Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆர்.கே.,நகர் தேர்தலில் தினகரன் வெற்றி

Featured Replies

ஆர்.கே.நகர் யாருக்கு?

  •  
download%205jpg

திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் (இடமிருந்து வலமாக)

 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

8.10 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்கு பதிவானது. அந்த தபால் வாக்கு திமுகவுக்கு பதிவாகியுள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல்..

தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

24THCHENNAIjpg

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ‘விவி பாட்’ இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு, ராணி மேரி கல்லூரியில் முதல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

14 மேஜைகளில் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை:

வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 வாக்குச்சாவடிகளின் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி பார்த்தால் 18 முழு சுற்றுக்கள், ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ‘வெப் காஸ்டிங்’ மூலமும் பார்க்க முடியும். அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவதால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22270195.ece?homepage=true

#LiveUpdates ஆர்.கே.நகர் முதல் சுற்று முடிவுகள் வெளியானது - தினகரன் முன்னிலை! #RKNagar ்

 

தற்போதைய நிலவரப்படி தினகரன் 412 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மதுசூதனன் 257 வாக்குகள் பெற்றுள்ளார். மருதுகணேஷ் 93 வாக்குகள் பெற்றுள்ளார். 

தற்போதைய நிலவரப்படி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றார் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன். 

ஆர்.கே.நகர் தேர்தலில் மொத்தம் 4 தபால் வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஒரு வாக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. பதிவான ஒரே ஒரு தபால் ஓட்டும் திமுகவுக்கு கிடைத்துள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான 1,76,885 வாக்குகளை எண்ணும் பணித் தொடங்கியது.  இன்னும் சற்று நேரத்தில் முதல் சுற்று நிலவரம் வெளியாகும்.

rknagar

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவிடும். இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. ஜெயலலிதா தொகுதியை கைப்பற்றப்போவது யார்? அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன் என்று மூன்று பேருமே வெற்றி தங்களுக்குத்தான் என்று சொல்லி வருகிறார்கள்.இந்தத் தேர்தலில் பெறும் வாக்குகள்தாம் தமிழக அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது என்றுக் கூட சொல்லலாம்!

 
 
 
 

rk nagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகள் சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதையடுத்து, வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணியில் 100 பேர் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 19 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும். மொத்தம் 256 பெட்டிகள் இருந்தாலும் யார் வெற்றி பெறுவார் என்ற சாதக பாதக நிலவரம் மதியம் 12 மணிக்குள் தெரிந்துவிடும்.

https://www.vikatan.com/news/rk-nagar/111703-liveupdates-rknagar-bypoll-result-updates.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

#LiveUpdates தினகரன் அபாரம்! : கலக்கத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி #RKNagar்

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் மதுசூதனனைவிட இரண்டு மடங்கு அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார் தினகரன். தற்போதைய நிலவரப்படி 5339 வாக்குகள் தினகரனுக்கு பதிவாகியுள்ளன. மதுசூதனன் 646 வாக்குகள் பெற்றுள்ளார். 

தினகரன்

இன்று எம்.ஜி.ஆருக்கு 30வது நினைவுதினம். ஆர்.கே.நகர் தற்போதைய நிலவரப்படி தினகரன் முன்னிலை வகிக்கிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் சமாதியில் மரியாதை செலுத்தினர். 

https://www.vikatan.com/news/rk-nagar/111705-dinakaran-leads-in-rknagar-election.html

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை
 
  • தொடங்கியவர்

அதான், முதல் சுற்று முடிவுலயே தெரியுதே... தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி டுவீட்!

வேகமாக முன்னேறி வரும் தினகரன்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீஸ்

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை

 

  • ஆர்கே நகரில் பாஜகவை விட நோட்டாவுக்கு வாக்குகள் அதிகம்
  • பாஜக- 66; நோட்டா- 122
  • கலைக்கோட்டுதயம் 258

LiveUpdates வாக்கு எண்ணிக்கை மையத்தில் சலசலப்பு! - வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது #RKNagar

 

வாக்கு எண்ணிக்கை  தற்காலிகமாக நிறுத்தம்

  • வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம்
  • கூச்சல் குழப்பம் நீடிப்பதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தம்
  • தொடங்கியவர்

 

#LiveUpdates வாக்கு எண்ணிக்கை மையத்தில் சலசலப்பு! - வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது #RKNagar

்்
 

பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவினர் அங்குள்ளவர்களை தாக்கி வருகின்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையமான சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது. 

ஆர்.நகர்

வாக்கு எண்ணிக்கை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தினகரன், அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. நாற்காலிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தினகரன்  7000 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதால் மதுசூதனன் ஆதரவாளர்கள் தினகரன் ஆதரவாளர்களை அடிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் அதிகாரி பிரவீன்  நாயர் வெளியே வந்துவிட்டார். போலீஸார் அனைவரையும் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

https://www.vikatan.com/news/rk-nagar/111705-dinakaran-leads-in-rknagar-election.html

  • தொடங்கியவர்

#LiveUpdates ஆர்.கே.நகரில் தினகரனுக்கு கைகொடுத்த பிரசார யுக்தி! #RKNagar

 
Chennai: 

ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை தினகரனுக்கு 10,421 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மதுசூதனனுக்கு 4,521 வாக்குகள் கிடைத்துள்ளது. தினகரனுக்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரசாரத்தின் போது தினகரன் பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தை கையில் எடுத்ததே இந்த அபார வாக்குக்களை குவிக்க காரணம் என்று கூறப்படுகிறது. 

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை  வேட்பாளர்கள் வாக்குகள்

டிடிவி தினகரன் (சுயேட்சை) 15,868

மதுசூதனன் (அதிமுக) 7,033

மருதுகணேஷ் (திமுக) 3,750

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 459

மற்றவை 208

கரு. நாகராஜன் (பாஜக) 117

Read more at: https://tamil.oneindia.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

RK Nagar: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

தினகரன்kukkar.jpg 20298
மதுசூதனன்admk.jpg 9672
மருது கணேஷ்dmk.jpg 5091

https://www.vikatan.com/?home=1

  • தொடங்கியவர்

#LiveUpdates தினகரன் தரப்பை கிண்டல் செய்துவரும் மதுசூதனன் ஆதரவாளர்கள்! - ரணகளமான ஆர்.கே.நகர் #RKNagar

 
 
Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தற்போதைய நிலவரப்படி டிடிவி தினகரன் 34,346 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மதுசூதனன் 18,241 வாக்குகள் பெற்றுள்ளார். மருதுகணேஷ் 9206 வாக்குகள் பெற்றுள்ளார். தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். இதனால் அதிமுக தொண்டர்கள் உச்சக்கட்ட கோவத்தில் உள்ளனர். ஆர்.கே.நகரில் இனிப்பு வழங்கி கொண்டாடி வரும் தினகரன் ஆதரவாளர்களை பார்த்து அதிமுக ஆதரவாளர்கள் “இன்னும் கொருக்குப்பேட்டை உட்பட நிறைய பகுதிகள் இருக்கு. வாக்கு எண்ணிக்கை முடியட்டும்.. அப்போதுத் தெரியும் யார் முன்னணி என்பது” என்று பேசி வருகின்றனர்.  ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொண்டும், கிண்டல் செய்து கொண்டும் இருக்கின்றனர். 

தற்போதைய நிலவரம்..

 
 

rknagar

https://www.vikatan.com/news/rk-nagar/111705-dinakaran-leads-in-rknagar-election.html

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 10 சுற்றுகள் முடிந்த நிலையில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை

 

 
TTV%20supportersjpg

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் டிடிவி ஆதரவாளர்கள் | படம்: விவேக் நாராயணன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. இதுவரை 9 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றுள்ளது.

தொடர்ந்து 9 சுற்றுகளிலும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்துவருகிறார்.

2.49 PM: 10 சுற்றுகள் முடிந்த நிலையில், ஆர்.கே.நகரில் நோட்டாவுக்கு 1298 வாக்குகள் பதிவாகியுள்ளன.

2.44PM: 10-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 23,441 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

2.44PM: 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 48,808 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 25,367 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 13,015 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 2,347  வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 712 வாக்குகள் பெற்றுள்ளார்.

 

 

ttv1jpg

கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் | கோப்புப் படம்

 

http://tamil.thehindu.com/tamilnadu/article22270195.ece?homepage=true

  • தொடங்கியவர்
தொடர்கிறது தினகரனின் வெற்றி முகம். 14வது சுற்றிலும் டி.டி.வி. தினகரன் முன்னிலை.

RK Nagar: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

தினகரன் சுயே kukkar.jpg 68302
மதுசூதனன் அதிமுக admk.jpg 36211
மருது கணேஷ் திமுக dmk.jpg 18928
கலைக்கோட்டுதயம் நாதக candle.jpg 3083
நோட்டா NOTA nota.jpg 1665
கரு.நாகராஜன் பாஜக thamarai.jpg 942

https://www.vikatan.com

தமிழகத்தில் பா.ஜ.க சாதனை படைத்துள்ளது: சுப்பிரமனியன் சாமி ட்விட்டரில் கிண்டல்  

 

 
subramanian-swamy

ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜ.கவை விட நாம் தமிழர் கட்சி அதிகமான வாக்குகளை பெற்று உள்ளது,

நோட்டோவிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்து உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி அக்கட்சியின் செயல்பாட்டை விமர்சனம் செய்து உள்ளார்.

சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் பதிவிட்டு உள்ள செய்தியில், “தமிழகத்தில் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது. மத்தியில் ஆளும் தேசியக்கட்சிக்கு இடைத்தேர்தலில் நோட்டோவிற்கு கிடைத்த வாக்குகளில் கால்வாசி மட்டுமே கிடைத்து உள்ளது. இது பொறுப்பை உணர வேண்டிய தருணம்,” என குறிப்பிட்டு உள்ளார். 

 

http://www.dinamani.com/latest-news/2017/dec/24/தமிழகத்தில்-பாஜக-சாதனை-படைத்து-உள்ளது-சுப்பிரமனியன்-சாமி-ட்விட்டரில்-கிண்டல்-2832365.html

  • தொடங்கியவர்

டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பு. `ஸ்லீப்பர் செல்`-ஐ சேர்த்து தங்கள் அணியில் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-42470202

உறுதியானது வெற்றி. வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்கிறார் தினகரன். வாக்கு எண்ணும் மையத்தில் தினகரன் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டம்.

RK Nagar: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

தினகரன் kukkar.jpg 72518
மதுசூதனன் admk.jpg 39029
மருது கணேஷ் dmk.jpg 20493
  • தொடங்கியவர்
கடுமையாக சரிந்த திமுகவின் செல்வாக்கு : 2016 தேர்தலில் 57,673 வாக்குகள் பெற்ற நிலையில், அதில் பாதியைக்கூட திமுக இப்போது பெறவில்லை.
 
 
 
திமுக, நாம் தமிழர், பி.ஜே.பி. வேட்பாளர் உட்பட 57 வேட்பாளர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தனர்.
 
 
ஜெயலலிதா மிஞ்சுவாரா தினகரன்? : 2016 தேர்தலில் 39,545 வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்ற நிலையில், அதை தினகரன் மிஞ்ச வாய்ப்பு.
 
 
டெபாசிட் இழந்தது திமுக : 29,481 வாக்குகள் பெற்றால் டெபாசிட் தக்கவைக்கலாம் என்ற சூழலில், அதை பெறமுடியாமல் டெபாசிட் இழக்கிறது திமுக.

 

80 ஆயிரம் வாக்குகளைக் கடந்தார் தினகரன். இன்னும் ஒரு சுற்று வாக்குகள் எண்ண வேண்டியுள்ள நிலையில், 81,315 வாக்குகள் பெற்றார் தினகரன்.

RK Nagar: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

தினகரன் சுயே kukkar.jpg 86792
மதுசூதனன் அதிமுக admk.jpg 46925
மருது கணேஷ் திமுக dmk.jpg 24144
கலைக்கோட்டுதயம் நாதக candle.jpg 3724
நோட்டா NOTA nota.jpg 2203
கரு.நாகராஜன் பாஜக thamarai.jpg 1312

https://www.vikatan.com

இடைத்தேர்தலில் முதல்முறையாக தோல்வியை தழுவிய ஆளும் கட்சி!

 

 
admk

முன்னாள் முதல் ஜெயலலிதாவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஆளும் கட்சியான அதிமுக முதல் தோல்வியை தழுவி உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி முதல்முறையாக இடைத்தேர்தலில் தோல்வியடைந்து இதுவே முதல்முறை.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தொகுதியில் நடந்த முதல் இடைத்தேர்தலில் இப்போது ஆளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முதல் தோல்வியை தழுவி உள்ளது. 

2016-ஆம் ஆண்டு நடத்த சட்டப்பேரவை தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரால் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த 2 இடங்களுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக உறுப்பினர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தையடுத்து அந்த தொகுதியையும் சேர்த்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 3 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை வெற்றி பெற்றது. 

3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் திமுக கருணாநிதி, அதிமுக ஜெயலலிதா போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது கிடையாது. 

ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக முதல் தோல்வியை தழுவி உள்ளது. இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் ஆளும் கட்சி இடைத்தேர்தலில் தோற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.dinamani.com/latest-news/2017/dec/24/இடைத்தேர்தலில்-முதல்முறையாக-தோல்வியை-தழுவிய-ஆளும்-கட்சி-2832384.html

  • தொடங்கியவர்
ஆர்.கே.,நகர் தேர்தலில் தினகரன் வெற்றி
தினகரன் வெற்றி
கட்சிகள் பெற்ற
வாக்குகள்
2016
முடிவுகள்
தினகரன்(சுயே.,) 89,013 -
அ.தி.மு.க., 48,306 97,218
தி.மு.க., 24,651 57,673
நாம் தமிழர் 3,645  
பா.ஜ., 1,236 2,928
நோட்டா 2,203  
மற்றவை - -
  • தொடங்கியவர்

ஆளும்கட்சியை வீழ்த்தி ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார் டிடிவி.தினகரன்! #RKNagar

 
 
Chennai: 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது.  சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.  

dinakaran

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டாக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலேயே இழுப்பறி நீடித்தது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர்செல்வம் கூட்டணிக்கு கிடைத்தது. இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்று இரு அணிகளும் நம்பியது. ’நாங்கள்தான் ஜெயிப்போம் என்று அதிமுக நிர்வாகிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்தனர். குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தையும் ஒருபுறம் நடத்திவந்தார். தேர்தலுக்கு முந்தைய தினம் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். 

இத்தனை களேபரங்களுக்கு இடையே ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இன்று வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது. ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,885. அதில்  தினகரன் பெற்றது 89013 வாக்குகள். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகள் 48,306. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பெற்ற வாக்குகள் 24652.  40,707  வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்று ஆர்.கே.நகர் தொகுதியை தன்வசப்படுத்தியுள்ளார் தினகரன்.

ஒரு குட்டி ரிவைண்ட்... 

கடந்த 2015 ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரனை விட  1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனைப் படைத்தார். அப்போது ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெற்ற வாக்குகள் 9,710. 

கடந்த 2016ம், ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா  97, 218 வாக்குகள் பெற்றார்.  தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழனைவிட  39, 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 57,673 வாக்குகளே மட்டுமே பெற்றார். 

https://www.vikatan.com/news/rk-nagar/111729-ttvdinkaran-wins-rk-nagar-election.html

 

  • தொடங்கியவர்

இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது: தினகரன்

 

 
dinakaran12jpg

டிடிவி தினகரன்

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடமிருந்து பெற்றார் டிடிவி தினகரன்.

அதற்குப் பிறகு சென்னை ராணிமேரி கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றி பெறக் காரணமாக இருந்த தொண்டர்களுக்கும், எனக்காக வாக்களித்தவர்களுக்கும் நன்றி. ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். ஆர்.கே.நகர் மக்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் தொடருவேன்.ஜெயலலிதா வீடியோவுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீடியோ வெளியிட்டது தொடர்பாக வெற்றிவேலைக் கண்டித்தேன்.

அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஆர்.கே.நகரில் தொடங்கும் என்று ஏற்கெனவே சொன்னேன். அது நடந்திருக்கிறது.

காவல்துறை ஏவல்துறையாக நடக்கக் கூடாது. நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எனது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது'' என்று தினகரன் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22271048.ece?homepage=true

  • தொடங்கியவர்

தினகரனும் ஸ்டாலினும் சதி செய்து வெற்றிபெற்றுள்ளனர்..! ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டு அறிக்கை

 
 

தி.மு.கவும் டி.டி.வி.தினகரனும் கூட்டு சதி செய்து ஆர்.கே.நகர் தேர்தலைச் சந்தித்துள்ளனர். அதனால், டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

ops_21534.jpg

 
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். மாறாக தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் டெபாஸிட் இழந்துள்ளார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவு குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், 'தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சந்தித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் அவர்களுக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளைக் கூட பெறமுடியாத நிலை தி.மு.கவுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை, தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். அதேவேளையில், அதற்கு பின்னணியாக தி.மு.கவும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டுச் சதியினை அறிந்து பதவி ஆசைக்காக இப்படியும் சதி செய்வார்களா என்று, தி.மு.கவினரை நோக்கி தமிழக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆரின் பெயருக்கும், ஜெயலலிதாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திவிட வேண்டும் என்று தி.மு.கவும் டி.டி.வி.தினகரனும் திட்டமிட்டு செய்த கூட்டுச் சதியின் வெளிப்பாடாக இந்தத் தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது.

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, திருமங்கலம் பார்முலா என்ற புதிய சொல்லை தீயசக்தி தி.மு.க உருவாக்கியது. அதே வழியில் இப்பொழுது வாக்காளர்களுக்கு நூதனமுறையில் பணம் கொடுத்து தினகரன் பார்முலா என்று தீயசொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கியிருக்கிறார்கள். தீராத பழியை தன்மேல் கொண்டுள்ள தினகரனும், ஊழல் பழியை தனது தலைமேல் தாங்கிக்கொண்டிருக்கும் தி.மு.கவும் ரகசிய ஒப்பந்தம் செய்து பெற்ற இந்த வெற்றியை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த சட்டமன்றத் தொகுதிக்கும் பொருந்தாது. டி.டி.வி.தினகரனின் இந்த வெற்றி அ.தி.மு.கவுக்கு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது' என்று குறிப்பிட்டுள்ளனர். 

https://www.vikatan.com/news/rk-nagar/111745-ops-and-eps-explains-about-rknagar-bypoll-results.html

  • தொடங்கியவர்
தினகரன் வெற்றிக்கு உதவிய ஸ்டாலின்?
 
 
 

'தினகரன் வெற்றி பெற்றால், அ.தி.மு.க., ஆட்சி கவிழும்; பொதுத்தேர்தல் வரும்' என, கணக்கு போட்டு தான், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் செயல்பட்டதாக, அக்கட்சியில்
ஒரு தரப்பினர் புகார் கூறுகின்றனர்.

 

தினகரன்,வெற்றிக்கு,உதவிய,ஸ்டாலின்?


தி.மு.க.,வினர் கூறியதாவது: இடைத் தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், சட்ட சபையில், கூடுதலாக, ஒரு எம்.எல்.ஏ., எண்ணிக்கை கிடைக்கும். ஆனால், தினகரன் வெற்றி பெற்று, சட்டசபைக்கு உள்ளே சென்றால், அவரை எதிர்த்து செயல்பட, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும்

தயங்குவர்.ஊசலாட்டத்தில் இருக்கும், எம்.எல்.ஏ.,க் கள், அவர் பக்கம் சாயவும் வாய்ப்பு உண்டு. அதை சாதகமாக்கி, அரசு மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்பது,ஸ்டாலினின் கணக்கு.


அப்போது, முதல்வர் பழனிசாமியின் அரசு கவிழும். அடுத்து, தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைக்க, கவர்னர் அழைத்தால், தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், தன் தலைமையில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது எனவும், ஸ்டாலின் கருதினார்.ஒருவேளை கவர்னர் ஆட்சியை அமல்படுத்தினால், விரைவில் பொதுத்தேர்தலை சந்தித்து விடலாம் எனவும், தி.மு.க., தலைமை கருதியது.


எனவே, இந்த இடைத்தேர்தலில்,வெற்றி பெறு வதில் முனைப்பு காட்டாமல், கடும் உழைப்பையும் கொடுக்காமல், பணமும் செலவழிக்காமல், மறைமுகமாக, தினகரன் வெற்றிக்கு, தி.மு.க., தலைமை உதவி உள்ளது.கடந்த முறை மருது கணேஷை ஆதரித்து, வாக்காளர்களுக்கு, தி.மு.க.,

 

தரப்பில், இரண்டு கட்டமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.


ஆனால், 'இந்த தேர்தலில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய வேண்டாம்' என, கட்சியினருக்கு, தலைமை தடை போட்டு விட்டது. அதனால் தான், 'தி.மு.க.,வினரின் ஓட்டுகளை, பணம் வாங்கி விட்டது' என, முன்னாள் அமைச்சர், துரைமுருகன் போன்ற வர்கள் கூறத் துவங்கி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1925449

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - அரசியல் என்பது யாருக்கானது?

 

 
2555215116014215165843523670102958950266

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நெட்டிசன்கள் பகிர்ந்துவரும் கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்…

Swaminathan Bharathi

நோட்டு தான் வெற்றியை தீர்மானித்ததாக சொன்னார் ஒரு பாஜக நண்பர்......

சரி.... நோட்டாக்கு போடவாவுமா பணம் கொடுப்பார்கள். உங்கள் போட்டியாளர் நோட்டோ விடம் தோற்று போய் உள்ளீர்கள் நண்பரே

Aazhi Senthil Nathan

தோற்றாலும் பரவாயில்லை என்று பணம் தராமால் களம் கண்ட திமுகவினருக்கு உள்ளபடியே மனம்நிறைந்த பாராட்டுகள். எங்கேயாவது இந்த ஆட்டம் நின்றாகவேண்டும். யாராவது அதை நிறுத்தியாகவேண்டும். அதைத் தொடங்கியதற்காக ஸ்டாலினை வாழ்த்தியே ஆகவேண்டும்.

ஆனால் திமுக வெற்றி பெறாமல் போனதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி காது கொடுத்து கேட்கும் பொறுமையும் பிறர் மீதான மதிப்புடைமையும் அவர்களுக்கு வரும் போது விவாதிக்கலாம்.

இப்போதைக்கு தினகரன், நாம் தமிழர், நோட்டா ஆகியோருக்கு நல்வாழ்த்துகள்.

Govindarajan Vijaya Padma

மக்கள் ஹேப்பி அண்ணாச்சி !தினகரன் வெற்றி!

மகிழ்ச்சி ..இன்னும் இரண்டு மாதத்தில் அதிமுக கூட்டம் ,(ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி) தினகரனை வந்தடையும். மீண்டும் சசிகலா பொது செயலாளர் ஆவார். தினகரன் அடுத்த தமிழக முதல்வர் ஆவார்.

மக்கள் ஹேப்பி அண்ணாச்சி !

Suresh Kannan

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலா நேரடி அரசியலில் நுழைய முனைந்த போது தமிழக மக்களிடையே எழுந்த பரவலான, கடுமையான வெறுப்பை நம்மால் தெளிவாகவே அப்போது உணர முடிந்தது. இந்நிலையில் ஆர்கேநகர் இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் தினகரன்தான் அதிமுகவின் உண்மையாக முகம் என்பதை மக்கள் உணர்த்த விரும்புகிறார்கள் என்பதெல்லாம் 'சிந்தனாவாதிகளின்' கற்பனாவாதம்.

பொது சமூகத்தின் சில ஆதாரமான உணர்ச்சிகள் அத்தனை விரைவில் கூர்மழுங்கி விடாது. சசிகலாவை புறக்கணிக்க விரும்புவர்கள் தினகரனை ஏற்பார்கள் என்பதில் அடிப்படை தர்க்கமேயில்லை. திட்டமிட்டு வெறித்தனமாக பணத்தை இறைப்பதின் மூலம் தினகரன் தன்னுடைய முதலடியை வெற்றிகரமாக சாதிக்கத் துவங்கியிருக்கிறார்.

ஆனால் இது ஆபத்தான துவக்கம். தினகரனின் மெளனப் புன்னகையும் அசாத்தியமான தன்னம்பிக்கையும் அச்சுறுத்துவதாக இருக்கிறது.

நெருப்பிற்கு தப்பி எரிமலையின் உள்ளே வீழ்வதான நிலைமையே தமிழகத்தில் பல வருடங்களாக மாறி மாறித் தொடர்வது பரிதாபம்.

2600088417986467234936117823533743126941
 

Veeramani Mani

எந்த செலவும் இல்லாமல் தினகரனை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர்.

தமிழக வரலாற்றிலேயே ஆறே மாதத்தில் அசுர வளர்ச்சி அடைந்த தலைவர் ஒருவர் உண்டென்றால் அது தினகரனாகத்தான் இருக்கும்.அந்த அளவுக்கு அவரை பட்டிதொட்டி தொடங்கி டெல்லி வரை வளர்த்தது மேற்சொன்னவர்கள்தான்.

கட்சி, சின்னம் முடக்கம், திகார் சிறை, கட்சியை விட்டு நீக்கம்,ரெய்டு என எந்த பேரிடி விழுந்தாலும் தில்லாக புன்னகையையே எதிராளிகளுக்கு பரிசளிக்கிறார் தினகரன்.

கட்சி சார்பற்ற பலரையும் டிடிவி தினகரனின் அணுகுமுறையும், ஆளுமையும் கவர்ந்திருப்பதை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது.தமிழக அரசியலில் தினகரன் இன்று தவிர்க்க சக்தியாக மாறியிருப்பதற்கு காரணம் அவரது "டிஃப்ரண்ட் கேரக்டர்தான்".

பார்ப்போம் அந்த கேரக்டர் என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று???

Mani Mkmani

தினகரன் அழகாய் சிரிக்கிறார். தினகரன் சமாளிக்கிறார். தினகரன் மடக்குகிறார். தினகரன் வழங்குகிறார். தினகரன் ஜெயிக்கிறார். பணத்தை வாங்கிக் கொள்ளுவது உரிமை. ஆனால் மாற்றிப் போடவும் தெரியாத இந்த மடமை என்ன சர்வைவல் பண்ணப் போகிறதோ?

வ. கீரா

நாம் தமிழர்கள்கிட்ட தட்ட 30 ஆயிரம் பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்று ஆர்.கே நகர் தொகுதியில் பரப்புரை செய்தார்கள்....

விடை மிகச் சொற்பம்....

ஓட்டரசியல் முடிவுகளிலிருந்து நகர்ந்து வாருங்கள்..

இரா. முருகவேள்

அதிமுக அணிகளுக்கிடையேயான வாழ்வா சாவா போராட்டத்தில் பாஜக அலட்சியப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாமல்தான் அவர்கள் இந்த நகரங்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கிறார்கள்.

Daniel Clinton

சோழர் பரம்பரையில் ஒரு MLA

ttv%2011jpg

Araathu R

ஆர் கே நகர் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றே நினைத்தேன். அதிமுக ஓட்டு பிரிதல், ஆட்சி மீது இருக்கும் கடும் அதிருப்தி என்றெல்லாம் நினைத்தேன்.

2ஜி தீர்ப்பு வந்ததும், நகர் முழுதும் கனிமொழியை வாழ்த்தி ஒட்டப்பட்ட பெரிய பெரிய போஸ்டர்களை பார்த்ததும் "தப்பாச்சே" என்று தோன்றியது. 2ஜி யை கொட்டை எழுத்தில் மீண்டும் மக்கள் மனதில் கொண்டு வருகிறார்களே என்று நினைத்தேன்......

திமுகவின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ !

பால கணேசன்

எல்லாரும் பாஜக, நோட்டான்னு பேசுறப்ப நடுவுல நாலாவது இடம் பிடிச்ச நாம் தமிழர மறந்துர்றோம்.

இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு அந்த கட்சிக்கு.. ஏன்னா பல வருசங்களா பழந்தின்னு கொட்ட போட்ட கட்சிகளே திமுக கூட்டணியில சரண்டராக, நாம்தமிழர் வேட்பாளரையும் இறக்கி, நாலாவதாவும் உள்ள வந்திருக்காங்க.

"புரிஞ்சிக்கிடனும் மக்களே.." ங்கிற சீமான் முழக்கத்தோட மகத்தான வெற்றி இது..

வாழ்த்துகள் நாம் தமிழர்.

ஜ்யோவ்ராம் சுந்தர்

அதிமுக தோன்றிய பிறகு தமிழக அரசியல் களம் திமுக x அதிமுக என்றானது. இனி அது அதிமுக1 x அதிமுக2 என்றாகும்  

கருணாநிதியில்லாத திமுக வெத்து டப்பி என நிரூபணமான தினம் இன்று :-(

Ilangovan Geeta

தேர்தலில் முதலில் வருபவர்கள் எல்லாம் மக்களுக்கு விருப்பமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

ஏனெனில் இருப்பவர்களில் யாரையேனும் தேர்ந்தெடுத்துத் தொலைக்க வேண்டியது மக்களின் வாய்ப்புக்கேடு.

ஆனால் தேர்தலில் கடைசியாய் ஒதுக்கப்படுபவர்கள் கண்டிப்பாய் மக்களின் வெறுப்பிற்கானவர்களே.

அவர்களோடு அவர்களின் கொள்கைகளும் மக்களுடைய வெறுப்புக்கானவை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அ.ப. இராசா

பணநாயகம் வென்றது என்பதெல்லாம் ஊளை உதார். கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும், சசிகலாவை மக்கள் ஏத்துப்பாங்கனு நெனைக்கிறிங்களா... தினகரனுக்கு மட்டும் எப்படி சாத்தியமாச்சு... யோசிங்க பாஸ்

Manasvi Uma

நோட்டாகிட்டகூட பிஜேபி தோத்துருச்சாம். நோட்டா ஓட்டு பிஜேபியை எதிர்த்தா? மொத்த கட்சிகளையும் எதிர்த்து போட்டதுதான. இன்றைய சூழ்நிலைல நோட்டாவுக்கு ஓட்டு போட்டவங்க மானஸ்தங்க.

Ezhumalai Venkatesan

 

2559167816524242314709755999733908012472
 

வரவர தமிழ்நாட்டு எலக்சனும் அம்பானி ஸ்டைல் பிசனசுக்கு மாறிகிட்டு வருதுடி பட்டு....

பல கம்பெனிங்க ஐடியா மேல ஐடியா செஞ்சி, போட்டிபோட்டுகிட்டு கோடிகோடியா செலவு பண்ணிபொருளுக்கு விளம்பரப்படுத்திகிட்டு திரிவாங்க..

அந்த கம்பெனிகளோட ரேட்டுகளை அலசிட்டு, கடைசியா அம்பானி வருவாரு.. அவுங்களவிட ஒரு ரூபா கம்மியா தரேன்னு சொல்லுவாரு..எல்லா பயலும் அங்கே ஓடுவானுங்கடி..

அந்த மாதிரி, வெயிட் பண்ணி பார்த்து கடைசியா எவன் டாப்பா குடுக்கறானோ அதுக்கு மேல கொஞ்சம் வெச்சி குடுத்தா மேட்டர் ஓவர்டி..

Manikandan Kalidas

அதிமுக மீண்டும் உயிர்த்தெழுகிறது . தினகரன் வடிவில். அவ்வளவு எளிதில் அதிமுக அழிந்து விடும் என்று எனக்கு தோன்றவில்லை. இது வக்காலத்து அல்ல. நிதர்சனமான உண்மை.

Vini Sharpana

தொப்பி இருந்தால் வெற்றி பெற்றுவிடுவார் என்பதால் குக்கரை கொடுத்தார்கள். ஆனால், கொடுக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே குக்கர் சத்தத்தை மக்களிடையே 'கூக்'குரலெடுக்க வைத்து வெற்றி பெறுவதெல்லாம் நினைத்துப் பார்க்ககூட முடியாத சாதனை. பாஜக... ஓபிஎஸ்... இபிஎஸ் என அனைவரின் சதியையும் ஓடவிட்டு தினக'ரன்' என்பதை நிரூபித்துவிட்டார். அதுவும் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்குகள். ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரனுக்கு தித்திப்பான வாழ்த்துகள்

ttjpg

மன்னை முத்துக்குமார்

ஆர் கே நகர் தேர்தலில் ஒரு ஓட்டுகூட செல்லாத ஓட்டுகள் கிடையாது.ஜனாதிபதி தேர்தலில் இரண்டு ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள்.

Rajasekaran Devibharathi

தினகரனின் வெற்றி அபத்தமானதாக இருக்கலாம், வருங்காலங்களில் சி,ஆர்.சரஸ்வதி, தங்கத் தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் முதலானவர்கள் தமிழ் சமுதாயத்தின் தலைவிதையை நிர்ணயிக்கப்பது பற்றிய கற்பனைகள் தரும் பதற்றத்தில் மூழ்கியிருக்கலாம், ஆனால் கருணாநிதி என்ற அரசியல் சாணக்கியரை, திமுக என்ற திராவிட இயக்கத்தை எம்.ஜி.ஆராலும் ஜெயலலிதாவாலும் தொடர்ந்து வீழ்த்த முடிந்திருக்கிறதே, அதற்கான காரணங்களைப் பரிசீலிக்கலாமே, சும்மாவாச்சும் பரிசீலக்கலாம், ஏதாவது தோன்றும் அல்லவா?

Ram Thangam

டிடிவி தினகரன் சசிகலாவாக ஆசைப்படவில்லை. ஜெயலலிதாவாக மாற தான் ஆசைப்பட்டார்.ஜெ.வின் நாற்காலியிலும் உட்கார போகிறார். அரசியல் என்பது சாணக்கியர்களுக்கானது என்பது இப்போது நன்றாக புரிகிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22271232.ece

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் தேர்தல் நோட்டா பெற்றது 1.34 சதவிகிதமா...23.84 சதவிகிதமா?

 

நோட்டா

தினகரனின் வெற்றி, அ.தி.மு.க-வின் தோல்வி, தி.மு.க-வின் டெபாசிட் இழப்பு என்பதெல்லாம் ஒருபக்கம் என்றாலும் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை என்ற மக்களின் எண்ணம் அதிகம். நோட்டாவுக்கு வாக்குகள் அடிப்படையில் ஐந்தாம் இடம் என்றாலும் நிஜத்தில் நோட்டாவின் இடம் மூன்றாமிடம் தான். 

 

எப்படி என்கிறீர்களா? தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு வரை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டது. தி.மு.க தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் போலி என்று நீக்கப்பட்டார்கள். ஆக, சுத்தமான வாக்காளர் பட்டியல்தான் இந்த இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதன்படி பார்த்தால் கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலைவிட, தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை, 26,324 குறைந்துள்ளது. அதேசமயம், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, கடந்த பொதுத்தேர்தலைவிட 2875 வாக்குகள் கூடுதல்.

ஒரு தொகுதியில் எப்போதுமே வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் வழக்கம். புது வாக்காளர்கள் சேரச் சேர இது கூடும். அதேசமயம், தொகுதி மறுவரையறையின்போது குறையலாம். ஆனால், ஆர்.கே. நகரில் அப்படி வரையறை செய்யப்படவில்லை. ஆக, கடந்த தேர்தலில் போலி வாக்காளர்கள் கூடுதலாக இருந்துள்ளனர். இந்த 26,324 வாக்காளர்களில் சிலர் முகவரி மாறியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக மாற வாய்ப்பில்லை. எனவே, குறைந்தபட்சம் 20 ஆயிரம் வாக்காளர்கள் போலிகளே!

2017 இடைத்தேர்தலில் ஆர்.கே.நகரின் மொத்த வாக்குகள் 2,28,234 அதில் பதிவான வாக்குகள் 1,76,890 ஆக இதில் வாக்களிக்காத 22.50 % மக்கள் வாக்களிக்க விருப்பமற்றவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். நோட்டாவுக்கு விழுந்த 1.34% வாக்குகளையும் சேர்த்தால், 23.84% வாக்குகள் யாருக்கும் பதிவாகவில்லை. ஆக, இதுதான் நோட்டாவின் சதவிகிதம். இந்த அடிப்படையில் டி.டி.வி தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு அடுத்தபடியாக நோட்டா இடம்பிடித்திருக்கிறது.

வாக்கு

https://www.vikatan.com/news/tamilnadu/111829-2384-percentage-of-voters-have-not-voted-in-rk-nagar-byelection.html

  • தொடங்கியவர்

தினகரனின் வெற்றிக்கு உதவியதாக அவதூறு பரப்புவதா? திமுகவை உரசிப் பார்க்க வேண்டாம்: ஸ்டாலின் எச்சரிக்கை

 

 
stalinjpg

ஸ்டாலின் | கோப்புப் படம்.

டிடிவி தினகரனின் வெற்றிக்கு திமுக உதவியது என்று அவதூறு பரப்பி, திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும், லட்சிய உணர்வுடனும் உரசிப் பார்க்க ஒருபோதும் எண்ணிப் பார்க்க வேண்டாம் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேர்தல் களத்தில் வெற்றி பெற்றால் மக்கள் தந்த விருதாகவும், தோல்வி அடைந்தால் ஜனநாயகப் போர்க்களத்தில் பெற்ற விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவத்தை திமுகவுக்கு வழங்கியிருக்கிறார் தலைவர் கருணாநிதி.

ஜனநாயகம் புதைக்கப்பட்டு, பணநாயகம் கோலோச்சிய ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் களத்தில், ஜனநாயக உரிமை விலைமதிப்பற்றது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்த திமுக வெற்றி வாய்ப்பை இழந்து, தனித்தன்மையை வென்றுள்ளது. ஆனால், அரசியல் களத்திலும் ஊடக விவாதங்களிலும், திமுகவை ஒவ்வாமையாகக் கருதும் சில ஆதிக்க சக்திகளின் தூண்டுதலினால், டிடிவி தினகரனின் வெற்றிக்கு திமுக உதவியது போன்ற கற்பனையான - அவதூறான சித்திரம் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தீட்டப்பட்டு வருவதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த அவதூறுக்கு பதிலளிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

திமுகவின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மருதுகணேஷ் இடைத்தேர்தல் களத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆளும் தரப்பின் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா ஆதாரங்கள் சிக்கியதால் முதலில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆதாரங்களின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல், ஏறத்தாழ 8 மாதங்கள் கழித்து மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்தமுறை டிடிவி தினகரனை ஆதரித்த ஆளுங்கட்சியினர், கடந்தமுறை அவர்கள் எதிர்த்த மதுசூதனனை ஆதரிக்கும் வினோதமானதும், விபரீதமானதுமான நிலவரம் இம்முறை உருவானது. கடந்தமுறை முதல்வர், அமைச்சர்கள் புடைசூழ்ந்து சாமரம் வீச ரதகஜ துரகபதாதிகளுடன் வலம் வந்து வாக்கு சேகரித்த டிடிவி தினகரன், இம்முறை அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கனத்த கையிருப்பின் துணையுடன் வாக்கு சேகரிக்கும் வகையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

ஆனால், திமுகவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே இடைத்தேர்தல் களத்தில் நின்ற அதே வேட்பாளரான மருதுகணேஷ் இம்முறையும் களமிறக்கப்பட்டு, மக்கள் ஆதரவுடன் வாக்குகளைச் சேகரித்தார். ஆர்.கே.நகர் தொகுதியின் 960 தெருக்களிலும் நடந்தே சென்று, ஒவ்வொரு வீட்டுப் படியிலும் ஏறி வாக்குகளைச் சேகரித்தார். சில தெருக்களில் ஒருமுறைக்கு இருமுறை அவர் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டுப் பிரச்சாரம் செய்ததும் உண்டு. திமுக வேட்பாளரின் இடைவிடாத - மக்கள் வரவேற்புக்குரிய பிரச்சாரத்தின் பலனைத் தடுக்கும் வகையிலும், கெடுக்கும் வகையிலுமே அதிமுகவின் இருதரப்பு வேட்பாளர்களும் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி, ஜனநாயகத்தை விலை பேசினர். அதனால் பணநாயகத்திற்குப் பலி ஆனது ஆர்.கே.நகர் தொகுதி.

இந்த உண்மையை அப்பட்டமாக மூடி மறைத்துவிட்டு, திமுக மீது புழுதிவாரித் தூற்றுவதற்கு இதனையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, யார் யாருக்கோ திமுக உதவியதாகக் கூறுவது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். பணம் கொடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் மீது, வாக்குப்பதிவு அன்றே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது திமுக என்பதுகூட அறியாமல், பலர் இப்படி பிதற்றுகிறார்கள். ஆனால், எந்தநிலையிலும் இருவண்ணக் கொடியை உயர்த்திப்பிடித்து, 'நான் திமுககாரன்' என முழங்குவதையே பெருமையாகக் கொண்டவர்கள் நிறைந்துள்ள இயக்கத்திற்கு, யாரையும் மறைமுகமாக ரகசியமாக ஆதரிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

'ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அந்த நிலைப்பாட்டில் வெளிப்படையாகவும் உறுதியாகவும் இருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி' என்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி திமுகவிற்கு அளித்த பாராட்டுகளை, இன்றைக்கு விஷமப் பிரச்சாரம் செய்து எப்போதும் போல நாட்டு மக்களைத் திசை திருப்ப எத்தனிப்போருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஊழல் ஆட்சியை அகற்றி, மக்களின் நலன் பேணும் நல்லாட்சியை வெகுமக்களின் பேராதரவோடு அமைத்திடும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உண்டு என்பதை அனைவரும் அறிவர். தோழமைக் கட்சிகளின் துணையுடன், மக்கள் ஆதரவை ஒருங்கிணைத்து, ஜனநாயக வழியில் அந்த மாற்றத்தை விரைந்து கொண்டு வரப்போவது திமுகதான். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தலைமையைப் பின்பற்றி நடக்கும் ஊழல்வாதிகளால், பெரா வழக்கில் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி கொண்டிருப்பவர்களால், ஊழல் கடலில் மூழ்கி கிடப்பவர்களால் ஆட்சிமாற்றம் வரும் என நினைப்பதோ, நல்லாட்சி அமையும் எனக் கருதுவதோ பகல் கனவு மட்டுமல்ல, நயவஞ்சகர்களின் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம்.

இந்த வெற்று விமர்சகர்களின் கற்பனைக்கு திமுக ஒருபோதும் கவரி வீசாது. தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில், கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிப்பதற்கும் கொள்கைரீதியான லட்சியப் பயணத்திற்கும் வேறுபாடு உள்ளது. அந்தப் பயணத்தில் திமுக மிகவும் உறுதியாகவே இருக்கிறது. இடைத்தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவை ஆராய்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொண்டு, புதிய உத்வேகத்துடன் திமுகவின் செயல்பாடு தொடரும். அவதூறு பரப்புவோர் அப்போது ஏமாறுவது நிச்சயம்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமையுள்ள ஒரே இயக்கமான திமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள், யாரையோ மறைமுகமாக திமுக ஆதரிக்கிறது என, யார் பின்னாலோ திரைமறைவில் ஒளிந்து கொண்டு, அவதூறு கிளப்பும் விஷம பிரச்சாரத்திற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும், லட்சிய உணர்வுடனும் உரசிப் பார்க்க ஒருபோதும் எண்ணிப் பார்க்க வேண்டாம்'' என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22280258.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.