Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார்தான் அந்தத் திருடர்?

Featured Replies

 
Hinndu-article-636x400.jpg
 
 
 

யார்தான் அந்தத் திருடர்?

அதி­கா­ரத்­தில் இருக்­கும் அர­சொன்று, பொறுமை காக்க இய­லாத அள­வுக்கு ஒழுங்­கு­மு­றை­யற்ற ஊழல், அடக்­கு­மு­றைச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­மா­னால், நாட்டு மக்­கள் தமது வாழ்க்­கை­யையே பண­யம் வைத்­தா­வது, குறித்த அந்த அர­சைப் பத­வி­யி­னின்­றும் அகற்­றி­வி­டு­கிறார்கள். அதன்­பின்­னர் தம்­மால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் புதிய ஆட்­சித் தரப்­பி­ன­ரூ­டாக முன்னைய அர­சின் அமைச்­சர்­கள் மற்­றும் அதி­கா­ரி­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட ஊழல்­கள் மற்­றும் மோச­டி­கள் தொடர்­பான செயற்­பா­டு­க­ளுக்­காக அவர்­களை உரிய வகை­யில் தண்­டிக்­கும் வரை நாட்டு மக்­கள் பொறு­மை ­காத்து புதிய அர­சின் செயற்­பா­டு­களை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

ஆனால் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளது நியா­ய­மற்ற செயற்­பா­டு­க­ளுக்­கான தண்­டனை புதிய ஆட்­சி­யா­ளர்­க­ளால் பெற்­றுக் கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை என்­பது கசப்­பா­ன­தொரு உண்­மை­யா­கும். தாம­தித்த செயற்­பா­டு­க­ளால் அத்­த­கைய எதிர்­பார்ப்­புக்­கள் காலப்­போக்­கில் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய அணு­கு­முறை நியா­ய­மா­ன­து­தானா? நியா­ய­மற்ற விதத்­தில் தம்­மி­டம் இ­ருந்து வலோற்­கா­ர­மா­கக் கைப்­பற்­றப்­பட்ட தமது சொந்த நில­பு­லன்­கள் மீண்­டும் தமது கைக­ளுக்கு ஏதோ ஒரு வகை­யில் வந்­து­சே­ரும்– கிடைக்­கும் என அந்த மக்­கள் தரப்பு எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­றது.

ஆனால் அவர்களது அத்­த­கைய எதிர்­பார்ப்பு நிறை­வே­று­வ­தற்­கான அறி­குறி எத­னை­யும் அவ­தா­னிக்க முடி­ய­ வில்லை. இது நியா­ய­மா­ன­ தொன்­று­தானா? தேசி­யத்­து­வம், கட்­சித் தரப்­புக்­கள், சாதக பாத­க­மான விமர்­ச­னங்­கள் என்ற இவை­யெல்­லா­வற்­றுக்­கும் மேலாக, அங்கு இனத்­துவ அடிப்­படை முன்­னிலை வகிப்­ப­தால் மேற்­கூ­டி­ய­வை­யெல்­லாம் அடி­பட்­டுப் போகின்­றன.
மேற்­கு­றிப்­பிட்ட கருத்து வெளிப்பாடு ‘தாரியோ போ’ என்­ப­வ­ரது (Accidental Death of an Anarchist) அக்­சி­டென்­ரல் டெத் ஒவ் அன் அனா­சிஸ்ட் என்ற நூலில் குறிப்­பிட்­டுள்ள ஒன்­றா­கும்.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக ரணில் தாமாக முன்வந்து சாட்சியமளிப்பு

கடை­சி­யில் தலைமை அமைச் சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மத்­திய வங்­கி­யின் பிணை­முறை ஊழல் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­கென அரச தலை­வர் நிய­மித்த ஆணைக்­குழு முன்­னி­லை­யில் முன்­னி­லை­யா­கிச் சாட்­சி­ம­ளித்துள்­ளார். அவர் ஆணைக்­குழு முன்­னி­லை­ யில் முன்­னி­லை­யாக முன்­ன­ரும், முன்­னி­லை­யா­கிய வேளை­யி­லும் சாட்­சி­ய­ம­ளித்து முடிந்து வெளி­யே­றிய வேளை­யி­லும், பல­த­ரப்­பட்ட விமர்­ச­னங்­க­ளுக்கு முகம் கொடுக்க நேர்ந்­தது. சமூக இணை­யத்­த­ளங்­கள் தற்­போது ரணிலை கடு­மை­யாக விமர்­சித்து முடித்­துள்­ளன.

ஆயி­னும் இத்­த­கைய விமர்­ச­னங்­கள் எவற்­றை­யும் சிறி­தேனும் பொருட்­ப­டுத்­தா­மல் ஆணைக்­குழு முன் சென்று ரணில் சாட்­சி­யம் அளித்­துள்­ளார். அதன் மூலம் அர­சி­யல் அரங்­கில் அவ­ரொரு துணிச்­ச­லும் மனச்­சாட்­சி­யும்­மிக்க மனி­த­ராக ஆகி­யுள்­ளார். அது­மட்­டு­மன்றி, புதி­ய­தொரு அர­சி­யல்­க­லா­சா­ரத்­தை­யும் அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­துள்­ளார்.

 

அவர் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் தொடர்­பில் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் சந்­தே­க­ந­ப­ரா­கவோ, பொறுப்­புக்­கூ­றத்­தக்க ஒரு­வ­ரா­கவோ இல்­லா­ம­லி­ருந்த போதி­லும், தமது சுய விருப்­பின்­படி சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வந்­தி­ருந்­தார்.
தாம் அர­சின் தலைமை அமைச்­ச­ராக இருந்­த­போ­தி­லும், அவர் ஆணைக்­குழு முன்­னி­லை­யில் சாட்­சி­ய­ம­ளிக்க முன்­னி­லை­யா­னார். விரும்­பி­யி­ருப்­பின் அவர் அத­னைத் தவிர்த்­தும் இருந்­தி­ருக்க முடி­யும். ஆனால் அவர் அவ்­வி­தம் செயற்­ப­ட­வில்லை. இருந்­த­போ­தி­லும் பிணை­முறி ஊழல் தொடர்­பான விட­யம் இத்­து­டன் முடி­வ­டை­யப் போவ­தில்லை.

லஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வால் விசா­ர­ணைக்­கென அழைக்­கப்­பட்ட அமைச்­சர்­க­ளில் சிலர் ஆணைக்­குழு முன்­னி­லை­யில் முன்­னி­லை­யா­காது நொண்­டிச் சாட்­டுக்­களை முன்­வைத்து விசா­ர­ணைக்கு முகம் கொடுப்­ப­தைத் தவிர்த்­துக் கொண்­ட­னர். தாம் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­தால் கோப­முற்ற சிலர் கூட்டு எதி­ரணி பக்­கம் சாய்­வ­தா­கக் காட்­டிக் கொண்­ட­னர். வெற்­றிலை வியா­பா­ரி­யி­டம் கூட லஞ்­சம் பெற்ற அமைச்­சர்­கள்கூட இவர்­க­ளில் அடங்­கி­யி­ருந்­த­னர். உயர் மட்­டத்­தி­லி­ருந்து கீழ் மட்­டம்­வரை லஞ்­சம் தலை­வி­ரித்­தா­டி­யது. மிகச் சுத்­த­மான நாள்­கள் என எண்­ணிக் கொண்டு அந்த நாள்­கள் குறித்தே தற்­போது பேசப்­ப­டு­கி­றது.

தான் மக்களது பாதுகாவலன் மட்டுமே எனத் தெரிவித்த மகிந்த

‘‘நான் இந்த நாட்­டின் அர­ச­னல்ல; வெறும் பாது­கா­வ­லனே’’ என்று கூறிக் கொண்­டு­தான் மகிந்த நாட்­டின் நிர்­வா­கத்­தைக் கையேற்­றார். தமது முத­லா­வது பத­விக்­கா­லத்­தின் பெரும் பகு­தியை அவர் போரை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்­கா­கவே செல­விட்­டார். துண்டு துண்­டா­கச் சித­ற­வி­ருந்த நாட்­டையே தாம் கையேற்க நேர்ந்­த­தென அவ்­வே­ளை­யில் மகிந்த தரப்­பி­னர்­கள் மேடை­கள் தோறும் பரப்­புரை செய்து வந்­த­னர்.

போரை வெற்­றி­கொண்­ட­தை­ய­டுத்து துண்டு துண்­டா­கப் பிள­வு­ப­ட­வி­ருந்த நாட்டை நாம் ஒன்­றி­ணைத்­துள்­ளோம் என்­றும் அவர்­களே கூறிக் கொண்­டார்­கள். ஆனால் அர­சி­யல் அறி­வு­மிக்க தரப்­பி­னரோ, நாட்­டைத் தாம் மகிந்த விடம் கைய­ளித்தபோது இருந்த நிலப்­ப­ரப்பை அவர் பத­வியை விட்டு வெளி­யே­றி­ய­போது நாட்டு மக்­க­ளான தம்­மி­டம் முழு­மை­யாகக் கைய­ளித்­தாரா? எனக் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். ஆனால் மகிந்த தரப்­பி­னரோ ‘‘மகிந்த நாட்­டின் ஒரு துண்டை எடுத்­துச் சென்று விட்டாரா?’’ என்று குதர்க்க மான விதத்­தில் எழுப்­பிய கேள்­விக்­கும் எதிர்த்­த­ரப்பு பதில் வைத்­தி­ருந்­தது.

 

அவர் அவ்­வி­தம் செய்யாதி­ருப்­பி­னும், சீனா­வுக்­குக் கைய­ளித்­துச் சென்­றுள்­ளா­ரல்­லவா? என்ற பதில் மகிந்த தரப்­பி­னர்­க­ளது வாயை அடைக்­கப் போது­மா­ன­தல்­லவா? துறை­மு­கத்தை விற்­றது இன்­றைய அர­சல்­லவா? மகிந்த அந்­தத் துறை­மு­கத்தை உரு­வாக்­கி­ய­வ­ரல்­லவா? என்று வாய­டிக்­கும் மகிந்த தரப்­பி­னர்­க­ளுக்கு உண்­மை­யில் இடம்­பெற்­றது என்­ன­வென்று தெரி­யவே தெரி­யாது.

சீனாவுக்கோ வேறு நாடொன்றுக்கோ முதலீட்டுக்காக காணி வழங்க முயன்ற 
மகிந்த அரசு

2010ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 28ஆம் திகதி கொழும்பு அரச தலை­வ­ரது அலு­வ­லக இலச்­சினை பொறிக்­கப்­பட்ட சொத்து உறு­திப் பத்­தி­ரத்­தில் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்­ச­வின் கையொப்­பம் இடப்­பட்­டுள்­ளது. அதன்­படி ‘ஹங்­கி­ரிலா ஹோட்­டல்ஸ் லங்கா பிறை­வேற் லிமிட்­டெட்’ என்ற நிறு­வ­னத்­துக்கு குறித்­த­தொரு நிலப்­ப­குதி அறுதியாகக் கைய­ளிக்­கப்­படுவ தாக அந்த உறுதியில் குறிப்பிடப்பட்டி ருந்தது.

அன்று மகிந்­த­வால் சொத்து உறு­திப்­பத்­தி­ரத்­தின் மூலம் அறுதியாக வழங்­கப்­ப­ட­வி­ருந்த குறித்த அந்த நிலத்­தொ­குதி தற்­போது அதே நிறு­வ­ னத்­துக்கு குத்­த­கைக்கு மட்­டுமே வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த வகை­யில் அன்­றைய கைய­ளிப்­புக்­கும் இன்­றைய கைய­ளிப்­புக்­கும் இடையே மிகப் பெ­ரும் வேறு­பாடு உள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­மா­ணப் பணி முடி­வ­டைந்­த­துமே குறித்த துறை­மு­கத்­துக்­குக் கப்­பல்­கள் வந்­துள்­ளனவா? வரு­கின்­ற­னவா? என்று பலர் கேள்வி எழுப்­பி­னர். அதற்­கெல்­லாம் மகிந்த தரப்­பி­னர் முன்­வைத்த நொண்­டிச் சாட்­டுக்­கள் யாவும் முற்­று­மு­ழுக்­கப் பொய்­யா­ன­வையே. கொழும்பு துறை­முக நக­ரத் திட்­டத்­தை­யும் சீனாவே கையாண்­டது. அதற்­காக மகிந்த அர­சால் பெரு­மெ­டுப்­பில் பரப்­புரை மேற்­கொள்­ளப்­பட்­டது; விளம்­ப­ரப்ப­டுத் தப்­பட்­டது.

அது குறித்த விவ­ரங்­களை நாடா­ளு­மன்­றில் முன்­வைக்­கு­மாறு அவ்­வே­ளைய எதிர்க்­கட்­சித் தலை­வர் ரணில் விக்­கி­ம­ர­சிங்­க­வால் கோரப்­பட்­ட­போது, மிக விரை­வில் விவ­ரங்­கள் நாடா­ளு­மன்­றில் முன்­வைக்­கப்­ப­டு­மென அவ்­வே­ளைய அர­சின் தலைமை அமைச்­சர் தி.மு.ஜய­ரத்ன உறு­தி­ய­ளித்த போதி­லும், குறித்த தக­வல்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­ட­ வில்லை. ஆயி­னும் அரச தலை­வர் மகிந்­த­ குறித்த கொழும்பு நகர அபி­வி­ருத்­தித் திட்­டம் குறித்து அமைச்­ச­ர­வைப் பத்­தி­ர­மொன்­றைச் சமர்ப்­பித்­தி­ருந்­தார்.

குறித்த அபி­வி­ருத்­தித் திட்­டத்­துக்­காக ‘சீன கொமி­னி­யு­கே­சன் கொன்ஸ்­ரன்­சன்’ நிறு­வ­னத் தால் ஆயி­ரத்து 337மில்­லி­யன் அமெ­ரிக்க ரொலர் முத­லீடு செய்­யப்­ப­டு­மெ­ன­வும், அத­னைச் செலுத்தி முடிப்­ப­தற்­காக சீனா­வுக்கு 108 ஹெக்­ட­யர் அள­வான நிலம் வழங்­கப்­ப­டு­மெ­ன­ வும், தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. மேற்­கு­றித்த கொடுக்­கல் வாங்­கல் தொடர்­பு­கள் யாவும் தற்­போது மறக்­கப்­பட்­டு­விட்­டுள் ளன.

 

ஹங்கிரிலா ஹோட்டல் மகிந்த அரசால் சீனாவுக்கு விற்பனை

அதன் பின்­னர் மகிந்த அரசு ‘ஷங்­கி­ரிலா ஹோட்­டல்’ வேலைத்­திட்­டத்­தில் தலைப்­போட்­டது. 44ஆயி­ரத்து 880 மில்­லி­யன் ரூபா பெறு­மதி கொண்­ட­தாக அந்­தத் திட்­டம் வகுக்­கப்­பட்­ட­து­டன், அதில் 30 வெளி­நாட்­டுப் பணி­யா­ளர்­க­ளும் 432 உள்­நாட்­டுப் பணி­யா­ளர்­க­ளும் பணி­யில் அமர்த்­தப்­ப­டு­வ­ரெ­ன­வும் திட்­ட­மி­டப் பட்­டி­ருந்­தது. குறித்த திட்­டத்­தில் அரசே நேர­டி­யா­கச் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தது.

வழ­மை­யில் இத்­த­கைய திட்­டம் முத­லீட்­டுச் சபை­யி­னா­லேயே கையா­ளப்­ப­டு­வது சட்­டப்­ப­டி­யான நடை­மு­றை­யாக இருந்து வந்­தது. ஆனால் குறித்த நிலப்­ப­கு­தி­ யின் உரிமையை முற்­று­மு­ழு­தாக ஒரு தரப்­புக்கு அறுதியாக வழங்கவோ,குத்­த­கைக்கு வழங்கவோவான உரிமை முத­லீட்­டுச் சபைக்கு இல்­லா­மை­யால், ‘ஹங்­கி­ரிலா ஹோட்­டலை’ அரசே நேர­டி­யாக விற்­பனை செய்­தது.

காணி­கள் ஆணை­யா­ள­ரது 4/10/33433 என்ற இலக்­கம் கொண்ட காணி உறுதி மூலம் இந்த உரிமை கைமாற்று உறு­தி­யில் 2010ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 28ஆம் திகதி அரச தலை­வர் அலு­வ­லக முத்­திரை இடப்­பட்டு அரச தலை­வ­ரால் கையெ­ழுத்­தி­டப்­பட்­டி­ருந்­தது. அதற்­காக 75 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் (ரூபா 8ஆயி­ரத்து 250 ரூபா மில்­லி­யன்) அந்­தக் கைமாற்று உறு­திக்காக அர­சுக்கு வழங்­கப்­பட்­டி­ருந் தது. தற்­போது இலங்கை மத்திய வங்கி பிணை­முறி ஊழல் தொடர்­பில் ஐ.தே.கட்­சி­யின் தலையே உருள்­கி­றது.

அர்ஜுன அலோசியஸ்ஸுடன் தொடர்பு வைத்திருந்தோர் குறித்த சந்தேகம் தொடர்கிறது

அர்­ஜூன அலோ­சி­யஸ்­ஸு­டன் தொலை­பே­சித் தொடர்பு மேற்­கொண் டோர் ஐ.தே.கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் மட்­டும்­தானா எனத் தேடித் துரு­வு­ வ­தும் ஒரு வழிக்கு நல்­லதே. தற்­போது அதி­கா­ரம் இழந்­துள்ள தரப்­பைச் சேர்ந்த பலர் அர்ஜூன அலோ­சி­யஸ்­ஸுக்கு வேண்­டப்­பட்­ட­வர்­களே. அவர்­க­ளில் பலர் மிக நீண்­ட­கால­மா­கவே அலோ­சி­யஸ்­ஸு­டன் தொடர்பு பேணி வரு­ப­வர்­கள். காலத்­துக்­குக் காலம் அவர்­கள் மேற்­கொண்ட ஊழல்­கள் யாவும் தற்­போதுகூட வெளிக்­கொ­ண­ரப்­ப­டா­ம­லேயே உள்­ளன.

அந்த வகை­யில் இன்று திரு­டர் என்ற முத்­திரை, உண்­மை­யான திரு­ட­ருக்கு குத்­தப்­பட்­டி­ருக்­கா­தி­ருக்­கக் கூடும். சில­வேளை உண்­மை­யான திரு­டர், மற்­ற­வர்­க­ளுக்­குத் திருட்­டுப்­பட்­டம் கட்டி குற்­றம்­சாட்­டிக் கொண்­டி­ருக்­க­வும் கூடும். உண்மை என்­ன­வென்­ப­தனை காலம்­தான் வெளிக்­கெ­ாணர வேண்­டும்.

http://newuthayan.com/story/51275.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.