Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதுள்ள நிலையை குழப்பாமல் இராஜதந்திரத்துடன் செயற்படவேண்டும் -பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் 

Featured Replies

தற்போதுள்ள நிலையை குழப்பாமல் இராஜதந்திரத்துடன் செயற்படவேண்டும் -பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் 

 

தற்போதுள்ள நிலையை குழப்பாமல் இராஜதந்திரத்துடன் செயற்படவேண்டும் -பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் 

இலங்கையில் இலங்கையில் இரண்டு பெரும் கட்சிகள் ஆட்சியமைத்துள்ள நிலையில் இந்த நிலமையினை குழப்பாமல் நாங்கள் இராஜதந்திரத்தை பயன்படுத்தி வரவிருக்கும் அரசியலமைப்பில் நியாயமான தீர்வொன்றினைப்பெற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.கடந்த காலத்தில் இருந்த அச்ச நிலை நீங்கி இன்று ஓரளவு சமாதான சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழும் நிலையில் இது நீடித்த சமாதானமாக அமையவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மனித நேய கரங்கள் அமைப்பும் கனடாவின் தமிழ் மனித நேய கரங்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடுசெய்த கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு மனித நேய கரங்கள் அமைப்பின் தலைவர் சு.ஜெயமுரளி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கனடா தமிழ் மனித நேயகரங்கள் அமைப்பின் உறுப்பினர் திருமதி சு.சனார்த்தனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கார்த்திகை தீபத்திருவிழாவினை குறிக்கும் வகையில் ஆயிரம் விளக்குகள் ஒளியேற்றப்பட்டு நிகழ்வு சிறப்பான முறையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாட்டிய நிகழ்வுடன் தெய்வீக இசைக்கச்சேரிகளும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மாணவர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
தமிழர்களுக்குரிய கலைகலாசாரங்களை தொலைத்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோம்.உலகெங்கும் தமிழை தாய்மொழியாக பேசும் 12கோடி மக்கள் இருக்கின்றனர்.கானா,மோரிஸ் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் தமிழை மறந்தவர்களாக இருக்கின்றனர்.
உலக நாடுகளில் மிகவும் குறைவான நிலையில் இருக்கும் மக்கள் தங்களது தனித்துவமான கலைகலாசாரங்களை பாதுகாத்து தனது எதிர்கால சந்திக்கு வழங்குவதில் கடும் கவனமாக செயற்பட்டுவருகின்றது.ஆனால் இதில் தமிழ் சமூகம் எந்தளவுக்கு செயற்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது.
இந்தநிலையில் இவ்வாறான நிகழ்வுகள் தமிழர்களின் கலைகலாசாரபண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் முன்நிகழ்வாக நான் பார்க்கின்றேன்.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த யுத்தினால் சுமார் 10இலட்சத்திற்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்றனர்.பல்வேறு நாடுகளில் அவர்கள் வாழ்ந்தாலும் தங்களது தனித்துவத்தினை இழக்காமல் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.மேலைத்தேய கலாசாரத்திற்குள் இருந்தாலும் தங்களது தனித்துவத்தினையும் புலம்பெயர் தமிழர்கள் பாதுகாத்துக்கொள்கின்றனர்.அதற்கு அந்த நாட்டு அரசாங்கங்களும் அவர்களுக்கு உதவுகின்றது.
இந்த நாட்டின் அரச மொழிகளில் தமிழ் மொழி இருந்தாலும் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு சுமார் 60 வருடங்கள் எடுத்துள்ளது.இந்த நாட்டில் ஆட்சியாளர்களிடம் இருந்த இனவாத,மதவாத போக்குகளே இதற்கு காரணமாகும்.ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளில் அங்குள்ள மக்கள் தமது பண்பாடுகளை வளர்ப்பதற்கான சுதந்திரத்தினை திறந்துவிட்டுள்ளனர்,அந்த நிலைமை இங்கு ஏற்படவேண்டும்.
தமிழர்கள் இந்த நாட்டின்”ர்வீக குடிகள்.வடகிழக்கு எங்களது தாயகமாக இருந்தாலும் தமிழர்கள் இந்த நாடு முழுவதையும் ஆட்சிசெய்தவர்கள்.இராவணன் காலம் தொடர்க்கம் பல தமிழர்கள் இந்த நாட்டை ஆண்டுள்ளனர்.இந்தநாடு எங்களுக்கும் உரித்தானது.எந்தளவுக்கு சிங்கள மக்களுக்கு இந்த நாட்டின் மீது எந்தளவுக்கு உரிமையிருக்கின்றதோ அந்தளவுக்கு தமிழர்களுக்கும் இருக்கின்றது.
இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகம் தமிழர்களை அவர்களுக்கு இணைவாக பார்க்கதவறியதனால்தான் அகிம்சை ரீதியான போராட்டத்தினையும் ஆயுத ரீதியான போராட்டத்தினையும் முன்னெடுத்து நாங்கள் பலதை இழந்துள்ளோம்.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஒரு சுதந்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.முன்னைய காலத்தில் இருந்த பயங்கரமான சூழல் இருந்தது.அந்த ஆட்சிமாற்றத்தின் ஊடாக அந்த சூழல் ஓரளவு குறைந்துள்ளது.எனினும் அது நூறுவீதமாக மாற்றப்படவில்லை.அந்த சுதந்திரம் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும் என்பதே இந்த கார்த்திகை தீபநாளில் இறைவனிடம் வேண்டிக்கொள்வதாகும்.
30வருடகால யுத்ததில் பல இழப்புகளை இழந்துநிற்கும் தமிழ் சமூகம் எதிர்வரும் 2018இல் தமிழர்கள் எதிர்பார்த்திருக்கின்ற தீர்வு வழங்கப்படவேண்டும்.தமிழர்கள் தலைநிமிர்ந்து சுதந்திரமான நிலைமை உருவாக்கப்படவேண்டும்.
இந்த நாட்டில் என்றும் இருக்காத நிலைமை தற்போதைய ஆட்சிக்காலத்தில் இருக்கின்றது.இலங்கையில் இரண்டு பெரும் கட்சிகளான ஐதே.கட்சியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சியமைத்துள்ளது.
இந்த இணைப்பினை நாங்கள் குழப்பாமல் இதனை இராஜதந்திரமாக பயன்படுத்தி வரவிருக்கும் அரசியலமைப்பு மாற்றத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் தமிழ் சமூகத்திற்குரிய நீதியான நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த இரண்டு கட்சிகளும் இணைந்துசென்று ஒரு அரசியல் தீர்வினைகொண்டுவருகின்ற நிலைமையினை பல இனவாத,மதவாத அமைப்புகள்,அரசியல் தலைவர்கள் குழப்பும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகி;னறனர்.
மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறை ஓடவைப்பதற்கு இனவாதிகளும் மதவாதிகளும் கங்கணம்கட்டிக்கொண்டிருக்கின்றனர்.அதற்கு தமிழர்கள் ஒருபோதும் இடமளிக்ககூடாது.தமிழர்கள் இனியொரு இழப்பு ஏற்படுவதற்கு அனுமுதிக்கமுடியாது.

DSC03386DSC03389DSC03405DSC03407DSC03420DSC03431DSC03461DSC03469

http://www.samakalam.com/செய்திகள்/தற்போதுள்ள-நிலையை-குழப்ப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.