது கொள்கை கார­ண­மாக அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­த­வில்லை. ஆனால் அவ்­வாறு சந்­தர்ப்­ப­வாத அர­சியல் செய்­த­வர்கள் இன்று அமைச்­ச­ர­வை­யிலும் இருக்­கின்­றனர்.

கேள்வி:அதனை எவ்­வா­றான சந்­ தர்ப்பம் என்று கூற முடி­யுமா?

பதில்:2000 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்வுப் பொதி அந்த சந்­தர்ப்­பத்தை உரு­வாக்­கி­யது. அந்த தீர்வுப் பொதியை ஐ.தே.க. பாரா­ளு­மன்­றத்தில் எரித்­த­போது நான் அதனை ஐ.தே.க.வின் பக்­கத்­தி­லி­ருந்து ஆத­ரித்தேன். தீயிட்டுக் கொழுத்­தி­ய­மையை நான் மட்­டுமே எதிர்த்தேன். ஒசி அபே குண­சே­கர இறந்த பின்னர் நான் மக்கள் கட்­சியின் தலை­வ­ராகி பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கொண்டேன். அந்த வகை­யி­லேயே ஐ.தே.க.வின் தேசியப் பட்­டியல் எம்.பி.யாக இருந்தேன். அப்­போ­துதான் 2000 ஆம் ஆண்டு தீர்வுப் பொதி திட்டம் வந்­தது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­வுடன் எனக்கு பாரிய பிரச்­சி­னைகள் இருந்­தன. எனினும் தேசியப் பிரச்­சினை என்று வரும்­போது நான் அவற்றை கவ­னத்தில் எடுக்­காமல் தீர்வுப் பொதிக்கு ஆத­ரவு வழங்க தயா­ராக இருந்தேன். அதா­வது புலி­களை அர­சாங்கம் எதிர்­கொள்­கின்ற அதே­வேளை தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வுத் திட்­டத்தை முன்­வைக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நாங்கள் இருந்தோம்.

கேள்வி:உண்­மையில் 2000 ஆம் ஆண்டு தீர்வுப் பொதி­யா­னது எந்த ஆட்­சி­மு­றையை கொண்­டது?

பதில்:1997 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்வுத் திட்டம் பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் என்ற முறையை கொண்­டது. ஆனால் 2000 ஆம் ஆண்டு வந்த பொதி­யா­னது பிரிக்­கப்­பட முடி­யாத இலங்கை என்ற விட­யத்­தை­யே காட்­டி­யது. ஆனால் இறு­தியில் இந்த பொதிக்கு ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்ப்பு வெளியிட்­டது. முதலில் ஆத­ரவு தெரி­விப்­ப­தாக கூறிக் கொண்­டி­ருந்த ஐ.தே.க. பின்னர் எதிர்த்­தது. எதிர்த்­தது மட்­டு­மன்றி பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூ­லத்தை எரித்­தது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் இதனை எதிர்த்­த­தற்கு நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்புÂ கேட்க வேண்டும். 2000 ஆம் ஆண்டு இந்த தீர்­வுக்கு இணங்­கி­யி­ருந்தால் இந்­த­ளவு பாரி­ய­ளவு இரத்த ஆறு ஓடி­யி­ருக்­காது.

எனவே நான் இந்த விட­யத்தில் ஐ.தே.க. மீது குறை காணு­கிறேன். இந்த சட்­ட­மூ­லத்­திற்கு ஐ.தே.க.வுக்குள் நடத்­தப்­பட்ட வாக்­க­ளிப்பில் என்­னுடன் ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தாக மேர்வின் சில்­வாவும் ஹரேந்­திர கொர­யாவும் கூறி­னார்கள். ஆனால் திடீ­ரென மேர்வின் கட்சி தாவி விட்டார். ஆனால் இறு­தியில் ஹரேந்­திர கொரயாவும் இதனை எதிர்த்தார். ஐ.தே.க.வுக்குள் ஆத­ர­வாக நான் மட்­டுமே வாக்­க­ளித்தேன். இந்த நிலையில் சந்­தி­ரிகா என்னை தனது பக்கம் வரு­மாறு கூறினார். ஆனால் நான் ஐ.தே.க.வின் தேசியப் பட்­டியல் எம்.பி. என்­பதால் அந்த முடிவை எடுக்­க­வில்லை. அன்று கட்சி மாறி பத­வியைப் பெரும் தேவை எனக்கு இருக்­க­வில்லை. மாறாக இந்த பொதியை கொண்­டு­வரும் தேவையே காணப்­பட்­டது. அன்று கட்சி மாறி­யி­ருந்தால் எனக்கு அமைச்சுப் பதவி கிடைத்­தி­ருக்கும்.

கேள்வி:ஏன் இந்த பொதியை ஐ.தே.க. எதிர்த்­தது?

பதில்: இந்த பொதியில் இருந்த ஒரு ஏற்­பாடு கார­ண­மா­கவே ஐ.தே.க. எதிர்த்­தது. அதா­வது இந்த பொதி முறை­மையின் கீழ் 2005 ஆம் ஆண்டு வரை சந்­தி­ரி­காவே ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ரா­கவும் இருப்பார் என்ற ஒரு ஏற்­பாடு இதில் முன்­வைக்­கப்­பட்­டது. இதனை ஐ.தே.க. எதிர்த்­தது. அப்­ப­டி­யாயின் இந்த ஏற்­பாட்டை அகற்றி விடு­மாறு ஐக்­கிய தேசியக் கட்சி கோரி­யி­ருக்­கலாம். ஒரு திருத்­தத்தை முன்­வைத்­தி­ருக்­கலாம். மறு­பக்கம் சந்­தி­ரி­காவும் இந்த ஏற்­பாட்டை திருத்­து­வது தொடர்பில் ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வந்­தி­ருக்­கலாம். என்னைப் பொறுத்­த­வ­ரை­யிலும் ஒரு­வரே ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் பத­வி­யி­லி­ருப்­பது ஏற்றுக் கொள்ள முடி­யா­த­துதான். ஆனால் அது தற்­கா­லி­க­மான ஒரு ஏற்­பா­டா­கவே இருந்­தது. சந்­தி­ரி­காவின் எஞ்­சிய பதவிக் காலத்­திற்­கா­கவே இந்த ஏற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

ஆனால் இந்த விட­யத்தில் இரண்டு தரப்­பி­னரும் விட்டுக் கொடுப்­பிற்கு செல்­ல­வில்லை. சட்­ட­மூ­லத்தை தீயிட்டுக் கொழுத்­தி­யதே நடந்­த­தது. 2000 ஆம் ஆண்டு பொதி அன்று ஐ.தே.க.வின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தால் ரணில் விக்­ர­ம­சிங்க 2005 ஆம் ஆண்டு இந்த நாட்டின் தலை­வ­ராக வந்­தி­ருப்பார். ஆனால் அன்று ஐ.தே.க. விட்ட தவறு கார­ண­மாக ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு இன்­று­வரை அந்த சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை. தற்­போ­தைய அர­சியல் போக்கை பார்க்­கும்­போது எதிர்­கா­லத்­திம் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் நாட்டின் தலை­வ­ராக வரும் சாத்­தியம் உள்­ளதா என்­பது தெரி­யாது. கடந்த தேர்­தல்­களில் மாது­லு­வாவ சோபித தேரரை ஆத­ரித்த தமிழ் கட்­சிகள் மற்றும் சரத் பொன்­சே­கா­வுக்கு வாக்­க­ளித்த தமிழ் கட்­சிகள் ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வதை விரும்­பவில்லை. ரணில் விக்­ர­ம­சிங்க பொது வேட்­பா­ள­ராக வரு­வதை வடக்கு தமிழ் கட்­சிகள் கூட விரும்­பவில்லை.

கேள்வி:தற்­போ­தைய அர­சியல் சூழலில் தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வை காண்­ப­தற்­கான சாத்­தியம் எவ்­வா­றி­ருக்­கி­றது?

பதில்:தற்­போ­தைய சந்­த­ர்ப் பமும் எம்மை விட்டு தூரப் போவ­தா­கவே கரு­து­கிறேன்.

கேள்வி:சரி­யாக தெளிவு­ப­டுத்­துங்கள்?

பதில்:நாட்டில் பாரிய இன­வாத பிரச்­சி­னை­யொன்று ஏற்­பட்­டுள்­ளது. 13 ஆவது திருத்தச் சட்­டத்­தையும் மறு­பக்கம் திருப்ப வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிற்கு பலர் வந்­துள்­ளனர். உதா­ர­ண­மாக அண்­மையில் எண்ணெய் நெருக்­கடி ஏற்­பட்­ட ­போது அதற்கு இந்­தி­யாவை குற்றம் சாட்­டினர். அதா­வது இத­னூ­டாக இந்­திய எதிர்ப்பு போக்கு நாட்டில் மேலோங்­கி­யதை நாம் கண்டோம். இந்­தி­யா­வுக்கும் விருப்­ப­மில்லை. சீனா­வுக்கும் விருப்­ப­மில்லை. அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­க­ளுக்கும் விருப்­ப­மில்லை. அப்­ப­டி­யென்றால் நாம் யாரை விரும்­பு­கின்றோம்? வட கொரி­யாவை விரும்­பு­வதா? இந்­தியா எமது நெருங்­கிய நட்­பு­நாடு. ஆனால் இந்­தி­யாவும் எமது நாட்டின் அர­சியல் பிரச்­சி­னையில் அழுத்தம் பிர­யோ­கிக்கும் எல்­லையை புரிந்து கொள்ள வேண்டும். அதனை குறைக்க முயற்­சிக்க வேண்டும். ஆனால் தேசிய இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் அழுத்­தத்தை நாம் தவிர்க்க முடி­யாது. இந் நிலையில் தற்­போது இந்த இன­வாத போக்கு அதி­க­ரித்­துள்­ளது. அத­னால்தான் தற்­போ­தைய சந்­தர்ப்­பமும் கைந­ழுவி செல்­வ­தாக நான் கூறு­கிறேன்.

ஆதி­காலம் தொட்டு தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் இந்த நாட்டில் வாழ்­கின்­றனர். யார் முதலில் வந்­தது என்­பதை பற்றி பேசு­வதில் அர்த்­த­மில்லை. எனவே தமிழ் மக்­க­ளுக்­கான அதி­கா­ரத்தை வழங்க வேண்­டி­யது அவ­சியம். ஆனால் அதனை வடக்கு, கிழக்­கிற்கு மட்டும் வழங்­கினால் சிக்­க­லா­கி­விடும். ஏனைய பகு­தி­க­ளுக்கும் அதனை வழங்கி விடு­வது சரி­யாக இருக்கும். 2000 ஆம் ஆண்டு இந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­தது. அதற்கு முன்னர் 1992 ஆம் ஆண்டு மங்­கள முன­சிங்க அறிக்கை வெளிவந்­தது. அதா­வது அப்­போ­தைய ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ சுதந்­திரக் கட்சி எம்.பி. யான மங்­கள முன­சிங்­கவை கொண்டு தயா­ரித்த அறிக்­கை­யாகும். அதில் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஆட்சி முறை மற்றும் ஒத்­தி­சைவுப் பட்­டி­யலை நீக்கும் விடயம் என்­பன தொடர்பில் இணக்­கப்­பாட்­டிற்கு வந்­தன. தினேஸ் குண­வர்த்­த­னவை தவிர்த்து அனை­வரும் அதனை விரும்­பினர். முஸ்லிம் கட்­சி­களும் இதில் இணைந்து கொண்­டன. அந்த அறிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீர்வை நோக்கிப் பய­ணிப்­பது இன்­றைய நிலை­மை­யிலும் பொருத்­த­மாக இருக்கும் என கரு­து­கிறேன்.

கேள்வி:அதற்குப் பின்னர் சந்­தர்ப்பம் கிடைக்­க­ வில்­லையா?

பதில்:என்னைப் பொறுத்­த­வ­ரையில் மிகச் சிறந்த சந்­தர்ப்­ப­மாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் மஹிந்­த­வுக்கு கிடைத்த சந்­தர்ப்­பத்­தையே கூறுவேன். மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு நான் உதவி செய்தேன். நான் அர­சியல் மேடையில் ஏறி அவ­ருக்கு உதவி செய்­ய­வில்லை. ஆனால் நான் எவ்­வாறு உதவி செய்தேன் என்­பது அவ­ருக்கு தெரியும். சில­வேளை நான் இல்­லா­விடின் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ஜனா­தி­ப­தி­யாக கூட வந்­தி­ருக்­க­மாட்டார்.

இந்­நி­லையில் மஹிந்­தவும் இந்தப் பிரச்­சி­னையை பேச்­சு­மூலம் தீர்க்க முற்­பட்டார். ஆனால் புலிகள் முன்­வ­ர­வில்லை. எனவே யுத்தம் நடத்­தப்­பட்­டது. அந்த யுத்­தத்தில் பாரிய படு­கொ­லைகள் இடம்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது. அதன் உண்மைத் தன்மை எமக்குத் தெரி­யாது. இதன் பின்­ன­ணி­யில்­அ­ர­சியல் கார­ணி­களும் இருக்­கலாம். ஆனால் யுத்தம் முடிந்­ததன் பின்னர் இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு சிறந்த தீர்வை வழங்­கு­வ­தற்கு மஹிந்­த­வுக்கு அரு­மை­யான சந்­தர்ப்பம் காணப்­பட்­டது. காரணம் அன்று அவர் ஒரு தீர்வை முன்­வைத்­தி­ருந்தால் நாட்டு மக்கள் அதனை எதிர்த்­தி­ருக்க மாட்­டார்கள். யுத்­தத்தை முடித்த தலைவர் என்று அவர் மீது நம்­பிக்கை வைத்­தி­ருப்­பார்கள்.

ஆனால் அவர் அதனை செய்­ய­வில்லை. இதன்­மூலம் ஒரு பார­தூ­ர­மான சந்­தர்ப்­பத்தை நாடு இழந்­தது. இதற்கு ஒரு காரணம் இருக்­கி­றது. மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்­தின்­போதும் யுத்தம் முடிந்­ததும். 13 பிளஸ் வழங்­கு­வ­தாக இந்­தி­யா­வுக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் ஐ.நா.வுக்கும் கூறினார். ஆனால் 2009 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் அவர் அந்த அர்ப்­ப­ணிப்­பி­லி­ருந்து வில­கினார். காரணம் அப்­போது அவ­ருக்கு தொடர்ந்து ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருப்­ப­தற்கு ஏது­வான வகையில் 18 ஆவது திருத்தச் சட்­டத்தை கொண்­டு­வ­ர­வேண்­டிய தேவை காணப்­பட்­டது. 18 ஐ கொண்­டு­வர வேண்­டி­யதன் தேவை கார­ண­மாக அவர் 13 பிளஸ் மற்றும் தீர்­வுக்­கான சந்­தர்ப்பம் ஆகி­ய­வற்றை கைவிட்டார்.

கேள்வி: சரி இப்­போது என்ன செய்ய வேண்டும்?

பதில்:தற்­போது உண்­மை­யி­லேயே இந்த பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு தடை­யாக இருப்­பது அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­ட­மாகும். நாட்டில் தற்­போது 19 ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக இரண்டு தலை­வர்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளனர். எப்­போ­தா­வது வரு­கின்ற புதிய அர­சாங்கம் 19 ஆவது திருத்த சட்­டத்தை நீக்­கக்­கூட முயற்­சிக்கும். அந்­த­ள­வுக்கு இதில் பிரச்­சி­னைகள் உள்­ளன. 19 ஆவது திருத்தச் சட்­டத்தை நாம் படிக்க வேண்டும். முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றி­னூ­டாக செய்ய வேண்­டிய விடயம் இந்த திருத்­தத்­தி­னூ­டாக செய்­யப்­பட்­டுள்­ளது.

 மாறாக 19 ஆவது திருத்­தத்­தி­னூ­டாக 18 ஆவது திருத்­தத்தை நீக்­கு­வதை மட்­டுமே செய்­தி­ருக்க வேண்டும். அப்­படி செய்­தி­ருந்தால் 17 ஆவது திருத்தச் சட்டம் இயல்­பா­கவே நடை­மு­றைக்கு வந்­தி­ருக்கும். ஆனால் அதற்கு மாறாக ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் அதி­கா­ரங்­களை வழங்­கு­கின்ற ஒரு ஏற்­பாட்டை கொண்டு வந்­தி­ருக்­கின்­றனர். இதன் கார­ண­மாக ஜனா­தி­ப­தி­யினால் ஒரு அமைச்­ச­ரை­க் கூட நீக்­கி­விட முடி­யாது. பிர­த­மரை கேட்டே செய்ய வேண்டும். தற்­போது இருக்­கின்ற ஜனா­தி­ப­திக்கு மட்டும் மகா­வலி, சுற்­றாடல் மற்றும் பாது­காப்பு அமைச்சை வைத்துக் கொள்ள முடியும். அடுத்த ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன வந்­தால்­கூட அவரால் பாது­காப்பு அமைச்சை வைத்துக் கொள்ள முடி­யாது. அமைச்­ச­ர­வையை நிய­மிக்­கவும் முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தை கலைக்­கவும் முடி­யாது.

கேள்வி:சரி. 19 ஆவது திருத்­தச்­சட்டம் தேசியபிரச்­ சினை தீர்­வுக்கு எவ்­வாறு பாத­க­மாக அமையும்?

பதில்:19 ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக எந்த தரப்­புக்கும் முன் செல்ல முடி­யாத நிலை ஏற்­படும். இரண்டு அதி­கார மையங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இது தீர்வு விட­யத்தில் பாரிய சிக்­கலைக் கொடுக்கும். ஒன்று ஜனா­தி­பதி முறைமை இருக்க வேண்டும். அல்­லது அமைச்­ச­ரவை முறைமை இருக்க வேண்டும். இங்கு இரண்டு அதி­கா­ரங்­களும் காணப்­ப­டு­கின்­றன. தற்­போது நிறை­வேற்று அதி­கா­ரங்கள் பிர­த­ம­ருக்கு பகி­ரப்­பட்­டுள்­ளன. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்க முயற்­சிக்­கின்ற பின்­ன­ணியில் 19 ஆவது திருத்தச் சட்டம் ஏன் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அந்த நெருக்­க­டியை ஐ.தே.க.வே உரு­வாக்­கி­யது. இந்த நாட்டில் ஒற்­றை­யாட்சி ஐக்­கிய என்று எது­வுமே இருக்­க­வில்லை. ஜயம்­பதி விக்­ர­ம­ரட்­ணவின் குரு­வான கொல்வின் ஆர் டி சில்­வாவே 1972 ஆம் ஆண்டு அர­சியல் யாப்பில் இதனைக் கொண்டு வந்தார். அது­வரை ஒற்­றை­யாட்சி என்று எதுவும் இருக்­க­வில்லை. எனவே தற்­போது பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு இரண்டு அதி­கார மையங்­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ள 19 ஆவது திருத்தச் சட்­டமே தடை­யாக இருக்­கின்­றது.

கேள்வி:அப்­ப­டி­யாயின் அடுத்து என்ன நடக்கும் என்று கரு­து­கி­றீர்கள்?

பதில்:நான் எதுவும் கூற முடி­யாது. ஆனால் அர­சியல் ரீதியில் எதிர்­கா­லத்தில் பூகம்பம் வெடிக்­கலாம். எனினும் நாம் இவ்­வாறே பய­ணிக்க முடி­யாது. இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வை கண்டே ஆக வேண்டும். தற்­போது எரி­பொருள் பிரச்­சி­னையால் எமது நாடு ஸ்திர­மற்ற நிலை­மைக்கு சென்­றதை நாம் கண்டோம். சர்­வ­தேசம் தொடர்ந்து அழுத்தம் பிர­யோ­கித்தால் நாம் என்ன செய்­வது? உல­கத்­திற்குள் தான் நாங்கள் இருக்­கின்றோம் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. எனவே ஒரு நாட்­டுக்குள் நாம் அனை­வரும் சமத்­து­வத்­துடன் வாழ்­வ­தற்­கான கட்­ட­மைப்பு மாற்­றத்தை செய்து கொள்­வது அவ­சி­ய­மாகும். இதன்­போது ஜனா­தி­பதி முறைமை இருக்­குமா இல்­லையா என்­பது முக்­கி­ய­மல்ல. வடக்கைப் பொறுத்­த­வ­ரையில் ஜனா­தி­பதி முறைமை என்­பது முக்­கி­ய­மன விட­ய­மல்ல.

வடக்கு மக்கள் ஒரு தேசிய இன­மாக அச்­சமும் சந்­தே­க­மு­மின்றி வாழ்­வ­தற்­கான உரி­மையை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம். தமது மொழி, கலா­சாரம் மற்றும் அடை­யாளம் என்­ப­வற்றை பாது­காத்துக் கொள்ளும் வகையில் அவர்­க­ளது உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­கா­கத்தான் அவர்கள் போரா­டு­கின்­றனர். தமிர்­க­ளுக்கு என்ன பிரச்­சினை இருக்­கின்­றது என்று சிலர் கேட்­கின்­றனர். சில உரி­மைகள் புத்­த­கத்தில் மட்­டுமே வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளன.

தமிழர் ஒரு­வரால் இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வர முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. பிர­தம நீதி­ய­ரசர் பதவி, பொலிஸ் மா அதிபர் பதவி மற்றும் கடற்­படைத் தள­பதி பதவி என்­ப­ன­வற்றை கொடுத்து பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது. இது 70 வரு­ட­காலப் பிரச்­சி­னை­யாகும். வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணாமல் எமது நாடு முன்­னேற முடி­யாது. இலங்­கையில் தேசியப் பிரச்­சினை இருக்கும் வரை இலங்­கைக்கு எதிர்­காலம் இல்லை என்று சிங்­கப்­பூரின் முன்னாள் பிர­தமர் லீகு­வான்யூ கூறி­யி­ருந்தார். அனைத்து தரப்­பி­னரும் இதில் விட்டுக் கொடுப்­புடன் செயற்­பட வேண்டும். வடக்கு முதல்வர் விக்­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டுகள் தொடர்பில் பாரிய விமர்­ச­னங்கள் உள்­ளன. ஆனால் ஏனை­ய­வர்­களை போன்று நான் பாரிய விமர்­ச­னத்தை அவர் மீது முன்­வைக்க விரும்­ப­வில்லை. அதிகம் கேட்­டால்தான் குறை­வா­க­வா­வது கிடைக்கும் என விக்­னேஸ்­வரன் கரு­து­கிறார். அது பொது­வான இயல்பு. ஆனால் சம்­பந்தன் வய­தா­னவர் என்றும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் கூறு­வ­தாக தெரி­கின்­றது. அப்­ப­டி­யாயின் வடக்கு முதல்­வ­ருக்கு எத்­தனை வயது என்­ப­தனை சிந்­திக்­க­வேண்டும்.

சம்­பந்தன் போன்ற தலை­வர்­கள் தான் தமிழ் மக்கள் மத்­தி­யி­லி­ருக்­கின்ற இறுதி மித­வாத தலை­வர்­க­ளாவர். அவர்­க­ளுக்குப் பின் வரு­ப­வர்­க­ளுடன் எது­வுமே செய்ய முடி­யாது.

கேள்வி: உங்­க­ளது யோச­னைதான் என்ன?

பதில்:13 ஆவது திருத்­தத்தில் இருக்­கின்ற ஆளு­நரின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட வேண்டும். வலது கையில் அதி­கா­ரங்­களை கொடுத்து இடது கையால் மீளப் பெற்றுக் கொண்­டுள்­ளனர். முத­ல­மைச்­சரை மக்கள் தெரிவு செய்­கின்­றனர். ஆளு­நரை ஜனா­தி­பதி தெரிவு செய்­கின்றார். இங்கு முரண்­பாடு ஏற்­ப­டு­வது இயல்­பா­கின்­றது. இரண்டு பேருக்கும் இடையில் அதி­கா­ரங்கள் முரண்­ப­டு­கின்­றன. வடக்கில் ஜி.ஏ சந்­தி­ர­சிறி ஆளு­ந­ராக இருந்­த­போது இதனை நாங்கள் கண்டோம்.

கேள்வி: பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள்?

பதில்:மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும். அதா­வது ஒரு அள­வுக்கு இந்த அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும். அவர்கள் தமது பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கா­கவே காணி அதி­கா­ரங்­களை கேட்­கின்­றனர். அவற்றை ஒரு வரை­ய­றை­யுடன் கொடுப்­பதில் தவ­றில்லை. துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட முடி­யாத வகையில் இந்த அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும். அதே­போன்று பொலிஸ் அதி­கா­ரமும் ஒரு வரை­ய­றைக்குள் வழங்­கப்­பட வேண்டும். இவற்றை வழங்­கா­விடின் இவற்­றை­விட அதிகமான அதிகாரங்களை வழங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

கேள்வி:இந்த எச்சரிக்கை யாருக்கு?

பதில்:இந்த நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் நான் இதனை கூறுகின்றேன். யுத்தம் இல்லாததன் காரணமாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும்.

கேள்வி நீங்கள் விஜயகுமாரதுங்கவுடன் சேர்ந்து புலிகளை சந்திக்க வன்னிக்கு சென்றீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது.

பதில்:  நாங்கள் 1986 ஆம் ஆண்டு புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க சென்றோம். இரண்டு சிப்பாய்கள் மீட்கவே பாதுகாக்கவே சென்றோம். யாரும் போகாத காலத்தில் நாங்கள் அங்கு போனோம். நாங்கள் பிரபாகரனை சந்திக்கவில்லை. கிட்டுவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரபாகரன் தமிழ் மக்களை ஒரு இக்கட்டான இடத்தில் கொண்டு வைத்து விட்டு சென்றுவிட்டார். அவர் தமிழர்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அவர் ஒரு கௌரவமான தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அவரும் அழிந்து தமிழர்களின் எதிர்காலம் மற்றும் எதிர்பார்ப்பை அழித்துவிட்டார். அயர்லாந்தில் போராட்டக்காரர்கள் சரியான இடத்தில் போராட்டத்தினை நிறுத்தினர்.

கேள்வி புலிகள் எங்கு போராட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்?

பதில்:  புலிகள் சரியான ஒரு இடத்தில் நிறுத்தியிருக்கலாம். 2000 ஆம் ஆண்டு நிறுத்தியிருக்கலாம். 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையுடன் போராட்டத்தை நிறுத்தி வெளியில் வந்திருக்கலாம். ஆனால் ராஜீவ் காந்தி கொலை காரணமாக பிரபாகரனால் வெ ளியில் வர முடியாத நிலைமை காணப்பட்டது. அதுதான் புலிகள் செய்த பாரிய தவறாகும். ராஜீவ் காந்தியை கொன்றமை இந்தியாவிலுள்ள தமிழர்களால் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாகும். இலங்கையில் பிரேமதாஸ காமினி திஸாநாயக்கவை புலிகள் கொன்றமை மறக்கப்படலாம். ஆனால் இந்தியப் பிரதமரை கொலை செய்தததை இந்தியர்கள் மறக்கமாட்டார்கள். இந்த யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியாவே எமக்கு பாரிய உதவிகளை வழங்கியது.

கேள்வி : நீங்கள் விஜயகுமாரதுங்கவுடன் சேர்ந்து புலிகளை சந்திக்க வன்னிக்கு சென்றீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது.

பதில் : நாங்கள் 1986 ஆம் ஆண்டு புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க சென்றோம். இரண்டு சிப்பாய்களை மீட்கவே பாதுகாக்கவே சென்றோம். யாரும் போகாத காலத்தில் நாங்கள் அங்கு போனோம். நாங்கள் பிரபாகரனை சந்திக்கவில்லை. கிட்டுவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரபாகரன் தமிழ் மக்களை ஒரு இக்கட்டான இடத்தில் கொண்டு வைத்து விட்டு சென்றுவிட்டார். அவர் தமிழர்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அவர் ஒரு கௌரவமான தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அவரும் அழிந்து தமிழர்களின் எதிர்காலம் மற்றும் எதிர்பார்ப்பை அழித்துவிட்டார். அயர்லாந்தில் போராட்டக்காரர்கள் சரியான இடத்தில் போராட்டத்தினை நிறுத்தினர்.

கேள்வி : புலிகள் எங்கு போராட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்?

பதில் : புலிகள் சரியான ஒரு இடத்தில் நிறுத்தியிருக்கலாம். 2000 ஆம் ஆண்டு நிறுத்தியிருக்கலாம். 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையுடன் போராட்டத்தை நிறுத்தி வெளியில் வந்திருக்கலாம். ஆனால் ராஜீவ் காந்தி கொலை காரணமாக பிரபாக ரனால் வெளியில் வர முடியாத நிலைமை காணப்பட்டது. அதுதான் புலிகள் செய்த பாரிய தவறு. ராஜீவ் காந்தியை கொன்றமை இந்தியாவிலுள்ள தமிழர்களால் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாகும். இலங்கையில் பிரேமதாஸ காமினி திஸாநா யக்கவை புலிகள் கொன்றமை மறக்கப் படலாம். ஆனால் இந்தியப் பிரதமரை கொலை செய்ததை இந்தியர்கள் மறக்கமாட்டார்கள். இந்த யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியாவே எமக்கு பாரிய உதவிகளை வழங்கியது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-11-18#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.