Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்ரவரி 17 இற்கு முன்னர் தேர்தல் : இரு கட்டங்களாக வேட்பு மனுத் தாக்கல்; 3 இலட்சம் அதிகாரிகள் சேவையில்

Featured Replies

பெப்ரவரி 17 இற்கு முன்னர் தேர்தல் : இரு கட்டங்களாக வேட்பு மனுத் தாக்கல்; 3 இலட்சம் அதிகாரிகள் சேவையில்

1-e2e41240d958e9aa51cbefcbdc39c9db4fba98d8.jpg

 

 

  • 350 கோடி ரூபா ஒதுக்கீடு 
  • பேரணிகளுக்கு தடை 
  • பொலிஸாரின் இடமாற்றத்திற்கு சிக்கல் இல்லை 
  • ஒரே தடவையில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல்

 


(ஆர்.யசி )

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உறுதியான தினம் ஒன்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முற்பட்ட ஒரு தினத்தில்

தேர்தலை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய தெரிவித்தார். 

முதலாவது அறிவித்தலின்படி 93 சபை களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி முதல்  14ஆம் திகதி வரை வேட்புமனுதாக்கல் செய்யும் காலஎல்லையாக அமையும். ஏனைய  உள்  ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வேட்பு மனுக்கலை தாக்கல் செய்ய முடியும்.  தேர்தலுக்காக 350 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் குறித்து செய்தியாளர்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள்களின் 4ஆயிரத்து 919 வட்டாரங்களில் 5 ஆயிரத்து 92 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. ஆரம்பத்தில் சில குளறுபடிகள் ,நீதிமன்ற தீர்மானங்கள், எல்லை நிர்ணய குழப்பங்கள் ஏற்பட்ட போதிலும் தற்போது சகல இடையூறுகளும் நீக்கப்பட்டு வேட்புமனு கோரலும் விடுக்கப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச சபை மூன்றாக (அம்பகமுவ, மஸ்கெலிய, நோர்வூட்) என்ற மூன்று பகுதியாகவும், நுவரெலிய பிரதேச சபை நுவரெலிய, கொட்டகல, ஆக்கரப்பத்தன) என்று மூன்று பிரிவாகவும் பிரிக்கப்பட்டது. ஆகவே இப்போது 341 தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்லை நிர்ணயம் குறித்து குளறுபடிகள், மாற்றங்கள், யோசனைகளை என்பன குறித்து ஆராய அசோகா பீரிஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

 இந்த குழுவின் மூலமாக 203 சபைகள் தொடர்பில் திருத்தங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. 133 தொகுதிகளுக்கு அவர்கள் அனுமதி வழங்கியும் இருந்தனர். இந்த 341 தொகுதிகளில் 97 தொகுதிகளில் அச்சுப்பிழைகள் அடையாளம் காணப்பட்டன . இந்த 97 சபைகளில் 40 சபைகள் அனுமதிக்கப்பட்டிருந்த 133 சபைகளில் இருந்தன. ஆகவேதான் 93 தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதியால் கடந்த 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் இன்றைய தினத்தில் இருந்து சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனு கோரல் விடுக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் இறுதி தினத்திலோ அல்லது குறித்த காலத்திலோ வேட்பாளருக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், வாகன பேரணிகள் நடத்துவது தடை செய்யப்படும், அவ்வாறு செயற்படும் நபர்களை கைதுசெய்ய வேண்டும் எனவும் நாம் பொலிசாருக்கு தெரிவித்துள்ளோம். சகல பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள், உரிய அதிகாரிகளுடன் நாம் நீண்ட பேச்சுவாரத்தை ஒன்றை நடத்தி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம். எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. அதன் போதும் தீர்மானங்கள் எடுக்கப்படும். இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் எந்தவித தடைகளும் இடம்பெறாத வகையில் செயற்பட வேண்டும் என நாம் தெரிவித்துள்ளோம். தொடர்ந்தும் தெரிவிப்போம். அதேபோல் பொலிசார் இடம்மாற்றம் குறித்து எந்த சிக்கலும் இல்லை, முழு இலங்கைக்கும் தேர்தல் நடத்தப்படுகின்றது. எனவே எங்கு மாற்றினாலும் சகலரும் கடமையில் தான் இருப்பார்கள். ஆகவே சில பொய்யான காரணிகளை கூறி விமர்சிக்க முடியாது.

ஒரே தடவையில் தேர்தல்

இலங்கையில் நடைபெறும் மிகவும் முக்கியமானதும் பாரிய அளவிலான தேர்தலும் இதுவாகும். இதற்கு முன்னர் எப்போதும் ஒரே நாளில் இவ்வாறு தேர்தலை நடத்தவில்லை. சகல சபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தல் நடத்தப்படவில்லை. இம்முறை தான் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதுடன் பிற்பகல் 4 மணிக்கு தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்து 5 மணியுடன் வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். தேர்தல் திணைக்களத்திற்கு மிகவும் கடினமான ஒரு நிலைமை ஏற்படும். சகல நிலையங்களையும், பிரிவுகளையும் கவனத்தில் கொண்டு உரிய நேரத்தில் எமது கடமையினை செய்து முடிக்க வேண்டும்.

சிலர் தமது அரசியல் ஞானத்தில் தேர்தல் திகதிகளை கூறுகின்றனர். அவர்கள் கூறுவதற்கு அமையவோ, அவர்களின் தேவைக்கு ஏற்பவோ எம்மால் தேர்தல் தினத்தை நியமிக்க முடியாது. அதேபோல் பாரளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் சகல கட்சிகளும் எம்முடன் சந்திப்பை முன்னெடுத்த நிலையில் அவர்கள் முன்வைத்த பிரதான காரணியானது இந்த நாட்டின் பொருளாதரத்தை வீழ்த்தும் வகையில், அல்லது அசௌகரியங்கள் ஏற்படும் தினத்தில் தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் தனியார் துறையினர், சுய தொழில் செய்பவர்களின் கோரிக்கையும் அதுவாகவே உள்ளது. ஆகவே இன்னும் தேர்தல் திகதி தெரிவுசெய்யப்படவில்லை. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்குட்பட்ட ஒரு தினத்தில் தேர்தல் நடத்த முடியும் என எதிர்பார்க்கின்றோம். எனினும் சில அரசியல் வாதிகள் தமக்கு ஏற்ற வகையில் திகதியை கூறி வருகின்றனர். திகதி தொடர்பில் எதிர்வுகூற முடியும், ஆனால் தேர்தல் திகதி அவ்வாறு நிர்ணயிக்க முடியாது. ஆகவே இவ்வாறு கூறவேண்டாம் என நாம் தெரிவித்துள்ளோம்.

பெண் வேட்பாளர்கள்

இளைஞர், யுவதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நாம் தொடர்ச்சியாக கட்சிகளுக்கு வலியுறுத்திவருகின்றோம். 18 வயதிற்கும் 35 வயதிற்கும் உட்பட்டவர்கள் இதில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். மேலும் பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை முதலாம் நியமனப்பத்திரத்தில் உள்ளூராட்சி நிறுவனத்திற்கு நியமிக்கப்படவுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 வீதமும், மேலதிக நியமனப்பத்திரத்தில் அந் நியமனப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் 50 வீதமாகவும் அமையப்பெற வேண்டும்.

வேட்புமனுக் காலஎல்லை தெரிவத்தாட்சி அலுவலரின் வேட்புமனு அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்தில் இருந்து மூன்று தினங்களுக்குள், அதாவது முதலாவது அறிவித்தலின் படி 93 சபைகளுக்கு 2017. 12.11 ஆம் திகதி தொடக்கம் 2017- 12.14 ஆம் திகதி வரையும், இரண்டாம் அறிவித்தலின் படி 2017.12.18 ஆம் திகதி தொடக்கம் 2017.12.21 ஆம் திகதி நண்பகல் வரையிலும் காலஎல்லை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுப்பணம் செலுத்தும்போது, சுயேட்சை குழு வேட்பாளர் ஒருவருக்கு ரூபாய் 5000 வீதமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ரூபாய் 1500 வீதமும் செலுத்தப்பட வேண்டும். மேலும் வேட்புமனு அறிவித்தல் தினத்தில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தினத்திற்கு முந்திய தினம் நண்பகல் 12 மணி வரையில், அதாவது முதலாம் அறிவித்தலுக்கு அமைய 2017.11.27 ஆம் திகதியில் இருந்து 2017.12.13 ஆம் திகதி வரையிலும், இரண்டாம் அறிவித்தலுக்கு அமைய 2017.12.20 ஆம் திகதி வரையிலும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வேட்புமனு பத்திரம் நிராகரிக்க சில விசேட காரணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உரிய காலத்தில் வேட்புமனு கையளிக்கப்படாமை, பெயர் குறிப்பிடப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்களை உள்ளடக்கப்படாமை, பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்படாமை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் செயலாளர், சுயேட்சை குழுவாயின் அதன் தலைவர் கையொப்பமிடப்படாமை, கட்டுப்பணம் செலுத்தப்படாமை, உரிய வேட்பாளரின் கையொப்பம் இடப்படாமை, ஒரு நபர் இரண்டு உள்ளூராட்சி சபைகளின் பெயர் பட்டியலில் பெயர் பதிவாக்கப்படிருப்பின் வேட்புமனு நிராகரிக்கப்படும். எனினும் நியதிச் சட்ட தலைமையீனங்களுக்காக வேட்பாளர் ஒருவர் நிராகரிக்கப்பட மாட்டார். ஆகவே மிகவும் முக்கியமான இந்த தேர்தலை சகலரும் கருத வேண்டும். இந்தத் தேர்தலுக்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இந்தத் தேர்தலை நடத்துவதற்கே 350 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தேர்தல் மேலும் பிட்போடப்படுமாயின், அடுத்த ஆண்டு ஜனவரிக்கும் பின்னர் பிட்போடப்படுமாயின் இந்த தொகை 600 கோடிவரை உயர்வடைய வாய்ப்புள்ளது. அப்போதைய செலவீனங்கள், ஒதுக்கீடுகள் அதிகரிக்கும். நாட்டின் ஒன்றரைக்கோடி மக்கள் வாக்களிக்கும் தேர்தலில் மூன்று இலட்சம் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். ஆகவே மிகவும் கடினமான தேர்தலை அரசாங்கம் நடத்த தீர்மானித்துள்ளது, நாமும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.