Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் : லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியின் அலு­வ­லக அறையில் இயங்­கிய இர­க­சிய சிறை

Featured Replies

ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் : லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியின் அலு­வ­லக அறையில் இயங்­கிய இர­க­சிய சிறை

 

சி.ஐ.டி.விசா­ர­ணை­களில் தகவல்; விசா­ர­ணைக்­கான ஆவ­ணங்­களை உடன் ஒப்­ப­டைக்க கடற்­படை தள­ப­திக்கு உத்­த­ரவு
(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் விவ­காரம் தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ராக தேடப்­பட்டு வரும் கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆரச்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­லக அறை­யி­லேயே ஒரு இர­க­சிய சிறை இருந்­த­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.  

கடத்­தப்­பட்­ட­வர்கள் முதலில் தடுத்து வைக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­படும் கோட்டை - சைத்­திய வீதியில் உள்ள பிட்டு பம்பு எனும் பகு­தியில் அமைந்­தி­ருந்த லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­லக அறையில் ஒரு பகு­தியில் இந்த இர­க­சிய சிறை கூடம் அமை­யப்­பெற்­றி­ருந்­த­தா­கவும், அதில் இர­க­சி­ய­மாக பலர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும், குற்றப் புல­ன­யவுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் அளித்த கடற்­படை புல­னாய்வு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். இந்த அலு­வ­லக அறைக்கு கொமாண்டர் தஸ­நா­யக்­கவும் சென்று வரு­வ­தா­கவும் அவர் தனது வாக்கு மூலத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கோட்டை நீதி­வா­னுக்கு மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடாக தெரி­வித்­தது.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜய­ரத்ன முன்­னி­லையில் மீளவும் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போதே இந்த விவ­கா­ரத்தில் தற்­போது கைது செய்­யப்­ப­டு­வ­தற்­காக தேடப்­பட்டு வரும் கடற்­ப­டையின் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்­சியைக் கைது செய்ய பகி­ரங்க பிடி­யா­ணையும் நீதிம்­ன­றினால் பிறப்­பிக்­கப்­பட்­டது.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­த­தி­ருந்­தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

 இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­னாய்­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், சிறப்பு புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன் கொமான்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமான்டர் ராக பதவி உயர்த்­தப்ப்ட்­டுள்ள சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார, நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ , கித்­சிரி மற்றும் சிரப்பு புல­ன­யவுப் பிரிவின் பணிப்­பா­ள­ரா­கவும் கடற்­படை ஊடகப் பேச்­சா­ள­ரா­கவும் அப்­போது பதவி வகித்த கொமாண்டர் டி. கே. பி. தஸ­நா­யக்க ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் சம்பத் முன­சிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்­றனர்.

 இந் நிலையில் நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத­வி­யாக மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட அரச சட்­ட­வாதி ஜனக பண்­டார, இந்த விவ­கா­ரத்தின் விசா­ர­ணை­களை மிக விரைவில் முடிக்க உத்­தே­சிப்­ப­தா­கவும், நீண்ட விசா­ர­ணை­களில் மேலும் பல விட­யங்கள் ஆரா­யப்­பட வேண்டி இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். அதனால் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அறிக்­கையை விரை­வாக பெற்று மேல­திக நட­வ­டிக்­கைகள் குறித்து ஆலோ­சனை வழங்­கு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். அதன்­படி இரு வாரங்­க­ளுக்குள் முழு­மை­யான விசா­ரணை அறிக்­கையை சிரேஷ்ட சட்­ட­வ­ட­ஹி­யிடம் வழ்­னக்க நீதி­மன்றம் குர்றப் புல­ன­யவுப் பிரி­வுக்கு உத்­தர்­விட்­டது.

 இந் நிலையில் நேற்று மேல­திக விசா­ரணை அறிக்­கையை குற்றப் புல­ன­யவுப் பிரிவின் சமூக கொள்­ளைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா மற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க ஆகியோர் நீதி­மன்றில் சமர்­பித்­தனர்.

 இதன்­போது லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியை மேற்­பா­ரவை செய்த உயர் அதி­கா­ரிகள் யார், ஹெட்டி ஆரச்­சியின் கீழ் செயற்­பட்ட புல­ன­யவு அதி­கா­ரிகள் யார் என்­பது குரித்து விசா­ரணை நடை­பெற்று வரும் நிலையில் அது தொடர்­பி­லான தக­வல்­களை வழங்­கு­வதில் கடற்­படை பின்­னிற்­ப­தாக நீதி­மன்றின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டது. அத்­துடன் விசா­ர­ணை­க­ளுக்­காக கோரிய பல ஆவ­ணங்கள் கடற்­ப­டை­யி­னரால் இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நீதி­வா­னிடம் தெரி­வித்தார். இத­னை­ய­டுத்தே உரிய ஆவ­ணங்­களை உட­ன­டி­யாக குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் ஒப்­ப­டைக்க நீதி­மன்றம் கடற்­படை தள­ப­திக்கு உத்­த­ர­விட்­டது.

 அத்­துடன் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சமர்­பித்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­வது,

 ' இந்த விவ­கா­ரத்தில் முதல் சந்­தேக நப­ரான சம்பத் முன­சிங்­கவின் கட்­ட­ளை­க­ளுக்கு கீழ் செயற்­பட்ட புல­னாய்வு உத்­தி­யோ­கத்தர் இரு­வ­ரிடம் நாம் வாக்கு மூலம் பெற்­றுள்ளோம். அதில் ரத்­நா­யக்க எனும் உத்­தி­யோ­கத்­தரின் வாக்கு மூலத்தில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

 தான் ஹெய்ட்­டிக்கு சமா­தான படையில் சேவை­யாற்ற சென்று வந்த பின்னர், அப்­போ­தைய புல­னாய்வு பிர­தா­னி­யாக செயற்­பட்ட ஆனந்த குறுகே, தான் உள்­ளி­டோரை இந்த கடத்தல் சம்­பவம் தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறைக் கூண்­டு­க­ளுக்குள் அடைத்து வைத்து விசா­ரணைச் செய்­த­தா­கவும் பின்னர் தன்னை வேறு இடத்­துக்கு இட­மாற்­றம்­செய்­த­தா­கவும் அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறைக் கூண்டுகளுக்குள் அடைத்து வைத்து விசாரணைச் செய்ததாகவும் பின்னர் தன்னை வேறு இடத்துக்கு இடமாற்றம்செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இடமாற்றம் வழங்கப்பட்ட செய்தியை கூறுவதற்காக தான் ஹெட்டி ஆராச்சியின் உத்தியோகபூர்வ அலுவலக அறைக்கு சென்ற போது, அங்கு சிறைக் கூண்டொன்று இருப்பதை அவதனித்ததாகவும், அப்போது அங்கு தஸநாயக்கவும் வந்து சென்றதாகவும் அவ்வாக்கு மூலத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என்பதை மேலதிக அறிக்கை ஊடாக நீதிவானுக்கு குற்றப் புலனயவுப் பிரிவு அறிவித்தது.

 இந் நிலையில் இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அது வரை சந்தேக நபர்களில் 2 முதல் 6 வரையிலானோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.