Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு

Featured Replies

இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு

 
இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலைக்கொண்ட தாழ்வுநிலை காரணமாக நேற்று மாலை முதல் கடும் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனால், இலங்கையின் தென் பகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மரங்கள், மின்கம்பங்கள், பாரிய பதாகைகள் முறிந்து வீழ்ந்துள்ளன. மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தென் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற நால்வரின் சடலங்கள் இன்றுகாலை தென் கடற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் கரையொதுங்கியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு

இந்த சீரற்ற வானிலை காரணமாக மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸார் சுட்டிக்காட்டினர்.

தென்மேற்கு கடற்பரப்பில் ஏற்பட்ட தாழ்வுநிலை தற்போது வலுவடைந்து கொழும்பிலிருந்து அரபு கடலை நோக்கி 350 கி.மீ தொலைவில் தற்போது காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்றைய தினமும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என ஆய்வு மையத்தின் தலைவர் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.

களமிறங்கிய முப்படை வீரர்கள்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்க முப்படையினரை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு

அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்தப்படியே உரிய தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

வானிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு

மேலும், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு 10,000 ரூபாய் ஆரம்ப உதவியாக வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டது.

http://www.bbc.com/tamil/sri-lanka-42176807

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

சீரற்றகாலநிலையால் இதுவரை 7 பேர் பலி ; 20 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

death.jpg

இதேவேளை, 5 பேர் காணாமல்போயுள்ளதாகவும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/27721

  • தொடங்கியவர்

தொடர் மழையால் நுவரெலியாவில் வெள்ளப்பெருக்கு

 

வானிலை சீற்றத்தினால் கடந்த இரு தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

nuwa.jpg

இந்த நிலையில் டயகம பிரதேசத்தில் நேற்று முதல் பெய்த கடும் மழை காரணமாக அப்பிரதேசத்தில் 475 எல் டயகம பிரிவு கிராம சேவகர் காரியாலயத்தில் வெள்ள நீர் உட்புகுந்து அங்குள்ள ஆவணங்கள் சேதமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை டயகம பகுதியில் வெள்ள நீர் பெருக்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் மட்டுமின்றி நகர்புற குடியிருப்புகளும், கடை தொகுதிகளும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது.

 

அக்கரப்பத்தனை தலவாக்கலை பிரதான வீதியில் மன்றாசி நகரத்திற்கு அண்மித்த பகுதியில் மூங்கில் தோப்பு சரிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம் பெற்றது.

 

மன்றாசி நகரத்திலிருந்து வுட்லேண்ட் தோட்டத்திற்கு செல்லும் ஆகர ஆற்றை கடக்கும் பாலம் முற்றாக நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் இத்தோட்டத்திற்கு செல்லும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

 

டயகம பிரதேசத்திலிருந்து வரும் ஆகர ஆறு பெருக்கம் எடுத்ததனால் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, திஸ்பனை, ஆகரகந்தை, நாகசேனை, லிந்துலை போன்ற ஆற்றோர பிரதேசங்கள் நீரினால் மூழ்கியுள்ளது. 

இதனால் இப்பிரதேசங்களில் விவசாய காணிகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஆற்று நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடதக்கது.

http://www.virakesari.lk/article/27728

சீரற்ற காலநிலையால் 7 பேர் பலி ; 4 ஆயிரத்து 886 குடும்பங்கள் பாதிப்பு ; இதுவரை கிடைத்த விபரங்கள் இதோ !

 

நாட்டிலேற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 ஆயிரத்து 886 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

extreme-weather.jpg

இன்று மாலை 4 மணி வரையான தகவலின் அடிப்படையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலே மேற்கண்ட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும்  5 பேர் காணாமல்போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 179 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 36 பேர் 9 தற்காலியமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ் அனர்த்தத்தால் 202 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3 ஆயிரத்து 250 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

 

இதேவேளை, மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம்,  ஊவா மாகாணம்,  ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்து.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரேலியா, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி வந்த இரண்டு விமானங்கள் காலநிலை சீரின்மையால் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என, தேசிய பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், வங்கக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், நாட்டைவிட்டு வெளியேறிவருவதாகவும் நாளை மாலை மழைவீழ்ச்சி குறைவடையுமெனவும் இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/27727

  • தொடங்கியவர்
  •  

இலங்கையை விட்டு வெளியேறுகிறது ஒகி புயல்

 

இலங்கைக்கு தென்மேற்கே கொழும்பில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ள புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், வங்க கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், நாட்டைவிட்டு வெளியேறிவருவதாகவும் நாளை மழைவீழ்ச்சி குறைவடையுமெனவும் இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமெனவும் இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த புயல் இந்தியாவின் தென் மாவட்டங்களை தாக்கி இலட்சத்தீவுகளை நோக்கி நகரும் என்று தெரியவந்துள்ளது. இந்தப் புயல் தரைப் பகுதியை தாக்கும்போது 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஒகி’ புயல் உருவாகியுள்ளதால் பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த சூறைக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதாகவும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதன் காரணமாக தென்தமிழகத்தின் அநேக இடங்களில் எதிர்வரும் 36 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்‌டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு தெற்கே – தென்கிழக்கில் 70 கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதாகவும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் தென்தமிழகம் மற்றும் தெற்கு கேரளா மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

http://newuthayan.com/story/51607.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.