Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு தடை­யாகும் நுண்­நிதி நிறு­வ­னங்கள்

Featured Replies

வடக்கு மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு தடை­யாகும் நுண்­நிதி நிறு­வ­னங்கள்

 

மரத்தால் விழுந்­த­வனை மாடேறி மிதித்த கதை­யாக யுத்­தத்தின் தாக்கம் மக்­களை விட்டு அகல்­வ­தற்கு முன்­பா­கவே வேறு பல துன்­பி­யல்­க­ளுக்கு வடக்கு மக்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்­றமை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தா­க­வுள்­ளது.

அபி­வி­ருத்­திகள் அத­னூ­டான பொரு­ளா­தார பெருக்கம் என்று அரசு மார்­தட்­டிக்­கொண்­டாலும் வடக்கில் உள்ள மக்­களின் மறு­பக்கம் தொடர்பில் சிந்­திப்­ப­தற்கு ஆட்­சிக்கு வந்த அர­சுகள் முயற்­சிக்­க­வில்லை. வெறு­மனே வட பகுதி மக்கள் அபி­வி­ருத்தி விரும்­பி­க­ளா­கவே உள்­ளனர் என்ற தோற்­றப்­பாட்­டையே வெளிக்­கொ­ணர தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்கள் விரும்­பி­யி­ருந்­தனர்.

இவ்­வா­றான எண்­ணப்­பாட்­டுடன் தென்னி­லங்கை ஈடு­பட்­டதன் விளைவே ஆட்சி மாற்­றங்­களின் மூல­மாக தமிழ் மக்கள் தமக்­கான வெறுப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இதற்­கு­மப்பால் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட ஒரு இனத்தின் உட­ன­டித்­தே­வைகள் இனங்­கா­ணப்­ப­டா­மையின் தாக்கம் அவ்­வினம் தமது இருப்­பையும் எதிர்­கால திட்­ட­மி­டல்­க­ளையும் தவ­றான வழிக்கு கொண்டு செல்ல வழி­ச­மைக்கும் சந்­தர்ப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­விடும்.

அந்­த­வ­கை­யி­லேயே வடக்கு பகு­தியில் உள்ள தமிழ் மக்­க­ளுக்கு இடம்­பெற்­ற­தெனலாம். யுத்­தத்தின் கார­ண­மாக பல்­வகை பொரு­ளா­தா­ரத்­தி­னையும் இழந்­தி­ருந்த தமிழ் மக்­க­ளுக்கு மீள தமது வாழ்­வி­ய­லையும் பொரு­ளா­தா­ரத்­தி­னையும் மேலு­யர்த்த வேண்­டிய தேவை­யேற்­பட்­டி­ருந்­தது. வீட்­டுத்­திட்­டங்கள் மற்றும் ஒரு சில நிவா­ர­ணங்கள் வழங்­கி­ய­த­னூ­டாக வாழ்­வி­யலை நிலை­நி­றுத்­திக்­கொள்­ள­மு­டி­யாது என்ற கருத்தை ஏற்­றுக்­கொள்ள எவரும் தலைப்­பட்­ட­தாக தெரிய­வில்லை.

இவ்­வா­றான சூழ­லி­லேயே தமது பொரு­ளா­தார மேம்பாட்­டுக்­கான வழி­யாக வட பகுதி மக்கள் தமது கிரா­மங்­களை நோக்கி படை­யெ­டுத்த நுண்­கடன் நிறு­வ­னங்­களை நாடி­யி­ருந்­தனர்.

குறிப்­பாக இப்­ப­கு­தியில் அர­சினால் மேற்­கொள்­ளப்­படும் சமுர்த்தி திட்­டங்கள் இருந்­தாலும் கூட அத­னூ­டாக கட­னைப்­பெறு­வ­தற்­குள்ள சிக்கல் நிலைகள், கால தாம­தங்கள் மக்­களை நுண்­கடன் திட்­டங்­களின் பக்கம் இல­கு­வாக அழைத்­துச்­சென்­றி­ருந்­தது.

5 பேர் குழு­வா­கினால் கடன் மற்றும் சிறு­தொகை வைப்பை செய்தால் இரட்­டிப்பு கடன் என்ற வார்த்­தை­களை நம்பி பலரும் நுண்­கடன் திட்­டத்தின் ஊடாக பணத்­தினை பெற்­றுக்­கொள்ள முற்­பட்­டனர்.

எனினும் அவ­சர தேவைக்­காக பெறப்­பட்ட இக் கடன்­க­ளுக்கு வட்­டியின் அதிக தன்மை தொடர்­பா­கவும் அம் மக்கள் சிந்­திக்­க­வில்லை என்­ப­துடன் கிழ­மைக்கு ஒரு­முறை அதனை செலுத்­தி­விட தம்மால் முடியும் என்ற தற்­று­ணிவும் ஏற்­பட்­டி­ருந்­தது.

எனினும் இவ்­வா­றான ஓர் ஆபத்­தான பாதையை நோக்கி தாம் செல்­கின்றோம் என்­ப­தனை உண­ராத இம் மக்கள் நுண்­நிதி நிறு­வ­னங்கள் மூலம் பெற்­றுக்­கொண்ட கடன்­களில் ஆடம்­பர பொருட்­களை கூட வாங்­கிக்­கொள்­ளவும் தலைப்­பட்­ட­மை­யினால் அதனை மீள செலுத்த முடி­யாத நிலைக்கு தள்­ளப்­ப­ட­வேண்­டிய துர்ப்­பாக்­கியம் ஏற்­பட்­டது.

வர்த்­த­கர்­களை பொறுத்­த­வ­ரையில் நிதி புரள்வு­க­ளுக்­காக அன்­றாடம் நிதித்­தேவை ஏற்­பட்ட போது மறை­முக வட்­டிக்கு கடன் வழங்­கு­ப­வர்­களை நாடிச்­சென்­றி­ருந்­தனர்.

எனினும் அவர்­களின் நாளாந்த வருவாய் அதனை தீர்ப்­ப­தற்கு ஏது­வான வழி­வ­கை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதற்­கு­மப்பால் வரு­வாய்க்கு அப்­பா­லான கடன்கள் வர்த்­த­கர்கள் பலரை மர­ணத்தின் வாயில்­வரை அழைத்­துச்­சென்­றது மாத்­தி­ர­மல்ல தற்­கொலை செய்தும் ஊரை­விட்டு ஓடவும் செய்த நிலை காணப்­பட்­டி­ருந்­தது. தற்­போதும் நடை­பெற்று வரு­கின்­றது.

இவ்­வா­றான நிலை வவு­னியா மாவட்­டத்­திற்கும் நிறை­யவே உள்­ளது. எங்­கு­பார்த்­தாலும் நுண்­நிதி நிறு­வ­னங்­களும் கந்­து­வட்­டிக்­கா­ரர்­களின் செயற்­பா­டு­களும் பெரு­கிக்­கா­ணப்­ப­டு­கின்­றது.

நுண்­நிதி நிறு­வ­னங்­களின் ஆசை வார்த்­தைகள் கிரா­மத்­த­வர்­களை மட்­டு­மல்ல நகர்ப்­பு­றத்­த­வர்­க­ளையும் ஈர்த்­துக்­கொள்­வ­தனால் பொரு­ளா­கவோ பண­மா­கவோ அதனை பெற்­று­விட முயற்­சிக்கும் மக்கள் அதன் பின்­னா­லான விளை­வு­களை உணர்ந்து­ கொள்ள பின்­னிற்­கின்­றனர்.

வவு­னியா மாவட்­டத்தில் இயங்கும் நிறு­வ­ன­மொன்று மத்­தி­ய­வங்­கியின் பெயரை பயன்­ப­டுத்தி கிரா­மங்­களில் மக்­களை ஏமாற்­றி­யி­ருந்­ததாகவும் முறையிடப்பட்டது.

மத்­தி­ய­வங்கி சுதா­க­ரித்­துக்­கொண்­டமை மற்றும் பல முறைப்­பா­டு­களின் பல­னாக அந் நிறு­வனம் மத்­திய வங்­கியின் பெயரை தாம் பயன்­ப­டுத்­தி­ய­மைக்கு பகி­ரங்க மன்­னிப்பு கோரி­யி­ருந்­தது.

இதற்­கு­மப்பால் பல நிறு­வ­னங்கள் இன்று வாக­னங்­களில் கிரா­மங்­க­ளுக்கு சென்று முதல் தமது நிறு­வ­னங்­களில் வைப்பு செய்யும் தொகைக்கு பல மடங்கு நிதியை தரு­வ­தா­கவும் வாழ்­வா­தார உத­வி­களை தரு­வ­தா­கவும் பசப்பு வார்த்­தை­களை அள்ளி வீசி நிதியை கப­ளீ­கரம் செய்ய முயலும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

அண்­மையில் இவ்­வா­றான நிறு­வ­ன­மொன்­றிற்கு கண­வனின் கருத்தை ஏற்­றுக்­கொள்­ளாமல் கடன் பெற சென்ற மனை­விக்கும் கண­வ­னுக்கும் முரண்­பாடு ஏற்­பட்டு நிதி நிறு­வ­னத்­தாரும் தாக்­கி­யதில் கணவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் கூட இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

கட­னுக்கு மேல் கடன் பெற முயலும் மக்­களால் வாழ்­வியல் போராட்­ட­மா­கின்­றது என்­ப­தனை உண­ரத்­த­லைப்­பட்டதன் விளைவே யாழில் குடும்­ப­மொன்று தற்­கொலை செய்து கொண்­ட­மைக்கு சான்­றா­கவும் அமைந்து விடு­கின்­றது.

இந் நிலையில் வட்­டிக்கு பணம் வழங்­கு­ப­வர்கள் ஊழி­யர்­களை வைத்து சிறு கடை­களை தமது இலக்­காக்கி செயற்­படும் நிலையும் வடக்கில் ஆதிக்கம் பெற்­றுள்­ளது. தொழில் முனைவோர் என்ற போர்­வையில் வர்த்­தக நிலை­யத்­தினை நடத்­தி­வரும் சில பண முத­லைகள் அத­னூ­டாக கிரா­மங்­களில் சிறு தொழில் முயற்­சிகளில் ஈடு­பட முயல்­வோ­ருக்கு வட்­டிக்கு பணம் கொடுக்க முயற்­சிக்­கின்­றனர்.

சுய­தொழில் முயற்­சிக்கு மூல­தனம் தேவை என்ற தோற்­றப்­பாட்டில் பணத்தை பெறும் கிரா­மத்­தை­யண்­டிய சுய­தொழில் முயற்­சி­யா­ளர்கள் அதன் மூலம் வரும் வரு­மானம் முழு­வ­தையும் வட்­டிக்­கா­ரர்­க­ளுக்கே செலுத்­த­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர். இதனால் போது­மான வரு­மானம் ஈட்­ட­மு­டி­யாத நிலையில் வட்­டிக்­கா­ரர்­களின் ஊழி­யர்கள் அவர்­களை வட்­டி­­யுடன் கூடிய முழுப்­ப­ணத்­தையும் செலுத்­து­மாறு துரத்­து­கின்­ற­போது அவர்கள் தவ­றான முடி­வு­களை நோக்கி செல்லும் நிலை ஏற்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலைமை தொடர்பில் பொலிஸார் போது­மான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு காணப்­ப­டு­கின்­றது. எனினும் பொலி­ஸா­ருக்கு பொது­மான ஆதா­ரத்­து­ட­னான முறைப்­பா­டுகள் கிடைக்­காத நிலை உள்­ள­தோடு இவ்­வா­றான நிறு­வ­னங்­களை நடத்­து­ப­வர்கள் பெரும் அர­சி­யல்­வா­திகள் மற்றும் பொலிஸ் உய­ர­தி­கா­ரி­களின் செல்­லப்­பிள்­ளை­க­ளாக உலா­வ­ரு­வது வருந்­தத்­தக்­க­துடன் நட­வ­டிக்கை எடுக்­கவும் தயங்­கு­கின்­றனர்.

கிரா­மிய பொரு­ளா­தார அமைச்சு, கைத்­தொழில் அபி­வி­ருத்தி அமைச்சு, தொழில் முனை­வோ­ருக்­கான அபி­வி­ருத்தி திணைக்­களம் என பல உரு­வாக்கம் பெற்­றி­ருந்­தாலும் அவை அனைத்தும் ஆலோ­சனை வழங்கும் திணைக்­க­ளங்­க­ளாகவே வடக்கில் காணப்­ப­டு­கின்­றனவே தவிர வாழ்வில் முன்­னேற துடிக்கும் மக்­க­ளுக்­கான உதவு நிறு­வ­னங்­க­ளாக செயற்­பட தவறி வரு­கின்­றன.

இதன் விளைவே நுண்­நிதி நிறு­வ­னங்­களும் வட்­டிக்­கா­ரர்­களும் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­காக ஏங்­கி­யி­ருக்கும் மக்­களை இல­கு­வாக தமது வலைக்குள் வீழ்த்த கார­ண­மாக அமைந்து விடு­கின்­றது.

இவ்­வாறு வீழ்த்­தப்­பட்ட மக்­க­ளுக்கு பணத்தை வழங்­கி­யது மாத்­தி­ர­மன்றி அப்­ப­ணத்­தினை தவ­ணையில் பெற வீடு­களை நோக்கி செல்லும் நுண்­நிதி நிறு­வன ஊழி­யர்கள் குறித்த கடன் பெற்­ற­வர்­களின் வீடு­களில் இரவு ஆனாலும் காத்­தி­ருக்­கின்ற நிலை காணப்­ப­டு­கின்­ற­னது.

குறித்த தவ­ணையில் பணத்தை செலுத்த முடி­யாமல் திணறும் கட­னைப்­பெற்­ற­வர்கள் வீட்டில் இருந்து ஊழி­யர்­களை அகற்­று­வ­தற்கு் மேலும் மேலும் கடனை பெற வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­ப­டு­வதுடன் பெற்ற அதி­க­ள­வான கடனை செலுத்­து­வ­தற்கு வழி­யேதும் தெரியாது அல்­லோ­ல­கல்­லோ­லப்­படும் நிலைக்­குள்­ளா­கின்­றனர்.

இவை மாத்­தி­ர­மன்றி கடன் நிறு­வ­னங்கள் அதி­க­ளவில் பெண்­களை இலக்­கு­வைத்து உள்­ளீர்ப்­ப­தனால் அவர்கள் தமது கௌரவம் கருதி கடன் நிறு­வன உத்­தி­யோ­கத்­தர்­களின் கெட்­ட­வார்த்தை பிர­யோ­கங்­களை தாங்கிக் கொள்ள முடி­யாமல் அய­ல­வர்­க­ளிடம் கடனை பெற்று நுண்­நிதி நிறு­வன கடனை செலுத்தும் நிலை­மை­களும் உரு­வா­கின்­றது. இவை கிரா­மங்­க­ளுக்குள் காணப்­பட்ட அன்­னி­யோன்­னியம் மற்றும் கிரா­மிய நல்­லு­றவை சிதைப்­ப­தற்கு வழி­ச­மைக்­கின்­றது.

எனினும் தொடர்ச்­சி­யான கடன் சுமை நுண்­நிதி நிறு­வன உத்­தி­யோ­கத்­தர்­களின் கேட்­க­மு­டி­யத வார்த்தைப் பிர­யோ­கங்கள் என சொல்லொணா துன்­பங்­களை சந்­தித்த கடன் பெற்ற பெண்கள் சில சம­யங்­களில் தம்மை குறித்த ஊழி­யர்­க­ளி­டமே இழக்­கவும் தயங்­காத நிலைக்கு சென்­றனர்.

இவற்றை தவிர்க்­கவே சமுர்த்தி திட்­ட­மா­னது வறுமை ஒழிப்பு என்ற பதத்­துடன் உரு­வாக்கம் பெற்­றி­ருந்­தாலும் கூட அத­னூ­டாக மக்கள் கட­னைப்­பெ­று­வதில் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்­வ­துடன் உத்­தி­யோ­கத்­தர்­களின் மனப்­பான்­மை­யினால் அக் கடனை பெறாமல் விடு­வது மேல் என்ற எண்­ணப்­பாட்டை உரு­வாக்கி கொள்ளும் நிலையும் காணப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக கிரா­மங்­களில் 5 பேர் கொண்ட குழுக்கள் அத­னூ­டான சேமிப்பு மேற்­கொள்ளல் கூட்­டத்தில் முடி­வெ­டுத்தல் வங்கி அனு­மதி கட்­டுப்­பாட்­டுச்­சபை கூட்­டத்தில் அனு­மதி என்ற பல படி­முறை செயற்­பா­டுகள் சமுர்த்தி திட்­டத்தில் காணப்­ப­டு­வ­தனால் தேவை­யான போது தொழில் முனை­வோ­ருக்கு நிதியை பெற முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான கார­ணங்­களால் கடனை இல­கு­வாக பெறக்கூடிய தளங்­களை நோக்கி மக்கள் படை­யெ­டுக்­கின்­றனர். அவையே நுண்­நிதி நிறு­வ­னங்­களும் கந்­து­வட்­டிக்­கா­ரர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர்.

குறிப்­பாக வவு­னியா மாவட்­டத்தில் வவு­னியா நகர்ப்­ப­குதி, வைர­வ­பு­ளி­யங்­குளம், குரு­மண்­காடு, இரண்டாம் குறுக்­குத்­தெரு, முதலாம் குறுக்­குத்­தெரு என பல இடங்­க­ளிலும் கந்­து­வட்­டிக்­கா­ரர்­களும் நுண்­நிதி நிறு­வ­னங்­களும் உத்­தி­யோ­கத்­தர்­களை வைத்து பணம் சம்­பா­தித்து வரு­கின்­றன.

இவை தொடர்­பிலும் இதனால் மக்கள் பாதிக்­கப்­ப­டு­வது குறித்தும் அரசியல்வாதிகள் அறியாமல் இல்லை. ஆனாலும் ஏனோ இது தொடர்பில் தமது ஆழமான பார்வையை செலுத்தாமலும் இவ் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோராமலும் கண்டும் காணாத தன்மையாக இருந்து வருகின்றனர்.

குறிப்பாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு நிதி முதலீடு செய்யும் முகவர்களாக கூட இவ்வாறான கந்துவட்டிக்காரர்கள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை.

இவ்வாறான சூழலிலேயே நுண்நிதி நிறுவனங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக 2018 ஆம் ஆண்டு பாதீட்டில் புதிய திட்டம் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந் நிதியை பெறுவதற்கு ஏற்படப்போகும் சிரமங்கள் மக்களை நுண்நிதி நிறுவனங்களினதும் கந்து வட்டிக்காரர்களினதும் பிடியில் இருந்து மீட்டுவிடப்போவதில்லை என்பதனை வெளிப்படுத்துகின்றது.

எனவே, அலுவலகம் அமைத்தும் மறைமுகமாகவும் செயற்பட்டுவரும் அதிக வட்டி அறவிடும் கந்துவட்டிக்காரர்களையும் நுண்நிதி நிறுவனங்களையும் வடக்கில் இருந்து ஒழிக்காதவரையில் எத்தனை அரசுகள் எத்தனை திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் மக்களை பொருளாதாரத்தில் முன்னேற்றகரமான பாதைக்கு அழைத்து செல்வதென்பது சாத்தியமற்றதொன்றாகவே காணப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதுவே காலம் உணர்த்தி நிற்கும் பாடமாகும்.

கபில்

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.