Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறி­முறை ரீதி­யான சித்­தி­ர­வதை தொடர்­கி­றது!

Featured Replies

 

பொறி­முறை ரீதி­யான சித்­தி­ர­வதை தொடர்­கி­றது!

தற்­போ­தைய அர­சின் காலத்­தி­லும் தமிழ் இளை­ஞர்­கள் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்­கும், பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்­கும் உள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­கிற குற்­றச்­சாட்டு மீண்­டும் எழுப்­பப்­பட்­டுள்­ளது.

‘அசோ­சி­யேட் பிரஸ்’ பன்­னாட்டு ஊட­கம் இது தொடர்­பாக அண்­மை­யில் அறிக்­கை­யிட்­டி­ருந்­தது. அதில் புலம்­பெ­யர் நாடு­க­ளில் தஞ்­ச­ம­டைந்த இளை­ஞர்­கள் பல­ரது உடல் க­ளில் காணப்­பட்ட காயங்­க­ளும் ஆதா­ர­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த விட­யம் பூதா­கா­ர­மா­கக் கிளம்­பி­யதை அடுத்து அப்­ப­டிப்­பட்ட எந்­த­வொரு குற்­றங்­க­ளும் நடக்­க­வில்லை என்று இலங்கை அரச தரப்­பி­லி­ருந்து மறுப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

படை­யி­னர் பாலி­யல் வன்­முறை மற்­றும் சித்­தி­ர­வ­தை­க­ளில் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­ற­னர் என்று வெளி­யான குற்­றச்­சாட்­டுக்­கள் அடிப்­படை ஆதா­ரங்­கள் அற்­றவை என்று பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கபில வைத்­தி­ய­ரட்ன மறுத்­தி­ருந்­தார்.

அந்­தச் செய்­திக்­கான ஆதா­ரங்­க­ளா­கக் காட்­டப்­பட்ட இளை­ஞர்­க­ளின் உடல்களில் காணப்­பட்ட காயங்­கள் அவர்­க­ளின் நண்­பர்­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­வை­யாக இருக்­கும் என்­று­கூறி அத்­த­கைய குற்­றச்­சாட் டுக்­களை இல­கு­வாக அவர் மறுத்­தி­ருந்­தார்.

பாலி­யல் வன்­முறை, சித்­தி­ர­வ­தை­கள் போன்­ற­வற்றை அடி­யோடு ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்­ப­து­தான் அர­சின் கொள்கை என்­றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

எழுந்­த­மா­ன­மான, முறை­யான விசா­ர­ணை­கள் ஏது­மற்ற அவ­ரது கருத்து கண்­டிக்­கத்­தக்­கது. யதார்த்­தத்­துக்கு எந்­த­வ­கை­யி­லும் நெருங்­கி­வர முடி­யா­தது.

இலங்கை அர­சு­கள் கொண்­டி­ருக்­கும் கொள்­கைக்­கும் உண்­மைக்­கும் இடையே மிகப் பெரும் இடை­வெளி இருக்­கும் என்­பதை வைத்­தி­ய­ரத்ன அறி­யா­த­வ­ரல்­லர்.

எந்­த­வொரு அப்­பா­விப் பொது­ம­க­னை­யும் கொல்­வ­தில்லை என்­கிற அறி­விக்­கப்­பட்ட கொள்­கை­யு­டன் முன்­னெ­டுக்­கப்­பட்ட இறு­திப் போரில் 40 ஆயி­ரம் முதல் 70 ஆயி­ரம் வரை­யான பொது­மக்­கள் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்று ஐக்­கிய நாடு­கள் சபை­யும், அரச புள்­ளி­வி­வ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஒரு லட்­சத்து 40 ஆயி­ரம் பேர் வரை­யா­னோர் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்று தன்­னார்வ அமைப்­பு­க­ளும் தக­வல் தரு­வதை அவர் அறி­யா­த­வ­ரு­மல்­லர்.

எனவே அறி­விக்­கப்­பட்ட கொள்­கைக்­கும் இலங்­கை­யின் கள யதார்த்­தத்­துக்­கும் என்­றுமே தொடர்­பு­கள் இருந்­த­தில்லை. தடுப்­புக் காவ­லில் இருப்­போர் மீதான சித்­தி­ர­வ­தை­க­ளும் வன்­மு­றை­க­ளும்­கூட அப்­ப­டிப்­பட்­ட­வைதான்.

முன்­னைய அர­சின் காலத்­தில் தமிழ் மக்­க­ளை­யும் அவர்­க­ளின் விடு­த­லைப் போராட்­டத்­தை­யும் அடக்கி ஒடுக்­கு­வ­தற்­கான திட்­ட­மிட்ட பொறி­மு­றை­யாக சித்­தி­ர­வ­தை­ க­ளும் பாலி­யல் வன்­மு­றை­க­ளும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன.

வடக்கு – கிழக்கு வாழ் ஒவ்­வொரு தமி­ழ­னும் அதற்­குச் சாட்சி. அந்­தப் பொறி­மு­றைக்­குள் வாழ்ந்து, பயிற்­றப்­பட்டு, பழக்­கப்­ப­டுத்­தப்­பட்டு, வளர்த்­தெ­டுக்­கப்­பட்டு இருப்­ப­வர்­களே இன்று வரை­யி­லும் படை­யி­ன­ரா­க­வும் பொலி­ஸா­ரா­க­வும் தமிழ் மக்­கள் வாழும் பகு­தி­க­ளில் கட­மை­யாற்­று­கி­றார்­கள்.

2015ஆம் ஆண்­டில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட பின்­னர் இந்­தத் திட்­ட­மிட்ட சித்­தி­ர­வ­தைப் பொறி­மு­றைக்­குள் இருந்து அவர்­களை வெளியே கொண்­டு­வ­ரு­வ­தற்­கான பயிற்­சி­களோ, முறை­யான உள­வ­ளத்­து­ணையோ, சித்­தி­ர­வதை உத்­திக்­குப் பதி­லீ­டான மேம்­பட்ட தொழில்­நுட்ப அறி­வுப் புகட்­டலோ பெரி­ய­ள­வில் படை­யி­னர் மற்­றும் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­னும்­போது, அவர்­கள் தொடர்ந்­தும் சித்­தி­ர­வதை மற்­றும் பாலி­யல் வதையை தமது விசா­ரணை நுட்­ப­மாக, உத்­தி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தைக் கைவி­டு­வ­தற்கு எந்த முகாந்­தி­ர­மும் இல்லை. உண்­மை­யும் அது­தான்.

பொலி­ஸா­ரி­னா­லும் சில படைத்­து­றைப் புல­னாய்­வா­ளர்­க­ளா­லும் கைது செய்­யப்­பட்­டுத் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­ப­டு­ப­வர்­கள் சித்­தி­ர­வ­தை­க­ளுக்­கும் பாலி­யல் வதை­க­ளுக்­கும் உள்­ளா­கி­றார்­கள் என்­பது மறுக்­க­மு­டி­யாத உண்மை. அந்­தப் பொறி­முறை தொடர்­கின்­றது. அதில் கடந்த 2 வரு­டங்­க­ளில் எந்த வித மாற்­ற­மும் ஏற்­ட­வில்லை.

தற்­போ­தைய கூட்டு அர­சின் காலத்­தில் பொலி­ஸா­ரின் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் இளை­ஞர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டார். அதற்­காக பொலிஸ் அதி­காரி உட்­பட ச் சில பொலி­ஸார் நீதி­மன்­றத்­தால் குற்­ற­வா­ளி­கள் என்று அறி­விக்­கப்­பட்டு தண்­டனை பெற்­றுள்­ளார்­கள் என்­பதே அதற்­கான சான்று.

அரச படை­யி­ன­ரின் இது­போன்ற குற்­றங்­கள் தொடர்­பில் தொடர்ந்து குற்­றச்­சாட்­டுக்­கள் உள்­ளு­ரில் வந்­து­கொண்டே இருக்­கின்­றன. வைத்­தி­ய­ரத்ன சொல்­வ­தைப் போன்று புலம்­பெ­யர்ந்து தஞ்­சம் பெறு­வ­தற்­காக யாரோ ஒரு சிலர் தம்­மைத் தாமே காயப்­ப­டுத்­திக் கொள்­வ­தும் நடக்­கத்­தான் செய்­கி­றது. அதை­யும் மறுப்­ப­தற்­கில்லை.

ஆனால் அந்த ஒன்­றி­ரண்டு உதா­ர­ணங்­க­ளுக்­காக அரச கட்­ட­மைப்­பில் திட்­ட­மிட்டு இயங்­கும் சித்­தி­ர­வ­தைப் பொறி­மு­றையை இல்லை என்று சாதிப்­பது முழுப் பூசணிக்­காயை சோற்­றுக்­குள் மறைக்க முயற்­சிப்­ப­தற்கு ஒப்­பா­னது.

எனவே இது­போன்ற குற்­றச்­சாட்­டுக்­கள் எழுப்­பப்­ப­டும்­போது விரி­வான விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்கு அரசு முன்­வ­ர­வேண்­டும், குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிக்­க­வேண்­டும். அதன் மூலம் மட்­டுமே திட்­ட­மிட்ட சித்­தி­ர­வ­தைப் பொறி­மு­றையை உடைக்க முடி­யும் இந்த அர­சால்.

அவ்­வா­றில்­லாமல் எந்­த­வி­சா­ர­ணை­யும் இன்றி எழுந்­த­மா­ன­மாக மறுப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. கொழும்பு அர­சின் இத்­த­கைய போக்­கால்­தான் உள்­ளுர் விசா­ர­ணைப் பொறி­மு­றை­கள் மீது தமிழ் மக்­கள் எப்­போ­தும் நம்­பிக்கை வைப்­ப­தில்லை. உண்­மைக்­கும் நீதிக்­கு­மான பன்­னாட்டு அமைப்­பின் தலை­வர் யஸ்­மின் சூக்கா மிக அழ­கா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

“அறிக்கை வெளி­யாகி ஒரு­வா­ரத்­திற்­குள் நம்­ப­கத்­தன்­மை­யுள்ள விசா­ரணை ஒன்றை இலங்கை அரசு நடத்­தி­யி­ருக்­கும் என்­பதை ஏற்க முடி­யாது. நீதிப் பொறி­முறை குறித்த இலங்கை அர­சின் இத்­த­கைய நிலைப்­பா­டு­கள் கார­ண­மா­கத்­தான் போரி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எந்­த­வொரு உள்­ள­கப் பொறி­மு­றை­யை­யும் நிரா­க­ரிக்­கி­றார்­கள்.”

http://newuthayan.com/story/48307.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.