Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்­வ­தே­சத்தின் அதி­ருப்­திக்கு மீண்டும் ஆளா­கி­வி­டக்­ கூ­டாது

Featured Replies

சர்­வ­தே­சத்தின் அதி­ருப்­திக்கு மீண்டும் ஆளா­கி­வி­டக்­ கூ­டாது

 

காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­லகம் உட­ன­டி­யாக தொழிற்­ப­ட­வேண்டும். இதனை அர­சாங்கம் விரைந்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தும் விட­யத்தில் பாதிக்­கப்­பட்டோர், சிவில் சமூக அமைப்­பினர் இடம்­பெ­ற­வேண்டும் என்று இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும். தாம­த­மின்றி அந்த சட்­டத்தை அகற்­றி­வி­டு­மாறு அர­சாங்­கத்தைக் கோரு­கின்றோம். அத்­துடன் அதற்குப் பதி­லாக தயா­ரிக்­கப்­படும் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­ல­மா­னது சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வாக இருக்­க­வேண்டும். பொலிஸ் நிலை­யங்­களில் சட்­டத்­த­ர­ணியின் பிர­சன்­ன­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டோரை அதி­கா­ரிகள் விசா­ரணை செய்யும் விடயம் பற்றிக் கவ­லைப்­ப­டு­கின்றோம். தன்­னிச்­சை­யான தடுத்து வைப்­புக்கள் இலங்­கையில் தொடர்­கின்­றன என்றும் இந்த ஐ.நா. உறுப்­பி­னர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல், தொடர்­பாக ஆராயும் ஐக்­கி­ய ­நா­டு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளான ஹோஸே அன்ரோனியோ, எலினா ஸ்டீனட், லீ டொமே ஸிட்­டோன்ஜி ரோலன்ட் ஆகியோர் நாட்டின் பல பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து நிலைமை தொடர்பில் ஆராய்ந்­தி­ருந்­தனர். சிறைச்­சா­லைகள், பொலிஸ் நிலை­யங்கள், தடுப்பு முகாம்கள் ,உள்­ளிட்ட 30 இடங்­க­ளுக்கு இவர்கள் விஜயம் செய்­தி­ருந்­தனர்.

இந்தக் குழு­வினர் அமைச்­சர்கள், பொலிஸ் மற்றும் உயர் மட்ட விசா­ரணை அதி­கா­ரிகள், முப்­ப­டை­களின் தள­ப­திகள், உள­வுப்­பி­ரிவின் பிர­தா­னிகள், குடி­வ­ரவு, குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டாளர், பிர­தம நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர், நீதித்­துறை முக்­கி­யஸ்­தர்கள், சட்­டத்­த­ர­ணிகள் என பல­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

 தமது விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்ப முன்னர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பில் இவர்கள் செய்­தி­யாளர் மாநாட்­டினை நடத்­தினர். இதன்­போதே இத்­த­கைய கருத்­துக்­களை அவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள ஜெனிவா பிரே­ர­ணையின் பிர­காரம் விசேட பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­வைக்­கு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றோம். கடந்த கால மீறல்­களை ஆரா­யாமல் தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் தொடர்­பாக ஆராய முற்­ப­டு­வது அவற்றைக் குறைத்து மதிப்­பி­டு­வ­தாக அமையும், இலங்கை தற்­போது அமைதி நிலைக்கு திரும்­பி­யுள்­ளது. எனவே தற்­போது சட்­டத்தின் ஆட்சி உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். சுதந்­தி­ரத்தை தடுக்கும் எந்த செயற்­பா­டு­களும் இடம்­பெ­றக்­கூ­டாது. எனினும் எமது செயற்­கு­ழு­வா­னது சுதந்­தி­ரத்­திற்­கான உரி­மைக்கு மதிப்­ப­ளிக்­காத தன்­மையைக் காண்­கி­றது.

குறிப்­பாக சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துவோர் நீதித்­து­றை­யினர் மற்றும் ஏனைய அதி­கா­ர­ச­பைகள், தனி­நபர் சுதந்­தி­ரத்­திற்­கான உரி­மை­க­ளுக்கு இன்னும் மதிப்­ப­ளிக்­க­வில்லை என்றும் இந்தக் குழு­வினர் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

மிக அதி­க­ள­வாக விளக்­க­ம­றியல் சிறை­களைப் பயன்­ப­டுத்­துதல், காலம்­க­டந்த சட்ட முறை­மைகள், சித்­தி­ர­வ­தைகள், வலுக்­கட்­டா­ய­மாக பெறும் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்­களில் தங்­கி­யி­ருத்தல், தடுத்­து­வைப்­ப­தற்­கான செயற்­றிறன் குறைந்த மாற்று வழிகள் என்­பன உட­ன­டி­யாக மறு­சீ­ர­மைப்­புக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். தற்­போ­தைய நிலையில் இலங்கை சிறை­களில் 20598 பேர் உள்­ளனர். இவர்­களில் 11009 பேர் விசா­ர­ணை­க­ளுக்­காக தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இலங்­கையில் விசா­ர­ணைக்­காக காத்­தி­ருப்­ப­வர்கள் தடுத்­து­வைக்­கப்­ப­டு­வது மூன்று முதல் நான்கு வரு­ட­கா­லத்தை கொண்­டி­ருப்­ப­தாக அமை­கின்­றது. எனினும் இறு­தித்­தீர்ப்பு வழங்­கும்­போது இந்த விசா­ர­ணைக்­கா­லத்தில் தடுத்து வைக்­கப்­பட்ட காலப்­ப­குதி கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. சிலர் விசா­ர­ணைக்­காக நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்டு பின்னர் எந்­த­வி­த­மான குற்­றச்­சாட்­டுக்­களும் இன்றி விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர். எந்­த­வி­த­மான நட்­ட­ஈ­டு­களும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. அர­சாங்கம் பிணை வழங்கும் செயற்­பாட்டை ஊக்­கப்­ப­டுத்­த­வேண்டும். இறு­தித்­தீர்ப்பு வழங்கும் போது விசா­ரணை காலத்தில் தடுத்து வைக்­கப்­பட்ட காலப்­ப­குதி கருத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்றும் ஐ.நா. குழு­வினர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இத­னை­விட பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பிலும் இவர்கள் தமது கவ­னத்தை செலுத்­தி­யுள்­ளனர். தற்­போ­தைய நிலை­மையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் 69 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 59 பேர் தமி­ழர்கள், மேலும் 17 பேர் இன்­னமும் குற்­றச்­சாட்டு பதி­வு­செய்­யப்­ப­டாத நிலையில் உள்­ளனர். அண்­மையில் இருந்த ஒரு­வ­ழக்கை அநு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றி­யுள்­ளனர். ஆனால் அங்கு ஒரு தமிழ்மொழி ­பெ­யர்ப்­பாளர் மட்­டுமே இருக்­கின்றார். இது­தொ­டர்பில் அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆரா­ய­வேண்டும். கொழும்பு உயர் நீதி­மன்­றத்தில் தற்­போ­தைய நிலை­மையில் எந்­த­வொரு தமிழ் பேசும் நீதி­ய­ர­சர்­களும் இல்லை என்றும் இந்தக் குழு­வினர் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பாக ஆரா­யும் ஐக்­கி­ய ­நா­டுகள் செயற்­குழு உறுப்­பி­னர்கள் நாட்டில் நிலை­மை­களை ஆராய்ந்து தமது கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். உண்­மை­யி­லேயே இறுதி யுத்­தத்­தின்­போதும் அதற்குப் பின்­னரும் நாட்டில் மனித உரி­மைகள் பெரு­ம­ளவில் மீறப்­பட்­டுள்­ளன. யுத்­தக்­குற்­றங்கள் தொடர்­பிலும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி வழங்­கப்­படும் என்று அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­த­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் இன்­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தி­ருந்­தது. அந்­த­வ­ருடம் செப்­டெம்பர் மாத ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்டத் தொடரில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் கீழ் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய அர­சாங்­க­மா­னது இன்­னமும் உரிய விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. அதற்­கான பொறி­மு­றையைக் கூட அமைத்­துக்­கொள்­ள­வில்லை. இந்த நிலை­யில்தான் கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது பொறுப்­புக்­கூறும் விட­யத்­திற்­கென மேலும் இரண்­டு­வ­ரு­ட­கால அவ­கா­சத்தை அர­சாங்­கத்­திற்கு வழங்­கி­யி­ருந்­தது.

ஆனாலும் இன்­னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் யுத்தக் குற்­றங்கள் குறித்தும் விசா­ரணை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஆக காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை மட்­டுமே அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது. அதுவும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. ஆனால் இந்த வருடம் ஆகஸ்ட் மாதமே அந்தப் பிரே­ரணை திருத்­தங்­க­ளுடன் நிறை­வேற்­றப்­பட்டு அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதுவும் மந்­த­க­தி­யி­லேயே நடை­பெற்று வரு­கின்­றது.

இத­னால்தான் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐ.நா. குழு­வினர் காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக தொழிற்­ப­டுத்­த­வேண்டும் என்றும், அந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்­டோரின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­னது எனவும் வலி­யு­றுத்­த­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இத­னை­விட ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் நிறை­வேற்­றப்­பட்ட பொறுப்­புக்­கூறல் செயல்­மு­றையை முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் எனவும் இந்தக் குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இத­னை­விட நாட்டில் தற்­போதும் தன்­னிச்­சை­யான தடுத்­து­வைத்தல் நட­வ­டிக்­கை­களும் சித்­தி­ர­வ­தை­களும் தொடர்­வ­தாக முறைப்­பாடுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்தக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது. அத்துடன் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் இந்தக் குழு கண்டனம் தெரிவித்திருக்கின்றது. அரசியல் கைதிகள் விடயத்தில் இத்தகைய நிலைப்பாடு நீடித்துவருகின்றது. சிறைச்சாலைகளில் பல்லாண்டுகாலமாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களது வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்போது அந்த தடுத்து வைத்திருந்த காலப்பகுதி எடுக்கப்படாமையினால் பெருமளவான அரசியல் கைதிகள் பெரும்பாதிப்புக்களை சந்திக்கின்றனர். இந்த விடயம் குறித்தும் ஐ.நா. குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

எனவே ஐ.நா. குழுவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய காணாமல்போனோர் விவகாரத்திலும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் அரசாங்கம் அக்கறை செலுத்தவேண்டும். இதனைவிட பொறுப்புக்கூறும் விடயத்தில் துரித செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் அதிருப்திக்கு மீண்டும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-18#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.