Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வர்- ஆஸ்திரேலிய தூதுவர் இடையே சந்திப்பு

Featured Replies

 
வடக்கு முதல்வர்- ஆஸ்திரேலிய தூதுவர் இடையே சந்திப்பு
 
 

வடக்கு முதல்வர்- ஆஸ்திரேலிய தூதுவர் இடையே சந்திப்பு

 

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவர் பைரஸ் ஹட்ச்சன்
இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

http://newuthayan.com/story/51303.html

  • தொடங்கியவர்

டயலாக் ஊடாக பணப்பரிமாற்றம் – அவுஸ்ரேலிய அரசாங்கம் நிதியுதவி 

australia_CI.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

‘டயலொக் கைபேசி இணைப்பு ஊடாக பின்தங்கிய பகுதி மக்கள் பணப்பரிமாற்றல்களை மேற்கொள்ள அவுஸ்திரேலிய அரசு நிதி உதவி வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய தூதுவர் தன்னிடம் தெரிவித்தார் என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்ச்சனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையே இன்று முற்பகல் சந்திப்பு இடம்பெற்றது.  இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது:

‘மிகவும் பின்தங்கிய பிரதேச மக்கள. கைபேசி ஊடாக பணப்பரிமாற்றல்களைச் செய்யும் வசதியை டயலொக் தொலைபேசி இணைப்பு நிறுவனத்துடன் இணைந்து அவுஸ்திரேலிய அரசு முன்னெடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த இடங்களில் இந்த சேவையைப் பெறுவதற்கான அலுவலகங்கள் அமைக்கப்படும். யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் 200 இடங்களில் இந்தச் சேவை அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஏரிஎம் இயந்திரங்கள் ஊடாக பணத்தை மீளப்பெறுது போன்றும் சிடிம் இயந்திரங்கள் ஊடாகப் பணத்தை வைப்பில் இடுவது போன்றும் இந்த அலுவலகங்கள் ஊடாக கைபேசி இணைப்பின் ஊடாகப் பணத்தைப் பரிமாற்ற முடியும்’ என அவுஸ்திரேலியத் தூதுவர் தன்னிடம் கூறினார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/archives/52209

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கு சமஸ்டி வழங்காவிடின் தனி நாடு கோருவார்கள். – சி.வி.

viki-with-Australian-ambasider.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமஷ்டித் தீர்வை வழங்காவிடின்தான் தனிநாட்டை கோரும் அவசியம் தமிழர்களுக்கு ஏற்படும் என தான்  அவுஸ்திரேலியத் தூதுவரிடம் எடுத்துக்கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவுஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்ச்சன் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சந்திப்பின் நிறைவில்  சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

அவுஸ்திரேலியாவில் உள்ளூராட்சி அலகு, மாகாண அலகு மற்றும் சமஷ்டி முறைமையில் அரசாட்சி என அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு மாகாணங்களும் தங்களைத் தாங்கள் ஆளுகின்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தான் தமிழ் மக்கள் இங்கு கோருகின்றனர். அதற்கு ஒவ்வொரு அரசும் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளன.
சமஷ்டியை வழங்க மறுப்பதற்கு அவர்களின் அச்சநிலையும் காரணமாக அமைகின்றது.

சமஷ்டி அதிகாரப்பகிர்வைப் பெற்றுக்கொண்டு தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற அச்சம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு.

ஆனால் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வழங்காதுவிடின்தான் தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்குச் செல்வர். தமிழ் மக்களின் சுயாட்சிக்கு இடையூறு விளைவிக்காதுவிடின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் அவர்களுக்கு ஏற்படாது என தூதுவரிடம் எடுத்து கூறி இருந்தேன் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/52212

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.