Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருமாத காலம் தொழிலுக்கு செல்லாத முல்லைத்தீவு மீனவர்கள்:வாழ்வாதாரமின்றி தவிப்பு!

Featured Replies

ஒருமாத காலம் தொழிலுக்கு செல்லாத முல்லைத்தீவு மீனவர்கள்:வாழ்வாதாரமின்றி தவிப்பு!

 

ஒருமாத காலம் தொழிலுக்கு செல்லாத முல்லைத்தீவு மீனவர்கள்:வாழ்வாதாரமின்றி தவிப்பு!

முல்லைத்தீவில் மீனவர்கள் சுனாமி அச்சம் மற்றும் அண்மைய நாட்களில் கடல் சீரின்மை போன்றன  காரணமாக ஒருமாத காலமாக தொழிலுக்கு செல்லவில்லை இதனால்  வாழ்வாதாரமின்றி தவிப்பதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

முல்லைத்தீவு மாவட்டமானது சுனாமி மற்றும்  இறுதி யுத்தம் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேறி சுமார் 8 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் முல்லைத்தீவில் கடற்றொழிலை நம்பி வாழும் சுமார் பத்தாயிரம்  குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடி வருகின்றனர்.

ஒருமாத காலம் தொழிலுக்கு செல்லாத முல்லைத்தீவு மீனவர்கள்:வாழ்வாதாரமின்றி தவிப்பு!

குறிப்பாக அதிகரித்துவரும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல, இந்திய மீனவர்களின் வருகை, தடை செய்யப்பட்ட தொழில்கள் என மீன்பிடியில் பாரிய சவால்களை எதிர்கொள்வதோடு பல்வேறு கூட்டங்களில் கதைத்தும், ஊடகங்களின் தெரிவித்தும் எந்தவித தீர்வுமின்றி தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வரும் தாம் கடந்த ஒருமாத காலமாக சுனாமி அச்சம் மற்றும் அண்மைய நாட்களில்  கடல் சீரின்மை போன்றன காரணமாக ஒருமாத காலமாக தொழிலுக்கு செல்லவில்லை என்றும் இதனால்  வாழ்வாதாரமின்றி தவிப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலைமைகளை கருத்தில் கொண்டு தமக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டுமென குறித்த மீனவர்கள் கோருகின்றனர்.

ஒருமாத காலம் தொழிலுக்கு செல்லாத முல்லைத்தீவு மீனவர்கள்:வாழ்வாதாரமின்றி தவிப்பு!

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் மீனவர்  ஒருவர்....

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியில் எனது 3 பிள்ளைகளை இழந்துள்ளோம்.

இன்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனவே மீண்டுமொரு சுனாமி என்கின்ற அச்சம் காரணாமாக நாம் கடற்கரையிலிருந்து மீன்பிடி உபகரணங்களை அகற்றி சென்றதோடு, வேறு இடங்களில் சென்று தங்க நேரிட்டுள்ளது.

ஒருமாதமாக தொழில் ஏதும் இல்லை.எமது வறுமையை போக்க அரசு விரைந்து வரட்சி நிவாரணங்கள் வழங்கியது போல் எமக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் சுனாமி அச்சத்திலேயே வாழ்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஒருமாத காலம் தொழிலுக்கு செல்லாத முல்லைத்தீவு மீனவர்கள்:வாழ்வாதாரமின்றி தவிப்பு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Fishermen-problem-of-Mullaithivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.