Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீரற்ற காலநிலையால் சிவப்பு எச்சரிக்கை

Featured Replies

தாழமுக்க அனர்த்தம்! சுழல்காற்றினால் உடைமைகள் சேதம்!

 

தாழமுக்கம் காரணமாக தற்போது இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை, நுவரெலிய பகுதியிலும் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது.

13_Weather.jpg

கொழும்பு, தெஹிவளை பகுதியிலும் கடுமையான காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளில் மர முறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கொழும்பில் டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மஹரகம, தெஹிவளை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அடுத்த 24 மணி நேரம் வரை குறித்த காலநிலை தொடருமென்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை அவதான மத்திய நிலையம் எச்சரிக்கை

விடுத்துள்ளது.

 

 

பதினைந்து பேர் தேசிய வைத்தியசாலைகளில்!

நிலவும் அசாதாரண காலநிலையால், பதினைந்து பேர் தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16_Hospital.jpg

திடீரென வீச ஆரம்பித்த காற்று, அதனுடன் கூடிய கடும் மழை என்பவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இதுவரை பதினைந்து பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய போக்குவரத்து வசதிகளை உடனடியாகப் பெற முடியாததால், பாதிக்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ உதவிகளைப் பெற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

http://www.virakesari.lk/article/27690

 

 

 

சீரற்ற காலநிலையால் சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை வலுப்பெற்றுவருவதையடுத்து நாடளாவிய ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

15_Red_Alert.jpg

குறிப்பாக, நாட்டின் தென்பகுதிகளில் மழை, காற்று, வெள்ளம் என்பன ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மலைநாட்டில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

http://www.virakesari.lk/article/27689

அமைச்சர் உத்தரவு: பொலிஸ் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில்!

 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை தொடர்ந்து நீடித்தால், பொலிஸ் உத்தியோகத்தர்களை அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சட்ட ஒழுங்குகளுக்கான அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

12_Sagala.jpg

நாட்டில் திடீரென ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலை மேலும் தொடர்ந்தால், அங்கு உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் தனது பணிப்புரையில் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/27686

கடும் காற்றினால் நாட்டின் பல பகுதிகளிலும் சேதம்

நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதன் எதிரொலியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக் கூரைகளும் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது.

11_Wind.jpg

குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை ஆகிய தென் மாகாணப் பகுதிகளிலும் பதுளையிலும் சற்று முன் வீச ஆரம்பித்திருக்கும் கடும் காற்றினால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - காலி பிரதான வீதியில் அம்பலாங்கொடை அருகே மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் அப்பகுதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சில மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் கரையோர புகையிரதப் போக்குவரத்தும் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

தற்போது வீசிவரும் கடும் காற்று நாளை பகல் வரை வீசலாம் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/27685

  • தொடங்கியவர்

கொழும்பில் கடும் மழையுடனான சூறாவளி; சேத விபரங்கள் தெரியவில்லை!

 

கொழும்பில் கடும் மழையுடனான சூறாவளி; சேத விபரங்கள் தெரியவில்லை!

இலங்கையின் மேற்கே, தலை நகர் கொழும்பில் கடுமையான சூறாவளியும் மழையும் தாக்கியவண்ணமுள்ளன. இதனால் கொழும்பின் பல பாகங்களிலும் உள்ள பாரிய மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வீதியின் நடுவே முறிந்து வீழ்ந்துள்ளன.

முன்னதாக இன்று இரவு ஒன்பது மணியை அண்மித்த வேளையில் ஆரம்பமான இந்த குழப்பமான வானிலை பின்னர் கடும் மழையுடனான சூறாவளியாக மாறியுள்ளது.

கொழும்பின் பல பாகங்களிலிருந்தும் வருகின்ற தகவலின்படி, வீதியின் குறுக்கே பெரிய மரங்களும் மின்சாரத் தூண்களும் முறிந்துவீழ்ந்துள்ளன. இதனால் தலை நகர் கொழும்பில் ஒருவித பதட்ட நிலை தோன்றியுள்ளது.

கொழும்பில் கடும் மழையுடனான சூறாவளி; சேத விபரங்கள் தெரியவில்லை!

இதேவேளை இலங்கையை பாரிய சூறாவளி ஒன்று தாக்கும் என்று சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்திருந்த நிலையில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அதனை முற்றாக மறுத்திருந்தது. பாரிய புயல் மழை குறித்து நாட்டு மக்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லை என்று வளிமண்டலவியல் தினைக்களத்தின் பணிப்பாளர் அனுசா வர்ணசூரிய தெரிவித்திருந்தார்.

ஆனாலும் தற்பொழுது கொழும்பின் பல பாகங்களிலும் கடும் அனர்த்தம் நிலவக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் கடும் மழையுடனான சூறாவளி; சேத விபரங்கள் தெரியவில்லை!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Hurricane-in-Colombo

  • தொடங்கியவர்

தென்பகுதியை தாக்கிய மினி சூறாவளி

2-598b2bea481782253e850c1ee3f696a4d03481fe.jpg

 

கொழும்பு உட்பட பல மாவட்டங்களில் கடும் சேதம்; மின்சாரம் துண்டிப்பு : மரங்கள் முறிந்து வீழ்ந்தன; போக்குவரத்து ஸ்தம்பிதம்; இயல்புநிலை பாதிப்பு

 (ஆர்.யசி)

நாட்டில் நீடித்­து­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக தலை­நகர், தெற்கு உள்­ளிட்ட அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் கடுங்­காற்­றுடன் கூடிய கன­மழை பெய்­து­வ­ரு­கின்­றது. கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, காலி, மாத்தறை மற்றும் மலை­ய­கத்தின் பதுளை, நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளிலும் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்­திலும் கரை­யோர பகு­தி­களில் மணிக்கு 100 கிலோ­மீற்றர் வேகத்­திலும் காற்றின் வேகம் பதி­வா­கி­யுள்­ளது. நேற்று புதன்­கி­ழமை மாலை 7.00 மணிக்கு பின்­ன­ரான காலப் பகு­தியில் தலை­ந­கரை கடும் மழை­யு­ட­னான பெருங் காற்று ஆட்­கொண்­டி­ருந்­தது.

கொழும்பு டுப்­ளி­கேசன் மரம் முறிந்து விழந்­ததில் அப் பகு­தியில் போக்­கு­வ­ரத்து துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதே­போன்று தெஹி­வளை, பொல்­கஸ்­வோ­விட்ட, மாத்­தறை உள்­ளிட்ட பிர­தே­சங்­க­ளிலும் களுத்­துறை மத்­து­கம, பல்­லே­கொட தோட்டக் குடி­யி­ருப்­புக்­க­ளிலும் மரங்கள் வீழ்ந்­ததில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. மேலும் காலி வீதியில் போக்­கு­வ­ரத்தும் தடைப் பட்­டி­ருந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது.

மேலும் களனி பாலத்தில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த காரொன்றின் மீதும் மரம் முறிந்து வீழ்ந்­ததில் அங்கு போக்­கு­வ­ரத்து தடைப் பட்­டது.

அதே­போன்று புதுக்­கடை நீதி­மன்ற வளா­கத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்டி மீதும் மரம் முறிந்து வீழ்ந்­துள்­ள­தா­கவும் பாணந்­துறை ரயில் நிலை­யத்­திற்கு அருகில் மரங்கள் முறிந்து வீழ்ந்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

அத்துடன் தலைநகரில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதே­வேளை தென் பகு­தி­யிலும் ஏனைய பகு­தி­கலும் உள்­ளிட்ட கரை­யோர பிர­தே­சங்­களில் கடும் காற்று வீசி­யது. அத்­துடன் அத்­துடன் கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, காலி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை, பதுளை, இரத்­தி­ர­ன­புரி மற்றும் நுவ­ரெ­லியா உள்­ளிட்ட மவாட்­டங்­களின் அநே­க­மான பிர­தே­சங்­களில் மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் நேற்­றைய தினம் பொது மக்கள் பெரும் அசெ­ள­க­ரி­யத்தை எதிர்­கொண்­ட­துடன் அச்­சத்­துக்கும் உள்­ளா­கி­யி­ருந்­தனர்.

இக் கால­நி­லை­யா­னது எதிர்­வரும் வாரங்­களில் மிகவும் மோச­மான நிலைக்கு செல்லும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் கால­நிலை அவ­தான நிலையம் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

கடந்த இரண்டு தினங்­க­ளுக்கும் மேலாக நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் கன­ம­ழை­யுடன் கூடிய பெருங்­காற்­று­டான கால­நிலை நில­வி­வ­ரு­கின்­றது. குறிப்­பாக தலை­நகர் கொழும்­பிலும், களுத்­துறை, கம்­பஹா ஆகிய மாவட்­டங்­க­ளிலும் தெற்கின் காலி மாத்­தறை ஆகிய மாவட்­டங்கள் உள்­ளிட்ட பகு­தி­க­ளிலும் கன­மழை மற்றும் கடுங்­காற்று வீசி­யுள்­ளது. காலி மாத்­தறை ஆகிய பகு­தி­களில் நேற்று முன்­தினம் இரவில் இருந்து கன­மழை பெய்­த­துடன் நேற்­றைய தினம் கடுங்­காற்­றுடன் கூடிய மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

கொழும்பில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் பதி­வா­கி­யுள்­ள­துடன், தெஹி­வளை, கல்­கிசை, வத்­தளை ஆகிய பகு­தி­களை மின்­சாரம் தடைப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் மட்­டக்­குளி, முகத்­து­வாரம், வத்­தளை, பள்­ளி­யா­வத்தை போன்ற கரை­யோரப் பிர­தே­சங்­க­ளிலும் கிரேண்ட்பாஸ், கொட்­டாஞ்­சேனை, தெமட்­ட­கொடை, நவ­கம்­புர, புதுக்­கடை உள்­ளிட்ட குடி­யி­ருப்பு பிர­தே­சங்­க­ளிலும் கடும் மினி சூறா­வளி போன்று கடும் காற்று வீசி­யது. அத்­துடன் மரங்­களும் முறிந்து வீழ்ந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை வத்­தளை, களனி ஆகிய பகு­தி­களில் சில அனர்த்­தங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. மத்­து­கமை பல்­லே­கொடை தோட்­டத்தில் தொடர் குடி­யி­ருப்பு பகு­தி­க­ளிலும் மரம் முறிந்து வீழ்ந்­ததில் சேதங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. களுத்­துறை மாவட்­டத்தில் மேலும் சில பகு­தி­ளிலும் அனர்த்­தங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

மலை­ய­கத்தின் பல்­வேறு பகு­திகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக கொழும்பு பதுளை , கண்டி நானு­ஓய ஆகிய ரயில் சேவை நேற்­றைய தினம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. பதுளை நோக்கி பய­ணித்த புகை­யி­ரதம் நானு­ஓயா புகை­யி­ரத நிலை­யத்­துடன் நிறுத்­தப்­பட்­டதன் கார­ண­மாக பய­ணி­களும் அசௌ­க­ரி­யத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். பது­ளையில் இருந்து கொழும்பு நோக்­கிய புகை­யி­ரத சேவை­களும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன. அதேபோல் பல்­வேறு பகு­திளில் மண்­ச­ரி­வு­களும், மரங்கள் முறிந்து விழுந்­துள்­ளதை அடுத்து மலை­ய­கத்தின் சில உப வீதி போக்­கு­வ­ரத்தும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும் பதுளை, பண்­டா­ர­வளை, ஹப்­புத்­தளை உள்­ளிட்ட சில பகு­தி­களில் 150 மில்­லி­மீட்­ட­ருக்கும் அதி­க­மான மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. அடுத்த இரண்டு தினங்­க­ளுக்கு தெற்கு, சப்­ர­க­முவ, மத்­திய மற்றும் மேல் மாகா­ணங்­களில் 150 மில்­லி­மீற்றர் வரை­யி­லான மழை­வீழ்ச்சி பதி­வாகும் என எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பதுளை – மடுல்­சீமை பகு­தியில் உள்ள வீதி­யொன்றில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த உந்­து­ருளி மற்றும் முச்­சக்­கர வண்டி என்­ப­ன­வற்றின் மீது நேற்று மதியம் மர­மொன்று முறிந்து வீழ்ந்­துள்­ளது. இந்த அனர்த்­தத்தில் உந்­து­ரு­ளியில் பய­ணித்­தவர் பலி­யா­ன­துடன், முச்­சக்­கர வண்டிச் சாரதி காய­ம­டைந்த நிலையில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

மலை­ய­கத்தில் பெய்து வரும் கன­மழை கார­ண­மாக மேல் கொத்­மலை மின்­சார சபைக்கு நீரேந்தும் பகு­தியில் ஆற்று நீரின் மட்டம் உயர்­வ­டைந்­துள்­ளது. இதனால், மேல் கொத்­மலை நீர்த்­தேக்­கத்தின் வான்­க­தவு ஒன்று நேற்று திறந்து விடப்­பட்­டது. விக்­டோ­ரியா, ரந்­த­னி­களை, காசல்ரீ, ல­க்ஷ­பான ஆகிய நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்­டமும் அதி­க­ரிக்கும் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக நீர்த்­தேக்­கத்­தினை அண்­மித்து தாழ் நிலப்­ப­கு­தி­களில் வாழும் மக்கள் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கரை­யோர மாவட்­டங்­களில் காற்றின் வேகம் மணிக்கு 90-100 கிலோ­மீட்டர் வரையில் வீசி­யுள்­ளது. கடல்­காற்றின் வேகம் கன­மாக உள்­ளதை அடுத்து கட­லுக்கு செல்­வதை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு கடற்­தொ­ழி­லாளர் மற்றும் கடற்­படை சமூ­கத்­திற்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது. இந்த நிலைமை நாளை மாலை வரை தொடரும் என வானிலை அவ­தான நிலையம் குறிப்­பிட்­டுள்­ளது.

தேசிய கட்­டிட ஆய்வு மையத்­தினால் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக மலை­ய­கத்தின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை காலம் மேலும் நீடிக்­கப்­பட்­ட­தாக அந்த நிலையம் குறிப்­பிட்­டுள்­ளது. மாத்­தறை மற்றும் கண்டி மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை மேலும் 12 மணித்­தி­யா­ளங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் நிலவும் தொடர்ச்­சி­யான மழை கார­ண­மாக நாட்டின் மலைப்­பாங்­கான பகு­தி­களில் வாழும் மக்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கால­நிலை அவ­தான நிலையில்.

இடி­யுடன் கூடிய கன­மழை மற்றும் கட­லோர பகு­தி­களில் காற்றின் வேகமும் அதி­க­ரிக்கும் என கால­நிலை அவ­தான நிலையம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. எனவே நிலவும் கால­நிலை குறித்து மக்கள் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும் அறி­வு­றுத்­தல்­களை அவ­தா­னிக்­கு­மாறும் பொது­மக்கள் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். குறிப்பாக் கடற்­காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோ­மீட்டர் வரையில் வீசும் சத்­தியம் உள்­ளதை அடுத்து அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துகொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்.

காலநிலை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளதை அடுத்து மலையக, கடையோர மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மலையகத்தின் சில பகுதிகளுக்கும், கரையோர பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழகதின் சென்னை, மற்றும் கேரளா பகுதிகளில் காலநிலை மோசமடைவதுடன் வெள்ளபெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அந்தமான், நிக்கோபார் மற்றும் இலங்கை தீவுகளுக்கும் இதன் தாக்கம் ஏற்படும் எனவும் அமெரிக்காவின் காலநிலை முன்னறிவிப்பு மையம் இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க மாலை சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த யூ.எல்.124 மற்றும் பங்களூரிலிருந்து வந்த யூ.எல்.172 ஆகிய விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-30#page-1

  • தொடங்கியவர்

அடுத்த வாரம் புயல் காற்று இலங்கையைத் தாக்கும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அடுத்த வாரம் புயல் காற்று இலங்கையைத் தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதிலும் இலங்கையில் கடுமையான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காற்றழுத்த நிலையினால் இலங்கையை அடுத்த வாரமளவில் புயல் காற்று தாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோசமான காலநிலையினால் அடுத்த வாரம் மண்சரிவு  மற்றும் மழை வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/52262

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சீரற்ற காலநிலை : நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பு - இதுவரை கிடைத்த விபரங்கள் இதோ: 

 

 
 

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுவரை கிடைத்த விபரங்கள் இதோ: 

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக இதுவரை 04 பேர் பலி, 17 பேர் காயம், 5 பேர் மாயமாகியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அகுரல பிரதேசத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 07 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.

மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம்,  ஊவா மாகாணம்,  ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரேலியா, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக கொழும்பு - பதுளை வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹப்புத்தளை - பேரகலை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தால் குறித்த வீதியில் போக்கு வரத்து தடையேற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி வந்த இரண்டு விமானங்கள் காலநிலை சீரின்மையால் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பதுளை பண்டாரவளை பகுதியில் மண்மெடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தெற்கு, சபரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சுமார் 100 முதல் 150 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என, தேசிய பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27700

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.