Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

Featured Replies

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

 

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாகிக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் காயமடைந்தவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரது மார்பு, கை பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, அவர் பயணித்த மோட்டார் சைக்கிளிலும் துப்பாக்கி ரவைகளின் துளைகள் உள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

இதேவேளை ஸ்ரீலங்காவில் இன்றைய தினம் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குருநாகல் மாவட்டம் பன்னல பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்றிருக்கின்றது.

ஏற்கனவே அந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, பிணையில் விடுதலையாகியிருந்த சந்தேக நபரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-incident-at-Kilinochi-

  • தொடங்கியவர்

பளை பகுதியில் வெடி பொருள் வெடித்து ஒருவர் படுகாயம் – துப்பாக்கி சூடு எனவும் தகவல்

Blast.jpg?resize=300%2C169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பளை பகுதியை சேர்ந்த சிவமூர்த்தி சுரேந்திரன் (வயது 38) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

முன்னதாக குறித்த நபர் மீது பற்றைக்குள் மறைந்து இருந்து துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது குறித்த நபர் மிதிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் எனவும் , அவர் வெடிபொருள் ஒன்றினை பிரித்து வெடி மருந்தினை எடுக்க முற்பட்ட போது வெடிபொருள் வெடித்ததால் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்ற போதிலும் காவல்துறையினரிடம் குறித்த சம்வம் தொடர்பில் தகவலை பெற முடியவில்லை.

http://globaltamilnews.net/2018/60320/

  • தொடங்கியவர்

பளை பகுதியில் துப்பாக்கிச்சூடு ஹலோரஸ்ட் பணியாளர் காயம்

 

 
 

பளை பகுதியில் துப்பாக்கிச்சூடு ஹலோரஸ்ட் பணியாளர் காயம்

கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு அதாவது 08.01.2018 இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பளை நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையார் எஸ். சரேந்திரன் வயது 38 என்ற குடும்பஸ்தரே காயமடைந்தவராவார்.கண்ணிவெடியகற்றும் நிறுவனமொன்றில் வேலை செய்யும் குறித்த நபர் தனது வேலையை முடிந்துவிட்டு வீடு சென்ற போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது அவரின் நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதற்கமைய யாழ் போதனா வைத்திய சாலையின் அதிதீவிர சிசிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் குறித்த வீதியால் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பற்றைக்குள் இருந்து தன்மீது சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/பளை-பகுதியில்-துப்பாக்கி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.