Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசு கட்சி விலகல் ?

Featured Replies

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசு கட்சி விலகல் ?

 

thamilarasu.jpg?resize=649%2C959
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்கள் தாம் தேர்தலில் போட்டியிடாது விலகுவதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர் என தெரியவருகிறது.

அது தொடர்பில் மாவை சேனாதிராஜாவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்த முடியவில்லை.

http://globaltamilnews.net/2017/55454/

  • தொடங்கியவர்

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு

 

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியில் உள்ள நகரசபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டிற்கு தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஏழு பேரையும் அழைத்து வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது சமரச பேச்சுக்கள் இடம்பெற்று உள்ளதாகவும், குறித்த ஏழு வேட்பாளர்களும் அக்கடித்தினை மீள பெற்றுக்கொள்ள சம்மதித்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

http://globaltamilnews.net/2017/55508/

  • கருத்துக்கள உறவுகள்

கெல்மட் சண்டை போட்டு களைத்து விட்டனர் போல் உள்ளது .

  • தொடங்கியவர்

நேற்றைய விலகல் செய்தி உண்மைக்குப் புறம்பானது; இ.த.க உறுப்பினர்கள் தடாலடி!

 

நேற்றைய விலகல் செய்தி உண்மைக்குப் புறம்பானது; இ.த.க உறுப்பினர்கள் தடாலடி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் கடிதம் மூலம் கட்சித் தலைமைக்கு அறிவித்திருந்த வேட்பாளர்கள், குறித்தசெய்தி உண்மைக்கு புறம்பானது என்று மீண்டும் இன்றைய தினம் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.

ஊடகங்கள் வாயிலாக வெளிவந்த குறித்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை எனக் கருத்துப்படத் தெரிவித்திருக்கும் அவர்கள், தம்மிடம் ஏமாற்றியே நேற்றைய தினம் கையொப்பம் பெறப்பட்டதாகவும் அதனை வைத்தே குறித்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது கட்சித் தலைமையைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தெருவதாகக் கூறியே தம்மிடம் கையொப்பங்கள் பெறப்பட்டதாகவும் இதனால் கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்தும் உழைப்போம் என உறுதிகூறியுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம், தம்மிடம் வேட்பு மனுத் தாக்கலின்போது மோசடிமூலம் கையொப்பங்கள் பெறப்பட்டதாகத் தெரிவித்து குறித்த வேட்பாளர்களின் கையொப்பங்களுடனான கடிதம் ஒன்றின் பிரதிகள் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

நேற்றைய விலகல் செய்தி உண்மைக்குப் புறம்பானது; இ.த.க உறுப்பினர்கள் தடாலடி!

https://news.ibctamil.com/ta/internal-affairs/i-t-k-members-lg-election-dec16

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.