Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதி­ர­ணி­யி­னர் பிள­வு­பட்­டு நிற்பதால் உறு­தி­யா­கின்­றது கூட்­ட­மைப்­பின் வெற்றி

Featured Replies

 
எதி­ர­ணி­யி­னர் பிள­வு­பட்­டு நிற்பதால் உறு­தி­யா­கின்­றது கூட்­ட­மைப்­பின் வெற்றி
 

எதி­ர­ணி­யி­னர் பிள­வு­பட்­டு நிற்பதால் உறு­தி­யா­கின்­றது கூட்­ட­மைப்­பின் வெற்றி

 

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்புக்கு எதி­ரான அணி­யொன்றை அமைப்­ப­தில் சிக்­கல்­கள் ஏற்­பட்­டுள்­ளன.

கூட்­ட­மைப்­பி­லி­ருந்து கழன்று சென்ற சுரேஸ் பிரே­மச் சந்­தி­ரன் உட­ன­டி­யா­கவே கஜேந்­தி­ர­கு­மா­ரு­டன் கூட்­டுச் சேர்ந்து கொண்­டார்.

ஆனால் பொதுச்­சின்­னம் தொடர்­பான சர்ச்­சை­யால் இந்­தக் கூட்டு அற்ப ஆயு­ளில் முடி­வ­டைந்து விட்­டது. ஒத்­த­கொள்கை இல்­லா­த­வர்­கள் கூட்­டுச்­சே­ரும் போது, இத்­த­கை­ய­தொரு நிலை­தான் ஏற்­ப­டும்.

தற்­போது முதிர்ந்த அர­சி­யல்­வா­தி­யான ஆனந்­த­சங்­க­ரி­யு­டன் தமது தரப்பு சங்­க­ம­மா­கி­ விட்­ட­தாக ஈ.பி ஆர்.எல்.எவ் தெரி­வித்­துள்­ளது.

உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தை­யும் அந்­தக்­கட்சி ஏற்­றுக் கொண்­டுள்­ளது. இதே வேளை கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சிய மக்­கள் முன்­னணி வடக்கு கிழக்­கில் தனித்­துப்­போட்­டி­யி­டு­மென அந்­தக் கட்­சி­யின் தேசிய அமைப்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

இதை­யெல்­லாம் பார்க்­கும்­போது கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­தொரு பல­மிக்க பொது எதி­ரணி களத்­தில் இறங்­கிச் செயற்­ப­டு­வ­தென்­பது சாத்­தி­ய­மற்­றது என்­பது தெரிய வரு­கின்­றது.

இதே­வேளை, வீட்­டுச்­சின்­னத் தில் போட்­டி­யி­டப்­போ­கும் தமி­ழ் அரசுக்­கட்சி தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு, உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கணிசமான வெற்­றி­பெற்று விட்­டால், புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்­கை­யைத் தமிழ்­மக்­கள் ஏற்­றுக்­கொண்­டு­விட்­டார்­க­ளெ­னப் பரப்­புரை செய்­வ­தற்கு வாய்ப்­புக் கிடைத்து விடு­மென நம்­பு­கின்­றது. தமி­ழ் அரசுக்­கட்சி அவ்­வாறு நம்­பு­வ­தில் தவ­றொன்­றும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

 

புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­வ­தில் கூட்­ட­மைப்பு கடும் அக்­கறை

புதிய அர­ச­மைப்­பின் நிறை­வேற்­றம் தொடர்­பா­கக் கூட்­ட­மைப்பு அதிக அக்­கறை காட்டி வரு­கின்­றது. இதன் மூல­மா­கத் தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கு­மென அந்த அமைப்பு நம்­பு­கின்­றது.

இது தொடர்­பாக கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான சம்­பந்­தன் அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­ச­ரு­டன் பல சுற்­றுப் பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ளார். இதற்கு மேல­தி­க­மா­கத் தலைமை அமைச்­ச­ரு­டன் சென்று பௌத்த பீடா­தி­ப­தி­க­ளு­ட­னும் பேசி­யுள்­ளார்.

எப்­பா­டு­பட்­டே­னும் தமி­ழர்­க­ளின் அபி­லா­சை­களை நிறை­வேற்­றும் வகை­யில் புதிய அர­ச­மைப்பு அமைய வேண்­டும் என்­பதே அவ­ரது எதிர்­பார்ப்பு. ஆனால் சம்­பந்­த­னது அந்த எதிர்­பார்ப்பு பொய்த்­து­விட வேண்­டு மென எதி­ர।­ணி­யி­னர் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

தமது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திக் கொள்ள முய­லும் முன்­னாள் போரா­ளி­கள் தரப்பு

இதே­வேளை முன்­னாள் தமிழ்ப் போரா­ளி­கள் சில­ரும் மகிந்­த­வுக்கு ஆத­ரவு தெரி­விக்க முன்­வந்­துள்­ளனர் எனச் சில ஊட­கங்­க­ளில் செய்தி வெளியா­கி­யுள்­ளது.

மகிந்­த­வின் கட்சி உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வடக்­கி­லும் போட்­டி­யி­ட­வுள்­ளது. சாவ­கச்­சேரி நகர சபைக்­கான தேர்­த­லில் அந்­தக்­கட்சி போட்­டி­யி­டு­வது ஏற்­க­னவே உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதைத் தொடர்ந்து ஏனைய சபை­க­ளுக்கு இடம்­பெ­றப்­போ­கும் தேர்­த­லி­லும் அந்­தக்­கட்சி போட்­டி­யி­டப் போவது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­போதே பல முன்­னாள் போரா­ளி­க­ளும், சமூ­கத்­தில் முக்­கிய பொறுப்பை வகிப்­ப­வர்­க­ளும் மகிந்­த­வுக்கு ஆத­ரவு தெரி­விக்க முன்­வந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

மகிந்­த­வின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே ஆயி­ரக்­க­ணக்­கான புலிப்­போ­ரா­ளி­கள் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். இவர்­கள் தற்­போது சமூ­கத்­தில் இணைந்து வாழ்­கின்­ற­னர்.

இன­வா­தி­க­ளில் சிலர் இவர்­க­ளால் நாட்­டுக்கு ஆபத்து ஏற்­ப­டு­மெ­ன­வும், இவர்­க­ளைக் கைது செய்து தடுத்து வைக்­க­வேண்­டு­மெ­ன­வும் கூறி வரு­கின்­ற­னர். மேலும் வடக்­கில் இடம்­பெற்ற சில சம்­ப­வங்­க­ளு­டன் இவர்­க­ளைத் தொடர்­பு­ப­டுத்­தி­யும் வரு­கின்­ற­னர்.

இத­னால் முன்­னாள் போரா­ளி­கள் மன­த­ள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தமக்கு நிரந்­த­ர­மான பாது­காப்­புத்­தேவை என்­ப­தை­யும் இவர்­கள் உணர்ந்­துள்­ள­னர். நாட்­டின் தற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில் மகிந்த மீண்­டும் பத­விக்கு வரு­வ­தற்­கான வாய்ப்­புக்­க­ளும் அதி­க­ரித்­துள்­ளன.

இத­னால் முன்­னாள் போரா­ளி­கள் மகிந்­த­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தி­ருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கின்­றது.

கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­கள் மத்­தி­யில் கருத்து வேறு­பா­டு­கள்

தற்­போ­தைய நிலை­யில் மாவை. சேனா­தி­ராசா தலை­மை­யி­லான இலங்­கைத் தமி­ழ் அரசுக்­கட்­சி­யும், செல்­வம் அடைக்­கல நாதன் தலை­மை­யி­லான ரெலோ­வும், சித்­தார்த்­தன் தலை­மை­யி­லான புளொட்­டும் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கின்­றன.

ரெலோ அமைப்பு கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கிக் கொண்­டுள்­ள­தா­க­வும் பேசப்­ப­டு­கின்­றன. இதே வேளை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, இளை­ஞர் யுவ­தி­கள் மற்­றும் முன்­னாள் போ­ரா­ளி­களை இணைத்­துக்­கொண்டு உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கள­மி­றங்­கு­மென அதன் செய­லா­ளர் நாய­க­மான மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­துள்­ளார்.

 

தற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­யைக் கருத்­தில் கொண்டு அவர் இதைக் தெரி­வித்­த­தாக ஊகிக்க முடி­கின்­றது. புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­ச­ச­பைக் கான தேர்­த­லில் இளை­ஞர்­கள் சிலர் சுயேச்­சைக்­கு­ழு­வா­கக் கள­மி­றங்­க­வுள்­ள­தாக ஏற்­க­னவே தக­வல் வெளியா­கி­யி­ருந்­தது.

இவர்­க­ளைச் சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தில் கூட்­ட­மைப்­பின் பிர­தி­நி­தி ­கள் ஈடு­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் வெளியா­கி­யி­ருந்­தன.

அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வி­ருக்­கும் மாகா­ண­ச­பைத் தேர்­த­லுக்கு உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­களை ஒரு முன்­னோட்­ட­மா­கவே பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

மாகா­ண­ச­பைத் தேர்­த­லி­லும் தற்­போ­துள்­ள­தைப் போன்­ற­தொரு நிலையே நீடிக்­கப் போகின்­றது.

இதே­வேளை தமிழ் மக்­கள் பேரவை பல்­வேறு கோணங்­க­ளில் பிள­வு­பட்­டுக்­கா­ணப்­ப­டு­ கின்­றது. அதில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் வெவ்­வேறு திசை­க­ளில் நிற்­ப­தைக் காண முடி­கின்­றது.

இத­னால் அதன் அர­சி­யல் நோக்­கம் ஆரம்­பத்­தி­லேயே சிதைந்து போவ­தற்­கான அறி­ கு­றி­கள் தென்­ப­டத் தொடங்­கி­விட்­டன.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கும்­போது இடம்பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் வெற்றி பிர­கா­ச­மா­கவே தெரி­கின்­றது.

எதி­ர­ணி­யி­னர் தமக்­குள் ஒற்­று­மை­யைப் பேண முடி­யா­மல் திண்­டா­டும்­போது வெற்றி இலக்கை அவர்­க­ளால் அடை­யவே முடி­யாது.

http://newuthayan.com/story/53756.html

வரும் தேர்தலில் தமிழரசுக்கட்சி பாரிய இழப்பை சந்திக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.