Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டர்கள் தாக்கியபோது பாதுகாப்பு தரப்பினர் வேடிக்கை பார்த்தனர்

Featured Replies

குண்டர்கள் தாக்கியபோது பாதுகாப்பு தரப்பினர் வேடிக்கை பார்த்தனர்

 

படை­யினர் மீது நம்­பிக்­கை­யில்லை ; கிந்­தோட்டை முஸ்­லிம்கள் குற்­றச்­சாட்டு
(எம்.பி.எம்.பைறூஸ்)

பொலி­ஸாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க, அவர்கள் முன்­னி­லை­யி­லேயே குண்­டர்கள் தமது வீடு­களைத் தாக்­ கி­ய­தாகக் குற்­றஞ்­சாட்டும் கிந்­தோட்டை பிர­ தேச முஸ்லிம் மக்கள், பிர­தே­சத்தில் பதற்­ற­மான சூழ்­நிலை நில­விய நிலையில் பாது­காப்புப் படை­யி­னரை பின்­வாங்கச் செய்­து­விட்டே இந்தத் தாக்­குதல் முஸ்­லிம்கள் மீது  நடத்­தப்­பட்­ட­தா­கவும் விசனம் தெரி­வித்­தனர்.  

அவ்­வா­றெனில் இதன் பின்­ன­ணியில் செயற்­பட்ட மறை­கரம் யார் என்­பதை கண்­ட­றிந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர். காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ ப­வங்­களைத் தொடர்ந்து அப் பகு­திக்கு விஜ

யம் செய்த பிர­தமர்,

 அமைச்­சர்கள் பொலிஸ் மா அதிபர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ரி­டமே பாதிக்­கப்­பட்ட மக்கள் நேரில் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர்.

இதன்­போது இப் பிர­தேச மக்கள் மேலும் கருத்து தெரி­விக்­கையில், இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களும் பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­களும் இருப்­ப­தா­கவே நாம் நம்­பு­கிறோம். இப் பகு­தியில் கடந்த சில நாட்­க­ளாக இடம்­பெற்ற சம்­ப­வங்கள் கார­ண­மாக நாம் அச்­சத்­தி­லேயே காலத்தைக் கடத்­தினோம். பிர­தே­சத்தில் பதற்றம் நில­வி­யதைத் தொடர்ந்து வியா­ழக்­கி­ழமை முதல் பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இதனால் முஸ்­லிம்கள் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நம்­பினர்.

இந் நிலை­யி­லேயே வியா­ழக்­கி­ழமை மாலை பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் திருப்­பி­ய­ழைக்­கப்­பட்­டனர். ஓரிரு சந்­தி­களில் மாத்­திரம் சிலர் கட­மையில் இருந்­தனர். இரவு 7.30 மணி­ய­ளவில் சுமார் 200 பேர­டங்­கிய குண்­டர்கள் கிந்­தோட்­டை­யின பல பகு­தி­க­ளுக்­குள்ளும் புகுந்து முஸ்­லிம்­களின் வீடு­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தினர்.

நாம் இவர்­களைத் தடுத்து நிறுத்தி எமது வீடு­க­ளையும் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் பாது­காக்­கு­மாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்ட போதிலும் பொலி­சாரோ இரா­ணு­வத்­தி­னரோ தமது கட­மையைச் செய்ய முன்­வ­ராது வேடிக்கை பார்த்­தனர். சுமார் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக எமது பகு­தி­களில் நின்று ஒவ்­வொரு வீடு­க­ளிலும் இரு­பது நிமி­டங்­க­ளுக்கும் மேல் தரித்து நின்று தாக்­குதல் நடத்­தினர்.

தாக்­குதல் நடத்த வந்­த­வர்­களின் பிர­தான நோக்கம் எமது பணத்­தையும் நகை­க­ளையும் பெறு­ம­தி­மிக்க பொருட்­க­ளையும் கொள்­ளை­ய­டிப்­ப­தாகும். நாங்கள் எங்கள் வீடு­க­ளுக்குள் உயி­ருக்கு அஞ்சி மறைந்­தி­ருந்த நிலையில் எங்கள் கண் முன்­னா­லேயே கொள்­ளை­ய­டித்துச் சென்­றனர். தள­பா­டங்­களை உடைத்து நொறுக்­கினர். வாக­னங்­களைத் தீயிட்டுக் கொளுத்­தினர். சில­ரது கழுத்தில் கத்­தி­களை வைத்து கொல்லப் போவ­தாக அச்­சு­றுத்­தினர்.

இத்­தனை சம்­ப­வங்கள் நடந்த போதிலும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பொலி­சாரும் வேடிக்கை பார்த்தமையும் பதற்றமான சூழல் நிலவிய போதிலும் திடீரென பாதுகாப்பு படையினர் வாபஸ் பெறப்பட்டமையும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கிந்தோட்டை பிரதேச முஸ்லிம்கள் மேலும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-20#page-1

  • தொடங்கியவர்

முஸ்லிம் மக்கள் மீது மீண்டும் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான வன்­முறை

 

முஸ்லிம் மக்­களை இலக்கு வைத்து மீண்டும் ஒரு தடவை காட்­டு­மிராண்­டித்­த­ன­மான வன்­முறை கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளது. காலி, கிந்­தோட்­டையில் வெள்­ளிக்­கி­ழமை இரவு சிங்­கள இன­வாத சக்­திகள் மேற்­கொண்ட வன்­மு­றையில் முஸ்லிம் மக்­க­ளது 2 பள்­ளி­வா­சல்கள், 66 வீடுகள், 26 வர்த்­தக நிலை­யங்கள், 12 வாக­னங்கள் மற்றும் 4 மோட்டார் சைக்­கிள்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

இரவு 8.30 மணி­ய­ளவில் கிந்­தோட்டை பிர­தே­சத்­திற்­குட்­பட்ட ஹிழுர் பள்­ளி­வாசல் வீதி, அம்­பிட்­டிய குருந்­து­வத்தை, எலப்­ப­ட­வீதி, மஹ­க­பு­கல, உக்­வத்த சந்தி ஆகிய பிர­தே­சங்­க­ளுக்குள் புகுந்த 200 க்கும் மேற்­பட்­ட­வர்­களை கொண்ட கும்பல் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள், வாக­னங்கள் என்­ப­வற்றை அடித்து நொறுக்­கி­ய­துடன் பெற்றோல் குண்­டு­களை வீசி தாக்­கு­த­லையும் நடத்­தி­யுள்­ளது. வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள், வாக­னங்­க­ளையும் எரி­யூட்­டி­யுள்­ளது.

இரு குழுக்­க­ளாக முஸ்லிம் பிர­தே­சங்­க­ளுக்குள் நுழைந்­த­வர்கள் முஸ்­லிம்­களின் வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களில் கொள்­ளை­ய­டித்­துள்­ளனர். இந்தத் தாக்­குதல் சம்­ப­வத்தில் 7 பேர் காய­ம­டைந்து கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். பௌத்த பிக்­கு­களும் சிங்­கள இளைஞர் குழு­வி­னரும் இணைந்து மேற்­கொண்ட இந்த வன்­முறைத் தாக்­குதல் சம்­ப­வத்­தினால் கிந்­தோட்டை பகுதி முஸ்லிம் மக்கள் பெரும் பதற்­றத்­திற்கு உள்­ளா­ன­துடன் இடம்­பெயர்ந்து பொது இடங்­களில் தங்­க­வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டி­ருந்­தது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கிந்­தோட்டை விதா­ன­கொட பிர­தே­சத்தில் கைக்­கு­ழந்­தை­யுடன் வீதியில் நடந்து சென்ற முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த ஒருவர் மோதி­யுள்ளார். அவ்­வி­பத்து இடம் பெற்­ற­வே­ளையில் அசம்­பா­விதம் எதுவும் இடம்­பெ­றாத போதும் அதன் தொடர்ச்­சி­யாக வியா­ழக்­கி­ழமை இரவு அப்­ப­கு­தியில் அமை­தி­யற்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. முஸ்லிம் இளை­ஞர்கள் சில­ருக்கும் சிங்­கள இளை­ஞர்கள் சில­ருக்­கு­மி­டையில் பரஸ்­பரம் தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பாட்டை தீர்ப்­ப­தற்கு பொலிஸார் முயற்சி எடுத்த வேளையில் அப்­ப­கு­தியைச் சேர்ந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் வெள்­ளிக்­கி­ழமை காலை 10 மணி­ய­ளவில் தூபா­ராம விகா­ர­ரையின் பிர­தம மத­குரு தலை­மையில் பொலிஸ் நிலையம் சென்ற சிங்­கள இளைஞர் குழு­வினர் நாங்கள் சமா­தா­னத்­திற்கு தயா­ரில்லை என்று தெரி­வித்து வெளி­யே­றி­யுள்­ளனர். அன்­று­மாலை 4 மணி­யளவில் தூபா­ராம விகா­ரா­தி­ப­தியின் தலை­மையில் விகா­ரையில் கூட்டம் ஒன்று நடை­பெற்­றுள்­ளது. இந்­தக்­கூட்­டத்தில் சில பிக்­கு­மார்­களும் வெளிப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து வருகை தந்த சிங்­கள இளை­ஞர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதன் தொடர்ச்­சி­யாக வெள்­ளிக்­கி­ழமை இரவு சில பிக்­கு­மார்­களும் சிங்­கள இளை­ஞர்­களும் முஸ்­லிம்கள் வாழும் குடி­யி­ருப்­புக்­க­ளுக்குள் புகுந்து காட்­டு­மிராண்­டித்­த­ன­மான வன்­மு­றையில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்த தாக்­குதல் சம்­ப­வத்­தி­னா­லேயே பெரு­ம­ளவு பொருட்­சே­தங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தாக்­குதல் சம்­ப­வத்தை அடுத்து விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர், பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தினர் குவிக்­கப்­பட்­ட­துடன் அங்கு ஊர­டங்­குச்­சட்­டமும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த சம­யமும் தமது சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்­ட­தாக அப்­ப­கு­தியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளனர்.

சம்­ப­வத்தை அடுத்து அப்­ப­கு­திக்கு அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா உட்­பட பலரும் சென்று இரு­த­ரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவும் ஸ்தலத்­திற்கு விஜயம் செய்து நிலை­மை­களை பார்­வை­யிட்­ட­துடன் இரு ­த­ரப்­பினர் மத்­தி­யிலும் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இத­னை­விட சனிக்­கி­ழமை மாலை அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன தலை­மையில் காலி செய­ல­கத்தில் சம­ரச கலந்­து­ரை­யா­டலும் இடம்­பெற்­றது. இதில் முப்­படை பிர­தா­னிகள் உட்­பட இரு­த­ரப்பு பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டனர். பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞானசார தேரர், ராவணா அமைப்பின் செய­லாளர் இந்­த­கந்த சத்தா திஸ்ஸ தேரர் ஆகி­யோரும் இந்­தக்­கூட்­டத்தில் பங்­கேற்­றுள்­ளனர்.

குறித்த பிரச்­சி­னையை சம­ர­ச­மாக தீர்த்து கொள்­வ­தற்கும் எதிர்­கா­லத்தில் இத்­த­கைய சம்­ப­வங்­கள் நடை­பெ­றாது தடுப்­ப­தற்­கான வழி­வ­கை­களை மேற்­கொள்­வ­தற்கும் இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது. காலி கிந்­தோட்­டையில் நடை­பெற்ற முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான இந்த வன்­முறைச் சம்­ப­வ­மா­னது சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் பெரும் அச்­ச­நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் சிறு­பான்­மை­யின மக்கள் மீதான திட்­ட­மிட்ட வன்­முறைகள் அரங்­கேற்­றப்­படும் செயற்­பா­டுகள் தொடர்பில் பெரும் கவலை தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்ட வகையில் வன்­முறைகள் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தன. பொது­பல­சேனா உட்­பட பல இன­வாத அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­ட­துடன் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. தம்­புள்ளை பள்­ளி­வாசல் முதல் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரையில் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது.

 இதன் உச்­ச­க்கட்­ட­மாக தர்­கா­நகர், அளுத்­த­கம, பேரு­வளை ஆகிய பகு­தி­களில் முஸ்லிம் மக்கள் மீது வன்­மு­றைத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இதனால், முஸ்லிம் மக்­களின் சொத்­துக்கள் சேத­மாக்­கப்­பட்­ட­துடன் சூறை­யா­டப்­பட்­டி­ருந்­தன. திட்­ட­மிட்­ட­வ­கையில் பொது­ப­ல­சே­னாவின் கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு அங்கு அனு­மதி அளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே இந்த வன்­மு­றைச்­ சம்­பவம் அரங்­கேற்­றப்­பட்­டது. இத்­த­கைய வன்­முறை கார­ண­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு நாட்டில் பாது­காப்­பில்லை என்ற நிலைமை அப்­போது ஏற்­பட்­டி­ருந்­தது.

இத­னை­விட ஹலால் சான்­றிதழ் விவ­கா­ர­மா­னது பெரும் சர்ச்­சை­யாக்­கப்­பட்டு அதனை இரத்து செய்­வ­தற்­கான முயற்­சி­களும் எடுக்­கப்­பட்­டன. பேரு­வளை, தர்­கா­நகர், அளுத்­கம பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளினால் முஸ்லிம் மக்­களின் சொத்­துக்கள் முழு­மை­யா­கவே சூறை­யா­டப்­பட்­டி­ருந்­தன.

இத்­த­கைய வன்­மு­றைகள் கார­ண­மா­கவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்கு எதி­ராக முஸ்லிம் மக்கள் உட்­பட சிறு­பான்­மை­யின மக்கள் அணி­தி­ர­ள­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­த­தை­ய­டுத்து சிறு­பான்மை மக்கள் மீதான இன­வாத சக்­தி­களின் வன்­மு­றைச்­சம்­ப­வங்கள் முற்­றாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் கடந்த சில மாதங்­க­ளா­கவே மீண்டும் இன­வாத சக்­திகள் சிறு­பான்­மை­யின மக்கள் மீதான வன்­முறை­களை தூண்டும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் கிழக்கு மாகா­ணத்தில் மட்­டக்­க­ளப்பில் பௌத்த பிக்­கு­களின் செயற்­பாடு கார­ண­மாக வன்­மு­றைகள் ஏற்படும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்­தே­ஞா­ன­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் மட்­டக்களப்­பிற்கு வாகனப் பேர­ணி­யாக செல்­வ­தற்கும் முயற்­சித்­தி­ருந்­தனர்.

இத­னை­விட அநு­ரா­த­புரம் பகு­தி­யிலும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் நட­வ­டிக்கை எடுத்தும் இருந்­தனர். இதன் தொடர்ச்­சி­யாக தற்­போது காலி, கிந்­தோட்டைப் பகு­தியில் மீண்­டு­மொ­ரு­த­டவை முஸ்லிம் மக்கள் மீது வன்­முறை கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

திட்­ட­மிட்­ட­வ­கையில் பௌத்த தேரர்கள் தலை­மையில் கூட்டம் நடத்­தப்­பட்டு முஸ்லிம் மக்­களின் பள்­ளி­வா­சல்கள் தொடக்கம் வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. சிறிய விபத்­தொன்­றினால் உரு­வான பிணக்கு பெரும் வன்­மு­றை­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே இத்தகைய வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறு வதற்கு நல்லாட்சி அரசாங்கமானது ஒருபோதும் இட மளிக்கக்கூடாது. முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாட்டின் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது தீர்ப்பை வழங்கியிருந்தனர். எனவே, நல்லாட்சி அரசாங்கமும் இத்தகைய வன்முறைகளை தூபம்போடுபவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவை தெரிவிக்கக்கூடாது.

தற்போதைய நிலையில் வன்முறைச் சம்பவம் தொடர்பில் 19 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வன்முறைச்சம்பவத்தில் ஈடுபட்ட சகலரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இதற்கு தூபம் இட்டவர்களும் தண்டிக்கப்படவேண்டும். இதனைவிட வன்முறையில் எரியூட்டப்­பட்ட மற்றும் சூறையாடப்பட்ட சொத்துக்களுக்கான நட்ட ஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கமானது உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மீண்டும் ஒரு வன்முறை இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-20#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.