Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில்­லறை விட­யங்­க­ளுக்­கும் இன்­றும் கையூட்டு கொடுக்­க­ வேண்­டி­யுள்­ளது

Featured Replies

 
சில்­லறை விட­யங்­க­ளுக்­கும் இன்­றும் கையூட்டு கொடுக்­க­ வேண்­டி­யுள்­ளது
 

சில்­லறை விட­யங்­க­ளுக்­கும் இன்­றும் கையூட்டு கொடுக்­க­ வேண்­டி­யுள்­ளது

கீழ் நிலை­யில் உள்ள மக்­கள் இன்­னும் சாதா­ரண விட­யங்­க­ளுக்­கும் கையூட்­டுக் கொடுக்க வேண்­டிய நிலமை உள்­ளது. கையூட்டு மற்­றும் ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு வேக­மா­கச் செயற்­பட வேண்­டும். அடி­மட்ட ஊழ லைத் தடுக்க இத­னூ­டா­கவே முடி­யும். அடி­மட்ட ஊழலைத் தடுத்­தால் மேல் மட்­டத்­தி­லும் ஊழ­லைத் தடுக்க முடி­யும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்தினம் 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு -– செல­வுத் திட்­டத்­தில் அரச தலை­வர், தலைமை அமைச்­சர், எதிர்க்­கட்சித் தலை­வர், ஆணைக் கு­ழுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீடு மீதான குழு­நிலை விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாட்­டில் காணி உறு­திப்­பத்­தி­ரத்தைப் பெறு­வ­தற்குக் கையூட்­டுக் கொடுக்க வேண்­டிய நிலமை உள்­ளது. அடி­மட்­டத்­தில் இருக்­கின்ற மக்­கள் பல்­வே­றுபட்ட இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­ற­னர். பலர் கிரா­மத்­தில் இருந்து நக­ரத்­ துக்கு வர முடி­யாத கட்­டத்­தில் கையூட்­டுக் கொடுக்­கும் நிலை இன்­னும் உள்­ளது.

ஆணைக்­கு­ழுக்­கள் வேக­மா­கச் செயற்­பட்­டால் அடி­மட்­டத்­தில் இருந்து ஆரம்­பிக்­கும் ஊழல் மேல் மட்­டம் வரை வராது.
எந்­த­வொரு தலை­யீ­டும் இல்­லாத சுதந்­தி­ரத்தை கையூட்டு மற்­றும் ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு நல்­லாட்சி அரசு வழங்க வேண்­டும்.

இலங்­கை­யில் அனைத்துக் கிரா­மங்­க­ளிலும் காடு­கள் அழிக்­கப்­பட்டு வய­லாக்கி வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலை­யில் தொல்­பொ­ருள், வனத் திணைக்­கள அதி­கா­ரி­கள் வந்து அதனை மீண்­டும் மக்­க­ளி­டம் இருந்து சுவீ­க­ரித்து வரு­கின்­ற­னர்.இதனால் மூவின மக்­க­ளும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

முப்­பது வரு­டங்­க­ளாக இருந்து வந்த நிலை­யில் இப்­படி நடந்­தால் என்ன நடக்­கும். கால் நடைப் பண்­ணை­யா­ளர் பலர் விரட்­டப்­பட்­டுள்­ளனர். நாம் மனித நேயத்­து­டன் சிந்­திக்கவேண்­டும்.

கிழக்கு மாகாணப் பொலிஸ் அதி­கா­ரி­கள் வேறு மாகா­ணங்­க­ளுக்கு இடமாற்­றம் செய்­யப்­ப­டு­கின்­ற­னர். தற்­போ­தைக்கு தமிழ் முறைப்­பா­டு­கள் செய்­வ­தில் சிக்­கல் நிலை உள்­ளது. தமிழ் அதி­கா­ரி­கள் இல்­லா­மை­யால் பிரச்­சினைகள் இருக்­கின்­றன. தற்­போதே தமி­ழர்­கள் பொலி­ஸில் இணை­கின்­ற­னர்.

தமிழ் பேசும் அதி­கா­ரி­களை இடமாற்­றம் செய்­வ­தால் அதி­கா­ரி­களுக்குப் பற்­றாக்­குறை ஏற்­ப­டும். அதனை நிறுத்த வேண்­டும். சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும். வழக்குத் தாம­தத்­தால் குற்­ற­வா­ளி­கள் பலர் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும் நில­மை­கள் காணப்­ப­டு­கின்­றன.

பாலி­யல் துர்­ந­டத்தை, கொலைக் குற்­றச்­சாட்­டில் உள்­ள­வர்­கள் பிணை­யில் வரும் போது அவர்­கள் வெளி­நா­டு­க­ளுக்குத் தப்பிச் செல்­கின்­ற­னர். இது தொடர்­பில் அவ­தா­னம் செலுத்த வேண்­டும்.

அனை­வ­ரை­யும் சம­மாகக் காணும் நீதித்­துறை உரு­வாக வேண்­டும். கையூட்டு ஊழல் ஆணைக்­குழுவிற்குப் பெரிய பொறுப் பு­க்கள் உள்­ளன. இதற்கு அர­சி­யல் தலை­யீடு இருந்­தால் நிறுத்­தப்­பட வேண்­டும் -– என்­றார்.

http://newuthayan.com/story/48375.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.