Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 13...!

Featured Replies

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 13...!

 

 
 

இலங்கையில் சுனாமிப் பேரலை தாக்கி பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன. 

இதற்கமைய, இன்று காலை 9.25 முதல் 9.27 வரை சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

http://www.virakesari.lk/article/28608

 

 

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!!

 

 
 

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2017 இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

DSC00089.jpg

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.

DSC00090.jpg

இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.

DSC00094.jpg

ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டனர்.

http://www.virakesari.lk/article/28616

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

 

 

இலங்கையில் பல இடங்களிலும் சுனாமி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மணல்காட்டிலுள்ள தேவாலயத்தில் இன்று காலை அஞ்சாலி ஆராதனை நடைபெற்றதுடன் உயிரிழந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

20171226_084254-750x400.jpgblank.pngblank.png

வடமராட்சி கிழக்கு உடுத்துறையிலும் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

blank.png%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%

மலையக மக்களாலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

DSC00093-720x400.jpg

கல்முனை மாமாங்க மைதானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

IMG_1236-720x400.jpgIMG_1244-720x400.jpg

மட்டக்களப்பு செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு

1-11-720x450-720x400.jpg2-1-1-720x400.jpg

வவுனியாவில் நடைபெற்ற நினைவுந்தல் நிகழ்வும் சிறுவர் பூங்கா திறக்கப்பட்ட நிகழ்வும்DSCN8627-750x400.jpgDSCN8629-750x400.jpgDSCN8641-750x400.jpgDSCN8636-750x400.jpgDSCN8635-750x400.jpgDSCN8632-750x400.jpgDSCN8630-750x400.jpgDSCN8643-750x400.jpgDSCN8645-750x400.jpgDSCN8650-750x400.jpgDSCN8658-750x400.jpgDSCN8672-750x400.jpgDSCN8689-750x400.jpgDSCN8683-750x400.jpgDSCN8679-750x400.jpgDSCN8676-750x400.jpgDSCN8674-750x400.jpgDSCN8690-750x400.jpgDSCN8692-750x400.jpgDSCN8700-750x400.jpgDSCN8701-750x400.jpgDSCN8714-750x400.jpgDSCN8712-750x400.jpgDSCN8708-750x400.jpgDSCN8707-750x400.jpgDSCN8717-750x400.jpg

 

http://newuthayan.com/story/57664.html

  • தொடங்கியவர்

வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் உறவுகளிற்கு அஞ்சலி!

 

வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் உறவுகளிற்கு அஞ்சலி!

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) தமிழர் தாயாகம் எங்கும் உறவுகளால் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை நினைவேந்தல் இடம்பெறுகின்றது. ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலித்தனர்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் உறவுகளிற்கு அஞ்சலி!

கடந்த 2004 டிசம்பா் மாதம் 26 ஆம் திகதி காலை 9.25 நிமிடமளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ. ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.

இதையடுத்து எழும்பிய ஆழிப்பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், மலேஷியா, இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இலங்கையை பொறுத்தமட்டில் இந்த ஆழிப்பேரலையனால் கரையோரப்பிரதேசங்கள் பாரிய சேதத்தை எதிா்கொண்டன. இலங்கையில் மட்டும் சுமாா் இலங்கையில் 35,000 பேர் ஆழிப்பேரலையனால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் உறவுகளிற்கு அஞ்சலி!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tsunami-event-in-udutthurai

 

 

13 ஆண்டுகள் சென்றாலும் நினைவை விட்டு நீங்காத ஆழிப்பேரலை!

 

13 ஆண்டுகள் சென்றாலும் நினைவை விட்டு நீங்காத ஆழிப்பேரலை!

சுனாமி ஆழிப்பேரலையை நினைவுகோரும் முகமாக இன்று(26) கல்முனை மாமாங்கம் மைதானத்தில் அமையப்பெற்றுள்ள சுனாமி நினைவுத்தூபியில் கல்முனை ஸைனிஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவுதினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு தெற்காசியாவில் ஏற்பட்ட சுனாமி பேரலையானது இலங்கையிலும் பாரிய பேரழிவை ஏற்படுத்தியிருந்தது.

13 ஆண்டுகள் சென்றாலும் நினைவை விட்டு நீங்காத ஆழிப்பேரலை!

இந்த பேரழிவானது இன்றும் மனிதர்களின் மனங்களை விட்டு அகலவில்லை என்பது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சுனாமி நினைவுநாள் ஞாபகத்திற்கு கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று(26) கல்முனையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சுடா் ஏற்றப்பட்டு மலர் துவி  இறந்த உறவுகளுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு கல்முனை கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் மாத்திரம் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 596 பேர் பலியானாா்கள்.

சுனாமியில் இறந்தவா்களின் நினைவாக கல்முனையில் இறந்தவா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்ட தூபி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 ஆண்டுகள் சென்றாலும் நினைவை விட்டு நீங்காத ஆழிப்பேரலை!

13 ஆண்டுகள் சென்றாலும் நினைவை விட்டு நீங்காத ஆழிப்பேரலை!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tsunami-memory-in-kalmunai

  • தொடங்கியவர்

மட்டில் நினைவஞ்சலி

 

 

மட்டில் நினைவஞ்சலி

 

 
சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளின் 13வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உயிர்கள் சுனாமி அலைகளால் காவு கொள்ளப்பட்ட, கல்லடி, திருச்செந்தூர் பகுதியில் இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.

திருச்செந்தூர் வாழ் பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு – அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=2668&mode=head

  • தொடங்கியவர்

சுனாமிப் பேர­லையின் ஞாப­கங்­களும் அதனைத் தொடரும் அதிர்­வ­லை­களும்

 

 
 

டிசம்பர் மாதம் ஆரம்­பித்­து­விட்டால் சுனாமிப் பேர­லையின் ஞாப­கங்­களும் அதனைத் தொடரும் அதிர்­வ­லை­களும் கடந்த ஒரு தசாப்த கால­மாக இலங்­கையில் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன.

உலகம் தோன்­றிய காலம் முதல் அவ்­வப்­போது இயற்­கையில் பல மாற்­றங்­களும் அதனால் சிறிய மற்றும் பாரிய அள­வி­லான அழி­வு­களும் நடந்­தே­றியே வரு­கின்­றன.

இலங்கையைப் பொறுத்­த­மட்டில் குறிப்­பாக 2004 சுனாமி அனர்த்­தத்­தினால் அதிகம் காவு கொள்­ளப்­பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பிர­தே­சங்­களில் நவம்பர் ஆரம்­பித்து டிசம்பர் அண்­மித்து விட்டால் ஒரு­வி­த­மான கிலி பரவி வதந்­தி­க­ளுக்கும் பஞ்­ச­மில்­லாத்­தன்மை முளை­விடத் தொடங்­கு­கின்­றன.

கடந்த பல தசாப்­தங்­க­ளுக்கு முன்­னி­ருந்தே இலங்­கையின் காலநிலையில் ஒக்­டோபர் முதல் டிசம்பர் வரை­யான காலப்­ப­கு­தியில் அதி­க­ரித்த மழையும் கட்­டுக்­க­டங்­காத வெள்ளமும் மண்­ச­ரிவும் ஏற்­பட்டே வந்­தி­ருக்­கின்­றன. வங்­காள விரி­கு­டாவை மையப்­ப­டுத்தி தாழ­முக்க எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­டு­வதும் பெரும் பாலும் அவை இந்­தி­யாவை நோக்கி நகர்­வ­துடன் அதன் அதிர்­வு­க­ளாக பலத்த காற்றும் மழையும் பெய்­வதும் தொட­ராக நடை­பெற்றே வந்­தி­ருக்­கின்­றன.

2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு ஓரிரு தினங்­க­ளுக்கு முதல் அதி­க­ரித்த மழை­யினால் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் வெள்ளம் ஏற்­பட்­ட­துடன் தாழ­முக்க எச்­ச­ரிக்கை வழமை போல் விடுக்­கப்­பட்டு சூறா­வ­ளியை எதிர்­பார்த்­தி­ருந்த நிலை­யி­லேயே ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் ஏப்பம் விட்டுச் சென்ற சுனாமி ஏற்­பட்­டது.

கி.பி. 3 ஆம் நூற்­றாண்­ட­ளவில் வாழ்ந்த வச்­சி­ர­நந்தி என்ற முனிவர் ஒரு­வர்­ இ­றை­யனார் கள­வி­ய­லுரை என்னும் நூலை எழு­தினார். இதில் கி.பி. 1 ஆம் நூற்­றாண்­டுக்கு முன் நமது முன்­னோரால் பாது­காக்­கப்­பட்ட சங்­கங்­களும் அத­னோடு இணைந்த ஆவ­ணங்­களும் ஆழிப்­பே­ர­லையால் காவு கொள்­ளப்­பட்­டன எனக்­கு­றிப்­பி­டு­கின்றார்.

வச்­சி­ர­நந்­தியால் குறிப்­பி­டப்­படும் ஆழிப்­பே­ர­லையே சுனா­மி­யாகும் என்­பதால் இது காலத்தால் முற்­பட்ட சொல் வழக்­கையும் சம்­ப­வப்­ப­தி­வையும் உடை­யது என்­பது தெளிவு.

ஆனால் 2004 இல் சுமாத்­தி­ராவில் ஏற்­பட்ட நில அதிர்வு கடல்­கோ­ளாக மாறி சுனாமி என்ற பெயரை எடுக்கும் வரை இலங்கை மக்­க­ளுக்கு இச் சொல்­லாடல் புதி­ய­தாகும். சுனா­மி­யினால் கிழக்கு மாகா­ணத்தின் பொத்­து­வில் -­உல்­லையில் இருந்த பாதிக்­கப்­பட்ட ஹோட்டல் ஒன்றை மீட்­புப்­ப­ணி­யா­ளர்கள் சுத்தம் செய்த போது சுனாமி ஹோட்டல் என்ற பெயர்ப்­ப­லகை கண்­டெ­டுக்­கப்­பட்­டது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்­த­வர்­களால் இது நடத்­தப்­பட்­ட­தாக பின்னர் அறி­யப்­பட்­டது. இவ்­வி­டயம் எமது நாட்­ட­வர்­க­ளுக்கு ஆச்­ச­ரியம் அளித்­த­போ­திலும் ஜப்பான் ்மக்களுக்கு பழக்­கப்­பட்ட ஒன்­றா­கவே இருந்­தது. அவர்கள் மொழி­யி­லான சொல்லே சுனா­மி­யாகும். திரைப்­ப­டங்­களில் இச் சொல்­லாடல் உச்­ச­ரிக்­கப்­பட்ட போதும் 2004 டிசம்பர் 26 இல் தான் இது யதார்த்­த­மா­கி­யது.

நில நடுக்­கத்­தினால் ஏற்­படும் தாழ்­நில அதிர்வு கட­ல­டித்­தட்­டுக்­களைத் தாக்கும் போது ஏற்­படும் ஓர் உட­னடி நிகழ்வே கடல்­கோ­ளாகும். அது முன்­கூட்­டிய திட்­ட­மி­டலின் வெளியா­குகை அல்ல. 2004 ஆம் ஆண்டு கடல் கோள் ஏற்­ப­டு­வ­தற்கு ஒரு சில தினங்­க­ளுக்கு முன் அதி­சய கால்­க­ளுடன் கோழி-­ம­னித முகத்தில் ஆடு, -­கோ­டிக்­க­ணக்­கான சூரை இன மீன்கள் பிடி­பட்­டமை போன்ற சில சம்­ப­வங்கள் அம்­பாறை மாவட்­டத்தில் நடந்­தே­றின.

இவை­களை வைத்துக் கொண்டு தொட­ராக நிகழும் சில சம்­ப­வங்கள் சுனாமி அனர்த்­தத்­திற்­கு­ரிய எச்­ச­ரிக்­கை­யாகக் கொள்ள முடி­யாது.

சுனா­மியின் பின்னர் ஏற்­பட்ட சடு­தி­யான கால நிலைத்­த­ளம்­ப­லி­லி­ருந்து இலங்கை இன்னும் விடு­ப­ட­வில்லை என்­பது உண்­மை­யாகும். காலஞ்­சென்ற விஞ்­ஞான முறை­யி­ய­லாளர் ஆதர் சி.கிளாக் இலங்­கையின் கால நிலை சுனா­மிக்குப் பின்னர் தடு­மாற்­ற­மா­கி­யுள்­ளது(Disorder). வெப்ப நிலைப்­பி­ர­தே­சங்கள் கூட பனிப்­பொ­ழி­வுள்ள இட­மாக மாறலாம் எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். சுனா­மிக்கு முன்னர் பாடப்­புத்­த­கங்­களில் அச்­சி­டப்­பட்­டி­ருந்த காலநிலை அட்­ட­வணை வலு­வி­ழந்­துள்­ள­மையும் கண்­கூடே. இவை இவ்­வா­றி­ருக்கும் போது இயற்­கையில் நடை­பெ­று­கின்ற சில அதி­ச­யங்­களும் கால மாற்­றங்­களும் கடல் கோளுக்­கான அடை­யா­ள­மாக கொள்­ளப்­ப­டு­வது எவ்­வாறு சாத்­தி­ய­மாகும்? 

கடல்­நீர்­வற்­று­தல்-­அண்­மித்­துள்ள கிண­று­க­ளி­லுள்ள நீர் இழுக்­கப்­ப­டு­தல்-­கடல் நீர் மட்டம் உயர்ந்து அதன் நீர்ப்­ப­ரவல் கரை­யோ­ரங்­களை ஆக்­கி­ர­மித்­தல்-­கால நிலை மாற்­றங்­க­ளுக்கு இடங்­கொ­டுக்க முடி­யாமல் சில மீனி­னங்கள் வெளியா­குதல் முத­லி­ய­ன­வெல்லாம் சுனா­மிக்கு முன்­னரும் கரை­யோ­ரங்­களில் நடை­பெற்­றுத்தான் இருக்­கின்­றன. எனினும் கடந்த சில வரு­டங்­க­ளா­கத்தான் இவை அவ­தா­னத்­திற்கு உட்­ப­டு­வ­தனால் மக்கள் பீதி­யினால் கலக்­க­ம­டை­கின்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்­கான பிரத்­தி­யே­க­மான அடை­யாளம் எதுவும் இது­வரை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. எனினும் கடல்கோள் ஏற்­பட்ட பின்னர் அதில் சூடு­கண்ட மக்கள் ஏதா­வது ஒரு அனர்த்த எச்­ச­ரிக்­கையைச் சந்­திக்கும் போதும் குறிப்­பாக டிசம்பர் மாதம் அண்­மிக்கும் போதும் சுனாமி ஏற்­ப­டுமோ எனச் சந்­தே­கிக்­கின்­றனர். இது தொடர்பில் எத்­தனை விழிப்­பு­ணர்­வுகள் மேற்­கொண்ட போதிலும் அவை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் பய­னற்­ற­தா­கவே ஆகி­வி­டு­கின்­றன.

இவ்­வ­ருடம் டிசம்பர் 31 ஆம் திக­திக்குள் இந்­தியப் பெருங்­க­டலில் மிகப்­பெ­ரிய இயற்கை அனர்த்தம் ஏற்­ப­டலாம் என கேர­ளாவைச் சேர்­ந்த

தனியார் ஆராய்ச்சி நிறு­வன இயக்­குனர் பாபு களகில் பிர­தமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்­பினார். இதன் தாக்கம் ஆசியாக் கண்­டத்தின் தட்­டுக்­க­ளையே மாற்றும் எனவும் இது ஜப்­பான்-­, இந்­தி­யா, -­இ­லங்கை போன்ற நாடு­க­ளைத்­தாக்கும் எனவும் அது சுனா­மி­யாக மாறலாம் எனவும் தெரி­வித்தார். இவ் அறி­விப்­புக்கு வலுச்­சேர்ப்­பது போல் அடுத்து அவுஸ்­தி­ரே­லி­யா-­ சு­மாத்­ரா, இந்­தியா போன்ற நாடு­களில் அடுத்­த­டுத்து ஏற்­பட்ட 7 ரிச்­ட­ருக்கும் குறை­வான நில நடுக்கம் இலங்கை மக்­க­ளையும் பீதி­கொள்ள வைத்­துள்­ளது. இவற்­றிற்­கி­டையே மட்­டக்­க­ளப்பில் பிடிக்­கப்­பட்ட பாம்­பு-­அம்­பா­றையில் அதி­க­மாகப் பிடிக்­கப்­பட்ட மீன்­கள்-­ம­ரு­த­முனை நிந்­தவூர் பிர­தே­சங்­களில் கிணற்று நீர் வற்­றுகை முத­லி­ய­னவும் சுனாமி அனர்த்­தத்­திற்­கான அறி­கு­றி­க­ளாக மக்கள் நம்­பு­கின்­றனர்.

மட்­டக்­க­ளப்பில் பிடிக்­கப்­பட்­டவை பாம்பு அல்ல. அது ஒரு­வகை மீனினம் என்ற அறி­வு­றுத்தல் வெளியாகும் வரை அதுவும் சுனா­மிக்­கு­ரிய அடை­யா­ள­மா­கவே பார்க்­கப்­பட்­டது.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்­தத்தின் பின்னர் இலங்­கை­யி­லுள்ள 14 கரை­யோர மாவட்­டங்­களில் 77 சுனாமி முன்­னெச்­ச­ரிக்கைக் கோபு­ரங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. நாடு தழு­விய 25 மாவட்ட செய­ல­கங்­களில் 25 மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அனர்த்தம் ஏற்­படும் போது அதனை அறி­விப்­ப­தற்­கான எச்­ச­ரிக்கை மணி கொழும்­பி­லுள்ள அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்­தி­லி­ருந்து ஒலிக்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அனர்த்த சேவைக்­கென பிர­தேச செய­ல­கங்கள் தோறும் உத்­தி­யோ­கத்­தர்கள் அமர்த்­தப்­பட்­டுள்­ள­துடன் பயிற்­றப்­பட்ட பாது­காப்­புத்­த­ரப்­பி­னரும் இத­னுடன் இணைந்து அவ­சர சேவை­க­ளுக்­காகத் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். வானிலை அவ­தான நிலை­யத்­துடன் உட­ன­டித்­த­க­வல்­க­ளைப்­ப­ரி­மா­று­கின்ற பொறி­மு­றை­யுடன் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் செயற்­பட்­டு­வ­ரு­கி­றது. பொது­மக்கள் அனர்த்­தங்கள் தொடர்­பான தெளிவு­களைப் பெற 117 என்ற அவ­சரத் தொலை­பேசி இலக்கம் அறி­மு­க­மாகி மும்­மொ­ழி­க­ளிலும் விளக்­கங்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யங்­களால் அறி­வு­றுத்­தல்­க­ளுக்­கான கருத்­த­ரங்­குகள் அவ்­வப்­போது நடை­பெ­று­வ­துடன் குறிப்­பாக நவம்­பர்-­, டி­சம்பர் மாதங்­களில் சுனாமி எச்­ச­ரிக்­கைக்­கான ஒத்­தி­கை­களும் வீதி நாட­கங்கள் உள்­ளிட்ட விழிப்­பு­ணர்­வு­களும் நடை­பெற்ற வண்­ண­முள்­ளன.

2004 இல் சுனாமி ஏற்­பட்ட போது இவ்­வா­றான ஏற்­பா­டுகள் இருக்கவில்லை. இப்­போது இலங்­கையில் இருக்­கின்ற தொழில்­நுட்ப ஏற்­பா­டு­களில் சுமார் மூன்று மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்­ன­ரா­வது இது பற்றி அறி­விக்க முடியும் என அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் கூறு­கி­றது.

இவ்­வா­றான ஏற்­பா­டுகள் எல்லாம் இருக்கும் போது அநா­த­ர­வாக வரு­கின்ற குறுஞ்­செய்­தி­கள்-,­ வட்ஸ்அப் செய்­தி­கள்-­, த­னி­ம­னித வாய்­மொ­ழிப்­ப­ர­வல்கள் முத­லி­ய­வற்றை நம்பி மக்கள் இடம்­பெ­யர்­வதும் அதற்­காகத் தயா­ரா­கு­வதும் முடி­வ­டை­வ­தாகத் தெரி­ய­வில்லை. 

பாதிக்­கப்­பட்ட மக்கள் ஓடத்தான் செய்­வார்கள் என்­பது உண்­மை­யா­னாலும் இலங்­கையில் இன்று இவ்­வா­றான ஏற்­பா­டுகள் எல்லாம் வளர்ந்து விட்ட நிலை­யிலும் வதந்­தி­களை நம்­பு­வது மட­மை­யாகும். யானை அடிப்­ப­தற்கு முதல்­தானே அடித்துக் கொள்­வது பற்றி நாம் சிந்­தித்­தே­யாக வேண்டும்.

கடந்த மாத இறு­தி­யிலும் இவ்­வா­றான வதந்­தி­களை நம்பி அம்­பாறை மாவட்­டமே அல்­லோலகல்­லோ­லப்­பட்­டதை ஊட­கங்கள் வாயி­லாக அறிய முடிந்­தது. மக்­களை இடம் பெயர்த்தி விட்டு கள­வு­களை மேற்­கொள்ளத் திரு­டர்கள் தீட்டும் திட்டமே இதுவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சந்தேகிக்கிறது. வடக்கில் கடந்த மாதம் இதனை வைத்து திருட்டுச்சம்பவங்கள் சில இடம்பெற்றதாக அறியமுடிகிறது.

சுனாமி ஏற்பட்டு 13 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கட்டப்பட்ட கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத்திட்டம்- மருதமுனை 65 மீற்றர் வீட்டுத்திட்டத்தின் எஞ்சிய வீடுகள் போன்றன இன்னும் பகிர்ந்தளிக்கப் படாமலேயே உள்ளன. இவற்றை வைத்து அரசியல் நடத்துபவர்களும் வருமானம் ஈட்டுபவர்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆழிப்பேரலையை அடுத்து உடமையை இழந்தவர்கள் ஒரு புறம். தம்மை விட்டு இழந்த உறவுகள் எங்கோ ஒரு இடத்தில் உயிருடன் வாழ்கிறார்கள் என நம்புகின்றவர்கள் இன்னுமொரு புறம். இதனுடன் நிற்காமல் இவ் அனர்த்தத்தின் பின் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களின் வீத அதிகரிப்பும் சுனாமியின் சுவடுகள் விட்டுச் சென்றவைகளே.

எது எவ்வாறான போதிலும் ஆழிப்பேரலை ஏற்பட்டு 13 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அதன் அதிர்வலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

http://www.virakesari.lk/article/28618

  • தொடங்கியவர்

முல்லையில் உறவுகளின் கண்ணீரில் நனைந்தது சுனாமி நினைவாலயம்!

 

முல்லையில் உறவுகளின் கண்ணீரில் நனைந்தது சுனாமி நினைவாலயம்!

கடந்த 2004 ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பெரும் பாதிப்புக்களை சந்தித்ததோடு பல்லாயிரம் உயிர்களையும் காவுகொடுத்தது.

மறக்கமுடியாத இந்த துயரத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று (26) காலை 8 மணிக்கு இந்து மத பிரார்த்தனையோடு ஆரம்பமாகி இஸ்லாம் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளோடு 9.30 மணிவரையும் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

முல்லையில் உறவுகளின் கண்ணீரில் நனைந்தது சுனாமி நினைவாலயம்!

உறவுகள் தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், சர்வ மத தலைவர்கள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை வவுனியா, பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையால் இலங்கையில் சுனாமி நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

2004ம் ஆண்டு சுனாமியினால் உயிரிழந்த உறவுகளை நினைவாக இலங்கையில் முதன் முதலாக சுனாமி நினைவாக வவுனியாவில் அமைக்கப்பட்ட பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபைத் தலைவர் எஸ்.புலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், முன்னாள் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், தியாகராசா முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள், மதகுருமார் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லையில் உறவுகளின் கண்ணீரில் நனைந்தது சுனாமி நினைவாலயம்!

முல்லையில் உறவுகளின் கண்ணீரில் நனைந்தது சுனாமி நினைவாலயம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tsunami-event-in-mullaitheevu-26

மன்னாரில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

 

மன்னாரில்  இடம் பெற்ற  சுனாமி  நினைவேந்தல் நிகழ்வு!

சுனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அலகு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள்,மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன், மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர்,மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் சாந்திபுர கிரம அபிவிருத்தி சங்கதலைவர் திரு.யோசப் தர்மன் உட்பட பொதுமக்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனபலர் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னாரில்  இடம் பெற்ற  சுனாமி  நினைவேந்தல் நிகழ்வு!

இதன் போது சுனாமிஅனர்த்தத்தின் போது உயிர் நீத்த மக்களின் 13 ஆம் ஆண்டு நினைவு கூறப்பட்டதோடு, அஞ்சலி உரைகளும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்றுசெவ்வாய்க்கிழமை(26) காலை மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவில் இடம் பெற்றது குறிப்பிடதக்கது.

இதனைதொடர்ந்து மன்னார் மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் இயக்குனர் மோகன் ராஜ் தலைமையில் மன்னார் பிரதானபாலத்தடி கடலேரி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வும் இடம் பெற்றது.

மன்னாரில்  இடம் பெற்ற  சுனாமி  நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில்  இடம் பெற்ற  சுனாமி  நினைவேந்தல் நிகழ்வு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tsunami-event-in-mannar-26

  • தொடங்கியவர்

ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை கண்ணீர்மல்க நினைவுகூர்ந்த மக்கள்

01-9d08d61f7b735ac2eebd2e060dde0a5f0219ec11.jpg

 

(நமது பிராந்­திய நிரு­பர்கள்)

ஆழிப்­பே­ர­லையில் உயிர்­நீத்த உற­வு­க­ளுக்­கான 13ஆவது ஆண்டு நினை­வேந்தல் நிகழ்­வுகள் வடக்கு கிழக்கு உட்­பட நாட­ளா­விய ரீதியில் உற­வு­களை பறி­கொ­டுத்­த­வர்­களின் கண்­ணீ­ருக்கு மத்­தியில் உணர்­வு­பூர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

ஆழிப்­பே­ரலை காவு­கொண்ட ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களை நினை­வு­கூரும் வகையில்

நாட்டின் கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் அமைக்­கப்­பட்­டுள்ள சுனாமி நினைவு தூபி­க­ளிலும், மதஸ்­த­லங்­க­ளிலும் விசேட வழி­பாட்டு நிகழ்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அத்­துடன் நாடா­ள­விய ரீதியில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை

 முற்­பகல் 9.25 மணி முதல் 9.27 மணி வரை­யி­லான இரண்டு நிமி­டங்கள் உயிர்­நீத்த அனைத்து உற­வு­க­ளுக்கும் மௌன அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

குறிப்­பான அரச திணைக்­க­ளங்கள்,நிறு­வ­னங்கள், தனியார் நிறு­வ­னங்கள், வைத்­தி­ய­சா­லைகள் என பல்­வேறு நிறு­வ­னங்­க­ளையும் சார்ந்தோர் குறித்த இரண்டு நிமி­டங்கள் எழுந்து நின்று அஞ்­சலி செலுத்­தி­ய­தோடு பிர­தான வீதி­களில் சென்ற வாக­னங்கள் கூட நிறுத்­தப்­பட்டு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

வடக்கில்

வட­மா­கா­ணத்தின் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் பல்­வே­று­பட்ட நினைவு கூரும் நிகழ்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. யாழ்ப்­பா­ணத்தில், சுனாமி பேர­லையால் பெருந்­தொ­கை­யா­னோரை காவு கொண்ட வட­ம­ராட்சி கிழக்கு பிர­தே­சத்தில் ஆயி­ரத்து என்­பது பேரை அடக்கம் செய்­யப்­பட்ட உடுத்­து­றையில் அமைக்­கப்­பட்­டுள்ள சுனாமி பொது நினை­வா­ல­யத்தில் கடற்­றொழில் சங்­கத்­தி­னரின் ஏற்­பாட்டில் யாழ்.மாவட்­டத்­திற்­கான பிர­தான நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெற்­றது.

9.05இற்கு ஆரம்­ப­மான இந்­நி­கழ்வில் வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜ­லிங்கம் விளக்­கேற்­றி­ய­தோடு வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லாளர் கே.கன­கேஸ்­வரன் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணி­வித்தார். அத்­துடன் ஆழிப்­பே­ர­லையால் காவு­கொள்­ளப்­பட்­டோரின் உற­வி­னர்கள் தமது உற­வு­களை நினை­வு­கூர்ந்து அஞ்­சலி செலுத்­தி­ய­தோடு அவர்­களின் உரு­வப்­ப­டங்­க­ளுக்கு முன்னால் கத­றி­ய­ழு­தனர்.

இதே­போன்று யாழ்.பல்­க­லை­க­ழ­கத்­திலும் பல்­க­லை­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தி­னாலும் உயி­ரி­ழர்ந்­த­வர்­க­ளுக்­கான அஞ்­சலி நிகழ்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன்­போது மாண­வர்கள் அனை­வரும் சுட­ரேற்றி, அக­வ­ணக்­கத்­தினை செலுத்தி தமது அஞ்­ச­லி­களை செலுத்­தி­யி­ருந்­தார்கள். மேலும் மணற்­காடு, வெற்­றி­லைக்­கேணி, கட்­டைக்­காடு, நாகர்­கோவில், தாழை­யடி ஆகிய இடங்­களில் இத்­த­கைய அஞ்­ச­லிகள் செலுத்­தப்­பட்­டி­ருந்­தன.

முல்­லைத்­தீவு நகரில் அமைந்­துள்ள சுனாமி நினை­வா­ல­யத்தில் காலை 9 மணிக்கு முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கமும், முல்­லைத்­தீவு அனர்த்­த­மு­கா­மைத்­துவ பிரி­வி­னரும், சுனாமி ஏற்­பாட்­டுக்­கு­ழு­வி­னரும் இணைந்து நினை­வேந்தல் நிகழ்­வினை முன்­னெ­டுத்­தனர். இதன்­போது உயிர்­நீத்த உற­வு­க­ளுக்கு சுட­ரேற்றி மௌன அஞ்­சலி செலுத்­தப்­பட்­ட­தோடு உற­வுகள் கண்ணீர் மல்ல கத­றி­ய­ழு­தனர்.

மன்னார் மாவட்­டத்தில் மன்னார் அனர்த்­த­மு­கா­மைத்­துவ பிரிவின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற நினை­வேந்தல் நிகழ்வில் மன்னார் பிர­தேச செய­லாளர் பர­ம­தாஸன், மற்றும் அனர்த்த முகா­மைத்து அதி­கா­ரிகள், கடற்­றொழில் சங்க அதி­கா­ரிகள், பொது­மக்கள் என பலரும் கலந்து கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தினர். இதே­போன்று மன்னார் பாலத்­த­டியில் நடத்­தப்­பட்ட அஞ்­சலி நிகழ்­விலும் பல்­வேறு தரப்­பி­னரும் கலந்து கொண்டு சுட­ரேற்றி அஞ்­ச­லி­களை செலுத்­தி­யி­ருந்­தனர்.

கிழக்கில்

இதே­வேளை கிழக்கு மகா­ணத்­திலும் ஆழிப்­பே­ர­லையில் காவு­கொண்ட உற­வு­க­ளுக்­கான நினை­வேந்தல் நிகழ்­வுகள் உணர்­வு­பூர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இத்­த­கைய உணர்­வு­பூர்­வ­மான நிகழ்­வுகள் பல முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

மட்­டக்­க­ளப்பு புது­மு­கத்­து­வாரம் பகு­தியில் ஆழிப்­பே­ர­லை­யினால் காவு­கொள்­ளப்­பட்ட 210பேரின் நினை­வாக அமைக்­கப்­பட்­டுள்ள புது­மு­கத்­து­வாரம் சுனாமி நினை­வுத்­தூ­பியில் முற்­பகல் 9.10க்கு அஞ்­சலி நிகழ்வு முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இந்த நிகழ்வில் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மறை மாவட்ட ஆயர் பொன்­னையா ஜோசப் ஆண்­டகை மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இந்து இளைஞர் பேர­வையின் தலை­வ­ரு­மான சீ.யோகேஸ்­வரன் ஆகியோர் கலந்­து­கொண்­டனர். இதன்­போது உயிர் நீர்த்­த­வர்­க­ளுக்­கான விசேட வழி­பா­டுகள் நடை­பெற்­ற­துடன் ஆத்­ம­சாந்தி பிரார்த்­த­னையும் ஆய­ரினால் நடாத்­தப்­பட்­டது. அத­னை­ய­டுத்து உயிர்­நீத்­த­வர்­களின் உற­வி­னர்கள் பெரு­ம­ள­வானோர் கலந்­து­கொண்டு தமது அஞ்­ச­லியை கண்­ணீர்­மல்கச் செலுத்­தினர்.

இதே­போன்று கல்­லடி, திருச்­செந்தூர், நாவ­லடிக் கடற்­கரை, வாழைச்­சேனை, களு­வாஞ்­சிக்­குடி, வாகரை ஆகிய பிர­சே­தங்­க­ளிலும் பெருந்­தொ­கை­யான உற­வு­களின் ஒன்­று­கூ­ட­லுடன் மதத்­த­லை­வர்கள், பிர­மு­கர்­களின் பங்­கேற்­புடன் நினை­வு­கூரும் நிகழ்­வுகள் நடை­பெற்­றி­ருந்­தன.

அதே­வேளை அம்­பாறை மாவட்­டத்தில் கல்­முனை பிர­தே­ச­செ­ய­லக அனர்த்த முகா­மைத்­துவ பிரிவின் ஏற்­பாட்டில் இரு நிமிட மௌன பிரார்த்­தனை நிகழ்வும் கல்­முனை பிர­தேச செய­லாளர் தலை­மையில் மரு­த­முனை கடற்­கரை திறந்த வெளியில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் அனர்த்தம் சம்­மந்­த­மான இஸ்­லா­மிய விளக்­க­வு­ரையும் தூஆ பிராத்­த­னையும் நடை­பெற்­றது. இதில் பிர­தேச செய­லக உத்­தி­யோ­கத்­தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்­து­கொண்­டனர்.

திருக்­கோவில் சுனாமி நினைவுத் தூபியில் உயிர் நீத்த உற­வுகள் தீபம் ஏற்றி அஞ்­சலி செலுத்­தி­ய­துடன் தம்­பி­லுவில் மத்­திய கல்­லூ­ரியில் இரத்­த­தான நிகழ்­வு­களும் இடம்­பெற்­றது. அதே­போன்று காரை­தீவு, மண்­முனை, ஒந்­தாச்­சி­மடம், சம்­மாந்­துறை, நிந்­தவூர், ஏறாவூர், அக்­க­ரைப்­பற்று, தம்­பட்டை, உள்­ளிட்ட கரை­யோரக் கிரா­மாங்­க­ளிலும் நினை­வேந்தல் நிகழ்­வுகள் இடம்­பெற்­ற­தோடு சம­யப்­பி­ரார்த்­த­னை­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

திரு­மலை மாவட்­டத்தின் மூதூர், சேனை­யூரில் நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெற்­ற­தோடு, கிண்­ணா­விலும் சமய பிரார்த்­த­னை­களும், நினை­வேந்தல் நிகழ்­வு­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

மலை­ய­கத்தில்

அட்டன் பொலிஸார் மற்றும் நகர வர்த்­த­கர்­களின் ஏற்­பாட்டில் அட்டன் நக­ரத்தின் மத்­தியில் அஞ்­சலி நிகழ்­வுகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

தென்­னி­லங்­கையில்

வடக்கு கிழக்­கி­னைப்­போன்று தென்­னி­லங்­கை­யிலும் ஆழிப்­பே­ர­லையின் அனர்த்தம் அதி­க­மா­கவே இருந்­தது. இதன் பாதிப்பு தற்­போதும் எதி­ரொ­லித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் உயிர்­நீத்த உற­வு­க­ளுக்­கான அஞ்­ச­லிகள் அந்­தந்த பகு­தி­களில் அமைக்­கப்­பட்­டுள்ள சுனாமி நினைவுத் தூபி­களில் பிர­தேச செய­லா­ளர்கள், மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அதி­கா­ரிகள், சம­யத்­த­லை­வர்­களின் பிர­சன்­னத்­து­டன முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அம்­பாந்­தோட்டை, காலி, மாத்­தறை, அம்­ப­லாங்­கொடை, பேரு­வளை, களுத்­துறை உள்­ளிட்ட பகு­தி­களில் இவ்­வாறு அஞ்­ச­லிகள் இடம்­பெற்­றன. அத்­துடன் கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் வாழும் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்­க­ளுகள் சிலவும் இப்­ப­கு­தி­களில் இடம்­பெற்­றி­ருந்­தன.

10நிமிடம் நின்ற ரயில்

2004ஆம் ஆண்டு மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கி சென்றிருந்த புகையிரதமானது ஹிக்கடுவைப்பகுதியில் உள்ள பெரலிய பகுதியில் ஆழிப்பேரலையில் தாக்கத்துக்குள் உள்ளாகியிருந்ததோடு அதில் பயணித்த நூற்றுக்கணக்கானவர்கள் உயிர்நீத்திருந்தனர்.

இந்நிலையில் ஹிக்கடுவைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியில் நேற்றையதினம் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மருதானையிலிருந்து புறப்பட்டுச் சென்ற புகையிரதமானது பத்துநிமிடங்கள் வரையில் நினைவேந்தல் நிகழ்வுக்காக அப்பகுதியில் தரித்து நின்று சென்றிருந்தது

இச்சமயத்தில் 13வருடங்களுக்கு முன்னர் சேதமடைந்த ரயிலில் பயணித்த பயணிகளும், உத்தியோகத்தர்களும் குறித்த நினைவு கூரும் நிகழ்வில் பங்கேற்றிருந்ததோடு தமது கண்முன்னே நிகழ்ந்த இயற்கையின் கோரதாண்டவத்தினை மீண்டும் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.