Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்துகிறார் : ஆனந்தசங்கரி!

Featured Replies

கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்துகிறார் : ஆனந்தசங்கரி!

 

கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை என் மீது  சுமத்துகிறார் : ஆனந்தசங்கரி!

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் இன்றையதினம்(08) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று நண்பகல்  குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆனந்தசங்கரி....

வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பில் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை தன்மீது சுமத்துவதாகவும் தெரிவித்தார்.

சமஸ்டி முறை பகிர்வினை முன்னுரிமைப்படுத்தி போட்டியிட்ட ரணிலிற்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்து ஒற்றையாட்சியாளராகிய மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற செய்தது இவர்கள் செய்த மிக பெரும் தவறு என குறிப்பிட்டார்.

எனினும் இவ்விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் போன்று அவர் மீதுள்ள பல உண்மைகளை கூற முடியும்.
ஆனால் தான் அதை விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போது ரணில் விக்ரமசிங்க இங்கு வேட்பாளர்களை நியமிக்கும் அளவிற்கு எமது அரசியல் நிலை காணப்படுகின்றது.

அவை தொடர்பில் கதையுங்கள். பொய்யான கருத்துக்களை கூறி எமது கட்சியையோ அல்லது என்மீது கரி பூசும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/annthasankari-press-meeting

  • தொடங்கியவர்

நாட்டுப்பற்றிருந்தால் புதிய கூட்டணியில் வந்து இணையுங்கள் ஆனந்தசங்கரி கஜேந்திரமாருக்கு அழைப்பு

 

Ananthasangari4782.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டுப்பற்றிருந்தால்  எங்களுடைய புதிய கூட்டணியில் வந்து  இணையுங்கள் கடந்தகால கூட்டமைப்பு போல் தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை எனவே பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதனை விடுத்து ஒன்றிணையுமாறு வீ.  ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளாh்.

இன்று(08) கிளிநொச்சியில் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாh். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்

கஜேந்திரகுமார் அரசியலில் பால்குடி நான் பாராளுமன்ற போகும் போது அவா் பிறக்கவில்லை ஆகவே அவா் வாய் திறக்கும் போது யோசித்துவிட்டு திறக்க வேண்டும். நான் கஜேந்திரகுமாரின் தந்தை பேரன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுடன்  சேர்ந்து அரசியல் செய்தவன். ஆகவே வரலாறு தெரியாது பேசுவது சிறுபிள்ளைதனமானது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டவா் அவருக்கு எதிராக மகிந்த  போட்டியிட்டவர்  ஆனால் கஜேந்திரகுமார் தரப்பினர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று  மக்களை வலியுத்தினாh்ர்கள். இது சமஸ்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதே. இதனை அவா் மறந்திருக்க முடியாது.

வரலாறு இப்படியிருக்க நாங்கள்  வடக்கு கிழக்கு இணைப்பை பேசவில்லை என்று கூறுவது சுத்தப் பொய். நாங்கள் இன்றும் சமஸ்டியை வலியுறுத்தி வருகின்றோம்,  அல்லது  சமஸ்டியை எட்டும் வரைக்கும் இந்திய முறையிலான தீர்வை   வலியுறுத்தியிருகின்றேன் எனத் தெரிவித்த   ஆனந்தசங்கரி

கஜேந்திரகுமாரின் தந்தை மற்றும் அவரின் பேரன் ஆகியோர் உன்னதமான தலைவா்கள் எனவே கஜேந்திரகுமார் இவா்களின் வரலாறுகளை அறிந்து பேசவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

Ananthasangari-4781.jpg

http://globaltamilnews.net/archives/53794

16 hours ago, நவீனன் said:

நாட்டுப்பற்றிருந்தால் புதிய கூட்டணியில் வந்து இணையுங்கள் ஆனந்தசங்கரி கஜேந்திரமாருக்கு அழைப்பு

எந்த நாட்டுப்பற்று?
ஹிந்திய பயங்கரவாத நாட்டின் மீதான நாட்டுப்பற்று என்று வெளிப்படையாக ஆனந்தசங்கரி சொல்லியிருக்கலாம்.

  • தொடங்கியவர்

நாட்­டுப்­பற்­றி­ருந்தால் எமது கூட்­ட­ணியில் இணை­யுங்கள்

5-60b2a7b1360d9522df0b54a4e56b2b71aa2bfa2b.jpg

 

ஆனந்­த­சங்­கரி கஜேந்­தி­ர­குமா­ருக்கு அழைப்பு

(கரைச்சி நிருபர்)

நாட்­டுப்­பற்­றி­ருந்தால் எங்­க­ளு­டைய புதிய கூட்­ட­ணி­யில வந்து இணை­யுங்கள். கடந்­த­கால கூட்­ட­மைப்பு போல் தனிக்­கட்சி அதி­காரம் இங்­கில்லை. எனவே, பொய்­க­ளையும், குற்­றச்­சாட்­டு­க­ளையும் சுமத்­து­வ­தனை விடுத்து ஒன்­றி­ணை­யு­மாறு தமிழர் விடு­த­லைக்­ கூட்­ட­ணியின் தலைவர் வீ. ஆனந்­த­சங்­கரி தமிழ் தேசிய  மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­கு­மா­ருக்கு அழைப்பு விடுத்­துள்ளார். 

 கிளி­நொச்­சியில் தனது அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்; கஜேந்­தி­ர­குமார் அர­சி­யலில் பால்­குடி. நான் பாரா­ளு­மன்ற போகும் போது அவர் பிறக்­க­வில்லை. ஆகவே அவர் வாய் திறக்கும் போது யோசித்­து­விட்டு திறக்க வேண்டும். நான் கஜேந்­தி­ர­கு­மாரின் தந்தை, பேரன் உள்­ளிட்ட மூத்த அர­சியல் தலை­வர்­க­ளுடன் சேர்ந்து அர­சியல் செய்­தவன். ஆகவே வர­லாறு தெரி­யாது பேசு­வது சிறு­பிள்­ளை­த­ன­மா­னது. 

2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமஷ்டி தீர்வை முன்­வைத்தே தேர்­தலில் போட்­டி­யிட்டார். அவ­ருக்கு எதி­ராக மஹிந்த போட்­டி­யிட்­ட­போது கஜேந்­தி­ர­குமார் தரப்­பினர் ரணி­லுக்கு வாக்­க­ளிக்க வேண்டாம் என்று மக்­களை வலி­யுத்­தி­னார்கள். இது சமஷ்­டிக்கு வாக்­க­ளிக்க வேண்டாம் என்­பதே ஆகும். இதனை அவர் மறந்­தி­ருக்க முடி­யாது.

வர­லாறு இப்­ப­டி­யி­ருக்க நாங்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை பேச­வில்லை என்று கூறு­வது சுத்தப் பொய். நாங்கள் இன்றும் சமஸ்­டியை வலி­யு­றுத்தி வரு­கின்றோம், அல்­லது சமஷ்­டியை எட்டும் வரைக்கும் இந்­திய முறை­யி­லான தீர்வை வலி­யு­றுத்­தி­யி­ரு­கின்றேன் என்று தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை இது குறித்து தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் வீ. ஆனந்த சங்­கரி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

 தவ­றான தக­வல்­களை தமிழ் மக்­க­ளிடம் கூறி அர­சியல் பிழைப்பு நடத்த வேண்­டா­மென, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தை, தமிழர் விடு­தலைக் கூட்­டணி கேட்­டுக்­கொள்­கின்­றது. பிற கட்­சி­களை விமர்­சனம் செய்யும் போது கொஞ்­ச­மா­வது வர­லாறு அல்­லது அக்­கட்­சியின் நிகழ்­வு­களை தெரிந்து கொண்டு விமர்­சனம் செய்ய வேண்டும். அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்­சிக்­காக அப்­பட்­ட­மான பொய்­களை அவிழ்த்­து­விடக் கூடாது.

தமிழர் விடு­தலைக் கூட்­டணி வரு­டாந்தம் நடாத்தும் ஒவ்­வொரு மாநாட்­டிலும் ஒற்­றை­யாட்சி மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யாது, என்­ப­தனை ஒரு தீர்­மா­ன­மாக எடுத்து வலி­யு­றுத்தி வந்­துள்­ளது. அது­மட்­டு­மல்­லாது இனப்­பி­ரச்­சினை தீர்­விற்கு இந்­திய அர­சி­ய­ல­மைப்­பிற்கு ஒத்த ஒரு முறை­மை­யையே வலி­யு­றுத்தி ஒவ்­வொரு மாநாட்­டிலும் தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. இது சம்­மந்­த­மாக பல தரப்­பி­ன­ருடன் விடு­தலைப் புலி­களின் காலத்­தி­லேயே, பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு வந்­தது. இவைகள் அனைத்தும் அந்த கால­கட்­டத்தில் பல ஊட­கங்­களில் செய்­தி­க­ளாக வௌி வந்­துள்­ளன.

எல்­லா­வற்­றிற்கும் மேலாக யுத்தம் நடந்தால், மக்­களும் விடு­தலைப் புலி­களும் அழிவை சந்­திக்க நேரிடும் எனவும், பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­மாறும் விடு­தலைப் புலி­க­ளுக்கும் இலங்கை அர­சுக்கும் பல கடி­தங்­களை எழுதி கேட்­டுக்­கொண்டோம். ஆனால் சம்­மந்­தப்­பட்ட தரப்­பினர் எவரும் எமது கோரிக்­கை­க­ளுக்கு செவி­சாய்க்­க­வில்லை. மாறாக 40,000 சவப்­பெட்­டி­களை வடக்கில் இருந்து அனுப்­புவோம் என பாரா­ளு­மன்­றத்­தி­லேயே வீர வசனம் பேசி விடு­தலைப் புலி­களை தூண்­டி­விட்டு, பின்னர் யுத்தம் மூண்­ட­வுடன் தங்­க­ளது தொலை­பேசி அழைப்­பு­களைக் கூட தற்­கா­லி­க­மாக செய­லி­ழக்க செய்­து­விட்டு, இந்­தி­யா­விலும் வௌிநா­டு­க­ளிலும் பதுங்கிக் கொண்­டனர். முள்­ளி­வாய்க்­காலில் சிக்கிக் கொண்ட மக்­களைக் காப்­பாற்­று­மாறு சகல தரப்­பி­ன­ருக்கும் நாம் வேண்­டுகோள் விடுத்தோம். தங்கள் நெஞ்சை தொட்டு சொல்­லட்டும், இவர்கள் நினைத்­தி­ருந்தால் நிச்­ச­ய­மாக அந்த மக்­களை காப்­பாற்றி இருக்க முடி­யாதா?

யுத்தம் முடியும் வரை எங்­கி­ருந்­தார்கள், என்ன செய­தார்கள் என்­பது யாருக்கும் தெரி­யாத ரக­சியம். இப்­ப­டிப்­பட்ட அர­சியல் செய்து தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்ற கஜேந்திரகுமார் குழுவினர், கொள்கைகளையும் இலட்சியங்களையும் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. தவறுகளை உணர்ந்து, சரித்திரங்களை தெரிந்து கொண்டு, கடந்தகால அனுபவங்களை ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டு, தமிழ் மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புகளையும் புர்த்தி செய்ய எங்களுடன் இணைந்து, தன்னலம் கருதாது செயற்படவருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.