Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநலமே பிளவுக்கு காரணம் – சி.வி.

Featured Replies

சுயநலமே பிளவுக்கு காரணம் – சி.வி.

 

vikki.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிமானிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள பிளவு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

சுயநலம் ஏற்படும் போது இவ்வாறன பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்த பிளவுகளை சரி செய்யவும் உதவும். 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா காங்கிரசில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் கால கட்டத்தில் சுயநலம் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் பிரிந்தனர்.

ஆகவே பிளவுகள் கொள்கைகளில் நிமித்தம் ஏற்படும். சுயநல காரனமகாவும் ஏற்படலாம். இன்றைய பிளவு எவ்வாறு ஏற்பட்டது என்பதனை நீங்களே ஆய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானிகளின் வேலை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது தமிழ் மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்காகவும் , அபிவிருத்திக்கும் வளர்சிக்கும் மாற்றி யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாக பரிமானிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/53936

6 hours ago, நவீனன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது தமிழ் மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்காகவும் , அபிவிருத்திக்கும் வளர்சிக்கும் மாற்றி யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாக பரிமானிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என மேலும் தெரிவித்தார்.

அது தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிலைப்பாடும்!

ஆனால் தமிழரசுக்கட்சி கடந்த 7 வருடங்களில் தமக்கு தமிழர் நலனைவிட தமது சுயநலனும், தமிழினக் கொலைகாரர்களின் நலனுமே முதன்மையானது என்று செயற்பட்டது ஒன்றும் இரகசியமில்லை.

எனவே தொடரும் தமிழின அழிப்புக்கு காரணமானவர்களுக்கு பெரும் துணை போகும் தமிழரசுக்கட்சியின் மாவை, சுமந்திரன், சம்மந்தன், துரைராஜசிங்கம், சிவஞானம், சரவணபவன்,  போன்றவர்களின் தமிழரசுக்கட்சி கூட்டமைப்பில் இருக்கும்வரை தமிழ் மக்களின் உரிமைப்போரில் முன்னேற்றம் குறைவாகவே இருக்கும்.

இவர்களுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரின் சுயநல அரசியலும், தவராசா, ஆனந்தசங்கரி, டக்லஸ், சுரேஷ் பிரேமச்சந்திரன், வித்தியாதரன் போன்றவர்களின் கைக்கூலி அரசியலும்  இருக்கும்வரை தமிழ் மக்களின் உரிமைப்போரில் முன்னேற்றம் குறைவாகவே இருக்கும். 

  • தொடங்கியவர்

கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படக் காரணம் என்ன?

cvv1-6b1af7f3873c388a48cf685f1384b36bb2e05000.jpg

 

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விளக்கம்

(ரி.விரூஷன்)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் தற்­போது ஏற்­பட்­டுள்ள பிள­வா­னது கொள்கை ரீதி­யா­க ஏற்­பட்­டி­ருக்க முடியும். அதே­போன்று சுய­நலக் கார­ணங்­க­ளுக்­கா­கவும் ஏற்­பட்­டி­ருக்­க­மு­டியும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டுள்ள பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான பிளவு நிலை தொடர்­பாக முத­ல­மைச்­ச­ரிடம் வினா­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, சுய­நலம் மேலோங்­கும்­போது இவ்­வா­றான பிள­வுகள் ஏற்­ப­டு­வது வழக்கம். அதே சுய­ந­லமே அந்தப் பிள­வு­களை சரி­செய்­யவும் உதவும். 1949இல் கொள்கை நிமிர்த்தம் தந்தை செல்வா தமிழ்க் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்தார். யுத்தம் முடி­வ­டையும் தறு­வாயில் சுய­நலம் கார­ண­மாக பிர­பா­க­ரனை விட்டு சிலர் வெ ளியே­றினர். ஆகவே பிள­வுகள் கொள்கை நிமிர்த்­தமும் ஏற்­ப­டக்­கூடும். சுய­நலம் கார­ணங்­க­ளுக்­கா­கவும் ஏற்­ப­டலாம்.  

இன்­றைய பிளவு நிலை ஏன் ஏற்­பட்­டது என்­பதை நீங்­களே ஆய்ந்து அறிந்து கொள்­ளுங்கள். அது அர­சியல் அவ­தா­னி­களின் வேலை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது கொள்­கை­களை எமது மக்­களின் நெடுங்­கால பாது­காப்­பிற்கும் அபி­வி­ருத்­திற்கும் வளர்ச்­சிக்கும் ஏற்­ற­வாறு மாற்றி யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாக பரிணமிக்கவேண்டுமென்பதே எனது நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றுக் காலை யாழ்ப்­பாணம் துர்­கா­தேவி மண்­ட­பத்தில் இடம்­பெற்ற ஆறு­மு­க­நா­வலர் மாநாட்டில் கலந்­து­கொண்டு திரும்­பிய முத­ல­மைச்­ச­ரிடம், கூட்­ட­மைப்­புக்குள் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்ற முறுகல் நிலை தொடர்­பாக ஊட­க­வி­ய­லளார் எழுப்­பிய கேள்­விக்கு பதி­லளித்த அவர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது பிள­வு­ப­ட­வில்லை கட்­சியை விட்டு சென்­ற­வர்கள் எல்­லோரும் திரும்பி வந்­து­விட்­டு­வார்கள் கூட்டமைப்பு பிளவு படவில்லை என தெரிவித்துள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.