Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித்

Featured Replies

தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித்

 

 
smith

ஸ்டீவ் ஸ்மித்.   -  படம்.| ஏ.பி.

அசாத்தியமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனுக்கு அருகில் இருக்கிறார்.

பிரிஸ்பனில் 141 அடித்த ஸ்மித், பெர்த்தில் 239 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைத்தார்.

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித்தின் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 941 என்ற அதிகபட்ச புள்ளிகளை ஸ்மித் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மென் லென் ஹட்டனுடன் ஐசிசி தரவரிசைப் புள்ளிகளில் அனைத்துக் கால அதிகப்புள்ளிகள் பெற்ற டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்றுக்கிறார். இதுவரை யாரும் 961 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றதில்லை. ஸ்மித் தற்போது 945 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் இருக்கிறார்.

ஜனவரி 2016-லிருந்து ஸ்மித் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலியைக் காட்டிலும் 52 புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் ஸ்மித்.

http://tamil.thehindu.com/sports/article21921853.ece?homepage=true

  • தொடங்கியவர்

நவீன கால பிராட்மேனா ஸ்டீவ் ஸ்மித்?

 

 
STEVESMITH%20Finalcol

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியதில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பங்கு அளப்பரியது. பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் அவர், ஒரு காவியமான இன்னிங்ஸை விளையாடி சதம் அடித்ததுடன் இங்கிலாந்து அணி வீரர்களால் கடைசி வரை வீழ்த்த முடியாத வீரராகவும் திகழ்ந்தார். பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட்டில் 399 பந்துகளை சந்தித்து 239 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணியின் இதயத்தை உடைத்தெறிந்தார். ஆஷஸ் தொடரில் தனித்துவமான பேட்டிங்கால், அனைத்து கால சிறந்த பேட்ஸ்மேனான டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு புகழப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார் ஸ்மித்.

ஆஷஸ் வெற்றி நாயகனான ஸ்மித் பேட்டிங்கில் ஏறக்குறைய இங்கிலாந்து அணியை ஒற்றை ஆளாக கையாண்டு ஜோ ரூட் குழுவினரை வீழ்ச்சியடைய செய்துள்ளார் என்றே கூறவேண்டும். 3 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் ஸ்மித், 4 இன்னிங்ஸ்களில் 142 சராசரியுடன் 426 ரன்களை வேட்டையாடி உள்ளார். 28 வயதான அவர், பேட்டிங்கில் தனக்கே உரிய பாணியை கடைபிடித்து வருகிறார். பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்டெம்புகளை விட்டு நகர்ந்து சென்று, பல்வேறு அசைவுகளை மேற்கொண்டபடி பேட் செய்யும் ஸ்மித் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62.32 என்ற விகிதத்தில் ரன்குவிப்பு சராசரியை வைத்துள்ளார்.

இதுதான் கிரிக்கெட் வரலாற்றில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஸ்மித்தை நிலைகொள்ள செய்துள்ளது. 1928 முதல் 1948-ம் ஆண்டு வரை விளையாடிய பிராட்மேனின் சராசரி 99.94. 2010-ம் ஆண்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பேட்டிங் வரிசையில் 8-வது வீரராகத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார் ஸ்மித். ஆனால் 7 ஆண்டுகளில் அவரது வளர்ச்சி விஸ்வரூபம் கண்டுள்ளது. டெஸ்ட்டில் தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளில் அதிக சராசரியுடன் ஆயிரம் ரன்களுக்கு மேல் வேட்டையாடி உள்ளார்.

டெஸ்ட்டில் ஸ்மித் 22 சதங்கள் அடித்துள்ளார். இதில் 14 சதங்கள் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு வந்தவை. அதிலும் இவை 29 ஆட்டங்களில் அடிக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. பிராட்மேன் கேப்டனாக செயலாற்றிய காலக்கட்டத்தில் 24 போட்டிகளில் 14 சதங்கள் எடுத்திருந்தார். ஆஷஸ் தொடரில் இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித், 5-வது நபர். இந்த வகையில் பிராட்மேன் இருமுறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

பெர்த் டெஸ்ட்டில் ஸ்மித் ஏறக்குறைய 3 நாட்கள் பேட் செய்தார், அவரது தனித்தன்மை வாய்ந்த பேட்டிங்கும் இம்முறை ஆஷஸ் தொடர் ஒருதரப்பாக அமைய முக்கிய காரணங்களுள் ஒன்று. இதுதான் இங்கிலாந்து அணியிடம் இருந்து ஆஸ்திரேலியாவை பெரிய அளவில் வேறுபடுத்திக் காட்டியது. இந்தத் தொடரில் வழக்கத்துக்கு மாறான பேட்டிங் நுட்பங்களை ஸ்மித் கையாண்டதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கையாண்ட சில பேட்டிங் நுட்பங்கள், டான் பிராட்மேன் பயன்படுத்திய நுணுக்கங்களுடன் ஒன்றிய வகையில் இருந்தது.

பிராட்மேன் மட்டையை தாழ்வாகவே சுழற்றுவார். அதே வகையிலான நுட்பத்தை ஸ்மித்தும் மேற்கொண்டார். காற்றில் பறந்து செல்லும் வகையிலான ஷாட்களை ஸ்மித் அரிதாக விளையாடுவார். அதேபோல் பந்துகளை கட் செய்வதிலும் குறைந்த அளவிலான ரிஸ்க்கையே எடுப்பார். இதுபோன்ற யுத்திகளால் அவருக்கு எதிராக களவியூகங்களை அமைப்பதில் எதிரணியினர் பலமுறை திக்குமுக்காடவும் செய்துள்ளனர். ஆஷஸ் டெஸ்ட் தொடரை உள்நாட்டில் ஒளிபரப்பும் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று, ஸ்மித் பேட்டிங்கின் போது ஒரு பந்து வீச்சாளரை சந்திப்பதற்கு முன்பு 23 வகையான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

ஸ்மித் மட்டையை கையாளும் விதம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறும்போது, “ஸ்மித் மட்டையை கையில் பிடிக்கும் விதம் குறித்து இளம் கிரிக்கெட் வீரருக்கு நாம் பயிற்சி கொடுக்க முடியாது. கையின் கீழ் பகுதி மூலம் அவர் மட்டையை வலுவாக கையாள்கிறார். ஆனால் அவரது பேட், பந்தை எதிர்கொள்ள கீழே இறங்கும் போது முழுமையாக பந்தை சந்திக்கிறது. இதில் அவரது கண்களும் கையும் ஒருங்கிணைந்து தனித்துவமாக செயல்படுகிறது” என்றார்.

அதீத பார்மில் இருக்கும் ஸ்மித், ஆஷஸ் தொடரின் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணியை மேலும் ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் என்றே கருதப்படுகிறது. தொடரை ஏற்கெனவே கைப்பற்றி விட்டதால் எந்தவித அழுத்தமும் இல்லாமல் அவர் எளிதாக ரன்கள் குவிக்க முடியும். இந்த வாய்ப்பை ஸ்மித் சரியாக பயன்படுத்தக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article22121578.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மெல்போர்ன் டெஸ்டில் சதம்: டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார் ஸ்மித்

 

ஆஷஸ் தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார் ஸ்மித். #Ashes #AUSvENG #SteveSmith

 
மெல்போர்ன் டெஸ்டில் சதம்: டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார் ஸ்மித்
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த்தில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை இருந்தது.

இந்நிலையில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி நடைபெற்று. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த ஸ்மித், 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 275 பந்தில் 6 பவுண்டரியுடன் 102 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அத்துடன் போட்டியை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதித்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மெல்போர்ன் டெஸ்டில் நான்கு சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை டான் பிராட்மேன் உடன் பகிர்ந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

201712301705120464_1_stevesmith001-s._L_styvpf.jpg

இதற்கு முன் டான் பிராட்மேன் 1928 முதல் 1931 வரை 112, 123, 152 மற்றும் 167 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 192, 134*, 165* மற்றும் 102* ரன்கள் அடித்து டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும் இன்றைய சதம் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 23 சதங்கள் விளாசியுள்ளார். அத்துடன் விரைவாக 23 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கவாஸ்கருடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். டான் பிராட்மேன் 59 இன்னிங்சில் 23 சதங்களும், சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 102 இன்னிங்சில் 23 சதமும், மொகமது யூசுப் 122 இன்னிங்சில் 23 சதங்களும், சச்சின் தெண்டுல்கர் 123 இன்னிங்சில் 23 சதங்களும் விளாசியுள்ளனர்.

கேப்டனாக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 15 சதங்களுடன் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் உடன் இணைந்துள்ளார். தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 19 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்தில் உள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/30170512/1137589/Ashes-AUSvENG-Steve-Smith-Equals-Don-Bradman-Record.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.