Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஜடேஜாவை பயமுறுத்திய தோனி: வைரலான வீடியோ

 

 
Ravindra-Jadeja-MS-Dhonijpg

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடந்த நேற்றைய போட்டியில் ஜடேஜா பயமுறுத்திய  தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

ராயுடுவின் சிறப்பான சதத்தால் புனேவில் ஞாயிற்றுக்கிழமை  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஹைதராபாத்துக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தனர். சன் ரைசர்ஸ் அணி 7-வது ஓவர் ஆடிக் கொண்டிருக்கும்போது ஹர்பஜன் வீசிய பந்தை ஷிகர் தவான் லெக் சைடில் அடித்துவிட்டு இரண்டு ரன்களை எடுக்கலாம் என்ற எண்ணத்தில் ஓடினார். ஆனால் தோனியோ விரைவாக ஓடிச் சென்று பந்தை எடுத்தார். அதனால் ஷிகர் தவான் இரண்டு ரன்கள் எடுக்கும் முயற்சியை கைவிட்டார்.

இதில் நகைச்சுவையான சம்பவம் என்னவென்றால் பந்தை  விரைந்து எடுக்கச் சென்ற தோனி பந்தை எடுக்க வந்த ஜடேஜாவின் மீது வீசுவது போல் பயமுறுத்தினார். இதில் ஜடேஜா சற்று பயந்தே போவார். பின்னர் அங்கிருந்து தோனி சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேலும் இது குறித்து மீம்ஸ்களும் வலம் வந்தன.

முன்னதாக ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி, கொண்டாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிந்திர ஜடேஜாவின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.iplt20.com/video/136674/when-ms-dhoni-scared-ravindra-jadeja

http://tamil.thehindu.com/sports/article23879558.ece

  • Replies 133
  • Views 16.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெற்றியில் செஞ்சூரி அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை குவித்து எம்எஸ் டோனி சாதனைப் படைத்துள்ளார். #IPL2018 #msdhoni #CSK

 
வெற்றியில் செஞ்சூரி அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் தொடர் தொடங்கப்பட்டது. தொடக்க வருடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடம்பிடித்திருந்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் டோனி நியமிக்கப்பட்டார். 2008-ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருந்து வருகிறார். 2016 மற்றும் 2017 சீசனில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறவில்லை. இவரது தலைமையில் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

201805141750440789_1_msdhoni002-s._L_styvpf.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய எல்லா சீசனில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி வாகை சூடியுள்ளது.

ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 100 வெற்றிகளை தேடிக்கொடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் 86 வெற்றிகளையும், சாம்பியன்ஸ் லீக்கில் 14 வெற்றிகளையும் ருசித்துள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/14175044/1162993/IPL-2018-Dhoni-records-100th-win-as-CSK-Captain.vpf

  • தொடங்கியவர்

இங்கிலாந்து சென்றும் சிஎஸ்கே மீது பாசம் குறையாத மார்க் உட்: அம்பத்தி ராயுடுவுக்காக பாடல்

kiopng

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மார்க் உட் தொடர்ந்து பேட்டிங்கில் அசத்தி வரும் அம்பத்தி ராயுடுவுக்கும், சிஎஸ்கே அணிக்கும்  பாடல் ஒன்றை தனது நண்பர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்  தயாரிப்புக்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முன்னதாகவே விடுவித்தது. சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மார்க் உட் இங்கிலாந்து சென்று சிஎஸ்கே அணியின் ஆட்டங்களைப் பார்த்து ஆதரவளிப்பேன் என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் சன் ரைசர்ஸ் அணியுடனான சிஎஸ்கேவின் ஆட்டத்தில்  சென்னைஅணி வெற்றி பெற சதம் அடித்து முக்கிய காரணமாக இருந்த அம்பத்தி ராயுவைப் பாராட்டியும், சென்னை அணியை நினைவுகூர்ந்தும்  மார்க் தனது நண்பர்களுடன் இணைந்து பாடிய பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடிருக்கிறார்.

டு..டு..டு..டு..டு......அம்பத்தி ராயுடு என்று ஒவ்வொரு வரிகளில் முடியும் இப்பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ்  தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் பலரும் மார்க் உட்டைப் பாராட்டிப் பதிவிட்டு வருகிறார்கள்.

மார்க் உட் பாடிய பாடல் ... 'I just can't get enough!'

 

http://tamil.thehindu.com/sports/article23893130.ece?homepage=true

  • தொடங்கியவர்

கேப்டனா... சாதாரண வீரரா... எதில் விருப்பம்? - தோனி பதில்

 

 
13CHPMUMSD

தோனி   -  AFP

கேப்டனா? அல்லது சாதாரண வீரரா... எதில் விருப்பம்? என்ற கேள்விக்கு தனது அனுபவமிக்க பதிலை அளித்திருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிராவோ, தோனி, ரெய்னா, வாட்சன், ஹார்பஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது நேயர் ஒருவர் கேப்டனாக இருக்க விருப்பமா? அல்லது சாதாரண வீரராக இருக்க விருப்பமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி பதிலளித்ததாவது:

"ஒரு சாதாரண வீரனாக அணியில் தொடங்குவது மிக முக்கியம். அப்போதுதான் நீங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும், விளையாட்டையும் புரிந்து கொள்ள முடியும். உங்கள் முன்னேற்றங்களில் நிறைய கற்றுக் கொள்வீர்கள். உங்களது கேப்டனிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.

உங்களை எப்படி தயார்ப்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல், எப்படி தயார் படுத்திக் கொள்ள கூடாது என்றும் கற்று கொள்வீர்கள். எப்போது ஒரு சிறந்த கேப்டனால்தான் தன்னை சுற்றியுள்ள வீரர்களை புரிந்து கொள்ள முடியும். ஏனெனினில் நீங்கள் வீரரின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் ஆலோசனைகளை கூறி வழி நடத்த முடியாது.

என்னை பொறுத்தவரை ஒரு குழுவாகவும், தனிப்பட்ட நபராகவும் நீங்கள் எவ்வாறு சிறந்து இருக்கிறீர்களோ, அதுதான் பிறர்  நன்றாக விளையாடவும் உதவும்.

கேப்டனாக இருப்பதை காட்டிலும் தனிப்பட்ட வீரராக இருப்பது மிக முக்கியம்” என்றார்.

கோலி கேப்டன்சி குறித்து கேட்டபோது, "அவர் ஒரு சிறந்த கேப்டன்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article23925583.ece?homepage=true

  • தொடங்கியவர்

விரைந்து மீண்டு எழவே வீழ்ந்தோம் - சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்

 
அ-அ+

நேற்றைய போட்டியில் டெல்லியிடம் தோல்வியடைந்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டுவிட் செய்துள்ளது. #VIVOIPL #IPL2018 #ChennaiSuperKings

 
 
விரைந்து மீண்டு எழவே வீழ்ந்தோம் - சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்
 
 
சென்னை:
 
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
201805190430093106_1_csk185._L_styvpf.jpg
 
இதையடுத்து நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில், விரைந்து மீண்டு எழவே வீழ்ந்தோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதையே திரும்ப செய்யும் எண்ணத்தில் நமது சிங்கங்கள் உள்ளன, என கூறியுள்ளது. #VIVOIPL #IPL2018 #ChennaiSuperKings

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/19043009/1164160/We-fall-to-rise-again-quickly-tweets-CSK.vpf

  • தொடங்கியவர்

ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும்: ஹர்பஜன் சிங் ட்வீட்!

 

 
 
Image

 

புனேவில்நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட்டியுள்ளார்.

இரண்டுஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கியுள்ளசென்னை அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பிடித்துள்ளார்.கடந்த பொங்கல் தினம் முதலே தொடர்ச்சியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியிலே வாழ்த்துக்களை தெரிவித்து வரும் இவர், குறிப்பாக சென்னை அணிக்கு தேர்வான பின்னர் அடிக்கடி தமிழில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில்நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியை சென்னை அணி பதிவு செய்ததுடன்சேர்த்து, ஐபிஎல் லீக் போட்டிகளில், 2-வதுஇடத்தை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குதகுதி பெற்றுள்ளது. இதுகுறித்து சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எங்க டீமுக்கு பயம்இல்லன்னு யாருங்க சொன்னது அன்ப கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரக்குடுத்தாச்சும்கப் ஜெய்ச்சு பெருமை சேக்கனும்ங்கற பயம் நிறையா இருக்கு.ஒரே ஒரு ஆசை தான்,ஐபிஎல் முடியும்போது "தல" கைல கப் இருக்கணும்,ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும்" என பதிவிட்டுள்ளார்.

 

Image0

Image1

http://www.ibctamil.com/cricket/80/100813

  • தொடங்கியவர்

புனே மைதான பாரமரிப்பாளர்களுக்கு இன்ப பரிசு அளித்த எம்எஸ் டோனி

 
அ-அ+

உடனடியாக மைதானத்தை ஏற்பாடு செய்த புனே மைதான பராமரிப்பாளர்களுக்கு டோனி பரிசு வழங்கியுள்ளார். #IPL2018 #MSDhoni #CSK

 
 
 
 
புனே மைதான பாரமரிப்பாளர்களுக்கு இன்ப பரிசு அளித்த எம்எஸ் டோனி
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் மீண்டும் விளையாட களம் இறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் போட்டி நடைபெறும் போது காவிரி பிரச்சினை காரணமாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மற்ற 6 போட்டிகள் புனேவிற்கு மாறியது.

திடீரென மாறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளுமா? என்ற சந்தேகம் எழும்பியது. ஆனால் மைதான பராமரிப்பாளர்கள் கடுமையாக உழைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6-ல் ஐந்தில் வெற்றி வாகை சூடியது.

201805211505371881_1_MSdhoni1-s._L_styvpf.jpg

இரவு பகலாக உழைத்த மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்க டோனி முடிவு செய்தார். அதன்படி நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டம் முடிவடைந்தவுடன், மைதான பராமரிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 20 ஆயிரத்துக்கான தொகையும், தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபிரேம் செய்தும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து டோனி கூறுகையில், “இது மைதான பராமரிப்பளர்களின் சிறப்பான செயலுக்கு வழங்கப்பட்டது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த பணம் மற்றும் புகைப்படம் வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/21150537/1164615/MS-Dhoni-Special-Parting-Gift-Pune-Groundsmen.vpf

  • தொடங்கியவர்

`தோனியும், சி.எஸ்.கே. வாழ்வும்!’ - ஷேன் வாட்சனின் ஐபிஎல் ஷேரிங்க்ஸ்

 

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

ஷேன் வாட்சன்

 

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை அணி, லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் லீக் சுற்றை முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றில் முதல் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது குறித்து ஷேன் வாட்சன் மனம் திறந்துள்ளார். 

அவர் கூறுகையில், ``தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்ததைப் பாக்கியமாகக் கருதுகிறேன். அதேபோல், சென்னை அணியின் தொடக்க வீரராக இந்த சீசன் முழுவதும் விளையாடும் வாய்ப்பையும் அந்த வகையிலேயே நான் பார்க்கிறேன். கிரிக்கெட் விளையாட்டை தோனி புரிந்து வைத்துள்ள விதம், முடிவுகளை அவர் எடுக்கும் விதம் என அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பது மற்றும் அதுகுறித்து கேள்விகள் எழுப்பும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்களை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் வெகுசில வீரர்களிடமே அதை உணர்ந்துள்ளேன். அந்தப் பட்டியலில் தோனிக்கு முக்கியமான இடம் இருக்கும். தோனி போன்ற உள்ளுணர்வைக் கேட்டு முடிவெடுக்கும் நிகழ்வு என்பது கிரிக்கெட் உலகில் மிகவும் அபூர்வமானது.

கிரிக்கெட் தொடர்பான அவரது உள்ளுணர்வு என்பது, உதாரணமாக பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டும், பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் அவர் களமிறங்கும் பொசிஷனை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். சேஸிங்கின் போது 10-ல் 9 போட்டிகளில் அவர் வெற்றி தேடித்தந்து விடுவார். எனது ஐபிஎல் ஃபார்முக்கு தோனி முக்கியமான காரணம்’ என்றார். சென்னை அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள வாட்சன், ஒரு சதம் 2 அரைசதங்கள் உள்பட 438 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல்,  விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/125584-shane-watson-speaks-about-csk-and-dhoni.html

  • தொடங்கியவர்

'சூழ்ச்சி கடந்து போராடிக் கிடைத்த வெற்றி'- தமிழில் ட்வீட் செய்து அதிர்ந்த ஹர்பஜன் சிங்

 
 

ஹர்பஜன் சிங்

ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. `மக்கள் சக்தியாக, பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி' என நெகிழ்ந்து, தமிழில் ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங். 

 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென்னை அணி டாஸ் வென்று,  கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார். இதையடுத்துக் களமிறங்கிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின், களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டு ப்ளஸி ஆகியோர் தொடங்கினர். தொடக்கம் முதல் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி வீரர்கள், ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றிபெற்றது. 

இரண்டு ஆண்டு தடைக்குப்பின், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை அணி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. சென்னை அணியின் அபார வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிய ஹர்பஜன் சிங், வெற்றி வாகை சூடிய தருணங்களை உருக்கமாகத் தமிழில் எழுதிப் பதிவிட்டுள்ளார். 

ஹர்பஜன் சிங் ட்வீட்

 

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `தோட்டாவெனக் கிளம்பிய பந்துகள், கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி ஐபிஎல் கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள) முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடிக் கிடைத்த வெற்றி, சென்னை மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே' எனப் பதிவிட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/sports/126114-harbhajan-singh-tweet-in-tamil-share-their-wining-moment.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.