Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சட்டம் ஓழுங்கு மீறல் தொடர்பில் விசேட அவதானம்

Featured Replies

யாழ் சட்டம் ஓழுங்கு மீறல் தொடர்பில் விசேட அவதானம்

 

சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கேசரிக்கு விசேட செவ்வி

நேர்காணல்: எம்.எம்.மின்ஹாஜ்

ஆவா­குழு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­துள்­ளது. எனினும் சட்டம் ஒழுங்கு விட­யத்தில் யாழ்ப்­பா­ண த்தை முன்­னேற்ற வேண்­டி­யுள்­ளது. இளை­ஞர்கள் தமது தைரி­யத்தை காண்­பிப்­ப­தற்­காக சில செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தனர். எனினும் அது எமக்கு தொந்­த­ர­வாக மாற்றம் கண்­டது. எனினும் தற்­போது பிரச்­சி­னைகள் குறை­வாக உள்­ளன. எனினும் யாழ்ப்­பா­ணம் தொடர்பில் அதிக அவ தானம் தேவை­யாகும் என சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார். அவ­ரது செவ்­வியின் முழு வடிவம் கீழ்­வ­ரு­மாறு, 

 

கேள்வி:- தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சு உரு­வாக்­கப்­பட்ட நோக்கம் என்ன?

பதில்:தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சை எடுத்து கொண்டால் சாதா­ரண அபி­வி­ருத்தி திட்­டங்­களை மையமாக கொண்டோ அல்­லது தேர்­தலை இலக்கு வைத்தோ ஸ்தாபிக்­க­வில்லை. தென் மாகாண வளங்­களை எப்­படி பிர­யோகம் செய்­வது?. எப்படி விருத்தி செய்­வது என்ற விட­யத்­திற்கே நாம் முன்­னு­ரிமை வழங்­கு­கின்றோம். ஏற்­க­னவேயுள்ள சம்­பி­ர­தாய கரை­யோர சுற்­றுலா அபி­வி­ருத்­தியை இலக்­காக கொண்டு மாத்­திரம் செயற்­ப­ட­வில்லை. அதனைவைத்துக் கொண்டு மாத்­திரம் தெற்கு அபி­வி­ருத்­தியை கொண்டு செல்ல முடி­யாது. சுற்­றுலா அபி­வி­ருத்தி, கைத்­தொழில் தொழிற்­சா­லை­களை எப்­படி முன்­னேற்­று­வது என்பது தொடர்பில் நாம் இலக்­குடன் செயற்­பட்டு வரு­கின்றோம். இதன்­படி அம்­பாந்­தோட்­டையில் கைத்­தொழில் வல­ய­மொன்றை ஆரம்­பிக்­க­வுள்ளோம். இந்த வல­யத்தில் அனைத்து வச­தி­களும் இருக்கும். இதன் ஊடாக புதிய பாரிய நக­ர­மொன்று உரு­வாகும்.விவ­சா­யத்­தையும் விருத்தி செய்­ய­வுள்ளோம். அம்­பாந்­தோட்டை துறை­முகம், கைத்­தொழில் வலயம் ஆகி­யன தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். பெந்தோட்டை தொடக்கம் அம்­பாந்­தோட்டை வரை சுற்­று­லாத்துறையை மைய­மாக கொண்ட அபி­வி­ருத்தி திட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

கேள்வி: இந்த விசேட அமைச்சின் மூல­மாக நீங்கள் முன்­னெ­டுக்­க­வுள்ள அபி­வி­ருத்தி திட்­டங் கள் என்ன? 

பதில்:பெந்தோட்டை முதல் அம்­பாந்­தோட்டை வரை­யான பகு­தியை பாரிய சுற்­றுலா

வல­ய­மாக மாற்­ற­வுள்ளோம். இதன்­படி பெந் தோட்டை தெத்­துவ பிர­தே­சத்தை முழு­மை­யாக சுற்­றுலா வல­ய­மாக மாற்­ற­வுள்ளோம். இதன்­படி இந்த அபி­வி­ருத்தி திட்­டத்­திற்கு பெந்தோட்டை

சுற்­றுலா வலயம் என பெய­ரிட்­டுள்ளோம். புதிய தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி சேற்று நிலங்­க­ளாக இருக்கும் பகு­தியை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­க­வுள்ளோம். அங்­குள்ள நீர் நிலை­களை பன்­மு­கப்­ப­டுத்­துவோம். இதனை நாம் கடற்­ப­ரப்­புடன் இணைக்­க­வுள்ளோம். தற்­போ­தைக்கு நான் கூறும் பகுதி சதுப்பு நில­மா­கவே உள்­ளது. இந்த சுற்­றுலா வல­யத்­திற்­காக 1800 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரித்து விட்டோம். இதற்­காக உரிய காணி­க­ளுக்கு சொந்­த­மா­ன­வர்­க­ளுக்கு நஷ்ட ஈட்­டையும் வழங்­கி­விட்டோம். அத்­துடன் சுற்­றாடல் பாது­காப்பு ரீதி­யான உறு­திப்­ப­டுத்தல் ஆவ­ணங்­களை பெற­வுள்ளோம். இதன்­பின்னர் குறித்த அபி­வி­ருத்தி திட்­டத்தை யாருக்கு வழங்­கு­வது என்பது தொடர்பில் திறந்த அழைப்­பினை விடுத்து நீண்ட கால குத்­தகை அடிப்­ப­டையில் வழங்­குவோம். பெரும்­பாலும் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கே வழங்­கப்­படும் என எதிர்­பார்க்­கின்றேன். இவ் வல­யத்தை வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக இருந்தால் 50 வரு­டத்­திற்கே குத்­த­கைக்கு வழங்­குவோம். ஏனெனில் 33 வரு­டங்கள் அபி­வி­ருத்தி பணிகள் ஆரம்­பிப்­ப­தற்கே அவர்­க­ளுக்கு காலம் நிறைவு பெற்று விடும். ஆகவே பெரும்­பாலும் 50 வரு­டத்­திற்கு வழங்­குவோம். மார்ச் மாத­ம­ளவில் குறித்த சுற்­றுலா வல­யத்தை விலை­மனு கோர­லுக்கு விடுப்போம்.

கேள்வி: இந்த அபி­வி­ருத்தித் திட்­டத்­தினால் எவ் வா­றான பயன்கள் நாட்டு மக்­க­ளுக்கு கிடைக் கும்? 

பதில்: இதனால் அதி­க­ள­வி­லான தொழில்­வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொ­டுக்க முடியும். வைத்­தி­யர்கள், பொறி­யி­லா­ளர்கள் தேவைப்­ப­டுவர், இதனால் பல பிரதிகூலங்களை தென்­ப­குதி மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொள்ள முடியும். திட்­ட­மி­ட­லுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். கட்டம் கட்­ட­மாக அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். மூன்று வரு­டங்­களில் பூரண பலன்கள் எமக்கு கிடைக்கும். எனினும் சுற்­றுலா வல­யத்­திற்­கான பணிகள் ஆரம்­பிக்கும் போதே அதி­க­ள­வி­லான பொரு­ளா­தார பயன்­களை எம்மால் பெற்­றுக்­கொள்ள முடியும். இது பாரிய அபி­வி­ருத்­தித்­திட்­ட­மாகும்.

கேள்வி-: காலி கோட்­டையில் சட்­ட­வி­ரோ­த­மான கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளனவே. கேள்வி:அம்­பாந்­தோட்­டையில் முன்­னெ­டுக்  கப்­பட்­டுள்ள அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்பில் கூற முடி­யுமா? 

பதில்: அம்­பாந்­தோட்டையில் இரு பிர­தான அபி­வி­ருத்தி திட்­டங்களை முன்­னெ­டுக்­க­வுள்  ளோம். இதன்­படி ஒன்று துறை­முகம்  அடுத்­தது கைத்­தொழில் வல­ய­மாகும். அம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்­தியை 2845 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். காணிகள் தயா­ராக உள்­ளன. குறித்த துறை­முகம் துறை­முக அதி­கார சபைக்கு உரித்­தா­கி­யுள்­ளது. கூட்டு பங்­காண்­மையின் கீழ் சீன நிறு­வ­னத்­துடன் இணைந்து இலா­ப­மீட்ட நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். அத்­துடன் கைத்­தொழில் வல­யத்தை பொறுத்­த­வ­ரையில் எல்.என்.ஜி மின்  நிலையம், சீமெந்து தொழிற்­சாலை, எரி­வாயு தொடர்­பான தொழிற்­சாலை உட்­பட பல தொழிற்­சா­லை­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம். துறை­முகத்தை நிர்­மா­ணித்­தாலும் தற்­போ­தைக்கு மூன்றில் ஒரு பகு­தியே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி துறை­மு­கத்­திற்கு தேவை­யான வச­திகள், இயந்­தி­ரங்கள் போது­மா­ன­தாக இல்லை. இதற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை எடுப்­ப­தற்கு 600 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் தேவை­யாக உள்­ளது. ஆரம்ப கட்­ட­ந­ட­வ­டிக்­கைகள் முழு­மை­யா­கி­யுள்­ளன. கைத்­தொழில் பேட்­டையை பொறுத்­த­வ­ரை யில் இந்த வலயம் பிய­கம போன்ற ஒன்­றல்ல. இது வைத்­தி­ய­சாலை, பாட­சா­லைகள், விற்­பனை நிலை­யங்களை உள்­ள­டக்­கிய பாரிய  நக­ர­மா­கவே இருக்கும். பாரிய நக­ர­மாக தொழிற்­  படும். மூன்று இலட்சம் ஊழி­யர்கள் பணி­பு­ரியும் நிலைமை ஏற்­படும். அம்­பாந்­தோட்­டையில் 2100 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரித்­துள்ளோம். இங்கு வாழும் மக்­க­ளுக்கு வீடுகள் நிர்­மா­ணித்து கொடுத்து நஷ்ட ஈடு வழங்க உள் ளோம். இதன் இரண்டாம் கட்­டத்­திற்கு 3000 ஏக்கர் காணி­களை சுவி­க­ரிப்போம். மூன்றாம் கட்­டத்தை பொறுத்­த­வ­ரையில் மொன­ரா­க­லையில் 6900 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரித்து கைத்­தொழில் வல­யத்தை ஆரம்­பிப்போம். 

கேள்வி: மத்­தள விமான நிலை­யத்தை எவ்­வாறு முன்­னேற்ற திட்­ட­மிட்­டுள்­ளீர்கள்?

பதில்:மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுடன் கைகோர்த்து இலா­ப­மீட்ட நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். எனினும் இன்னும் நிறு­வனம் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அம்­பாந்­தோட்டை அபி­வி­ருத்தி திட்­டங்கள் சீராக அமைந்தால் விமான நிலையம் முன்­னேற்றம் அடையும்.எனவே சுற்­றுலா பய­ணி­களை ஒரு­ த­டவை வர­வ­ழைப்­பது எமது நோக்கம் கிடை­யாது. அம்­பாந்­தோட்டையை மாத்­திரம் பார்ப்­ப­ தற்கு ஒரு தட­வையை செல­விடும் அள­விற்கு தென் பகு­தியை முழு­மை­யாக மாற்றி அமைப்போம். கிழக்கு, கண்டி, யாழ்ப்­பாணம், நுவ­ரெ­லியா, புத்­தளம் போன்ற அனைத்து பகு­தி­க­ளையும் சுற்­றுலா வல­ய­மாக மாற்றி பாரிய மாற்­றங்­களை செய்வோம். அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம்.

கேள்வி:அம்­பாந்­தோட்­டையில் நிர்­மா­ணிக்­கப் பட்ட சர்­வ­தேச மாநாட்டு மண்­டபம் கவ­னிப்பார் இன்றி உள்­ளது. இதனை பயன்படுத்த முடி­யாதா? 

பதில்:- அதனை நடத்திச் செல்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு 20 மில்­லியன் ரூபா செல­வா­கின்­றது. தற்­போ­தைக்கு அது வெள்­ளை­யா­னை­யாக மாறி­யுள்­ளது. எனினும் அம்­பாந்­தோட்­டையில் அர­சாங்­கத்தின் திட்­டப்­படி அபி­வி­ருத்தி திட்­டங்கள் முன்­னெ­டுக்கும் போது அம்­மா­நாட்டு மண்­டபம் பயன்­பெ­றலாம். எனினும் அதனை நாம் முன்­னேற்ற திட்­ட­மிட்­டுள்ளோம். அத்­துடன் மாநாட்டு மண்­ட­பத்தை ஓர­ள­வேனும் முன்­னேற்­றலாம். ஆனால் சூரி­ய­வெவ விளை­யாட்டு அரங்­கிற்கு என்ன செய்­வது என்­பது தொடர்பில் சிக்­க­லாக உள்­ளது. உண்­மையில் அதனை கட்­டி­யெ­ழுப்­பு­வது கடி­ன­மாகும். இதற்­கான வழிகள் என்ன என்­பது எமக்கு தெரி­யாமல் உள்­ளது.

கேள்வி:மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு அம்­பாந் தோட்­டையை இரண்­டா­வது நக­ர­மாக மாற் றும் நோக்கம் இருந்­தது. எனினும் அத­னையே இந்த அர­சாங்­கமும் முன்­னெ­டுத்து வரு­கின்  றது. இதன்­படி ஒருவேளை ராஜ­பக் ஷ துறை­மு­கத்தை நிர்­மா­ணித்து இருக்­கா­விடின் கைதொழில் வல­யத்தை அம்­பாந்­தோட்­டைக்கு கொண்டு சென்­றி­ருப்­பீர்­களா? 

பதில்:நக­ரங்­களை இரண்­டா­வ­தாக மாற்ற வேண்­டிய நோக்கம் எமக்கு கிடை­யாது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நிர்­மா­ணிப்­ப­தாக நாமே முதலில் கூறினோம். 2001 ஆம் ஆண்டு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே அந்த திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தினார். ஏனெனில் அந்த துறை­முகம் நாட்­டுக்கு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும். அதில் பல பயன்கள் எமக்க கிடைக்கும். நாம் கடற் உட்­ப­கு­திக்குள் துறை­மு­கத்தை நிர்­மா­ணிக்க இருந்தோம். அத­னுடன் கைதொழில் வல­யத்தை ஆரம்­பிக்க திட்­ட­மிட்டோம். எனினும் ராஜ­ப­க் ஷ­வினர் அப்­படி செய்­ய­வில்லை. கடற்­கரை நிலப்­ப­ரப்பை முழு­மை­யாக அகழ்வு செய்து பாரிய நிதி செல­விட்டு கடன் பெற்று நிர்­மா­ணித்­தனர். இதன் சுமையை நாட்டு மக்­களே சுமக்க வேண்­டி­யுள்­ளது. துறை­மு­கத்தை நிர்­மா­ணித்­தாலும் கப்பல் கொண்டு வரு­வது தொடர்பில் சிந்­திக்­க­வில்லை. கொழும்பு துறை­மு­கத்­ திற்கு வந்த ஆரோ­ஆரோ வேலைத்­திட்­டத்தை அம்­பாந்­தோட்டைக்கு கொண்டு சென்­றனர். அப்­படி செய்ய கூடாது. அம்­பாந்­தோட்­டைக்கு என்று தனி­யான வேலைத்­திட்டம் இருக்க வேண்டும். இதன்­படி கைத்­தொழில் வல­யங்­களை நாம் உரு­வாக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இங்கு தொழிற்­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­படும் போது இயல்­பா­கவே கப்­பல்கள் வருகை தரும். இவர்கள் இந்த துறை­மு­கத்தை மக்­க­ளுக்கு சுமை­யாக மாற்­றினர். அத்­துடன் நாமே விமான நிலை­யத்­தையும் முன்­மொ­ழிந்தோம். எனினும் நாம் வெல்­ல­வா­யவில் விமான நிலை­யத்தை நிர்­மா­ணிக்­கவே திட்­ட­மிட்­டி­ருந்தோம். ஏனெனில் அங்­கி­ருந்து நுவ­ரெ­லியா போன்ற பகு­தி­க­ளுக்கு செல்­வ­தற்கு இல­கு­வாக அமையும். இதன்­ஊ­டாக யானை­க­ளுக்கும் பாதிப்­புகள் ஏற்­ப­டாது. அத்­துடன் நுவ­ரெ­லி­யாவில் விளையும் பூக்கள், ஸ்ரோபரி பழங்கள் போன்­ற­வை­களை ஏற்­று­மதி செய்ய முடியும். அந்த திட்­டத்தில் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை இணைத்­தி­ருந்தோம். எனினும் ராஜ­ப­க் ஷ­வினர் அதனை சீர­ழித்து விட்­டனர். தற்­போது அத­னையும் நாமே சுமக்க வேண்­டி­யுள்­ளது. 

கேள்வி: நல்­லாட்சி அர­சாங்கம் அனைத்‍­தை யும் குத்­த­கைக்கு வழங்­கு­வ­தாக குற்­றம்­சு­மத்­தப்­ப­டு­கின்­றதே?

பதில்: இது எமக்கு இலா­பத்­திற்­காக செய்­ய­வில்லை. நாட்டின் நல­னுக்­கா­கவே முன்­னெ­டுக்­கின்றோம். இதனால் சீரான பொரு­ளா­தா­ரத்தை நோக்கி பய­ணிக்க முடியும். இதற்­காக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி குழு­வொன்று உள்­ளது. எமக்கு நினைத்த மாதிரி எத­னையும் முன்­னெ­டுக்க முடி­யாது. பொரு­ளா­தார அபி­வி­ருத்தி குழு­வினை மீறி எந்த நிலத்­தையும் பெற்­றுக்­கொள்ள முடி­யாது.

கேள்வி:என்­றாலும் கூட்டு எதி­ரணி உட்­பட எதி­ர­் கட்சிகளின் எதிர்ப்­பினை மீறி இவ்­வா­றான நட­ வ­டிக்­கை­களை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்க இய­லுமா? 

பதில்:கூட்டு எதிர்க்­கட்சியினர் எமது அனை த்து வேலைத்­திட்­டங்களுக்கும் எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றனர். அவர்கள் எதற்கும் ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை. நல்ல விட­யங்கள் செய்தால் அதற்கு எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றனர். இந்த விடயம் தொடர்­பாக மக்­க­ளுடன் பேசுவோம். மக்­களின் இணக்­கப்­பாட்­டு­டனே செய்வோம்.

கேள்வி: தெற்கில் மாத்­தி­ரமா அபி­வி­ருத்தி பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன?

பதில்: அப்­ப­டி­யல்ல. நாடு­பூ­ரா­கவும் அபி­வி­ருத்தி பணிகள் நடக்­கின்­றன. என்னை போன்று

ஒவ்­வொரு பகு­தி­க­ளுக்­கு­மான அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். வடக்கு, கிழக்கு, வடமேல்,வட­மத்­திய மாகாணம் உட்­பட ஏனைய மாகா­ணங்­க­ளுக்கும் அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­பட்டு அபி­வி­ருத்தி பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் கண்டி நக­ரத்தில் பாரிய அபி­வி­ருத்தி பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. திரு­கோ­ண­ம­லையை பொறுத்­த­வரை அங்­குள்ள துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்ளோம். சுற் ­றுலா அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்து

வரு­கின்றோம். யாழ்ப்­பா­ணத்தில் எவ்வகை யான அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுப்­பது தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம்.அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

கேள்வி:அர­சாங்­கத்தின் காலம் நிறை­வு­பெற்று வரு­வ­தாக கூறு­கின்­றனர். அதே­போன்று வரவு – செல­வுத்­திட்­டத்தின் மீதும் மக்கள் அதி­ருப்­தியில் உள்­ள­னரே? 

பதில்:கடந்த இரு­வ­ரு­டங்கள் திட்­ட­மிடல் பணி­களை மாத்­தி­ரமே முன்­னெ­டுத்தோம். இந்­நி­லையில் அதனை தற்­போது நிறை­வேற்றி வரு­கின்றோம். எனவே அடுத்த மூன்று வரு­டங்கள் எமது அர­சாங்­கத்­திற்கு வெற்­றி­மிகு வரு­டங்­க­ளாக அமையும். 1977 இல் ஜே.ஆர். ஜய­வர்­தன ஆட்­சி­யா­னாலும் அந்த அர­சாங்­கத்தின் திட்­டங்கள் இரண்­டா­வது தவணை ஆட்­சியின் போதே பிர­தி­ப­லித்­தன. எனவே அது­போன்று எமது வேலைத்­திட்­டங்களின் பிர­தி­பலன் இரண்­டா­வது தவணை ஆட்­சியின் போதே கிடைக்கும்.

கேள்வி: அப்­படியென்றால் 2025 வரைக்கும் தேசிய அர­சாங்கம் பய­ணிக்­குமா?

பதில்: நாம் அதற்கே தயா­ராகி வரு­கின்றோம்.தேசிய அர­சாங்­கத்­தினால் நாட்­டுக்கு எந்­த­வொரு தீங்கும் ஏற்­ப­ட­வில்லை. நாடு என்ற வகையில் ஸ்திர­மான நிலையை அடைய முடிந்­தது. தனி­யான ஆட்­சியை விட பேசு­வ­தற்கும் வாக்­கு­வா­தங்­க­ளுக்கும் இட­முண்டு. இதில் நாட்டுக்கு எந்­த­வொரு தீங்கும் இல்லை. தேசிய அர­சாங்­கத்தை அடுத்த ஐந்து வரு­டத்­திற்கு கொண்டு செல்ல முடியும். அதனை மக்­களே தீர்­மா­னிப்பர்.

கேள்வி:அனு­ரா­த­பு­ரத்தில் கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரிய பொதுக் கூட்டம் நடத்­தப்­பட்­டது. அதி­க­ள­வி­லான மக்கள் வருகை தந்­தனர். இது அர­சாங்­கத்­திற்கு சவா­லாக அமைந்­துள்­ளதா?

பதில்:அனுரா­த­பு­ரத்தில் மாத்­திரம் ஆத­ரவை காண்­பிக்க முடி­யாது. நாடு பூரா­கவும் மக்­களின் கணிப்பு முக்­கியம். கூட்­டங்­க­ளுக்கு பஸ் களில் மக்­களை கொண்டு வரு­வது என்­பது சாதா­ரண விட­ய­மாகும். பழைய கட்சி என்ற அடிப்­ப­டையில் எமக்கு நன்கு தெரியும். ஆகை யால் இதனை அலட்டிக் கொள்­ள­வில்லை. 

கேள்வி: தேர்­தலில் கூட்­டா­கவா போட்­டி­யிட போகின்­றீர்கள்?

பதில்:இல்லை. தனித்தே நாம் போட்­டி­யி­ட­வுள்ளோம். எனினும் பின்னர் தேசிய அர­சாங்கம் என்ற வகையில் ஒன்­றி­ணைவோம்.

கேள்வி: உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு கட்சி என்ற வகையில் தயாரா? 

பதில்:வேட்­பு­மனு குழு கூடி இறு­திக்­கட்­டத்­திற்கு வந்­துள்ளோம். எனினும் தேர்தல் திகதி வரும் வரை வேட்­பாளர் தெரி­வுகள் நீடிக்கும். அதுதான் உண்­மையில் வழ­மை­யாகும். எனினும் பூர­ண­மாக இறுதி கட்­டத்­திற்கு வந்­துள்ளோம். எனினும் தற்­போது நாம் ஆளும் கட்­சியில் இருப்­ப­தனால் விண்­ணப்­பங்கள் அதி­க­மாக கிடைத்­துள்­ளன. ஏனைய கட்­சி­களும் தயா­ரா­கின்­றனர். இந்த தேர்­தலில் நாம் வெற்­றி­பெ­றுவோம். அதில் சந்­தேகம் இல்லை.

கேள்வி: மத்­திய அதி­வேக பாதை நிர்­மா­ணத் தில் பாரிய சிக்­கல்கள் எழுந்­துள்­ளன. இப்­படி இருக்கும் போது இந்த ஆட்சிக் காலத்தின் போது  எந்­த­வொரு அதி­வேக வீதியையும் உங்­களால் திறக்க முடி­யாது போகுமா? 

பதில்:- அதி­வேக பாதை நிர்­மா­ணிக்கும் போது பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­ப­டத்தான் செய்யும். எனினும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. காணி சுவீ­க­ரிக்கும் போது பாரிய சிக்­கல்கள் ஏற்­படும். எனினும் உரிய காலத்­திற்கு நிறைவு பெறும். நல்ல தரத்­திற்கு நிர்­மா­ணிப்போம். அத்­துடன் தற்­போது கிராம மட்­டத்தில் பல வீதி­களை நிர்­மா­ணித்து வரு­கின்றோம். கடந்த வரு­டத்தில் கிராம அபி­வி­ருத்­திக்கு கிராம சேவகர் பிரி­வுக்கு 20 இலட்சம் ரூபா கிடைத்­தது. தற்­போது 35 இலட்சம் ரூபா கிரா­மத்­திற்கு ஒதுக்­கி­யுள்ளோம். எனினும் மாத்­த­றைக்கு வெள்­ள­பெ­ருக்கின் கார­ண­மாக அதி­க­மாக கிடைத்­தது. ராஜ­பக் ஷ ஆட்­சியின் போது கிரா­மிய அபி­வி­ருத்­திக்கு இவ்­வா­றான அதிக நிதி ஒதுக்­கீடு செய்­ய­வில்லை. ஒழுக்­கத்­துடன் நாம் செய­லாற்றி வரு­கின்றோம். எனினும் பிர­பலம் இல்லை. நாம் பதா­தைகள் அமைத்து வேலை செய்­வ­தாக காண்­பிக்­க­வில்லை. அது எமது கொள்­கையும் கிடை­யாது. எனினும் எமது அபி­வி­ருத்­தி­களை மக்­க­ளுக்கு கொண்டு செல்லும் வேலைத்­திட்டம் ஒரு இடத்தில் இருந்து நாம் ஆரம்­பிப்போம்.

கேள்வி: அண்­மைக்­கா­ல­மாக யாழ்ப்­பா­ணத் தில் ஆவா குழு போன்­ற­வை­க­ளினால் அப்­ப­கு­தி யில் அச்­சு­றுத்­த­லான நிலைமை காணப்­ப­டு­கின்  றது. அதி­க­ள­வி­லான வாள்­வெட்டு சம்­ப­வங் கள் பதி­வா­கி­யுள்­ளன. இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­  தற்கு என்ன நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள் ­ளன? 

பதில்:ஆவா­குழு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­துள்­ளது. எனினும் சட்டம் ஒழுங்கு விட­யத்தில் யாழ்ப்­பா­ணத்தை முன்­னேற்ற வேண்­டி­யுள்­ளது. இளை­ஞர்கள் தமது தைரி­யத்தை காண்­பிப்­ப­தற்­காக சில செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தனர். எனினும் அது தொந்­த­ர­வாக மாற்றம் கண்­டது. எனினும் தற்­போது பிரச்­சி­னைகள் குறை­வாக உள்­ளன. எனினும் யாழ்ப்­பா­ணம் தொடர்பில் அதிக அவ­தானம் தேவை­யாக உள் ளது. என்­றாலும் அங்கு எமக்கு அதி­கா­ரி கள் பற்­றா­க்குறை இருந்­தது. வாக­னங்கள் போதாமை இருந்­தது. எனினும் தற்­போது தமிழ் பேசும் பொலிஸ் அதி­கா­ரிகள் அதி­க­மாக பொலி  ஸில் இணைந்து வரு­கின்­றனர். இதன்­படி தற்­போது யாழ்ப்­பாணம் கட்­டு­ப்பாட்­டிற்குள் வந்­துள்­ளது. 

கேள்வி:தெற்கு பகு­தி­க­ளிலும் பாதாள கோஷ்­டி­களின் நட­மாட்டம் அதி­க­மாக உள்­ளதே?

பதில்:தென் பகு­தி­களில் பாதாள கோஷ்டி முழு­மை­யாக இல்­லாமல் செய்து சுத்­த­மாக்­க­வுள்ளோம். பாதாள கோஷ்­டி­யினர் பலர் வெளி­நா­டு­க­ளுக்கு தப்பி ஓடி உள்­ளனர். எனினும் அவர்­களை பிடிப்­ப­தற்கு அந்­நாட்டின் உத­வி­க­ளையும் நாம் கோரி­யுள்ளோம். அவர்­களை அழைத்து வந்து சட்ட நட­வ­டிக்கை எடுப்போம். அவர்­க­ளுக்கு இங்கு தொடர்ந்தும் தொலை­பேசி தொடர்­புகள் உள்­ளன. எனினும் தற்­போது பார­தூ­ர­மான குற்றங்கள் 33 வீதத்­தினால் குறைந்­துள்­ளது. திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்க விசேட பிரி­வு­களை அமைத்து செயற்­பட்டு வரு­கின்றோம். இதன்­படி அதனை கட்­டுப்­ப­டுத்தி வரு­கின்றோம். தற்­போ­தைக்கு ஒரு சிலர் எங்கு உள்­ளனர் என்­பது எமக்கு தெரியும். இருவர் டுபாயில் உள்­ளனர். எனினும் அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம். இந்த விடயத்தில் யாரும் தலையிட முடியாது. போதைபொருள் பாவனையும் நாட்டுக்கு பெரும் சாபமாக மாறியுள்ளது. இதன்போது பாதாள கோஷ்டியின் அணுகுமுறைகளை பின்பற்றி அவர்களை பிடிப்போம். எனினும் இந்த விடயத்தில் எந்தவொரு மன்னிப்பும் கிடையாது. முழுமையாக பாதாள கோஷ்டிகளை ஒழித்தே தீருவேன்.

கேள்வி:முன்னாள் ஆட்சியின் மோசடியாளர் களை பாதுகாப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காமினி சென ரத் விடயத்தில் உங்கள் மீது பகிரங்க குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதே? 

பதில்: காமினி செனரத் விடயம் தொடர்பாக நான் ஏற்கனவே ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளேன். பொன்சேகா விடயத்தில் வழ க்கு விசாரணை செய்த அணுகுமுறையை பின்  பற்ற நாம் தயாரில்லை. அனைவருக்கும் சம மாக நீதி நிலைநாட்டப்படும் என்றே நாம் கூறி  னோம். பணிகள் சரியான முறையில் முன்னெ  டுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நிதி  மோசடி விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்  குழு என பலதரப்பட்ட நிறுவனங்களின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்  றோம். தற்போது சட்டமா அதிபர் ஆலோச  னைக்காக 92 வீதமானவை அனுப்பபட் டுள்ளன. அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோ சனையில் வந்த 13 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளன. இதன்படி சட்டமா அதிபர் பூரணமாக்கும் விசாரணைகளை துரிதமாக வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை நிறைவு செய்வோம். சில விசாரணைகளுக்கு மேலதிக விசாரணைகள் தேவையாகும் என 

சட்டமா அதிபர் கூறியுள்ளார். அவை சூட்சம மான முறையில் முன்னெடுக்கப்பட்ட குற்றங் களாகும். அந்த குற்றங்களை நோக்கும் போது வெளிநாடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளது. இதன்போது பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குறித்த நாட்டுடன் நாம் செய்து கொண்ட

ஒப்பந்தங்களின் பிரகாரமே நடவகைகளை முன்னெடுப்போம். கொள்ளை என்பது கொள் ளையாகும். அதற்கு மன்னிப்பு கிடையாது. எனக்கு விசாரணைகளை அவசரமாக முடிக் கவே தேவையாக உள்ளது.

கேள்வி:பிரதமரை பதவியில் இருந்து நீக்கப்போவதாக தெரியவருகின்றதே?

பதில்:- இவ்வாறான கதைகள் பல உள்ளன என்று சிரித்தார். எனினும் பதில் அளிப்பதற்கு அது பெறுமதியான கேள்வி அல்ல என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-11-18#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.