Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் + வேட்புமனு + தமிழரசுக்கட்சி + ஏமாற்று + குத்து வெட்டு = கூட்டமைப்பு:

Featured Replies

தேர்தல் + வேட்புமனு + தமிழரசுக்கட்சி + ஏமாற்று + குத்து வெட்டு = கூட்டமைப்பு:

ITK-TNA.jpg?resize=622%2C390

சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்ப நிலையால் இறுதி நேரத்திலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு  வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.  சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்  இன்று வியாழக்கிழமை மதியம் 12மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்நிலையில் இறுதி நாளான இன்று காலை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வேட்பாளர்பட்டியல் நிரப்ப பட்டு வேட்பாளர்கள் கையொப்பம்மிட அழைக்கப்பட்டு இருந்தனர்.

 
வேட்பாளர்களின் பெயர்கள் நீக்கம். 
 
ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் தமிழரசு கட்சியால் தீர்மானிக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் வேட்பு மனுவில் நீக்கப்பட்டு புதியவர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டு இருந்தது.
 
அதனால் ஏற்கனவே பெயர் கொடுத்து வேட்பு மனுவில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் நிஜாயம் கேட்டு முரண்பட்டு உள்ளனர்.
 
அதன் போது , குறித்த பட்டியலை க.அருந்தவபாலன்  மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோரே தயாரித்தனர். இறுதி நாளில் இறுதி நேரத்தில் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துவது நல்லதில்லை என கூறியுள்ளார்.
 
சமரச பேச்சு.
 
தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தமது பெயர் நீக்கப்பட்டமையால் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு , அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
 
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நேரம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய இருந்த சமயத்தில் மதியம் 11 மணி வரையில் நடைபெற்ற பேச்சுக்களில் இணக்கம் ஏற்படவில்லை.
 
இரகசிய முறையில் வேட்பு மனு தயாரிப்பு. 
 
கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து நின்று தமக்குள் வாக்குவாதப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நேரம் நெருங்கியமையால் , மாவை சேனாதிராஜா மற்றும்  எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சி அலுவலகத்தில் இரகசியமான முறையில் வேட்பு மனுவை தயாரித்தனர்.
இதனை அவதானித்த அருந்தவபாலன் மற்றும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மாவை சேனாதிராஜாவிடம் சென்று மீண்டும்  முரண்பட்டனர்.
 
தமிழரசு கட்சியின் உச்சகட்ட துரோகம். 
 
இது தமிழரசு கட்சி தமக்கு செய்யும் உச்சக்கட்ட துரோகம், மனட்சாட்டி இல்லாமல் கட்சி நடந்து கொள்ளுகின்றது. தங்களை வேண்டுமேன்றே கட்சி ஏமாற்றுவதாகவும் மாவை சேனாதிராஜா முன்பே நேரடியாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
 
கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறிய மாவை. 
 
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான இறுதி நேரத்தை நெருங்கி விட்டது. தாக்கல் செய்யாவிட்டால், கட்சிக்கு பெருத்த அவமானத்தினை கொண்டுவரப்போவதாக கூறி ஆத்திரமடைந்த மாவை சேனாதிராஜா தன் இதில் தலையிட வில்லை என்று கூறி கோபத்துடன் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
 
அதன் போது மாவை சேனாதிராஜாவை சமாதனப்படுத்தும் முயற்சியில்  ஒருவர் ஈடுபட்ட போதும், அவரை ஒன்றும் பேச வேண்டாம் என கூறி தள்ளிவிட்டு மாவை சேனாதிராஜா வாகனத்தில் ஏறி அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
 
முரண்பட்டவர்களும் வெளியேறினார்கள். 
 
மாவை சேனாதிராஜா அங்கிருந்து வெளியேறிய போதும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேட்பாளர் பட்டியலை தயாரித்தார்.  இதனால் ஆத்திரமடைந்த அருந்தவபாலன் அணியினரும் அங்கிருந்து வெளியேற ஆயத்தமானார்கள்.
 
ஓடிக்கொண்டு இருக்கும் காரின் கதவை திறந்த மாகாண சபை உறுப்பினர். 
 
வேட்பாளர் பட்டியலில் உறுப்பினர்களுடைய பெயர் விபரங்கள் நிரப்பப்பட்ட போதும்,  தொகுதிக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து வாகனத்தில் (காரில்) புறப்பட்ட அருந்தவபாலன் அணியினரை வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் வீதியில் வைத்து மறித்திருந்தார்.
 
இருப்பினும் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்த போது கே.சயந்தன் ஓடிக் கொண்டிருந்த வாகன கதவினை திறந்து, அவர்களை வருமாறு கேட்டிருந்தார். அதற்கு மறுப்புச் சொன்ன அருந்தவபாலன் அணியினர் அங்ருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
 
வாகன சாரதியை வேட்பாளராக்க முயற்சி. 
 
இதன் பினர் சாவகச்சேரியில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்த  வாகனத்தின் சாரதியை அப் பட்டியலில் கையெப்பமிடுமாறு அழைத்துச் சென்ற போதும், வேறு ஒரு கட்சி உறுப்பினர் அங்கு வந்த காரணத்தினால் சாரதி வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை.
 
15 நிமிடங்களுக்கு முன்பு வேட்பு மனுத்தாக்கல். 
 
இவ்வாறு வேட்பாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு இடையில் நடைபெற்ற முரண்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அவசர அவசரமாக வாகனத்தில் ஏறிய அவர்கள்  நண்பகல் 11.45  மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் ஆலுவலகத்திற்குச் சென்று தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

http://globaltamilnews.net/archives/55099

  • தொடங்கியவர்
  •  

சயந்­தன் -அருந்­த­வ­பா­லன் மோதல்!

 
 

சாவ­கச்­சேரி நகர சபைக்­குத் தமிழ் அர­சுக் கட்சி வேட்­பு­மனு தாக்­கல் செய்­யுமா இல்­லையா என்­பது தொடர்­பில் கடைசி நிமி­டம் வரை­யில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு தொற்­றிக்­கொண்­டது.

வேட்­பா­ளர் தெரி­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே.சயந்­தன் மற்­றும் கட்­சி­யின் தென்­ம­ராட்சி அமைப்­பா­ளர் க.அருந்­த­ப­வ­லான் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான நீண்ட இழு­பறி மற்­றும் கருத்து மோதலே இந்­தத் தாம­தத்­திற்­குக் கார­ணம் என்று கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

வேட்பு மனுத் தாக்­கல் செய்­வ­தற்­கான நேரம் நிறை­வ­டை­வ­தற்கு 5 நிமி­டங்­க­ளுக்கு முன்­னரே இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சாவ­கச்­சேரி நகர சபைக்­கான வேட்­பு­ம­னுவை நேற்­றுத் தாக்­கல் செய்­தது.

சாவ­கச்­சேரி நகர சபைக்­கான வேட்­பா­ளர்­க­ளைத் தெரிவு செய்­யும் பொறுப்பை சயந்­தன் மற்­றும் அருந்­த­வ­பா­லன் இரு­வ­ரி­ட­மும் கட்சி ஒப்­ப­டைந்­தி­ருந்­தது.

ஆனால், வேட்­பா­ளர் தெரி­வில் இரு­வ­ருக்­கும் இடை­யில் தொடர்ந்து முரண்­பாடு நீடித்து வந்­தது. இரு­வ­ரும் தத்­த­மது ஆத­ர­வா­ளர்­களை நிறுத்­து­வ­தி­லேயே முனைப்­புக்­காட்­டி­னர்.

இத­னால் வேட்பு மனுத் தாக்­க­லின் இறுதி நாளான நேற்­றுக் காலை வரை­யி­லும் எந்த இறுதி முடி­வும் எட்­டப்­ப­டா­மல் இருந்­தது.

 

கட்­சி­யின் தலை­மைக்கு விட­யம் தெரி­விக்­கப்­பட்­டது. கட்­சி­யின் தலை­மை­யி­னா­லும் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­க­மு­டி­ய­வில்லை.

வேட்பு மனுத் தாக்­கல் மதி­யம் 12 மணிக்கு முடி­வ­டைய இருந்த நிலை­யில், 11.55 மணி­ய­ள­வி­லேயே இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி அவ­சர அவ­ச­ர­மா­கத் தனது வேட்­பு­ம­னு­வைத் தாக்­கல் செய்­தது. அந்த வேட்பு மனு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது

http://newuthayan.com/story/55201.html

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஆசை நாயின் விசரை விட கேவலமானது இந்த ஆசையால் கடைசியில் நாய் தெரு தெருவாய் கல்லெறி வேண்டி குட்டை பிடித்து சாகும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.