Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறு­தி­யான மாற்று அணி உரு­வா­வதை தடுக்க சுரேஷ் ஏமாற்­றப்­பட்­டுள்ளார்

Featured Replies

உறு­தி­யான மாற்று அணி உரு­வா­வதை தடுக்க சுரேஷ் ஏமாற்­றப்­பட்­டுள்ளார்

 

 
 

நேர்­மை­யான, கொள்­கையில் உறு­தி­யான விட்­டுக்­கொ­டுப்­பின்­றிய மாற்றுத் தலைமை உரு­வாகக் கூடாது என்ற தேவை இலங்கை அர­சுக்கு மட்­டு­மன்றி பல வல்­ல­ரசு நாடு­க­ளுக்கும் இருக்­கின்­றது. தமிழ் மக்­களின் மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்க வேண்டும் என்ற நிலைப்­பாடு இவர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

kajan.jpg

 தூய்­மை­யான மாற்று அணி உரு­வா­வதைத் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. துர­திஷ்­ட­வ­ச­மாக சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை ஏமாற்றி அந்த முயற்­சிக்கு அவரை துணை­போக வைத்­துள்­ளனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்­கின்­ற­வர்கள், வட­கி­ழக்கு இணைப்பு சாத்­தி­ய­மில்லை எனக்­கூ­று­ப­வர்கள்,  சுய­நிர்­ணய உரி­மையை நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டிய ஒரு கொள்­கை­யாக வெளிப்­ப­டுத்தி வரு­ப­வர்­க­ளுடன் இணைந்­துதான் புதிய கூட்­டணி உரு­வா­கி­யுள்­ளது. இதன்­மூலம் மக்­களை நேர்­மை­யாக வழி­ந­டத்தக் கூடிய அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. ஆகவே இந்தக் கூட்­டணி மக்­களை ஏமாற்­று­கின்ற கூட்­டா­கத்தான் மாறும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

 

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் அலு­வ­ல­கத்தில் நேற்று  நடத்­திய ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

 

தமிழர் விடு­தலைக் கூட்­டணி ஒரு பொருத்­த­மான கட்­சி­யல்ல. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­துவம் தொடர்­பாக நாங்கள் விமர்­சிக்­கின்றோம் என்றால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற அமைப்பை எதிர்க்­க­வேண்டும் என்­ப­தற்­காக அல்ல. ஒரு தேர்தல் அர­சி­ய­லுக்­காக தமிழ் மக்கள் பேர­வையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியோ , ஈ.பி.ஆர்.எல்.எப் கட்­சியோ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையை எதிர்க்­க­வில்லை. எங்­களைப் பொறுத்­த­வரை கொள்ளை ரீதி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிழை விடு­கின்­றது. நிச்­ச­ய­மாக அர­சாங்க தரப்­புக்கு விலை போய் இருக்­கின்­றது. தமிழ் மக்­க­ளு­டைய அடிப்­படை அர­சியல் அபி­லா­ஷை­களை மீறு­கின்ற வகையில் ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வந்து தமிழ் மக்­க­ளிடம் விற்றுக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதனை எதிர்க்­க­வேண்டும். 

தமிழ் மக்கள் இவ்­வ­ளவு தூரம் தியா­கங்கள் செய்தும் ஒற்­றை­யாட்­சிக்கு ஆணை­யி­டக்­கூ­டாது. தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்று வெளி­வந்­துள்ள நிலையில் இந்த விட­யங்கள் சந்­தே­கத்­திற்கு அப்பால்  நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­கைய தீர்வை ஏற்­றுக்­கொள்ளும்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புத் தலை­மை­களின் செயற்­பாட்டை எதிர்த்து நிற்­க­வேண்டும். ஆகவே அந்தக் கொள்கைச் செயற்­பா­டுகள் பிழை என்­பதைக் கூறி மாற்றுக் கூட்­டுத்­த­லை­மைத்­து­வத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கின்ற நிலையில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் சேர்ந்தால் கொள்கை ரீதி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விமர்­சிக்க முடி­யாத நிலைக்குத் நாங்கள் தள்­ளப்­ப­டுவோம். 

 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போது தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் சின்­னத்­தில்தான் போட்­டி­யிட்டோம். அதற்குப் பிற்­பாடு தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் ஆனந்­த­சங்­கரி மற்றும் அவ­ரு­டைய கட்சி உறுப்­பி­னர்­களும் தேசிய விடு­தலைப் போராட்­டத்­திற்கு மாறாக செயற்­பட்­ட­மை­யி­னாலும் குறைந்த பட்ச தீர்வை ஏற்­றுக்­கொண்­ட­மை­யி­னாலும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் கட்சி சின்­னத்தை கைவிட்டு தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்­னத்தில் இயங்­கு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­தது. 

 

போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தி­யிலும் கூட கொள்கை ரீதி­யாக எதிர்த்­தது மட்­டு­மன்றி தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர், ஈ.பி.டி.பி. கட்சி தலைவர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுடன் உலக நாடு­க­ளுக்குச் சென்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நடத்­திய போரை நியா­யப்­பத்­தி­யவர் என்ற வகையில் அந்தக் கட்­சி­யுடன் சேரு­வது பொருத்­த­மா­ன­தல்ல.  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­துவம் குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வர்கள் சம்­பந்தன் போன்­ற­வர்கள் பேருக்­கா­வது சமஷ்­டியைப் பற்றிக் கதைக்­கி­றார்கள். 

 

தேர்­தலில் வாக்கு எடுப்­ப­தற்­கா­க­வா­வது சுய­நிர்­ணய உரிமை பற்றி வட­கி­ழக்கு இணைப்புப் பற்றி பேசு­கி­றார்கள். ஒற்­றை­யாட்­சியை நிரா­க­ரிக்­கிறோம் எனப் பேசு­கி­றார்கள். ஆனால் இங்கு ஆனந்­த­சங்­கரி இவற்றை நிரா­க­ரிக்­கின்ற கொள்கை உடை­ய­வ­ராக உள்ளார். அவ­ருடன் சேரு­வதன் மூலம் ஆரோக்­கி­ய­மான நேர்­மை­யான ஒரு கொள்­கையை முன்­னுக்குக் கொண்டு செல்ல முடி­யாது. மக்­களை நேர்­மை­யாக வழி­ந­டத்தக் கூடிய அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­ப­மு­டி­யாது. அப்­ப­டிப்­பட்ட கூட்டு மக்­களை ஏமாற்­று­கின்ற கூட்­டா­கத்தான்  மாறும். 

 

அது­மட்­டு­மல்­லாமல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்­கக்­கூ­டிய குற்­றச்­சாட்டு குறிப்­பாக சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வைக்­கின்ற குற்­றச்­சாட்­டுக்கள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பேருக்கு மட்­டும்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக இருக்­கின்­றதே தவிர தமி­ழ­ரசுக் கட்­சி­யில்தான் இருக்­கின்­றது. தமி­ழ­ரசுக் கட்­சியின் முடிவே கூட்­ட­மைப்பின் முடி­வாக இருக்­கின்­றது. தங்­க­ளு­டைய கட்சி ஆதிக்கம் செலுத்­த­மு­டி­யாது. தம்மை கணக்­கெ­டுப்­பதே இல்லை என்­ப­வை­யே­யாகும்.

 

ஆகவே தமி­ழ­ரசுக் கட்­சியின் சின்­னத்­திலோ பேரிலோ போட்­டி­யி­ட­மு­டி­யாது. அது உண்­மை­யான கூட்­ட­மைப்­பாக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும் என்று கூறியே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வெளி­யே­றினார். இங்கு தமிழர் விடு­தலைக் கூட்­டணி பேருக்­குத்தான் கூட்­டணி. தமி­ழ­ர­சுக்­கட்சி போலவே அதுவும் ஒரு கட்சி. அக்­கட்­சியின் செய­லா­ளர்தான் வீ.ஆனந்­த­சங்­கரி. அப்­ப­டிப்­பட்ட நிலையில் இன்­னு­மொரு கட்­சியின் பெய­ரிலும் சின்­னத்­திலும் போட்­டி­யி­டு­வது என்­பது கூட்­ட­மைப்பில் இருக்­கக்­கூ­டிய பிரச்­சி­னையை இங்கும் உரு­வாக்கும்.

 

நாங்கள் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பெய­ரிலும் சின்­னத்­திலும் போட்­டி­போ­டு­வதை காலம் தாம­திக்­கப்­பட்ட நிலையில் கருத்து முரண்­பா­டு­களின் அடிப்­ப­டையில் பிரிந்து செல்­வ­தென்று நாங்கள் பார்க்­க­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வோடும் மேற்­கு­லக நாடு­க­ளி­னு­டைய நிகழ்ச்சி நிரலில் இயங்கிக் கொண்­டி­ருப்­ப­தாக நாங்கள் பல தடவை பகி­ரங்­க­மாகக் குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கின்றோம். 

அந்த நிகழ்ச்சி நிரல் தொடர்­பாக தமிழ் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி கூட்­ட­மைப்­பி­னு­டைய அர­சியல் பாதை தமிழ்த் தேசிய அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கின்ற தமிழ்த் தேசத்­தி­னு­டைய இருப்பை இல்­லாமல் செய்­கின்ற அள­விற்கு அவர்கள் விலை போயி­ருக்­கி­றார்கள் என்ற தெளி­வான செய்­தியை 2009 இற்குப் பிற்­பாடு  தெளி­வாகக் கூறி வரு­கின்றோம். அக் கருத்­துக்கள் படிப்­ப­டி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு தமிழ் மக்கள் பேரவை மட்­டு­மன்றி வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட பலர் அக் கருத்தை முற்­று­மு­ழு­தாக விளங்கிக் கொண்டு அந்த கூட்டை அம்­ப­லப்­ப­டுத்­து­கின்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. 

 

அந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு எதி­ராக கொள்கை ரீதி­யாக எதி­ரான கருத்து மிகப் பெரி­தாக வளர்ந்­தி­ருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் பாது­காப்பு இல்­லாது தமது சொந்த மக்­களை சந்­திக்க முடி­யா­துள்­ளது. அப்­ப­டிப்­பட்ட நிலையில் ஒரு மாற்­றுத்­த­லைமை என்­பது ஒரு புதிய நேர்­மை­யான கொள்­கை­யுடன் உறு­தி­யாக இருக்­கக்­கூ­டிய புதிய கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு அணி­யாக இருக்க வேண்டும். நாங்கள் அத்­த­கைய தலை­மையை கட்­டி­யெ­ழுப்பிக் கொண்டு வரு­கின்றோம்.  அதன் விளை­வா­கத்தான் எழுக தமி­ழுக்கு ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்­து­கொண்­டார்கள். 

அப்­ப­டிப்­பட்ட நேர்­மை­யான கொள்­கையில் உறு­தி­யான விட்­டுக்­கொ­டுப்­பின்றி செயற்­படத் தயா­ராக இருக்­கின்ற கூட்டு, மாற்றுத் தலை­மை­யாக உரு­வா­கக்­கூ­டாது என்ற தேவை இலங்கை அர­சாங்­கத்­திற்கு மட்­டு­மன்றி பல வல்­ல­ரசு நாடு­க­ளுக்கும் இருக்­கின்­றது. 

 

எவ்­வ­ளவு தூரம் தங்­க­ளு­டைய நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடாக நகர்த்தி அந்த நிகழ்ச்சி நிரல் அம்­ப­ல­மாகி தமிழ்­மக்கள் அந்த நிகழ்ச்சி நிர­லுக்கு எதி­ராக கிளம்­பி­யுள்ள நிலையில், மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்­க­வேண்டும் கொள்­கையில் உறு­தி­யாக இருக்­கக்­கூ­டிய அர­சி­யலில் நேர்­மை­யாக இருக்­கக்­கூ­டிய தமிழ் மக்­க­ளு­டைய நலனை மட்டும் கவ­னிக்­கின்ற தரப்­பிற்கு மாற்று அணியில் பிடி வைத்­தி­ருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவும் ஆரோக்­கி­ய­மான நேர்­மை­யான கொள்­கையில் இணக்­கப்­பா­டு­டைய ஒரு தூய்­மை­யான மாற்று அணி உரு­வா­கு­வதைத் தவிர்ப்­ப­தற்­கா­க­வுமே இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. துர­திஸ்­ட­வ­ச­மாக சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை ஏமாற்றி அத்­த­கைய முயற்­சிக்கு அவரை துணை­போக வைத்­தி­ருக்­கி­றார்கள் என்­பது எங்களுடைய பார்வையாகும்.

 

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் நாங்கள் மதிப்பு வைத்திருக்கின்றோம். அத்தகைய மதிப்பு இல்லாவிட்டால் அவர்களுடன் கூட்டுச் சேருவதற்கு இணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருந்தோம். 

 

எங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்கள் முக்கியமில்லை. தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் அணி தமிழ் மக்கள் பேரவைக்கு வந்தபிற்பாடு கொள்கை ரீதியாக சரியான நிலைமை ஒன்றை எடுத்துள்ள நிலையில் அவர்களுடன் சொந்தம் கொண்டாட எந்தவிதமான கூச்சமும் கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட கொள்கையில் ஒன்றாக இணைந்து செயற்படக்கூடிய தரப்புக்களுடன் கூட்டணி உருவாக்காமல் எமது கொள்கைகள் அனைத்தையும் நிராகரிக்கின்ற ஒரு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் இணைந்துள்ளமையானது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எம்மைப் பொறுத்தவரையில் சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி தமிழ்த் தேசிய விரோதிகள்  இந்தக் காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள் என்றே கருதுகிறோம்.

http://www.virakesari.lk/article/27977

ஏமாற்றியவர்களில் தானுமொருவர் என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறியாதது அவரின் மக்குத் தன்மையை காட்டுகிறது.

  • தொடங்கியவர்
  •  

தமிழ்த் தேசிய விரோதிகளின் ஆசைப்படி நடந்துள்ளார் சுரேஸ்

 
 

மாற்­றுத் தலைமை உரு­வா­கக் கூடாது என்று இலங்கை அர­சும், சில வெளி­நாட்டுச் சக்­தி­க­ளும் உள்­ள­டங்­க­லாக தமிழ் தேசிய அர­சி­யல் விரோ­தி­கள் விரும்­பி­யதை சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் இன்று நடத்தி முடித்­தி ­ருக்­கின்­றார் என்று கடு­மை­யா­கச் சாடி­னார் அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம்.

‘‘தமிழ்த் தேசிய விரோ­தி­க­ ளின் ஏமாற்று வலைக்­குள் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் சிக்­கிக் கொண்­டுள்­ளார். இந்த சதி­வ­லைக்­குள் அவரை விழ வைத்­த­தில், – சிக்க வைத்­த­தில் – உலக வல்­ல­ர­சு­க­ளுக்­கும் பங்கு உண்டு. சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் ஏமாற்­றி­விட்­டார்.’’– என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி நேற்­றுப் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நடத்­தி­யது அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்ததாவது–

தமிழ்­தே­சிய மக்­கள் முன்­ன­ணி­யும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்­பும் இணைந்து உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை சந்­திப்­ப­தென்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கடந்த மாதம் 16ஆம் திகதி சுரேஸ் இந்­தியா செல்ல இருந்­தார். அப்­போது தேர்­தல் திணைக்­க­ளத்­து­டன் தொடர்பு கொண்டு, பொதுச் சின்­னம் பெறு­வது தொடர்­பா­கப் பேசும்­படி கேட்­டி­ருந்­தார்.

நாங்­கள் தேர்­தல் திணைக்­க­ளத்­து­டன் பேசி­யி­ருந்­தோம். புதிய கூட்­ட­ணி­களை நவம்­பர் மாதம் 27ஆம் திக­திக்கு முன்­ன­தாக பதிவு செய்­ய­வேண்­டும் என்று தேர்­தல் திணைக்­க­ளத்­தால் எமக்கு கூறப்­பட்­டது. சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனை தொடர்பு கொண்டு பதி­வுக்­கான ஆவ­ணங்­க­ளைக் கேட்­டி­ருந்­தேன்.

 

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தனை தொடர்பு கொண்டு ஆவ­ணங்­களை பெறச் சொன்­னார். பின்­னர் அவர்­க­ளு­டைய தொடர்­பு­கள் கிடைக்­க­வே­ யில்லை.

சுரேஸ் நாடு திரும்­பிய பின்­னர் தமிழ் மக்­கள் பேரவை உறுப்­பி­னர்­கள் சில­ரு­டன் தொடர்பு கொண்டு தமி­ழர் விடு­தலை கூட்­ட­ணி­யு­டன் தேர்­தலை சந்­திக்­க­லாம். அதற்கு எங்­க­ளின் ஒப்­பு­த­லைப் பெற்­றுத் தாருங்­கள் என்று கேட்­டி­ருக்­கி­றார். இந்த விட­யம் எமக்கு பேர­வை­யால் கூறப்­பட்­டது.

கடந்த 19ஆம் திகதி இரவு தமிழ்த் தே­சிய மக்­கள் முன்­னணி அவ­ச­ர­மா­கக் கூடி­யது. அது தமி­ழர் விடு­தலை கூட்­ட­ணி­யு­டன் இணை­வ­தில்லை என்று ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னித்­தது.

19ஆம் திகதி இரவு 11.05 மணிக்கு சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு நான் ஒரு குறுஞ்­செய்­தியை அலை­பேசி வழி­யாக அனுப்­பி­னேன்.

அதில் 12ஆம் திகதி நடைபெற்ற தமிழ் மக்­கள் பேர­வைக் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்­டி­ருந்த முடி­வு­க­ளுக்கு தமி­ழர் விடு­தலை கூட்­ட­ணி­யு­டன் இணை­யும் முடி­வு மாறா­னது என்­ப­தைக் கூறி­யி­ருந் தேன். அதற்கு 20ஆம் திகதி காலை­யில் பதில் குறுஞ்­செய்தி வந்­தது.

அதில் பதிவு செய்­யும் நட­வ­டிக்­கை­க­ளைத் தொட­ருங்­கள். எங்­கள் கட்­சிக்­குள் குறிப்­பாக கிழக்கு மாகா­ணத்­தில் உள்­ள­வர்­கள் அழுத்­தங்­களை கொடுக்­கி­றார்­கள்.

 

நான் கட்­க்­குள் பேசித் தீர்­மா­னிக்­கி­றேன் என்­றார். அதற்­குப் பின்­னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சி­யி­ட­மி­ருந்து எந்­தத் தொடர்­பும் இல்லை.
கடந்த 28ஆம் திகதி எம்­மோடு அவ­ச­ர­மாக பேச­வேண்­டும் என்று சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் தமிழ் மக்­கள் பேரவை உறுப்­பி­னர்­கள் ஊடா­கக் கேட்­டி­ருந்­தார். 28ஆம் திகதி மாலை சந்­தித்துப் பேசி­னோம்.

தமி­ழர் விடு­தலைக் கூட்­டணி 13ஆம் திருத்­தச்­சட்­டத்தை தீர்­வாக ஏற்­க­வேண்­டும் என்று கூறு­கி­றது. போர் காலத்­தில் ஈ,பி.டி.பி அமைப்­பு­டன் இணைந்து அரசு நடத்­திய இறு­திப் போரை நியா­யப்­ப­டுத்­தி­யது.

சுய­நிர்­ணய உரி­மையை நிரா­க­ரிக்­கி­றது. ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­து­கி­றது என்ற விட­யங்­கள் சுட்­டிக் காட்­டப்­பட்டு தமி­ழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யு­டன் இணை­வது பொருத்­த­மற்­றது என்று எம்­மால் உறு­தி­யாகக் கூறப்­பட்­டது.

ஈ.பி.ஆர்.எல்.எவ். சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வது அல்­லது தமிழ்க் காங்­கி­ரஸ் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வது என்­ப­து­தான் இருந்த தெரிவு.

29ஆம் திகதி மீண்­டும் கொழும்பு சென்று தேர்­தல் ஆணை­யா­ளர் மகிந்த தேசப்­பி­ரி­ய­வு­டன் பேசி­னோம். பொதுச் சின்­னம் கொடுக்க முடி­யாது என்று பதில் வழங்­கப்­பட்­டது.

இருக்­கும் சின்­னத்­தில் போட்­டி­யிட தடை­வி­திக்­க­வில்லை. அவ்­வா­றான சூழ­லில் தேர்­த­லுக்­காக மட்­டும் ஈரு­ருளிச் சின்­னத்­தில் உடன்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் போட்­டி­யி­ட­லாம் என்று கூறி­னோம். அது­வும் பின்­னர் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

 

நாங்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை எதிர்ப்­பது தேர்­த­லுக்­கா­கவோ, அவர்­களை விமர்­சிக்­க­வேண்­டும் என்­ப­தற்­கா­கவோ அல்ல. அவர்­கள் கொள்­கை­யில் இருந்து வில­கிச் செயற்­ப­டு­கின்­றார்­கள் என்­ப­தற்­கா­க­வே­யா­கும். நாங்­கள் அவ்­வாறு கொள்­கை­யில் உடன்­பா­டில்­லாத ஒரு தரப்­பு­டன் கூட்டு வைத்­துக் கொண்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பைப் பற்றி பேச எங்­க­ளுக்­குத் தகு­தி­யில்லை. சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் மீது நாங்­கள் நம்­பிக்கை வைத்­தி­ருந்­தோம். அவர் எங்­க­ளு­டன் கொள்­கை­ரீ­தி­யாக உடன்­பட்­டி­ருந்­தார். இன்று அவர்­கள் சேர்ந்­தி­ருக்­கும் இடம் அதற்கு எதி­ரா­ன­தா­கும்.

சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி பொய்­யான வாக்­கு­று­தியை வழங்கி எம்மை ஏமாற்றி விட்­டது. அது எமக்­குக் கவ­லை­ய­ளிக்­கி­றது. தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தைப் பெற்­றுக் கொண்டு புதிய அணியை உரு­வாக்­கு­வோம்.

ஆனந்­த­சங்­க­ரியோ அல்­லது கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர்­களோ எமது அணிக்­குள் வர­மாட்­டார்­கள். அவர்­க­ளின் தலை­யீ­டு­கள் எமக்கு இருக்­க­மாட்­டாது, என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யு­ட­னான பேச்­சுக்­க­ளில் ஈ.பி.ஆர்.எல்.எவ். வாக்­கு­றுதி வழங்­கி­யது.

புதிய கூட்­ட­ணி­யின் நேற்­றைய (நேற்­று­முன்­தி­னம்) நிகழ்­வைப் பார்த்த போது ஆனந்­த­சங்­கரி, சுரே­ஸின் அரு­கா­மை­யில் அமர்ந்­தி­ருந்­தார். மேலும் பல புது­மு­கங்­க­ளும் இருந்­தார்­கள். ஈ.பி.ஆர்.எல்.எவ். எங்­களை ஏமாற்றி விட்­டது.– என்­றா

http://newuthayan.com/story/53749.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.