Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர­டங்கு தளர்த்­தப்­பட்டு முப்­படை, பொலிஸ் அதிரடிப்படையின் கட்­டுப்­பாட்டில் கிந்­தோட்டை

Featured Replies

ஊர­டங்கு தளர்த்­தப்­பட்டு முப்­படை, பொலிஸ் அதிரடிப்படையின் கட்­டுப்­பாட்டில் கிந்­தோட்டை

 

பாது­காப்பு உறுதி; 19 பேர் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)

காலி, - கிந்­தோட்டை பகு­தியில் சிங்­கள –- முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட முறுகல் நிலைமை வன்­மு­றை­யாக மாறி­யதால் நில­விய பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்­சு­றுத்தல் ஆகி­யன கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழ­மை­களில் இரவு நேரத்தை மையப்­ப­டுத்தி பிறப்­பிக்­கப்பட்ட ஊர­டங்கு உத்­தர­வும் தளர்த்­தப்பட்டு, பொலிஸார், பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் மற்றும் முப்­ப­டை­யி­னரின் பூரண கட்­டுப்­பாட்­டுக்குள் கிந்­தோட்டை பகு­தியை கொண்டு வந்­துள்­ள­தா­கவும் பிர­தே­சத்தின் பாது­காப்பை உறுதி செய்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர

கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

இந்த வன்­மு­றைகள் தொடர்பில் இரு சமூ­கங்­க­ளையும் சேர்ந்த 19 பேரைக் கைது செய்­துள்­ள­தா­கவும் அவர்கள் 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் காலி பதில் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டு இம்­மாதம் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இந் நிலையில் இந்த வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் அர­சியல், அடிப்­ப­டை­வாத இலா­பங்கள் இருக்­கலாம் என சந்­தே­கிக்கும் பொலிஸார் அது தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ. எப்.யூ. பெர்­ணான்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும், தொடர்­பு­டைய, உதவி ஒத்­தாசை வழங்­கிய பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்ட அத்­தனை பேருக்கும் எதி­ராக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­க­ப்படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 கிந்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கிந்­தோட்டை மேற்கு, கிந்­தோட்டை கிழக்கு, குருந்­து­வந்த, மஹ ஹப்­பு­கல, வெலி­பிட்டி மோதர, உக்­வத்த, பிய­தி­கம ஆகிய 7 கிரா­ம­சே­வகர் பிரி­விலும் பிர­தான மற்றும் குறுக்கு வீதி­களில் பாது­காப்பு படை­யி­னர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறு அறி­வித்தல் வரை 10 அடிக்கு ஒரு பாது­கப்பு வீரர் வீதம் போடப்பட்­டுள்ள இந்த கலப்பு பாது­காப்பு கட்­ட­மைப்பில் மாற்­றங்­களோ அல்­லது அவற்றை மீளப் பெறு­வது தொடர்­பிலோ நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­மாட்­டாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க கேச­ரி­யிடம் தெரி­வித்தார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 வன்­மு­றைகள் மேலும் வள­ராமல் தடுப்­ப­தற்­காக இந்த பாது­க­பபு கட்­ட­மைப்பு தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். இந்த வன்­முறைகள் தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி­பரட் எப்.யூ. பொர்­னான்­டோவின் நேரடி கட்­டப்­பாட்டில் காலி பொலிஸ்மா அதிபர் சந்­தன அழ­க­கோனின் கீழ் முழு­மை­யான விசா­ர­ணை­களை நடத்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.அதன்­படி இந்த வன்­மு­றை­களின் பின்­ன­னியில் அடிப்­ப­டை­வாத சத்­திகள் தமது இலக்­கு­களை அடைந்து கொள்ள எத்­த­னித்­துள்­ளமை ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அர­சியல் நோக்­கங்­களும் இதன் பின்­ன­ணியில் இருக்­கலாம் என்ற நியா­ய­மான சந்­தே­கங்கள் உள்­ள­தா­கவும் இந்த வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

பொலிஸ் தக­வல்­களின் பிர­காரம் இந்த வன்­மு­றைகள் தொடர்பில் அறிய முடி­வ­தா­வது,

 கடந்த 13 ஆம் திகதி கிந்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மஹ ஹப்­பு­கல பகு­தியில் விபத்துச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. சிங்­கள இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்­கில் குழந்தையுடன் சென்ற முஸ்லிம் பெண் மீது மோதி­யதில் அம்­மூ­வரும் காய­ம­டைந்­துள்­ளனர். இதன்­போது அம்­மூ­வ­ருமே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். முதலில் மோட்டார் சைக்­கிளை செலுத்தி வந்த இளைஞன் வைத்­தி­ய­சா­லையில் இருந்து வெளி­யே­றி­யுள்ள நிலையில் அவரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். பின்னர் குறித்த பெண்ணும் பிள்­ளையும் பொலிஸ் நிலையம் சென்று விட­யத்தை சமா­தா­ன­மாக முடித்­துக்­கொன்­டுள்­ளனர். இது தொடர்பில் காய­ம­டைந்த பெண்­ணுக்கும், பிள்­ளைக்கும் 25 ஆயிரம் ரூபா நட்ட ஈடும் வழங்­கப்பட்­டுள்­ளது.

 இந் நிலையில், கடந்த 16 ஆம் திகதி முஸ்லிம் இளை­ஞர்கள் இருவர் மோட்டார் சைக்­கிளில் பய­ணிக்கும் போது, கிந்­தோட்டை விதா­ன­கம பகு­தியில் வைத்து சிங்­கள இளை­ஞர்கள் சிலரால் தாக்­கப்­பட்­டுள்­ளனர். 13 ஆம் திகதி இடம்­பெற்ற விபத்து மற்றும் அதனை தொடர்ந்து இடம்­பெற்ற சட்ட நட­வ­டிக்­கை­களை மையப்­ப­டுத்­தியே இந்த தாக்­குதல் நடத்­தப்பட்­ட­தாக கூறப்­பட்ட போதும் 13 ஆம் திகதி விபத்­துடன் தொடர்­பு­டைய எவரும் அந்த தக­கு­த­லுடன் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை என பொலிஸார் தெரி­வித்­தனர்.

 16 ஆம் திகதி மாலை வேளையில் முன்னள் பிர­தேச சபை உறுப்­பி­ன­ரான மொஹம்மட் அசீம் ஹுசைன் சியாம் அல்­லது கியாஸ் என­ப்படும் நபர் சில­ருடன் சேர்ந்து சென்று சிங்­கள சமூ­கத்­தி­ன­ருக்கு சொந்­த­மான இரு வீடுகள் மீது தக­குதல் நடாத்­தியதாக கூறப்படுகின்றது. இதில் ஒருவர் காய­ம­டைந்த நிலையில் நிலைமை மோச­மா­வதை அறிந்த பொலிஸார் கியாசை உடன் கைது செய்­துள்­ள­துடன் பிர­தே­சத்தின் பாது­காப்பையும் பலப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

 இந் நிலையில் 17 ஆம் திகதி காலை பொலிஸார், மோட்டார் சைக்­கிளில் சென்ற முஸ்லிம் இளை­ஞர்­களை தாக்­கிய இரு­வ­ரையும் கைது செய்­துள்­ளனர். அவர்கள் இரு­வ­ரையும், சிங்­கள வீடுகள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்பில் கைதான கியாஸ் என்­ப­வ­ரையும் பொலிஸார் காலி நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்து இன்று 20 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர். தண்­டனை சட்டக் கோவையின் விதி விதாங்­க­ளுக்கு அமை­வாக இவர்கள் மூவரும் மன்றில் ஆஜர் செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

 இந் நிலையில் 17 ஆம் திகதி கிந்­தோட்டை பகு­தியில் நில­விய நிலைமை சுமுக நிலையை எட்­டி­யி­ருந்­த­தாக நம்­பப்­பட்­டது. இவ்­வா­றான பின்­ன­ணியில் அன்­றைய தினம் இரவு 7.30 மணிக்கு அங்கு வன்­மு­றைகள் பாரிய அளவில் பதி­வாக ஆரம்­பித்­தன. கிந்­தோட்டை தூபா­ராம விகா­ரையில் சிங்கள குழு­வொன்று ஒன்று கூடி­யுள்­ளது. அன்று இரவு கிந்­தோட்டை முழுதும் வன்­மு­றைகள் பதி­வா­கின. இத­னை­ய­டுத்தே இரவு ஊர­டங்கு உத்­தரவு அப்­பி­ர­தே­சத்தில் அமுல் செய்­யப்பட்­டது.

எனினும் அந்த வன்­மு­றைகள் கார­ண­மாக இரு பள்­ளி­வா­சல்கள், 66 இற்கும் மேர்­பட்ட வீடுகள், 14 வரை­யி­லான வாகங்கள் மற்றும் 23 இற்கும் மேற்­பட்ட வியா­பார நிலை­யங்கள் என்­பன அடித்தும் எரித்தும் நாச­மாக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலையில் இவ்­வன்­மு­றைகள் தொடர்பில் பொலிஸார் 19 பேரை 17 ஆம் திகதி இர­வோ­டி­ர­வாக கைது செய்­தனர். அவர்­களில் 16 சிங்­க­ள­வர்­களும் 3 முஸ்லிம்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந் நிலை­யி­லேயே ஏனை­யோரைக் கைது செய்ய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­­களில் சேத விப­ரங்கள் மற்றும் வாக்கு மூலங்­களை பதிவு செய்ய தனியான சிறப்பு பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சேதங்கள் மற்றும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த அடிப்படைவாத வன்முறைகளின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள், உதவி ஒத்தாசைகள் புரிந்தவர்கள் , இன கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதற்காக எம்மிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கைகள், பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்கள் என்பன ஆராயப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.