Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலி - கிந்­தொட்டயில் நேற்றும் ஊரடங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பீதியில் மக்கள்....66 வீடுகள் ; 26 கடைகள் 2 பள்ளிவாசல்கள் சேதம்

Featured Replies

காலி - கிந்­தொட்டயில் நேற்றும் ஊரடங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பீதியில் மக்கள்

deats01-cb5e1b2876a7f43e4c9cabf91fb6832c298c147f.jpg

 

66 வீடுகள் ; 26 கடைகள் 2 பள்ளிவாசல்கள் சேதம்
கிந்­தொட்­ட­யி­லி­ருந்து எம்.பி.எம்.பைரூஸ், எம்.சி. நஜி­முதீன் 

கிந்­தொட்­டயில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழ்­நி­லை­யை­ய­டுத்து நேற்­றைய தினமும் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் மக்கள் மத்­தியில் தொடர்ந்தும் பதற்­றமும் அச்­சமும் நிலவி வரு­கி­றது. இதே­வேளை நேற்று மாலை ஆறு மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையில் பொலிஸ் ஊர­டங்கு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதே­வேளை நேற்று முன்­தினம் இரவு அப்­பி­ர­தே­சத்தில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தத்­தினால்

ஐந்­துபேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் சம்­ப­வத்­த­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் 19 பேரை காலி பொலிஸார் கைது­செய்­துள்­ளனர். மேலும் சம்­ப­வத்­தினால் 66 வீடுகள், 26 வர்த்­தக நிலை­யங்கள், 2 முஸ்லிம் பள்­ளிகள், 12 வாக­னங்கள் மற்றும் 4 மோட்டார் சைக்­கிள்­களும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

கைது­செய்­யப்­பட்ட 19 பேரும் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் குறித்த பிர­தே­சத்­திற்கு நேற்­று­காலை விஜயம் மேற்­கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளையும் பார்­வை­யிட்டார். மேலும் குறித்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­வாத தாக்­குதல் என பொலிஸ் தல­மை­யகம் குறிப்­பிட்­டுள்­ளது. அத்­துடன் சேத விப­ரங்­களை பதி­வ­தற்கு விசேட பொலிஸ் பிரி­வொன்றும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,

 கடந்த வாரம் கிந்­தொட்ட விதா­ன­கொட பிர­தே­சத்தில் கைக்­கு­ழந்­தை­யுடன் வீதியில் நடந்­து­சென்ற முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த ஒருவர் மோதி­யுள்ளார். அவ்­வி­பத்து இடம்­பெற்ற வேளையில் அசம்­பா­விதம் ஏதும் இடம்­பெ­றா­த­போதும் அதன் தொடர்ச்­சி­யாக கடந்த வியாழக் கிழமை இரவும் அங்கு அமை­தி­யின்மை ஏற்­பட்­டது.

அமை­தி­யின்மை ஏற்­பட்­டதை அறிந்­து­கொண்ட பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்து சென்று நிலை­மையை கட்­டுப்­பாட்டுக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சித்­தனர். மேலும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் வர­வ­ழைக்­கப்­பட்டு பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். ஆகவே கடந்த வியாழக் கிழமை இரவு 10.30 மணி­ய­ளவில் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அத்­துடன் அப்­பி­ர­தே­சத்தின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு பொலி­ஸாரும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் தொடர்ந்தும் பாது­காப்புக் கடையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். எனினும் நேற்று முன்­தினம் மாலை பாது­காப்பு தளர்த்­தப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்­தி­லேயே கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு மீண்டும் கல­வரம் ஏற்­பட்­டுள்­ளது. அதா­வது வெள்­ளிக்­கி­ழமை இரவு கிந்­தொட்ட முஸ்லிம் பிர­தே­சங்­க­ளுக்கு பெரும்­பான்­மை­யினர் தாக்­குதல் நடத்­து­வ­தற்கு தயா­ரா­வ­தாக இரவு 7.30 மணி­ய­ளவில் தகவல் கிடைத்­துள்­ளது. அது தொடர்பில் பொலி­ஸா­ருக்குத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் பொலிஸார் பாது­காப்பு கட­மை­யிலும் ஈடு­பட்­டுள்­ளனர்.

இருந்­த­போ­திலும் இரவு 8,30 மணி­ய­ளவில் கிந்­தொட்ட பிர­தே­சத்­திற்­குட்­பட்ட ஹிழுர் பள்­ளி­வாசல் வீதி, அம்­பிட்­டிய, குருந்­து­வத்தை, எல­பட வீதி, மஹ கபு­கல, உக்­வத்தை சந்தி ஆகிய பிர­தே­சங்­க­ளுக்குள் புகுந்த இரு­நூ­றுக்கும் மேற்­பட்­ட­வர்­களைக் கொண்ட கும்பல் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள முஸ்­லிம்­களின் வீடுகள் ,பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் வாக­னங்கள் என்­ப­வற்றை அடித்து நொறுக்­கி­ய­துடன் பெற்றோல் குண்­டு­களை வீசி தாக்­கு­தல்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர். மேலும் வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் எரி­யூட்­டி­யுள்­ளனர்.

 இரு குழுக்­க­ளாக முஸ்லிம் பிர­தே­சங்­க­ளுக்குள் நுழைந்­த­வர்கள் முஸ்­லிம்­களின் வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­க­ளிலும் கொள்­ளை­ய­டித்­துள்­ளனர். குறித்த கும்­பலில் இரு­பா­லாரும் இருந்­துள்­ளனர்.ஆகவே பிர­தே­சத்தின் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வரும் நோக்கில் இரா­ணு­வத்­தினர் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் கலகம் அடக்கும் பிரி­வி­னரும் கட­மையில் அமர்த்­தப்­பட்­டனர்.

மேலும் படைப்­பி­ரி­வினர் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்கு சிர­மப்­பட்­ட­துடன் கண்ணீர்ப் புகைப் பிர­யோ­கமும் மேற்­கொண்­டனர். அத்­துடன் இரவு 11 மணி முதல் நேற்றுக் காலை 9 மணி வரை அப் பகு­தியில் ஊர­டங்கு சட்டம் பிறப்­பிக்­கப்­பட்டு நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இச் சம்­ப­வங்­களைத் தொடர்ந்து நேற்று முன்­தினம் இரவு இப் பகு­திக்கு அமைச்­சர்­க­ளான பைசர் முஸ்­தபா, ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் விஜயம் மேற்­கொண்டு சேத விப­ரங்­களைப் பார்­வை­யிட்­ட­துடன் பொலிஸ் உய­ர­தி­கா­ரி­க­ளுடன் தொடர்பு கொண்டு பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்­தினர். அதே­போன்று நேற்று அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், வஜிர அபே­வர்­தன, சாகல ரத்­னா­யக்க, மங்­கள சம­ர­வீர ,பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மனுஷ நாண­யக்­கார, முஜுபுர் ரஹ்மான் உட்­பட பல அர­சியல் பிர­மு­கர்கள் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களைப் பார்­வை­யிட்­ட­துடன் பாது­காப்பு ஏற்­பா­டுகள் தொடர்­பிலும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர்.

இதே­வேளை நேற்று மாலை மூன்று மணி­ய­ளவில் காலி மாவட்ட செய­ல­கத்தில் அமைச்சர் வஜிர அபே­வர்­தன தலை­மையில் இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் சம­ரசப் பேச்­சு­வார்த்­தையும் நடை­பெற்­றது. அப்­பேச்­சு­வார்த்­தையில் மாவட்ட செய­லாளர் கொடி­கார உட்­பட முப்­படை பிர­தா­னி­களும் கலந்துகொண்டனர். மேலும் சமயத் தலைவர்கள் உட்பட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். ராவணா பலய அமைப்பின் செயலாளர் இந்தகந்த சத்தாதிஸ்ஸ தேரர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அச் சந்திப்பின்போது குறித்த பிரச்சினையை சமரசமாக முடித்துக்கொள்வதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். ஆகவே கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யாது விடுதலை செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது. அத்துடன் வெளிப்பிரதேச அரசியல்வாதிகள் குறித்த பிரதேசத்திற்கு வருவதனைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டப்பட்டது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-11-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.