Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த, மைத்திரியின் பாராட்டைப் பெற்ற பிரித்தானியர்

Featured Replies

மஹிந்த, மைத்திரியின் பாராட்டைப் பெற்ற பிரித்தானியர்

 

யுத்தத்தில் எட்டாயிரம் பேர் மாத்திரமே கொல்லப்பட்டதாக நெய்ஸ்பி கூறியுள்ளமைக்கு நன்றியுணர்வை வெளிக்காட்டும் வகையில் அவருக்கு பாராட்டுத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், மஹிந்த ஆதரவு எதிர்கட்சியும் தமது நன்றியை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நெய்ஸ்பி, ஏழு தொடக்கம் எட்டாயிரம் பொதுமக்களே இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களை கொலை செய்யும் நோக்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய தேவை இல்லை என்ற தனது வாதத்தின் உண்மையை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளும் எனவும் கடந்த மாதம் அவர் கூறியிருந்தார்.

அத்துடன் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்பதுடன், மொத்தமாக 7 தொடக்கம் 8 ஆயிரம் பேரே கொல்லப்பட்டார்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுவரை வெளியிடப்படாத ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைய்ஸ் வெளியிட்ட கருத்துக்கள், அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானியர் ஆலய பாதுகாப்பு அதிகாரி அண்டன் காஸ்ய்ச் அனுப்பிய அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானத்திற்கு தாம் வந்ததாகவும் நெய்ஸ்பி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த விவாததம் நிறைவடைந்து மூன்று வாரங்களுக்குள் நெய்ஸ்பிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்காவிற்கு எதிரான பிரசாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நெய்ஸ்பியின் கருத்துக்கள் மிகப் பெரிய உதவியாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கை குறித்து தாம் விசேட கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதி இந்த கடிதத்தை அனுப்பியிருந்ததுடன், யுத்தத்தின் இறுதிக்கட்ட விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு இந்த அறிக்கை மிகச் சிறந்த மூல ஆவணங்களாக இருக்கும் எனவும் ஜனாதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், நெய்ஸ்பியை பாராட்டி கடிதத்தை அனுப்பியுள்ளதாக குறிப்பிட்ட வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், இதுவொரு சிறந்த வெற்றி எனவும் கூறியிருந்தார்.

இந்த நாட்டுக்கு கிடைத்த வெற்றியை பயன்படுத்தி நாம் அனைவரும் தனிப்பட்ட ரீதியில் நெய்ஸ்பிக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவது மிகவும் முக்கியமானது என இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாக வைத்தே ஸ்ரீலங்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நாடாளுன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்காவிற்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து நெய்ஸ்பி தெரிவித்த கருத்துக்களை சாதகமாக பயன்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த தகவல்களின் அடிப்படையில் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுவிக்கப்படும் என நம்புவதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பொய்யான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை அகற்றிக்கொள்ளும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மீண்டும் பிரித்தானியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கூறியள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பொறுப்புகூறல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை முன்மொழிந்த நாடாக பிரித்தானியா காணப்படுகின்றது.

எனினும் ஸ்ரீலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் நெய்ஸ்பிக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை நெய்ஸ்பிக்கு தாமும் நன்றி தெரிவிப்பதாக கடந்த 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தினேஷ் குணவர்தனவும் கூறியிருந்தார்.

நெய்ஸ்பின் கருத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டினேஷ் குணவர்தன கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வெளிவிவகார அமைச்சர், நெய்ஸ்பின் கருத்துக்கள் சரியான காலத்தில் சரியான நேரத்தில் உண்மையான நன்மையை பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

போலியாக சத்தமிட்டு, மேற்கொள்ளும் பணிகளை சீரழிக்க வேண்டாம் எனக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, எதாவது செய்ய முனைந்து தவறு நிகழ்ந்தால் சர்வதேச சமூகம் அவற்றை தவறாக எடுத்துக்கொள்ளும் எனவும் எச்சரித்திருந்தார்.

பின்னர் அதன் பின்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் கூறியிருந்தார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயக்கத்தால் நியமிக்கப்பட்ட தருஷ்மான் தலைமையிலான மூவரடங்கிய நிபுணர்கள் குழு 2011 ஆம் ஆண்டு தனது விசாரணையை நிறைவுசெய்திருந்ததுடன், தமது அறிக்கையில் ஸ்ரீலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறியிருந்தது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் தொடர்பான முன்னாள் உதவிச் செயலாளர் நாயகமாக பணியாற்றிய சார்ஸ் பெட்ரீ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணையில் 70 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

எனினும் தாம் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையில் நிராயுதபாணியான எவரும் கொல்லப்பட்டவில்லை என்றே ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/SL-Govt-and-Joint-opposition-thank-to-Lord-Naseby

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.