Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் சாபக்கேடாக மாறியுள்ள வறுமையும் வேலையின்மையும்!

Featured Replies

 
வடக்கின் சாபக்கேடாக மாறியுள்ள வறுமையும் வேலையின்மையும்!
 
 

வடக்கின் சாபக்கேடாக மாறியுள்ள வறுமையும் வேலையின்மையும்!

 
 

நாட்­டில் வறு­மை­யும் வேலை வாய்ப்­பின்­மை­யும் வடக்கு மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வில் காணப்­ப­டு­வ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

மாகாண சபை­யின் அடுத்த ஆண்­டுக்­கான வரவு– செல­வுத் திட்­டத்தை இரண்­டா­வது வாசிப்­புக்­கா­கச் சமர்ப்­பித்து உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு வேலை வாய்ப்­பின்­மையே முதன்மைக் கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கின்­றது. ஒரு நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைத் தீர்­மா­னிப்­ப­தில் வேலை­யில்­லாப் பிரச்­சினை முக்­கிய பங்கை வகிக்­கின்­றது.

வேலை இல்­லா­த­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும்­போது பொருளா­தா­ரத்­தில் பாதிப்பு ஏற்­ப­டு­வது மட்­டு­மல்­லாது மக்­கள் மத்­தி­யில் குழப்­ப­மான தொரு நிலை­யும் ஏற்­பட்டு விடும்.வடக்கு மாகா­ணம் ஐந்து மாவட்­டங்­க­ளைக் கொண்­டது.

யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்­னார் ஆகிய ஐந்­துமே அவை­யா­கும். இவற்­றுள் கிளி­நொச்சி மாவட்­டம் தனி­ந­பர் வறு­மைச் சுட்டி அதி­க­ரித்த மாவட்­ட­மாக முத­லி­டத்­தில் உள்­ளது. யாழ்ப்­பா­ணம் ஐந்­தாம் இடத்­தி­லுள்­ளது.

போர் கார­ண­மாக வடக்கு மாகா­ணம் மிக மோச­மான அழி­வு­க­ளைச் சந்­தித்­தது. பொரு­ளா­தா­ரம் முழு­மை­யா­கவே சீர­ழிக்­கப்­பட்­டது.

உட்­கட்­ட­மைப்­புக்­கள் யாவும் திட்­ட­மிட்ட வகை­யில் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டன. இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் புலம்­பெ­யர்ந்து சென்­ற­னர். அவர்­கள் மீண்­டும் திரும்பி வருவதற்கான சாத்­தி­யக்­கூ­று­கள் இல்­லை­யென்றே கூற வேண்­டும். முன்னர் அர­சுக்­குச் சொந்­த­மான மிகப்­பெ­ரிய தொழிற்­சா­லை­கள் சில வடக்கில் இயங்கி வந்­தன.

 

காங்­கே­சன்­துறை சீமெந்­துத் தொழிற்­சாலை, பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை, ஆனை­யி­றவு உப்­ப­ளம் ஆகி­ய­வற்­றில் ஏரா­ள­மா­ன­வர்­கள் தொழில்­வாய்ப்­பைப் பெற்­றி­ருந்­த­னர். இவர்­க­ளின் குடும்­பங்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ள­வில்லை.

இதை­விட கண்­ணா­டித் தொழிற்­சாலை, கைத்­தா­தி­கள், மின்­த­றி­கள், குளிர்­பா­னங்­களை உற்­பத்தி செய்­யும் நிலை­யங்­கள் போன்ற வையும் இயங்கி வந்­த­தால் பலர் தொழில்­வாய்ப்­புக்­க­ளைப் பெற்­ற­னர்.

இன்று இவற்­றைக் காண முடி­ய­வில்லை. இவை திரும்­ப­ வும் இயக்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. வடக்­கில் மாகாண சபை­யொன்று இயங்கி வரு­கின்ற போதி­லும் மூடப்­பட்ட தொழிற்­சா­லை­க­ளைத் திறப்­ப­தற்கு இய­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

இயங்­காது இருக்­கின்ற தொழிற்­சா­லை­கள் மீளத் திறக்­கப்­பட்­டாலே வடக்­கின் பொரு­ளா­தா­ரத்­தில் முன்­னேற்றம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

போருக்குப் பின்னரான அபிருத்தி வடக்கில் முழுமை பெறவில்லை

போருக்­குப் பின்­னர் புன­ர­மைப்­புப் பணி­கள் வடக்­கில் இடம்­பெற்ற போதி­லும் அவை திருப்­தி­கொள் ளும் அள­வுக்கு இல்­லை­யென்­று­தான் கூற வேண்­டும். போர் நிறை­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யி­லும் இடம்­பெ­யர்ந்து மக்­கள் முழு­மை­யாக மீள்­கு­டி­ய­மர்த்­தப் ப­டாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

வலி.வடக்­கில் உள்ள மக்­க­ளுக்­குச் சொந்­த­மான நிலங்­க­ளைப் படை­யி­னர் அடாத்­தா­கப் பிடித்து வைத்­தி­ருக்­கின்­ற­னர். வள­மான அந்­த­மண்­ணில் படையினர் விவ­சா­யத்­தி­லும், கால்­நடை வளர்ப்­பி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

 

ஆனால் அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து சென்­ற­வர்­கள் அகதி முகாம்­க­ளி­லும் அந்­நிய இடங்­க­ளி­லும் காலத்­தைக் கடத்தி வரு­கின்­ற­னர். இந்த நிலை­ யில் வடக்கு மக்­க­ளின் வறுமை எவ்­வாறு ஒழிந்து போகும்? இவ்­வா­றா­ன­தொரு நிலை வடக்­கின் ஏனைய சில பகு­தி­க­ளி­லும் காணப்­ப­டு­கின்­றது.

வேலைவாய்ப்பற்ற விரக்தி நிலையில் வடபகுதி இளம் சமுதாயம்

வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த ஏரா­ள­மான இளை­ஞர்­க­ளும் யுவ­தி­க­ளும் தமது படிப்­புக்­கேற்ற தொழில் கிடைக்­காது திண்­டாடி வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் பலர் பட்­ட­தா­ரி­கள் என்­பது குறிப்­பி­டத் தக்­கது. இவர்­க­ளுக்­குத் தொழில்­வாய்ப்­புக் கிடைக்­கு­மா­னால் அவர்­க­ளது குடும்­பங்­கள் பொரு­ள­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து ஓர­ள­வா­வது விடு­தலை அடைய முடி­யும்.

நிலத்­தடி நீரை­யும் மழை­யை­யும் நம்­பியே வடக்­கின் விவ­சா­யத்­துறை உள்­ளது. மழை பொய்க்­கும் போதும், அள­வுக்கு அதி­க­மா­கப் பொழி­யும் போதும் விவ­சா­யம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. மழை சீரா­கப் பெய்­தால்­தான் நிலத்­தடி நீர் குறை­வின்றிக் கிடைக்­கும்.

ஆனால் கடந்த சில வரு­டங்­க­ளாக சீரான மழை­வீழ்ச்சி இல்­லா­த­தால் விவ­சா­யத்­துக்­குப ் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டது. இந்த வரு­டம் அதி­க­மான மழை­வீழ்ச்சி கார­ண­மாக நெற்­ப­யிர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது ஏனைய பயிர்­க­ளுக்­கும் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டது. இத­னால் விவ­சா­யி ­கள் நட்­ட­ம­டைந்­துள்­ள­னர். இதற்­கு­ரிய நட்­ட­ஈடு வழங்­கப்­ப­டா­து­விட்­டால் அவர்­க­ளது கதி மோச­மாக மாறி­வி­டும்.

 

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் 
திருப்தியற்றவை

மத்­திய அர­சின் பங்­க­ளிப்­பின்றி எதை­யும் சாதிக்­கக் கூடிய நிலை­யில் வடக்கு மாசாண சபை இல்­லை­யென்­பதை ஒப்­புக் கொண்­டு­தான் ஆக வேண்­டும். மத்­தி­ய­அ­ரசு நிதியை வழங்­கா­து­விட்­டால் மாகாண அர­சி­னால் எதை­யுமே சாதித்­து­விட முடி­யாது. அந்த அள­வுக்கு அதன் அதி­கா­ரங்­கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற வேத­னம் மற்­றும் வரப்­பி­ர­சா­தங்­களை வழங்­கு­வ­தற்­கா­க­வும் , ஏனைய செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­கா­க­வும் பெரும்­தொகை நிதியை மாகாண சபை செலவு செய்து வரு­கின்­றது.

மாகாண சபை உறுப்­பி­னர்­கள் தீர்­வை­யற்ற வரி­யு­ட­னான வாகன அனு­ம­திப் பத்­தி­ரத்­தைப் பெற்று அதன் மூல­மா­கப் பெரும் தொகைப் பணத்­தைச் சம்­பா­தித்­துள்­ள­னர். இவர்­க­ளைத் தெரிவு செய்த மக்­கள் வறு­மை­யில் வாட, இவர்­களோ அது தொடர்­பா­கச் சிறி­தும் சிந்­திப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

வடக்­கின் வறு­மை­யும் வேலை­யில்­லாப் பிரச்­சி­ னை­யும் தீர வேண்­டு­மா­னால் மத்­திய, மாகாண அர­சு­கள் ஒருங்­கி­ணைந்து திட்­டங்­களை வரைந்து அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். அத்­து­டன் பாரா­பட்­ச­மற்ற வகை­யில் தொழில்­வாய்்­புக்­களை வழங்­கு­வ­து­டன் தொழிற்று­றையை மேம்­ப­டுத்­த­வும் வேண்­டும்.

வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளில் வடக்­கில் உள்­ள­வர்­க­ளுக்கு ஏனைய பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இடை­யூறு ஏற்­ப­டுத்­தாத வகை­யில் பார்த்­துக் கொள்­வ­தும் அவ­சி­ய­மா­கும்.

http://newuthayan.com/story/56136.html

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாரை சொல்லி நோவது என்று தெரியவில்லை "ஒரு பாத்தி மாறி கட்டுவதுக்கும் ஆள் பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறம் இருக்கிறது எல்லாம் வெளிநாட்டுக்கு என்ற கனவில் " இது சமீபத்தில் ஊர் போய் வந்தவரின் உள்ள குமுறல் .

அப்போ எல்லாம் தென்னம் மட்டை ரோட்டில் விழுந்தால் எடுத்து எரிக்க அடிபிடி இப்ப யாரும் சீந்துவாரில்லாமல் குப்பையாம் காரணம் காஸ் சிலிண்டர் .

தொண்டைமானாறு பாலம் கட்டுவதுக்கு சித்தாள் பெரும்பான்மை இன மக்கள் காரணம் சித்தாள் தட்டுப்பாடு இருக்கிறவை மோட்டார் சைக்கிளில் சுற்றவே நேரம் காணாது .

கிளிநோச்சி ,முல்லை வேறு கதை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.