Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி

 

 
 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர். 

வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், "சர்வதேசமே எங்கள் பிரச்சினையை கையாள முன்வாருங்கள்" என்ற, கருப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. 

DQqfA6WVoAA8Jgr.jpg

கைகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு, கண்ணீருடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். 

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில், அந்த அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்படும் போது, அதன் பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

DQqfA6XVoAAMhcF.jpg

தமக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் தாங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையிருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

தமது பிள்ளைகள் இன்னும் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் இன்னும் நம்புவதாகவும் தமது பிள்ளைகளை ஜனாதிபதி கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

http://www.virakesari.lk/article/28076

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச விசாரணையை வலிறுத்தி மட்டக்களப்பில் பேரணி! Top News 
[Sunday 2017-12-10 18:00]
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் அரசாங்கத்தை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும், கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  இன்று  மாபெரும் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர். கைகளில் தமது காணாமல்போனவர்களின் படங்களை ஏந்தியவாறு கண்ணீருடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் அரசாங்கத்தை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும், கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று மாபெரும் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர். கைகளில் தமது காணாமல்போனவர்களின் படங்களை ஏந்தியவாறு கண்ணீருடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

   

காணாமல்போனவர்களை கண்டறியும் அலுவலகம் அமைக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அந்த அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்படும்போது, அதன் பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைகள், சர்வதேச கண்காணிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும்போதே அதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்படும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமக்கான குரல்கொடுக்கவேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில், தாங்கள் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலையிருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பேரணி, கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது. அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது. இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இணையத்தின் பிரதிநிதிகள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

batti-demo-101217-seithy%20(1).jpg

 

 

batti-demo-101217-seithy%20(2).jpg

 

 

batti-demo-101217-seithy%20(3).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.